Showing posts with label தவ்ஹீத் எழுச்சி. Show all posts
Showing posts with label தவ்ஹீத் எழுச்சி. Show all posts
தமிழகத்தில் ஏற்பட்ட ஏகத்துவ எழுச்சி - ஓர் வரலாற்றுப் பார்வை (தொடர் - 1)-எம். ஷம்சுல் லுஹா ரஹ்மானி
1980 களுக்கு முன்னால் தமிழக முஸ்லிம்களின் நிலையும், தமிழக உலமாக்களின் நிலையும் எந்த நிலையில் இருந்தது என்பதை இன்றைய இளைஞர்கள் அறிய மாட்டார்கள்.
தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கை அவர்களிடமிருந்து அறவே எடுபட்டுப் போயிருந்தது. திருக்குர்ஆனிலும், நபி வழியிலும் அனுமதிக்கப்படாத போலிச் சடங்குகளைத்தான் இஸ்லாம் என்ற பெயரால் தமிழக முஸ்லிம்கள் செய்து வந்தனர்.
மத்ஹபு என்ற பெயரால் முரண் பட்டுக் கிடந்தனர். போலி ஷைகுமார்களின் கால்களில் விழுந்து வணங்கு வதை பெரும் பாக்கியமாகக் கருதி வந்தனர்.
மத்ஹபு என்ற பெயரால் முரண் பட்டுக் கிடந்தனர். போலி ஷைகுமார்களின் கால்களில் விழுந்து வணங்கு வதை பெரும் பாக்கியமாகக் கருதி வந்தனர்.
இந்தக் காலகட்டத்தில்தான் மயிலாடுதுறை அருகில் அமைந்துள்ள சங்கரன்பந்தல் என்ற கிராமத்திருந்து தவ்ஹீத் பொறி பற்றத் தொடங்கியது.
பைஜுல் உலூம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த அரபுக் கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்த இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த பி. சேகு அலாவுதீன் எனும் பி.எஸ். அலாவுதீன் அவர்களும், அவரது இளைய சகோதரர் மவ்லவி பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களும் அந்த அரபுக் கல்லூரியில் படித்துக் கொடுப்பதோடு நின்று விடாமல் மக்களை நல்வழிப்படுத்த மாதந் தோறும் தெருமுனைக் கூட்டங்களை நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலானார்கள்.
தீன் விளக்கக் குழு என்ற பெயரில் பொதுக் கூட்டங்கள் நடத்துவதுடன் துண்டுப் பிரசுரங்கள் வாயிலாகவும், அவ்வூரில் நிலவிய மூடநம்பிக்கைகளை எதிர்த்து வந்தனர்.
இந்த நிலையில் தஞ்சை நகரில் ஆற்றங்கரைப் பள்ளிவாசல் வளாகத்தில் தமிழக உலமாக்கள் சபை சார்பில் வலிமார்கள் மாநாடு நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் உரையாற்றிய எல்லா உலமாக்களுமே தர்கா வழிபாட்டை ஊக்குவித்தும் ஆதரித்தும் பேசினார்கள். ஏகத்துவ சிந்தனைவாதிகளின் இரத்தம் சூடேறும் அளவுக்கு அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மாபாதகச் செயலை நியாயப்படுத்தினார்கள்.
அதைக் கண்டு கொதித்துப்போன பீ. ஜைனுல் ஆபிதீன், அம்மாநாட்டில் ஆற்றப்பட்ட உரைகள் அனைத்தும் குர்ஆனுக்கும் நபிவழிக்கும் எதிரானவை என்பதைத் தக்க ஆதாரங்களுடன் ''ஒரு நாடகம் அரங்கேறியது'' என்ற தலைப்பில் கடுமையாக விமர்சனம் செய்து ஒரு பிரசுரம் வெளியிட்டார்.
அப்பிரசுரத்தால் ஆத்திரம் அடைந்த உலமாக்கள் வேன்களில் வந்து இறங்கி சங்கரன் பந்தல் பணியாற்றும் பீ. ஜைனுல் ஆபிதீனை மதரஸாவில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி முறையிட்டனர். கல்லூரி நிர்வாகம் அதை ஏற்க மறுத்து விட்டாலும் உலமாக்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்று சில கட்டுப்பாடுகளை விதித்தது.
மேலப்பாளையத்தைச் சேர்ந்த மவ்லவி ஷம்ஸுல்லுஹா, மவ்லவி முஹம்மது அலி ரஹ்மானி, மவ்லவி யூசுப் மிஸ்பாஹி போன்றவர்களும் சங்கரன் பந்தல் சிராஜுத்தீன், அப்துல் பத்தாஹ் போன்ற நண்பர்களும் இப்பிரச்சாரத்துக் குப் பக்கபலமாக இருந்தனர்.
சங்கரன்பந்தல் தவ்ஹீத் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழகத்தில் வேறு சில பகுதிகளிலும் பிரச்சாரம் நடத்தப்பட்டு வந்தது.
குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் மவ்லவி கமாலுத் தீன் மதனி, கடையநல்லூரில் மவ்லவி அப்துல் ஜலீல் மதனி, பேர்ணாம்பட்டில் பி. அன்வர்பாஷா, ரபீக் அஹ்மது தலை மையிலான குழுவினர், கோவையில் அப்துல் மஜீத் உமரி, திருச்சியில் அப்துல் மஜீத், அப்துல் சமத் தலைமையிலான குழுவினர், சென்னையில் உஸ்மான் கான் தலைமையிலான குழுவினர், பிரச்சாரம் செய்து வந்தனர். (இவர்களில் மவ்லவி அப்துல் ஜலீல் மதனி கொள்கையில் உறுதியாக நின்று மரணித்து விட்டார். மவ்லவி கமாலுத்தீன் மதனி, ரபீக் அஹ்மது அப்துல் மஜீத் உமரி அப்துல் மஜீத் அப்துல் சமத் உஸ்மான் கான் கொள்கையில் முரண்பட்டு நமக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றனர்.)
சங்கரன்பந்தல் பீ. ஜைனுல் ஆபிதீன் தெளிவாகப் பிரச்சாரம் செய்து வருகிறார் என்று கேள்விப்பட்டு மேற்கண்ட பகுதிகளில் உள்ளவர்கள் அவரைப் பேச்சாளராக அழைத்து பொதுக்கூட்டங்கள் நடத்தினார்கள். இதனால் அவர்களுக்கிடையே அறிமுகமும், ஒருங்கிணைப் பும் ஏற்பட்டது.
