ஹம்துல்லாஹ் ஜமாலி
பராஹீனே அஹ்மதிய்யா, ரூஹானி கஸாயின், இதன் பகுதிகளான ஹகீதத்துல் வஹி, நுஸுல் மஸீஹ், மற்றும் மல்ஃபூஸாத், துஹ்ஃபயய கோல்டுவிய்யா, தத்கிரத்துஷ் ஹாதத்தைன், ஏக்கலத்திக்கா இஸாலா, இஸ்லாமி உஸுல்கி ஃபிலாஸபி – வாசகர்களே! இவையனைத்தும் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? மிர்ஸா குலாம் அஹ்மதை தங்களது நவீன நபியாக ஏற்றிருக்கும் அஹ்மதிகளே! உங்களுக்கு இவை என்ன என்பது தெரியுமா? அகில உலக அளவிலுள்ள பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கோ ஏன்? பெரும்பான்மையான காதியானிகளுக்கோ இவை என்ன என்பது தெரியாது. ஒருவேளை காதியானிகளின் H.A. மெளலவிகள் அறிந்து வைத்திருக்கலாம். இவையனைத்தும் காதியானிகளின் வேத நூல்கள். இவையன்றி இவர்களது கலீஃபாக்களின் பேச்சுக்கள், இவர்களது குறிக்கோளை நியாயப்படுத்தும் பவிஷ்ய மகாபுராணம், ராஜ தரங்கணி,விஷ்ணு புராணம் பலாகரும் புத்தாசஃபும், ரஸாத்துஸ்ஸபா,மற்றும் ஒரு சில சரித்திர நூல்களும், தேவையெனில் பைபிள் போன்றவைகளும் இவர்களது ஆதார நூல்களாகும். இந்நூல்கள் கூறும் கருத்துக்களையும், தங்களது வாதங்களையும் நியாயப்படுத்த திருகுர்ஆன் வசனங்களையும், நபி மொழிகளையும் தங்களது விருப்பப்படி வளைத்தும், திரித்தும் கூறுவார்கள்.
பெரும்பான்மை முஸ்லிம்களுக்கும் ஏன், காதியானிகளுக்கும் தெரியாத இவ்விஷயங்கள் எங்களுக்கு எப்படி கிடைத்தது என்ற நியாயமான கேள்வியை நீங்கள் கேட்கலாம். நாங்களும் இந்நூல்களை பார்த்ததோ, எங்களிடம் உறவாடி, உரையாடி வரும் காதியானிகள் மூலமோ அறிந்ததோ கிடையாது. இவையனைத்தும் தமிழக காதியானி இயக்கத்தாரின் மாத இதழான சமாதான வழி மூலம் அறிந்ததாகும். இவர்களுடன் நாம் அன்மையில் உரையாடி இவர்களது கொள்கை கோட்பாடுகளை ஓரளவு இரத்தினச் சுருக்கமாக அறிந்து கொண்ட பின் இவர்களது மாத இதழான சமாதான வழியைப் படித்த போது நாம் பெற்ற விஷயங்களை முஸ்லிம்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். இவர்களையும், இவர்களது நவீன நபியின் தடுமாற்ற நிலையையும், மக்களுக்கு எடுத்துக் காட்டவே எழுதுகிறோம். காய்தல் உவத்தலின்றி பகுத்தறிந்து குறிப்பாக இவர்களது செல்வ செழிப்பு, கோயபல்ஸ் கொள்கை, பகுத்தறிவு வாக்குவாத மாய வலையில் வீழ்ந்துள்ள காதியானிகள் நேர்வழி பெற வேண்டுகிறோம்.
தடுமாற்றம் 1:
ஹஸ்ரத் அஹ்மது(அலை) அவர்கள் தம் வாதத்தில் உண்மையாளர் என்பதற்கு ஆதாரமாகக் கூறிய விஷயங்களில் முதன்மையானது இதுவாகும். அல்லாஹ்வின் தூதர் மஸீஹிப்னு மரியம் இறந்து போய்விட்டார். அவரின் சாயலில் வாக்குறுதிக்கு ஏற்ப நீர் வந்திருக்கிறீர்.
(ரூஹானி கஸாயின், பாகம் 3, பக்கம் 402, ச.வ.: நவ.95, பக்.19)
ஹஸ்ரத் அஹ்மது(அலை) அவர்கள் தம் வாதத்தில் உண்மையாளர் என்பதற்கு ஆதாரமாகக் கூறிய விஷயங்களில் முதன்மையானது இதுவாகும். அல்லாஹ்வின் தூதர் மஸீஹிப்னு மரியம் இறந்து போய்விட்டார். அவரின் சாயலில் வாக்குறுதிக்கு ஏற்ப நீர் வந்திருக்கிறீர்.
(ரூஹானி கஸாயின், பாகம் 3, பக்கம் 402, ச.வ.: நவ.95, பக்.19)
இங்கு நவீன நபி மிர்ஸா குலாம்தான் மஸீஹிப்னு மரியம் சாயலில் வந்துள்ளதாக சொந்த வாக்குமூலம் தருகிறார்.
1.”பராஹீனே அஹ்மதிய்யாவில்” என் பெயரை இறைவன் முஹம்மது என்றும் அஹ்மத் என்றும் கூறி, எனது வருகையை ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களின் வருகை என்றே கூறியுள்ளான்.
(சமாதான வழி பிப்ரவரி 96,பக்கம்9)
(சமாதான வழி பிப்ரவரி 96,பக்கம்9)
2. நான் பிரதி பிம்பமான பரூஸியாக (நிழலாக) முஹம்மது(ஸல்) அவர்களாகவே இருக்கும்போது, அவ்வாறே முஹம்மதின் எல்லாப் பூரணத்தன்மைகளும் நபுவ்வத்தே முஹம்மதிய்யாவோடு கலந்து நிழல் போன்று என் கண்ணாடியில் பிரதி பிம்பமாக இருக்கிறேன்.
(ச.வ.: பிப்ரவரி 96,பக்கம் 9)
(ச.வ.: பிப்ரவரி 96,பக்கம் 9)
பராஹீனே அஹ்மதிய்யாவிலிருந்து குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாவது வாக்கு மூலத்தின் பிரதி பிம்பம், பரூஸி,நிழல், கண்ணாடி போன்ற சொற்றகளும் அவை தெரிவிக்கும் செய்தியும் உங்களுக்கு விளங்குகிறதா? விளங்கவில்லையயனில் காதியானிகளிடம் கேட்டுபப் பாருங்கள். கீழ்காணும் விளக்கங்களைத் தரலாம்.
1. இதனை அறிந்து கொள்ள ஆன்மீக, அறிவு, ஞானப் பார்வை தேவை. அப்பார்வையை, அறிவை அவர்களது நவீன நபியை ஏற்றால்தான் பெற முடியும் என்று கூறுவர். இது கிறித்துவர்களின், ஜீஸஸை கடவுளின் மைந்தன், கடவுள் என்று ஏற்றால் தான் ஈடேற்றம் பெற முடியும் என்ற வாதத்தை போன்றது. அல்லது.
2. தரீக்காவாதிகள் “”ஃபனாஃபில்லாஹி” அல்லாஹ்வுடன் ஐக்கியமாகித்தானே அல்லாஹ்வாக மாறி “அனல் ஹக்”- நானே உண்மைக் கடவுள் எனக் கூறுவது போல இவர்கள், தங்களது நவீன நபி குலாம் மிர்ஸா முஹம்மது(ஸல்) அவர்களிலே ஃபனாவாகி இச்சிறப்பைப் பெற்றதாகக் கூறுவார்கள். இது நமது சொந்த ஊகமல்ல. அவர்களது சொந்த வாக்கு மூலத்தைப் பாருங்கள்:
இந்த எல்லாச் சிறப்புகளும் வானத்தைச் சேர்ந்த பரிசுத்த மகானான ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களின் ஆத்மீகமான ஐக்கியத்தை நான் அடைந்த காரணத்தினாலேயே கிடைத்தன. அவர்களின் மூலமாக, அவர்களிலே நான் ஃபனாவாகி அழிந்து (அவர்களுக்காக நான் அர்ப்பனமாகி) அவர்களின் பெயராகிய முஹம்மது, அஹ்மது என்ற பெயர்களால் அழைக்கப்பட்ட காரணத்தால் நான் ரஸூலாகவுமிருக்கிறேன்; நபியாகவுமிருக்கிறேன். (ச.வ.: பிப்ரவரி 1996, பக்கம் 8)
கவனிக்க: தான் நபியாகவும், ரசூலாகவுமிருப்பதற்கு இங்கு காரணங்களைக் கூறுகிறார். 1. தான் ஃபனா ஃபி முஹம்மது(ஸல்) அவர்கள். 1. தான் அஹ்மது, முஹம்மது என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. அல்-ஹம்துலில்லாஹ் அஹ்மது என்ற பெயர் ரசூல்(ஸல்) அவர்களுக்கு இருந்ததை ஏற்றுக் கொள்கிறார்.
