வாழ்க்கையில் சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்று ஆசை ஏற்படுவது அனைவருக்கும் இயல்பு. அப்படி வீடு கட்டும்போது மார்க்கத்திற்கு முரணில்லா வகையிலும் ஷிர்க் (இணை வைத்தல்) எந்த வகையிலும் ஏற்படா வண்ணமும் வீடு கட்டப்பட வேண்டும்.
வீடு கட்டுவதற்கு முன் வீட்டு மனையின் அளவையும் அமைப்பையும் பொறுத்து கட்டடப் பொறியாளரைக் கொண்டோ அல்லது அனுபவம் உள்ளவர்களைக் கொண்டோ நம் வசதிக்குத் தகுந்தபடி திட்டமிட்டுக் கட்டுவது நல்லது தான். அதற்காகச் சிலர் வாஸ்து சாஸ்திரம் - மனையடி சாஸ்திரம் என்னும் பெயரில் ஏமாற்றுச் சாஸ்திரங்களில் தங்கள் ஈமானை இழக்கின்றனர்.
மனையடி சாஸ்திரத்தில் ஒரு அளவைக் குறிப்பிட்டு இந்த அளவில் வீட்டின் நீள அகலம் இருந்தால் மரணம் ஏற்படும் என்று குறிப்பிடப் பட்டிருக்கும். அப்படியானால் அந்த அளவைத் தவிர்த்துக் கட்டப் படும் எந்த வீடுகளிலும் யாருமே மரணம் அடைவதில்லையா?மனையடி சாஸ்திரம் மரணத்தைத் தடுக்காது. இரும்புக் கோட்டைக்குள் இருந்தாலும் ஒரு நாள் இறப்பது நிச்சயம்.
நாம் வசிக்க உருவாக்கும் வீட்டை நம் வசதிக்கு ஏற்றபடியும் இடத்திற்குத் தக்கபடியும் நீள அகலங்களை நாம் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர -வாஸது சாஸ்திரம் பார்த்து வாசற்படிகளை மாற்றி அமைப்பது மனித வாழ்க்கையில் எவ்வித மாறுதலையும் ஏற்படுத்தாது.
எந்த சாஸ்திரமும் - சம்பிரதாயமும் இன்றி அரபு நாடுகளிலும் மேலை நாடுகளிலும் கட்டப் பட்ட வீடுகளில் வசிப்போர் - நல்ல வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்.இன்னமும் மூட சாஸ்திரங்களை முழுக்க முழுக்க நம்பிக் கொண்டிருப்பவர்கள் சிந்திக்க வேண்டாமா?
கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் - அநாச்சாரத்தில் ஆரம்பிக்கப் படுவதும்-கட்டுகிற வீடு நமக்கு உரியது என்பதைக் கூட மறந்து கட்டுபவர்களின் கலாச்சாரப்படி அனைத்து வகை ஆச்சாரங்களையும் அனுமதிப்பதும் - அங்கீகரிப்பதும் -கதவு நிலை வைப்பதற்குக் கூட காலமும் நேரமும் பார்த்து பூவும் பொட்டும் வைத்து பூஜை புனஸ்காரங்கள் செய்வதும் -காங்கிரீட் போடும் போது ஆடும் கோழியும் அறுத்து பலியிடுவதும் -கட்டிய வீட்டுக்குக் கண் பட்டுவிடும் என்று பூசனிக்காய் கட்டித் தொங்க வீடுவதும் -புதிய வீடு கட்டி முடித்த பின் மூலைக்கு மூலை பாங்கு சொல்வதும் - முதல் வேலையாக பால் காய்ச்சுவதும் -கூலிக்கு ஆள் பிடித்து குர்ஆனும் - மௌலூதும் ஓதுவதும் -இவைகள் யாவுமே புனித இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டவை என்பதை உணர வேண்டும்.
குர்ஆன் ஓதுவது எப்படித் தவறாகும்? என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம். புதுமனை புகு விழாவுக்கு மட்டும் - அதுவும் கூலிக்கு ஆள் பிடித்து ஓதுவதற்கு அருளப்பட்டதல்ல குர்ஆன்.குர்ஆன் எப்போதும் ஓதப்பட வேண்டும். குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஓத வேண்டும். சடங்காக்கப்படக் கூடாது.
சொந்தமாக வீடு கட்டுவது என்பது சராசரி மனிதனுக்கு ஒரு சாதனை தான். எந்த வகையிலும் இந்த சாதனையில் அநாச்சாரம் நுழைந்து விடாமலும் ஷிர்க் ஏற்படாமலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
'கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்'
என்னும் நூலிலிருந்து

திரு மணத்தில் தீய பழக்கங்கள்

சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூட 'சீர் திருத்தத் திருமணங்கள்' என்னும் பெயரில் இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர். ஆனால் உண்மையான சீர் திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின் பற்றி நடப்பதாகக் கூறும் நம் சமுதாயத்தினர் சிலர் இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பதைக் காணும்போது நெஞ்சு பொறுக்குதில்லையே!
மஞ்சள் கயிற்றில் மாங்கல்யம் செய்து மணப்பெண் கழுத்தில் 'தாலிகட்டும்' வழக்கம் கருகமணி என்னும் பெயரில் முஸ்லிம் சமுதாயத்தில் முக்கியத்துவம் அடைந்ததும்
கழுத்தில் கட்டிய கருப்பு மணிக்கு கணவணுக்குச் சமமான மகிமை அளிப்பதும்-
திருமண நிகழ்ச்சிகளில் தேங்காய்க்கும் வாழைப் பழத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதும்
அரிசி அளக்க வைத்து அல்லாஹ்வின் இரணத்தை அள்ளி இறைப்பதும்
மணமக்களைச் சுற்றி கூட்டமாகக் கூடி நின்று கும்மாளம் போடுவதும்
பரிகாசம் என்னும் பெயரில் பருவப் பெண்கள் ஒன்று சேர்ந்து மணமகனைக் கேலி செய்வதும்
ஆட்டுத் தலையை வைத்து ஆரத்தி எடுப்பதும்
எங்கே போய்க் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம்?
சமுதாயம் சீர் பெற இது போன்ற சடங்கு சம்பிரதாயங்களைக் களைய வேண்டும். சத்தியத் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய நெறியைக் கடைப் பிடிக்க வேண்டும. பெருமைக்காகவும் ஆடம்பரத்துக்காகவும் செய்யும் வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும். அப்போது தான் ஏழ்மையான மக்களின் சிரமங்களைக் குறைக்க முடியும்.
'குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரக்கத் நிறைந்ததாகும்.' என்பது நபி மொழி.
(அறிவிப்பவர். ஆயிஷா (ரலி) ஆதாரம் அஹ்மத்)
வரதட்சனை என்னும் வன்கொடுமை ஒழிய வேண்டும். சீர் வரிசை என்னும் பெயரில் பெண் வீட்டாரிடம் பணம் பறிக்கும் பாதகர்கள் திருந்த வேண்டும்.கல்யாணத்திற்காகக் காத்திருக்கும் ஏழைப் பெண்களின் கண்ணீரைத் துடைக்க இறையச்சமுள்ள இளைஞர்கள் முன் வரவேண்டும்.
வரதட்சனை ஒரு மாபெரும் கொடுமை என்பதை உணர்ந்த ஏராளமான இளைஞர்கள் வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்யத் தயாராகி விட்டனர்.என்றாலும் இது ஒரு சாதனை அல்ல. மணப் பெண்ணுக்கு உரிய மஹர் தொகையைக் கொடுத்து மணம் முடிக்க வேண்டும். இதுவே மார்க்கச் சட்டம்.
சிலர் மஹர் என்னும் பெயரில் சொற்பத் தொகையை நிர்ணயித்து அதையும் கொடுக்காமல் பள்ளிவாசலின் பதிவுப் புத்தகத்தில் பெயரளவில் எழுதி வைத்து விட்டு கட்டிய மனைவியிடம் கடன்காரனாகக் காலத்தைக் கழிக்கிறார்கள்.மஹர் தொகையைக் கொடுக்காமல் கடன் காரனாக இருப்பவர்கள் இப்போதாவது கொடுத்து விட வேண்டும்.
மஹர் தொகையை இப்பேர்து கொடுப்பதால் 'தலாக்' ஆகி விடும் என்று சிலர் கருதுகின்றனர். இது மிகவும் தவறான நம்பிக்கை.அறியாமல் செய்த தவறுகளுக்கு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டும்.
இன்னும் உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவருக்கும் அவ்விதமே சாலிஹான உங்கள் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான். மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
(அல் குர்ஆன் 24 32)
'கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்'
என்னும் நூலிலிருந்து
ஏதேனும் காரியமாக வெளியில் புறப்படும்போது 'எங்கே போகிறீர்கள்?' என்று யாராவது கேட்டு விட்டால் போகிற காரியம் நடக்காது என்று நம்புவதும் -நடந்து செல்லும்போது காலில் ஏதேனும் தடுக்கினால் சிறிது நேரம் நின்று விட்டுச் செல்வதும் -போகிற வழியில் பூனை குறுக்கிட்டால் போகிற காரியம் தடங்கல் ஏற்படும் என்று கருதுவதும் -விதவைப் பெண்கள் எதிரில் வந்தால் அபசகுனம் என்று நினைப்பதும் வடிகட்டிய முட்டாள் தனம்.
நாம் நமது வேலையாகப் போகிறோம். பூனை தனது வேலையாகப் போகிறது. நமது வேலையைக் கெடுப்பது பூனையின் வேலையல்ல. மூளை என்று ஒன்று இருந்தால் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும்.
பேசிக் கொண்டிருக்கும் போது சுவர்க்கடிகாரம் மணி அடித்தாலோ பல்லி சப்தமிட்டாலோ சொல்வது உண்மை என்று கடிகாரத்தையும் பல்லியையும் சாட்சிகளாக்குவதும் -'பாலன்ஸ்' தவறி பல்லி விழுந்துவிட்டால் பதறித் துடித்து காலண்டரைத் திருப்பி 'பல்லி விழும் பலன்' பார்ப்பதும் மூட நம்பிக்கைகளில் உள்ளவை என்பதைப் புரிந்துக் கொள்ள பெரிய ஆராய்ச்சி தேவையில்லை.
தேதி பார்க்க காலண்டர் வாங்கும் போது பல்லி விழும் பலனும் ராசி பலனும் இல்லாத காலண்டர் வாங்கினால் போதும். பெரும்பாலும் இந்த மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடலாம்.மூடக் கொள்கைகளை முற்றிலும் ஒதுக்கிய - குர்ஆன் வசனங்களும் பெருமானார் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளும் அடங்கிய இஸ்லாமியக் காலண்டர்கள் பரவலாக இப்போது விற்பனைக்கு வந்து விட்டன.
நல்ல சகுனம் கெட்ட சகுனம் எதுவுமே இஸ்லாத்தில் இல்லை. எவ்வித சகுனமும் பார்க்கக்கூடாது. சகுனங்கள் ஒரு போதும் நமது செயல்களில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தமாட்டா.நல்லதும் கெட்டதும் அல்லாஹ் விடமிருந்தே எற்படுகின்றது என்று நம்புவது 'ஈமான்' என்னும் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.
அல்லாஹ் விதித்த படி தான் அனைத்துமே நடக்கும் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆழமாக நமது உள்ளத்தில் வேரூன்ற வேண்டும். அந்த ஈமானின் உறுதி நமது இதயத்தில் இருக்கும் வரை தீமைகள் எதுவும் ஏற்படாது.நல்லது என்று நாம் நினைத்திருந்த காரியம் நடக்காமல் போகலாம். இதை விடச் சிறந்ததை தருவதற்காகவோ அல்லது இதன் மூலம் கெடுதி ஏற்படலாம் என்பதற்காகவோ இறைவன் தடுத்திருக்கலாம்.நாம் விரும்பாத ஒன்று நடந்திருக்கலாம். நமக்கு அது தான் சிறந்தது என்று இறைவன் நாடியிருக்கலாம். அல்லது இதைவிடப் பெரிய தீமையிலிருந்து நாம் காப்பாற்றப் பட்டிருக்கலாம்.நடந்து முடிந்த அனைத்து காரியங்களையும் இப்படித்தான் அர்த்தப் படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர சகுனத்தின் அடிப்படையில் நடந்ததாகவோ நடக்காமல் போனதாகவோ ஒரு போதும் நம்பக் கூடாது.
'மந்திரிக்கச் செல்லாமலும் சகுனம் பார்க்காமலும் தங்கள் இறைவன் மீது உறுதியான நம்பிக்கை வைத்த எழுபது ஆயிரம் பேர் எனது சமுதாயத்தில் விசாரனையின்றி சுவர்க்கம் செல்வார்கள்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர். இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் புகாரி)

காலமும் நேரமும்

நல்ல காரியங்கள் நடத்துவதற்கு நல்ல நேரம் பார்ப்பது பிற சமூகத்தவர் பின் பற்றும் பழக்கம். இஸ்லாத்தில் நல்ல நேரம் கெட்ட நேரம் என்று நேரத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. காலண்டரைப் பார்த்துக் காலநேரம் பிரிப்பது அறிவுக்கு ஏற்ற செயலும் அல்ல. அல்லாஹ்வுக்கு உகந்த செயலும் அல்ல.நேரம் காலம் பார்த்து நடத்தப்பட்ட எத்தனையோ திருமணங்கள் விவகாரத்தில் தொடங்கி விவாகரத்தில் முடிந்திருக்கின்றன. காலமும் நேரமும் அவர்களுக்கு கைகொடுக்வில்லை.
ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுத்து - முகூர்த்த நேரம் என்று பிற சமூகத்தவர் குறிப்பிடுவதை முபாரக்கான நேரம் என்று அரபியில் குறிப்பிடுவதால் மட்டும் இஸ்லாமிய அங்கீகாரம் பெற்று விட்டதாக ஆகிவிடாது.
பசிக்கும்போது உணவருந்த எவரும் பஞ்சாங்கம் பார்ப்பதில்லை. பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் தாய் தன் குழந்தையைப் பெற்றெடுக்க நல்ல நேரம் பார்த்துக் காத்திருப்பதில்லை. உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க எந்த மருத்துவரும் கால நேரம் பார்த்துக் காத்திருப்பதில்லை.ரயில் பயணங்கள் ராகு காலத்தில் ரத்து செய்யப் படுவதில்லை. எமகண்டம் பார்த்து எந்த விமானமும் காத்திருப்பதில்லை.
வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் பிறந்த குழந்தையைக் காரணம் காட்டி 'இது பிறந்த நேரம் சரியில்லை' என்று சொல்வதும் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டால் வீட்டுக்கு வந்த மருமகளைக் காரணம் காட்டி 'இவள் வந்த நேரம் சரியில்லை' என்று சொல்வதும் தொடங்கிய காரியம் தோல்வி அடைந்தால் 'ஆரம்பித்த நேரம் சரியில்லை' என்று சொல்வதும் மிகப் பெரும் பாவம் என்பதை உணர வேண்டும்.
சிலர் நீண்ட காலமாக வறுமையிலும் - சிரமத்திலும் இருந்திருப்பார்கள் அதன் பிறகு அல்லாஹ் அவர்களுக்கு பொருளாதார வசதியை அதிகரித்திருப்பான். அந்தக் கால கட்டத்தில் பிறந்த குழந்தையைக் காரணம் காட்டி 'இது பிறந்த அதிர்ஷ்டம்' என்று சொல்வார்கள். இதுவும் தவறு தான்.
அல்லாஹ் வழங்கிய அருள் என்பதை மறந்து குழந்தையை அதிர்ஷ்டம் என்று நம்புவதும் தவறு. எல்லாக் குழந்தையையும் சமமாகக் கருதாமல் ஒரு குழந்தையை மட்டும் அதிர்ஷ்டக் குழந்தை என்று கருதுவதும் தவறு.
வாழ்க்கையில் ஏற்படும் வெற்றியும் தேல்வியும் - அல்லாஹ்வின் நாட்டப் படியே ஏற்படுகின்றது என்று ஈமானில் உறுதி வேண்டும்.நினைத்த காரியம் நடக்காமல் போவதும் தொடங்கிய காரியம் தோல்வி அடைவதும் இதைவிடச் சிறந்ததை நமக்குத் தருவதற்காகவோ அல்லது இதன் மூலம் ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து நம்மைக் காப்பதற்காகவோ இறைவனுடைய ஏற்பாடாக இருக்கக் கூடும்.அதை விட்டு விட்டு காலத்தின் மீதும் நேரத்தின் மீதும் பழி சுமத்துவது பெரும் பாவம்.
ஏனனில் இறைவன் கூறுகிறான். ' காலத்தை ஏசாதீர்கள் நானே காலமாக இருக்கிறேன்.' (ஹதீஸ் குத்ஸி)இறை நம்பிக்கை நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிய வேண்டும். அப்போது தான் கால நேரத்தின் மீதுள்ள நம்பிக்கை நம்மை விட்டு மறையும்.
ஒவ்வொரு நாளின் 24 மணி நேரமும் நல்ல நேரமே! ஒவ்வொரு ஆண்டின் 365 நாட்களும் நல்ல நாட்களே! நமது பேச்சும் செயலும் நல்லவையாக இருக்க வேண்டும். இது தான் முக்கியம்.
'ஒரு போதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு எதுவும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்' என்று (நபியே) நீர் கூறும். மூமின்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைப்பார்களாக! (அல் குர்ஆன் 9 51)

இடைக் காலத்தில் ஏற்பட்ட மடமைகள்

இஸ்லாம் ஓர் உலகளாவிய மார்க்கம். இதன் கொள்கை கோட்பாடுகள் வணக்க வழிபாடுகள் அனைத்தும் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க முடியும். இருக்கவும் வேண்டும். உலகில் உள்ள அனைத்து மதங்களையும் விட இஸ்லாமிய மார்க்கத்திற்கு மட்டுமே உரிய தனிச் சிறப்புக்களில் இதுவும் ஒன்று.
பல்வேறு கால கட்டங்களிலும் பல வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சத்தியத்தை உணர்ந்து அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு அணி திரண்டு வந்தார்கள்.பல் வேறு கலாச்சாரங்களையும் பின்பற்றி வாழ்ந்தவர்கள் இனிய இஸ்லாத்தில் இணைந்த போது - ஏற்கனவே தாங்கள் கடைப் பிடித்து வந்த பழக்க வழக்கங்களில் சிலவற்றைத் தங்களையும் அறியாமல் தங்களுடன் கொண்டுவந்து விட்டனர்.பல்வேறு சமூகத்தினரிடையே பரவி வாழ்ந்து வரும் முஸ்லிம் சமுதாயத்தினரும் - பிற சமூக கலாச்சாரங்களை பார்த்துப் பார்த்துப் பழகிப்போய் - தங்களையும் அறியாமல் தங்களுடன் சேர்த்துக் கொண்டனர்.
இப்படிச் சிறுகச் சிறுக முஸ்லிம்களுக்கு மத்தியில் நுழைந்து விட்ட மூடப் பழக்கங்கள் கண்மூடிப் பழக்கங்கள் நாளடைவில் வேர்விட்டு கிளை பரப்பி முழு அளவில் முஸ்லிம் சமுதாயத்தை ஆக்கிரமித்துக் கொண்டு விட்டன.
அம்பெய்து குறிபார்த்து அதற்கேற்ப நடந்தவர்கள் -
நிர்வாணமாக கஃபாவை வலம் சுற்றி வந்தவர்கள் -
மதுவின் போதையில் மதி மயங்கிக் கிடந்தவர்கள் -
பெண் குழந்தைகளை உயிருடன் குழி தோண்டிப் புதைத்தவர்கள் - அறியாமைக் காலத்தின் அநாச்சாரங்களில் மூழ்கிக் கிடந்தவர்கள் - இவர்களெல்லாம் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் போதனைகளை ஏற்று- சத்திய இஸ்லாத்திற்கு வந்த போது முழுக்க முழுக்க அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு முழுமையான முஸ்லிம்களாக வந்தார்கள்.
அப்படிப்பட்ட நபித் தோழர்களின் சரித்திரங்களைச் சற்றேனும் சிந்தித்தால்.....முன்னோர்கள் மூதாதையர் செய்த மூடப் பழக்கங்களிலிருந்தும் பிற சமூக மக்களின் கலாச்சாரங்களிலிருந்து நம்மையும் அறியாமல் நம்மிடையே தொற்றிக் கொண்டு விட்ட அநாச்சாரங்களிலிருந்தும் நாமும் விடுபட முடியும்.அல்லாஹ்வும் அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களும் காட்டிய நேரியவழியில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.
'முன்னோர்கள் செய்தார்கள்' என்பதற்காகவும் காலங் காலமாகச் செய்யப் பட்டு வருகின்றன என்பதற்காகவும் பெரும் பாலானவர்கள் செய்கிறார்கள் என்பதற்காகவும் மூடப் பழக்கங்களை ஒரு போதும் நியாயப் படுத்தக் கூடாது. செய்யும் காரியங்கள் குர்ஆனிலும் ஹதீஸிலும் அங்கீகரிக்கப் படாதவையாக இருப்பின் - தயக்கமின்றி அவற்றைத் தவிர்க்க முன் வர வேண்டும்.
'அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின் பாலும் இத் தூதரின் பாலும் வாருங்கள்' என அவர்களுக்குக் கூறப்பட்டால் எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது என்று அவர்கள் கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்) ஒன்றும் அறியாதவர்களாகவம் நேர் வழியில் நடக்காதவர்களாக இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்) (அல் குர்ஆன் 5 104)
பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின் பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத் தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்.(அல் குர்ஆன் 6 116)

இஸ்லாம் ஒரு முழுமையான மார்க்கம்

இஸ்லாம் ஒரு தூய மார்க்கம். இதன் கொள்கைகளும் கோட்பாடுகளும் ஏக இறைவனாகிய அல்லாஹ் உருவாக்கியவையாகும். 1400 ஆண்டுகளுக்கு முன் அரேபிய நாட்டில் வாழ்ந்த ஒரு சமுதாயத்துக்காக மட்டும் உருவாக்கப் பட்டதல்ல இஸ்லாம்.மாறாக அன்று முதல் இன்று வரைஇனிமேல் காலங்கள் உள்ளவரை வாழ்ந்த- வாழ்கின்ற- இனி வாழும் மக்களுக்காக எல்லாக் காலத்திலும்- எல்லாப் பகுதிகளிலும் வாழும் அனைத்து வகை மனிதர்களுக்கும் பொருந்தும் படியான வாழ்க்கைத் திட்டம் தான் இஸ்லாம்.
இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள்- வணக்க வழிபாடுகள் அனைத்துமே இறைவனால் திருமறை குர்ஆனில் சொல்லப் பட்டவைகளும் இறுதி நபி பெருமானார் (ஸல்) அவர்களால் சொல்லப் பட்டவைகளும் செய்து காட்டப் பட்டவைகளும் அங்கீகரிக்கப் பட்டவைகளும் மட்டும் தான்.திரு மறையில் கூறப்படாதவைகளும் திரு நபி (ஸல்) அவர்களின் மூலம் அங்கீகரிக்கப் படாதவைகளும் கொள்கை கோட்பாடுகளாக வணக்க வழிபாடுகளாக ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.
திரு மறை நிறைவு பெற்ற பிறகு - திரு நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு வேறு யாராவது புதிய வணக்க வழிபாடுகளை புதுமையான செயல்களை உருவாக்கி 'இவைகளும் இஸ்லாத்தில் உள்ளவை தான்' என்று கூறினால்-அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களுக்கும் எதிரானவர்கள் என்பதில் எள்ளளவும் சந்கேமில்லை. அவர்கள் எவ்வளவு பெரிய மேதைகளாக இருந்தாலும் மாபெரும் அறிஞர்களாக அங்கீகரிக்கப் பட்டவர்களாக இருந்தாலும் சரியே.
அல்லாஹ்வும் அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களும் எதைச் செய்யும்படி ஏவினார்களோ அதை மட்டுமே செய்ய வேண்டும்.அதில் நம் வசதிக்குத் தகுந்தபடி குறைத்துக் கொள்வதும் குற்றம். நம் விருப்பத்திற் கேற்றபடி கூட்டிக் கொள்வதும் குற்றம்.
மேலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால் அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல் குர்ஆன் 33 :36) என்று திருமறை குர்ஆன் கூறுகிறது.
அல்லாஹ்வும் அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களும் காட்டித் தராத அத்தனை பழக்கங்களும் மூடப்பழக்கங்களே. சொல்லித் தராத அத்தனை நம்பிக்கைகளும் மூட நம்பிக்கைகளே.
இன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாத்தில் இல்லாத எத்தனையோ மூடப் பழக்கங்கள் மூட நம்பிக்கைகள் அநாச்சாரங்கள் பித்அத்துகள் நீக்கமற எங்கெங்கும் நிறைந்து விட்டன.
அல்லாஹ்வுக்கும் அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களுக்கும் மாற்றமான காரியங்களைக் கண்டு பிடித்துக் களையெடுப்பது அவசியத்திலும் அவசியம்.ஏனெனில் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நீங்கள் சில பாவச் செயல்களைப் புரிகிறீர்கள் அவை உங்கள் பார்வையில் முடியை விட மெலிதாகத் தோன்றுகின்றன. (ஆனால்) அவற்றை நாங்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மூபிகாத் என்றே கருதி வந்தோம். (மூபிகாத் என்றால் பேரழிவை ஏற்படுத்துபவை என்று பொருள்) ஆதாரம். புகாரி
'கண்மூடிப்பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்'
என்னும் நூலிலிருந்து
கேள்வி:5 போர், சமாதானம், கனீமத்தைப் பங்கிடுதல் வெற்றி கொள்ளப்பட்டவர்களை நடத்தும் முறைகள், எப்படி உடுத்துவது, உண்பது, மலஜலம் கழிப்பது, புணர்வது எல்லாமே இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது; இதனால் சல்மான் ரஷ்டி குர்ஆனைச் சட்டப் புத்தகம் எனப்பரிகசிக்கிறார் என்கிறார் ராம்ஸ்வர்ப்.
பதில்:5 ஆம்! குர்ஆன் மனித வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளையும் சொல்லித்தருவது முட்டாள்களின் பரிகசிப்புக்கு உரியது என்றால் எமக்குக் கவலை இல்லை. முஸ்லிம் சமுதாயம் அதை பெருமைக்குரிய ஒன்றாகவே கருதுகிறது.
கடவுள் பன்றி உருவம் எடுப்பது, மீனும், மனிதனும் இணைந்து மனிதப் பிள்ளையைப் பெற்றெடுப்பது, யானை முகமும் மனித உடலும் கொண்ட விசித்திரப் படைப்பு, ஐந்தாறு கைகள், ஆறேழு முகங்கள் கொண்ட அதிசய உருவங்கள். இவைகளையே வேதத்தில் பார்த்துப் பழகியவர்களுக்கு வந்தவர்களுக்கு முஹம்மதுக்கு வழங்கப்பட்ட வேதத்தில் இவையெல்லாம் இல்லாவிட்டால் அவர்களுக்கு பரிகசிப்பாகத் தோன்றுவதில் வியப்பில்லை. இவைதான் வேதத்தின் இலக்கணம் என்ற நம்பிக்கையுடையோர் நன்றாகப் பரிகசிக்கட்டும்!
கேள்வி:6 கவிஞர்களைப் பற்றியும், கவிதையைப்பற்றியும் முஹம்மது மிக மோசமாக நினைத்திருந்தார். அவர் குர்ஆனை வழங்கியதற்காக மக்கள் அவரைக் கவிஞர் என்று கவுரவித்ததை அவர் நிராகரித்தார். தன்னை நபி என்றே மக்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்பதில் குறியாக இருந்தார். ஒரு கவியுடைய கவிதையைக் கேட்ட போது ''அந்த ஷைத்தானைப் பிடியுங்கள்! ஒருவனுடைய வயிற்றில் சீழ்நிரம்பியிருப்பதைவிட அவனுடைய உள்ளத்தில் கவிதை நிரம்பி இருப்பது மோசமானது'' என்று முஹம்மது சொன்னதாக ஹதீஸ்கள் கூறுகின்றன. மக்கத்துப் பரத்தையரையும் கவிஞர்களையும் மரண தண்டனைக்கு உள்ளாக்கும் போது ''எழுத்தாளனுக்கும், பரத்தையருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை'' என்று முஹம்மது கூறியதாக ரஷ்டியின் புத்தகத்தில் காணப்படுகின்றது. மறுபுறமோ முஹம்மது தன்னுடைய தத்துவத்தைப் போற்றுவதற்காகவும், தனது வெற்றியை உயர்த்துவதற்காகவும், எதிரிகளை பழிப்பதற்காகவும் கஃபு இப்னு மாலிக், ஹஸ்ஸான் இப்னு தாபித், கஃபு இப்னு ஸþஹைர் போன்ற கவிஞர்களை அமர்த்திக் கொண்டார். அவர்களுக்கு தாராளமாக செல்வத்தையும், அடிமைப் பெண்களையும் பரிசில்களாக வழங்கினார்.
பதில்:6 நபியின் காலத்தின் அரபுலகிலும், உலகின் பல பகுதிகளிலும் கவிஞர்களுக்கு இருந்த மதிப்பு அளவிடற்கரியதாக இருந்தது. எழுதவும், படிக்கவும் தெரிந்திராத அன்றைய மக்கள், கவிஞர்களை உன்னதமானவர்களாக, தெய்வீக அம்சம் கொண்டவர்களாக, மனிதப் புனிதர்களாக, உத்தமர்களாக எண்ணி மதித்து வந்தனர். இந்தக் கவுரவத்தை எழுதவும் படிக்கவும் அறியாத அந்த நபிக்கு வழங்க முன்வந்த போது அதை நிராகரித்து விட்டார் என்றால் அதுதான் அந்த நபியின் தனித்தன்மை.
அவர் உண்மையாளர்; பதவி, புகழுக்காக இவ்வாறு அவர் வாதிடவில்லை என்பதற்கு அது மகத்தான சான்றாகவும் அமைந்துள்ளதை நியாய உணர்வுடன் சிந்திப்பவர்கள் அறியமுடியும். அந்தக் கவுரவத்தை நிராகரித்துவிட்டு, எதைச் சொன்னால் மக்கள் எதிர்ப்பார்களோ, துன்பம் தருவார்களோ, கொலை செய்யவும் கூட முயற்சிப்பார்களோ நாடு கடத்தத் துணிவார்களோ அந்த 'நபி' என்ற தகுதியை அன்றைய மக்கள் நம்ப மறுத்து இழிமொழி பேசிய நபி என்ற தகுதியை வாதிட்டு அந்தத்துன்பங்களை எதிர்கெண்டாரே அது அவரது நபித்துவத்துக்கு சாட்சியாக அமைந்துள்ளது. 'கவிஞன்' என்ற தகுதியை அவர் மறுத்தது அவரது பலமாகவே உள்ளது. அதை பலவீனமாகக் காட்ட எண்ணுகிறார் ராம்ஸ்வர்ப்.
'எழுத்தாளனுக்கும், பரத்தையருக்கும் எந்த வித்தியாசமுமில்லை' என்று முஹம்மது கூறியதாக ரஷ்டி குறிப்பிடுவது பச்சைப் பொய், அவ்வாறு கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை.
கவிஞர்களைப் பற்றி நபி (ஸல்) ராம்ஸ்வர்ப் குறிப்பிட்டப்படி மிகமிகமேசமான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்ததில்லை.கவிதை என்ற பெயரால் காம உணர்வைத் தூண்டி விடுவதையும், பெண்களின் அங்கங்களைக் கீழ்த்தரமாகச் சித்தரிப்பதையும், மதுபானங்களையும் போதைப் பொருட்களையும் வர்ணித்துப் பாடுவதையும், தரக்குறைவான வார்த்தைகளால் ஒருவனை அவனது குலத்தை கோத்திரத்தை உருவத்தை விமர்சிக்கும் கவிஞர்களையும் தான் நபிகள் கண்டித்துள்ளார்கள். அத்தகைய கவிஞர்களையே ஷைத்தான் என வர்ணித்தார்கள். அத்தகைய கவிதைகளையே சீழை விடவும் மோசமானது என்றனர்.
'லபீத்' என்ற இஸ்லாத்திற்கு முற்பட்ட கவிஞரின் கவிதையை நபி (ஸல்) பாரட்டியதை புகாரியில் காண்கிறோம். நல்ல கவிதை ஒன்றை ஒரு நபித்தோழர் நபியின் முன்னே பாடிக்காட்டிய போது ''திரும்பவும் பாடுவீராக!'' என்று பலமுறை அதை அவர்கள் ரசித்துக் கேட்டதை (முஸ்லிம் ஆகிய) நூல்களில் நாம் காண்கிறோம். நபியவர்கள் ரசித்துக்கேட்ட அந்தக் கவிதை முஸ்லிம் கவிஞருடைய கவிதை அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஒட்டு மொத்தமாக கவியையும், கவிஞர்களையும் நபிகள் மறுத்தார்கள் என்பது உண்மைக்கு முரணாகும். நபியவர்களே நல்ல கவிஞர்களை வரவேற்றிருக்கிறார்கள் என்பதற்கு ராம்ஸ்வர்ப் குறிப்பிட்ட மூன்று கவிஞர்களையும் நபிகள் வரவேற்றது சான்றாக உள்ளது. இதில் இவர் குறை காண்பதற்கு எதுவுமில்லை.
நபிக்கு இறங்கிய அந்த வேதமும் இருவகைக் கவிஞர்களையும் குறிப்பிடுகிறது. நல்ல கவிஞர்களை வரவேற்கிறது.
(பார்க்க அல்குர்ஆன் 26:227)
கேள்வி:7 தன்னுடைய கவிதைகள் மூலம் முஹம்மதை எதிர்த்த காபிர்களை சிரச்சேதம் செய்யுமாறு ஆணையிட்டதாக ஹதீஸ்கள் கூறுகின்றன. முஹம்மதின் போர்கள் (மகாஸி) நூல்களில் முக்கியப் பகுதியாக விளங்குபவை இந்தப் படுகொலைகள் தான் அஸ்மா, அஃபாக், கஃபு இப்னுல் அஷ்ரப் ஆகிய கவிஞர்களுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை இதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம் என்கிறார் ராம்ஸ்வர்ப்.
பதில்:7 கவிஞர்களை அவர்கள் கவிஞர்கள் என்ற காரணத்துக்காக மட்டும் ஒருபோதும் கொலை செய்யப்பட்டதில்லை. ஒரு சில கவிஞர்களாக இருந்தவர்கள் வேறு பல கிரிமினல் குற்றங்களைப் புரிந்ததால், அந்தக் கிரிமினல் குற்றங்களுக்காகவே கொல்லப்பட்டனர். 'ராம்ஸ்வர்ப்' என்ற எழுத்தாளர் திருடி விட்டார் என்று வைத்துக் கொள்வோம், அவருக்கு நீதிமன்றம் அதற்காக தண்டனை வழங்குவதாக வைத்துக் கொள்வோம். அவர் எழுத்தாளன் என்ற காரணத்துக்காகத் தண்டிக்கப்பட்டதாக எவரேனும் கூறினால் அவனைவிட முட்டாள் எவனுமிருக்க முடியாது. அவர் ஹிந்துவாக இருப்பதால் தான் தண்டிக்கப்பட்டார் என்று கூறுவதும் முட்டாள் தனமானது. இதேபோல் தான் எவர் குற்றம் செய்தாலும் இஸ்லாம் சலுகை காட்டியதில்லை. குற்றவாளிகள் கவிஞர்களாக இருப்பதால் அவர்களுக்கு தனிச்சலுகை எதுவும் இஸ்லாம் காட்டவில்லை. கவிஞர்களோ, கவிஞர் அல்லாதவர்களோ எவராக இருந்தாலும் குற்றவாளிகளை தண்டனையிலிருந்து இஸ்லாம் தப்பவிட்டதில்லை. அந்த அடிப்படையில் சில கவிஞர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையைத்தான் ராம்ஸ்வர்ப் விமர்சிக்கிறார்.
உதாரணமாக அவர் குறிப்பிட்ட மூன்று கவிஞர்களில் கஃபு இப்னு அஷ்ரபை எடுத்துக் கொள்வோம் .நபிகள் மதீனாவில் ஆட்சியை நிறுவியபின் முதன் முதலில் 'பத்ரு' என்னும் போர்க்களத்தைச் சந்திக்கிறார்கள். அதில் நபிகள் மகத்தான வெற்றி பெறுகிறார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் மதீனாவில்லிஇஸ்லாமிய நாட்டில் ஒரு பிரஜையாக கஃபு இப்னு அஷ்ரப் என்ற கவிஞனும் இருந்தான். பத்ரு வெற்றிச் செய்தியைக் கேள்விப்பட்டதும் உடனே மக்காவுக்கு ஓடி அங்கேயே தங்கி முஸ்லிம்களுக்கெதிராக மக்கத்துத் தலைவர்களைத் தூண்டி விட்டதோடு அவனது சொந்த நாட்டின் இரகசியங்களையும் அர்களுக்குத் தெரிவித்தான். இதன் காரணமாகவே அவனைக் கொல்லுமாறு நபிகள் கட்டளையிட்டார்கள். இப்னு இஸ்ஹாக் இதனை குறிப்பிடுகிறார். ஆதாரப்பூர்வமான வேறு நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.
ஒரு நாட்டைச் சேர்ந்தவன், எதிரி நாட்டுக்குலிஅதுவும் இரண்டு நாடுகளுக்குமிடையே பகைமை உச்சகட்டத்தை அடைந்திருக்கும்போதுலிபோர் மேகங்கள் சூழ்ந்து நெருக்கடியான நிலையில் இருக்கும் போது, அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவன் எதிரி நாட்டுக்கு இராணுவ இரகசியங்களைத் தெரிவித்தால் எந்த நாடும் அவனை மன்னிக்க முன்வராது. தேசத் துரோகிகளுக்கு கடுமையான தண்டனையை உலகில் எந்த நாடும் அளிக்கும் அந்த தேசத்துரோக குற்றத்தையே கஃபு இப்னு அஷ்ரப் என்பவன் செய்தான். தேசத் துரோகி கவிஞர் என்பதற்காக அவனை மன்னிக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறார் ராம்ஸ்வர்ப்.
ஏனைய கவிஞர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையும் அவர்கள் கவிஞர்களாக இருந்தார்கள் என்ற காரணத்துக்காக அல்ல என்பதை ராம்ஸ்வர்ப் உணரவேண்டும்.
கேள்வி:8 அல்லாஹ், அல்குர்ஆன், அந்நபி ஆகியவை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவையாகக் கருதப்பட்டன என்கிறார் ராம்ஸ்வர்ப்.
பதில்:8 இஸ்லாம் ஒருபோதும் விமர்சனத்தை மறுத்ததில்லை. யாரும் இஸ்லாத்தை விமர்சனம் செய்யலாம். ஆனால் விமர்சனம் செய்து உண்மையை உணர்ந்து அல்லாஹ்வை, அல்குர்ஆனை, நபியை ஏற்றுக் கொண்டபின் ஒருவன் விமர்சிக்கக்கூடாது. விமர்சித்தால் அவன் இன்னமும் அல்லாஹ்வை, அல்குர்ஆனை, நபியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் இஸ்லாம் கருதுகிறது. இதில் எந்தத் தவறும் இருப்பதாக எவரும் கருதமாட்டார்கள்.
ஒரு தேசத்தில் பிரஜையாக இருப்பவன் அந்த தேசத்தின் நீதிமன்றத்தை அது வழங்கும் தீர்ப்பை விமர்சிக்க அனுமதிக்கப்படுவதில்லை. அந்த தேசம் சம்மந்தப்பட்ட சில விசயங்களை விமர்சனம் செய்வது தடுக்கப்படுகின்றது. அவ்வாறு விமர்சனம் செய்தால் தேசத்துரோகி என்று அவனுக்குப் பட்டம் சூட்டப்பட்டு தண்டிக்கவும்படுகிறது. ஒரு தேசத்துக்கு என்று விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவைகள் இருப்பதை ராம்ஸ்வர்ப் போன்றவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இது போலவே ஒரு மதத்தைச் சேர்ந்தவன் என்று ஒருவனைக் கருதவேண்டுமானால் அந்த மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை அவன் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை ஏற்பதற்கு முன்னால் அவன் எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; கேள்விகள் கேட்கலாம் என்பது எப்படித்தவறாகும்.
ஒரு ராம்ஸ்வர்ப் இஸ்லாத்தை விமர்சனம் செய்யலாம். அல்லாஹ்வை, அவன் தூதரை, அவன் அளித்த வேதத்தை விமர்சனம் செய்யலாம். இஸ்லாம் அதற்கு பதில் தரும். ஒரு சாலமன் ரஷ்டி அல்லாஹ்வை வேதத்தை நபியை ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்ட சாலமன் ரஷ்டி விமர்சித்தால் அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர் இன்னமும் இஸ்லாத்தின் கொள்கைகளை அவர் நம்பவில்லை என்று கூறி அவரை இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர் என்று இஸ்லாம் முடிவு செய்கிறது.
எந்தக் கொள்கையை ஏற்றுவிட்டதாக ஒருவன் கூறுகிறானோ, அவன் அந்தக் கொள்கையை நம்பாதவனாக இருந்தால் அவரது கூற்று எப்படி உண்மையாக இருக்கமுடியும்? இதைத்தான் இஸ்லாம் கூறுகிறது. ராம்ஸ்வர்ப் இதில் குறை காண்பதற்கு எதுவுமில்லை.
அவரது புலமை சான்ற கேள்விகள் எதுவுமே புலமை சான்றதாக இல்லை. பொய்யும், முரண்பாடும், பொருந்தா வாதங்களும் நிறைந்ததன் கேள்விகளுக்கு 'புலமை சான்ற கேள்விகள்' என்று அவர் பெருமிதப்பட்டுக்கொள்வதில் அர்த்தம் எதுவுமில்லை. (முடிந்தது)
நன்றி: இது தான் இஸ்லாம்.காம்

பார்ப்பணர்களின் சதி
கண்ணியமான முஸ்லிம்களின் வீடுகளுக்குள்ளேயும் டிவி மூலம் வண்டி வண்டியாக ஆபாசம், இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ஆபாசத்தை முற்றிலுமாக வெறுக்கும் முஸ்லிம்களுக்கு சிறிது ஆறுதலாக மக்கள் தொலைக்காட்சி கிடைத்திருக்கிறது.அதிலும் சில நெருடலான விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் மிக முக்கியமாக 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்துவதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது.'மகளிர் உலகம்' என்ற நேரலை நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கு கொள்ளக்கூடிய பெண், சுபைதா என்ற முஸ்லிம் பெண்.ஒருமுறை அறிவிப்பாளர் 'வணக்கம்' – 'வணக்கம்' என்று பல முறை சொன்ன போது, மௌனமாக இருந்து விட்டு, ஹலோ என்று சொல்லி தனது பேச்சை ஆரம்பித்தார், அந்த முஸ்லிம் பெண். இருந்தும் அந்த அறிவிப்பாளர் 'வணக்கம்' என்று மீண்டும் சொல்லி பதிலை எதிர்பார்த்தார், பதில் ஏதும் வரவில்லை. 'முஸ்லிம்கள் தங்கள் மத விஷயங்களில் விடாப்பிடியாக இருக்கிறார்கள்' என்ற விமர்சனத்தை செய்து விட்டு நிகழ்ச்சிக்கு வந்து விட்டார்.
இதே நிகழ்ச்சியில் இன்னொரு முறை ஒரு பெண், 'வணக்கம்' என்று அறிவிப்பாளர் சொன்னதற்கு 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொன்னார். அநேகமாக மக்கள் தொலைக்காட்சியினர் அவரது தொலைத் தொடர்பை துண்டித்து இருக்கக் கூடும். ஏனெனில் அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொன்ன உடன் நிகழ்ச்சி நடத்துபவரிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டு, வேறொருவர் இணைப்பில் வந்துவிட்டார்.
அப்பொழுதிலிருந்து எனது மனதில் ஓர் எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தது, அதாவது,'வணக்கம்' என்கிற சொல் இறைவனுக்கு மட்டுமே செலுத்த வேண்டிய வணக்கத்தை குறிக்கும். இந்த சொல்லை வேறு எதற்கும் எவருக்கும் பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தினால் இஸ்லாமிய நம்பிக்கைப்படி ஷிர்க் எனும் இணைவைத்தலாகும். அதாவது அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவார்.
'வணக்கம்' என்று சொல்லப்படும் போது, முஸ்லிம்கள் என்ன மறுமொழி சொல்வது? என்பது தான் எனது எண்ண ஓட்டமாக இருந்தது.அதுமட்டுமின்றி இதே விஷயத்தை 'களத்து மேடு' நிகழ்ச்சியில் பேரா.நன்னன் அவர்களிடம் கேட்க வேண்டும் என்பதும் எனது எண்ணமாக இருந்தது.ஆனால் கடந்த 9.11.2008, களத்து மேடு நிகழ்ச்சியில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது, பேரா.நன்னன் அவர்கள், 'முஸ்லிம்கள், குறிப்பாக நல்ல முஸ்லிம்கள் தங்களது கோட்பாடுகளில் தெளிவாக இருக்கிறார்கள். அதை உடனே நடைமுறைப்படுத்தவும் செய்கிறார்கள். ஆனால் சைவ, வைணவ சமயங்களில் அழுக்குகள் மண்டிக் கிடக்கின்றது. எவர் எதைச் சொன்னாலும் இந்த சமயங்கள் அவற்றை உள்வாங்கிக் கொள்கின்றது. ஆனால் முஸ்லிம்கள் 'வணக்கம்' என்பதை இறைவனுக்கு மட்டும் தான் செலுத்த வேண்டும், மனிதர்களுக்கு செலுத்தக் கூடாது, என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்' என்றார் (உரையின் சுருக்கம்)
இன்னொரு முஸ்லிம் சகோதரி பேரா.நன்னனிடம் வித்தியாசமான முறையில் தனது பேச்சை ஆரம்பித்தார். நிகழ்ச்சியின் அறிவிப்பாளரின் வழக்கமான 'வணக்க'த்திற்கு 'வாழ்த்துக்கள்' என்றார். பேரா.நன்னனையும் 'வாழ்த்துக்கள் ஐயா' என்று விளித்தார்.
மற்றொரு சகோதரர், 'சீதக்காதி' என்ற பெயர், ஷேக் அப்துல் காதிர் என்ற பெயரின் மருவுதலாகும் என்ற தகவலை சொன்னார்.
அடுத்த சகோதரர், பேராசிரியரிடம் நேரடியாகவே 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்த முடியவில்லை, அதனால் வேறொரு சொல்லை எங்களுக்கு சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
அதற்கு நன்னன் அவர்கள், 'முன்பு தொடர்பில் வந்த சகோதரி எனக்கு வாழ்த்துக்கள் என்று சொன்னார். நானும் வாழ்த்துக்கள் என்று பதில் சொன்னேன்' என்று பதில் சொன்னார்.அதோடு, 'வணக்கம்' என்ற சொல்லை முந்தைய தமிழ் இலக்கியங்களில் காண முடியவில்லை, பண்டைய மன்னர்களை புலவர்கள் சந்திக்கும் போது, வணக்கம் மன்னா! என்று சொல்ல வில்லை, மாறாக 'வாழ்த்துக்கள்' என்ற சொல்லைத் தான் பயன்படுத்தியுள்ளார்கள். பின்னர் வந்த ஆரியர்கள் தான் கீழ்மக்கள், தங்களை வணங்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் 'வணக்கம்' என்ற சொல்லை அறிமுகம் செய்திருக்கிறார்கள். 'வணக்கம்' என்ற சொல்லை பயன்படுத்துவது தமிழ் மரபும் அல்ல, தமிழர் பண்பாடும் அல்ல. அதனால் அதனை பயன்டுத்துவதை தவிர்ப்பது நல்லது என்றார்.
தனக்கு சரி என்று பட்டதை போட்டு உடைக்கும் பேரா.நன்னன், தான் கடவுள் நமபிக்கை அற்றவன் என்றும் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
முஸ்லிம்களை வணக்கம் என்ற பெரும் சிக்கலில் இருந்து காப்பாற்றிய பேரா.நன்னன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்னு ஃபாத்திமா
நன்றி: முத்துப்பேட்டை

திரை மறைவு வாழ்க்கை

திரைமறை வாழ்க்கை (ஆலமுல் பர்ஸக்) -
அபூ நாஃபிஆ, உடன்குடி.
வாழ்க்கை என்பது ஒரு அற்புதமான கலை. அப்படிப்பட்ட கலையை நுட்பமாக, முழுவதுமாக அனுபவித்தால்தானே அதன் அருமை தெரியும்…? வாழ்க்கை என்பதே வாழ்வதற்குத்தானே…? நாம் வாழக்கூடிய குறைந்த அளவு காலத்தில் நம்முடைய விருப்பப்படி என்னென்ன விதமான ஆடைகளை உடுத்த வேண்டுமோ அதையெல்லாம் உடுத்தி, எந்தெந்த இடங்களுக்கெல்லாம் செல்ல வேண்டுமோ அங்கெல்லாம் சென்று, அனைத்து சுகங்களையும் அனுபவிக்கலாம். நல்லவழியில் சம்பாதித்தாலென்ன, பிறரிடம் கொள்ளையடித்து சம்பாதித்தாலென்ன, நாம் சுகபோகமாக எந்த துன்பங்களையும் அனுபவிக்காமல் வாழ்ந்தால்போதும்… நாம் இந்த உலகத்தில் வாழும்போதே அனைத்து சுகங்களையும் அனுபவித்து விட வேண்டும். நாம் செய்யக்கூடிய செயல்களைப் பற்றி நம்மைக் கேள்வி கேட்பவர் யார் இருக்கிறார்? நாம் இறந்ததும் நம்முடைய சடலத்தை எரித்து விடுவார்கள் அல்லது மண்ணில் புதைத்து விடுவார்கள். எரிக்கப்பட்ட உடல் உடனடியாக சாம்பலாவதைப் போல, புதைக்கப்பட்ட உடலும் சில காலத்திலேயே மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்விடுமே…! பிறகெப்படி இறந்த பின் இன்னொரு வாழ்க்கை உண்டு என்றும், உலகில் வாழும்போது நாம் செய்த அனைத்து செயல்களின் பலனை அங்கே அனுபவிப்போம் என்றும் சிந்தனை தோன்றும்…?
அப்படியே உங்கள் சிந்தனையை ஓட விடுங்கள் பார்ப்போம்…..!
உலக மக்கள் அனைவரையும் புற்பூண்டு, கொடி அனைத்தையும் படைத்தது இறைவன் தான். மனிதனுக்கு பிறப்பையும், இறப்பையும் அமைந்துள்ளானே… எதற்காக? என்ற கேள்விக்குப் பதிலாக, யார் மனிதர்களிலேயே அழகிய செயல்களைச் செய்து வாழ்கின்றார் என்பதை சோதிப்பதற்காகத் தான் என்பதை அல்குர்ஆனில் 67:2 வசனத்தின் மூலம் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். அதை அப்படியே மனதில் ஆழமாகப் பதித்துக் கொண்டு கீழ் வருவதைப் படித்துப் பாருங்கள்….!

உலகிலுள்ள கோடிக்கணக்கான மனிதர்களில் உங்களையும், என்னையும் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். நீங்கள் பிற மனிதர்களுக்கு நல்லதே செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் கொண்டு, உங்கள் வாழ்வில் என்ன துன்பங்களைச் சந்தித்தாலும் நேர்மையாளராக, உண்மையாளராக, பிறருக்கு உதவிகள் பல புரியும் அன்புள்ளம் கொண்டவராகவே வாழ்ந்து வருகிறீர்கள். ஆனால் நானோ பிறருக்கு நம்மால் இன்பம் வந்தாலென்ன, துன்பம் வந்தாலென்ன? நம் வாழ்க்கையில் நாம் எந்த சிறு துன்பத்தையும் அனுபவித்துவிடக் கூடாது என்று அஞ்சி, சுகபோகமாக வாழ வேண்டும் என்று கருதி, திருடுகிறேன், மது அருந்துகிறேன், விபச்சாரம், கொலை, கொள்ளைகளைக் கணக்கின்ற செய்து வாழ்கிறேன்…. இவற்றை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.

நாமிருவரும் மரணிக்கின்றோம் எனில் நீங்கள் உலகில் செய்த நற்காரியங்களுக்கான பலனென்ன? நான் உலகில் செய்த தீய காரியங்களுக்கான தண்டனைதான் என்ன? எந்தவொரு பரிசோ அல்லது தண்டனையோ இல்லையெனில் அவரவர் தண்டனை மன விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்து, எப்படி வேண்டுமானாலும் வாழ்வார்களல்லவா? அதனால்தான் மண்ணறையில் ஒரு வாழ்க்கை உண்டு…
உலகில் எப்படி வாழ்ந்தோமோ அதற்கேற்ப அங்கே ஒவ்வொருவருக்கும் பிரதிபலன் கொடுக்கப்படும் என்பதை மறந்து உலகில் வாழ்ந்து விடாதீர்கள் என்று அல்லாஹ் எச்சரிக்கிறான்.

மரணத்துக்குப் பின்னுள்ள வாழ்க்கையை சற்றே ஆழமாக நாம் சிந்தித்தால், நாம் சிந்தித்தால், நாம் வாழப்போகும் அந்த மண்ணறை வாழ்க்கையானது நம்முடைய அன்றாட வாழ்வோடு மிக ஆழமாகவும் மிக நெருக்கமாகவும் பின்னிப் பிணைந்து தொடர்பு கொண்டுள்ள ஒன்று என்பது தெளிவாகும். இவ்வுலகில் குறிப்பிட்ட தவணை வரை வாழும் ஒவ்வொரு மனிதனின் நற்செயல்கள், தீய செயல்கள் அனைத்தையும் எடைபோட்டு, அதற்குரிய நிரந்தரமான கூலியை வழங்குவதற்காக ஓர் உன்னதமான உலகை இறைவன் நமக்குத் தந்திருக்கிறான். ஆனால் அந்த உன்னதமான வேறு உலகைச் சந்திப்பதற்கு முன்னால் ஆதமின் சந்ததிகள் அனைவரும் மண்ணறை வாழ்க்கையைச் சந்தித்தே தீர வேண்டும். இதற்கு ஆலமுல் பர்ஸக் - திரைமறை வாழ்க்கை என்று கூறுவர். மனிதர்களில் நல்லவராயினும், தீயவராயினும் இந்த திரைமறை வாழ்க்கையை சந்தித்தே ஆக வேண்டும்.

அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன் என் இறைவா! என்னைத் திரும்ப உலகுக்கு திருப்பியனுப்புவாயாக! (என்று கூறுவான்) அவன் கூறுவது வெறும் வார்த்தையன்றி வேறில்லை! அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையிலும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன். 23:99,100).
இந்த சத்திய வரிகளில் அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது என்று கூறுவதில் பொதிந்துள்ள உண்மை என்னவெனில் மறுமையில் எழுப்பப்படுவதற்கு முன் மண்ணறை வாழ்க்கை என்பது கட்டாயம் உண்டு என்று தெளிவாகிறது.

அனுதினமும் ஷவரில் குளித்தவர்கள்
மரணித்தாலும் குளிப்பாட்ட பலகைமேல் வைக்கப்படுவார்கள்
உடலுக்கு உயர்தர சோப்புகளைப் பயன்படுத்தியவர்கள்
ஏதாவதொரு நறுமணத்தை உடலில் பூச விட்டுவிடுவார்கள்.
பனாறஸ் பட்டு ஜரிகைக்காக பொறாமைப்பட்டவர்களுக்கு
ஆறு முழம் வெள்ளைத் துணியே இறுதி ஆடை…
அன்று புத்தாடைகளில் நறுமணம் தடவினர்
இன்று இறுதி ஆடையில் நறுமணம் தடவுகின்றனர்.
சடலத்தைக் தூக்கி வந்து மண்ணறையில் இறக்கி பூமேனியில் மண்ணை அள்ளிப் போடுவார்கள்.
பளிங்கினாலான மாளிகையில் வாழ்ந்தவருக்கும்
மண்ணினாலான சிறு அறைதான் மாளிகை.
என்றுமே நம்முடைய சுற்றத்தாரின் அரவணைப்பிலேயே வாழ்ந்த நம்முடைய உடலை ஆறு அடி குழியில அனாதையாகப் போட்டுவிட்டு, அவரவர் வேளையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள்.
உலகில் பெற்ற தாய், பின்னர் மனைவி நமக்குத் தந்த அரவணைப்பைத் தான் பார்த்திருப்போம். சவக்குழியில் சடலத்தைப் போட்ட அந்த நொடியிலேயே அந்த அரவணைப்புக்கு நேர்மாறான ஓர் அரவணைப்பைத் தான் பார்த்திருப்போம். சவக்குழியில் சடலத்தைப் போட்ட அந்த நொடியிலேயே அந்த அரவணைப்புக்கு நேர்மாறான ஓர் அரவணைப்பை பூமி நமக்களிக்கும். நம்மை ஆத்திரமூட்டி - பூமி நமது இரு விலாப்புறங் களிலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணையும்படி நம் உடலை நெருக்கும். இதுவும் இறைவனின் கட்டளையின்படியே நடைபெறும். இவ்வுலகில் நல்ல செயல்கள் செய்தவராக இருந்தால் ஒரு நெருக்கத்தோடு விட்டுவிடும். கெட்ட செயல்கள் செய்தவராக இருந்தாலோ, மேலும் நெருக்கத்தை அதிகப்படுத்தும். இறைவனின் கட்டளைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வந்த நபிமார்களை மட்டும் பூமி அவ்வாறு நெருக்காது. இதற்கு வலுவூட்டும் விதமாக இறைத்தூதர் அவர்களின் தேன்மொழியைப் பாருங்கள்.

நபிமார்களுடைய உடல்களை பூமி சாப்பிடுவதை அல்லாஹ் தடுத்து விட்டான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்:ஷத்தாத்(இப்னு அவ்ல்(ரழி) ஆதாரம் :இப்னுமாஜா

அறிமுகமில்லாத இருவர்!
பூ மேனியைப் புதைத்துவிட்டு சொந்த பந்தங்கள் கொஞ்ச தூரம் கூட நடந்திருக்கமாட்டார்கள். திடீரென்று நாம் இதுவரை பார்த்தேயிராத இரண்டு வானவர்கள் நம் கண்முன் வந்து நிற்பார்கள். கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆயத்தமாவார்கள். ஆத்மாவைச் சுமந்து சென்ற வானவர்களை நோக்கி, எனது இந்த அடியானுடைய செயல்களை இல்லிய்யீனிலே (நல்லவர்களின் செயல்கள் பதியப்படும் ஏடு) பதிந்து விட்டு (விசாரணைக்காக) பூமியிலுள்ள (மண்ணறையிலுள்ள) அவனது உடலில் அவனுடைய ஆத்மாவைச் சேர்த்து விடுங்கள்! பூமியிலே அவர்களை நான் படைத்தேன்… இன்னும் மற்றொரு முறை அதிலிருந்து அவர்களை நான் (மறுமையில்) வெளியேற்றுவேன் என இறைவன் கூறினான். அதேபோல் அவனுடைய ஆத்மா(பூமியிலுள்ள) அவனது உடலில் புகுத்தப்படுகிறது. அப்போது அவனிடத்தில் (முன்கர், நகீர் எனும்) இரண்டு வானவர்கள் வந்து அவனை அமர வைப்பார்கள். அவ்விருவரும் அம்மனிதனை நோக்கிப் பின் வருமாறு கேள்விகள் கேட்க, அவனும் பதிலளிப்பான்.

கேள்வி : உனது இறைவன் யார்?
பதில் : எனது இறைவன் அல்லாஹ்
கேள்வி : உனது மார்க்கம் என்ன?
பதில் : எனது மார்க்கம் இஸ்லாம்
கேள்வி : உங்களிடத்தில் மார்க்கத்தை எடுத்துச் சொல்ல அனுப்பப்பட்டாரே அவர் யார்?
பதில் : அவர் அல்லாஹ்வுடைய இறுதி தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்.
கேள்வி : அதை நீ எவ்வாறு அறிந்து கொண்டாய்?
பதில் : அல்லாஹ்வுடைய (நெறி) நூலை ஓதினேன்; அதனை முழுமையாக நம்பினேன். அதனை உண்மைப் படுத்தினேன். இவ்வாறு அம்மனிதன் பதிலளிப்பான்.

என்னுடைய அடியான் உண்மை சொல்லிவிட்டான். அவனுக்காக சுவனத்தில் இருந்து ஒரு விரிப்பை விரித்துவிடுங்கள். சுவனத்தில் ஒரு ஆடையை அவனுக்கு அணிவியுங்கள்…! சுவனத்திலிருந்து ஒரு கதவை அவனுக்காக திறந்து விடுங்கள்! என்று சொல்லக்கூடிய சப்தமொன்று வானத்திலிருந்து வரும். சுவனத்தில் இருந்து மென்மையான காற்றும், நறுமணமும் அவனிடம் வரும். அவனுடைய பார்வை எட்டுமளவு அவனுடைய மண்ணறை விசாலமாக்கப்படும் (புதுமாப்பிள்ளை எந்த தொல்லையுமில்லாமல் தூங்குவது போல் அவன் மறுமையில் எழுப்பப்படும் வரை தூங்குவான்).

வானவர்கள் சுமந்து சென்ற கெட்ட ஆத்மாவின் செயல்கள் ஸிஜ்ஜீனிலே (தீயவர்களின் செயல்கள் பதியப்படும் ஏடு) பதியப்பட்டு அவனது உயிர் அவனுடைய உடலில் ஊதப்படும். பிறகு அவனிடம் இரண்டு வானவர்கள் வந்து அவனை அமரச் செய்து, அவனிடத்தில் பின்வருமாறு கேள்விகள் கேட்க, அவன் பதிலளிப்பான்.

கேள்வி : உனது இறைவன் யார்?
பதில் : அதுவா….? அதுவா…? எனக்கு தெரியாதே…..!
கேள்வி : உன்னிடத்தில் மார்க்கத்தை எடுத்துச் சொல்ல அனுப்பப்பட்ட மனிதர் யார்?
பதில் : அதுவா….? அதுவா…? எனக்கு தெரியாதே…..!
இவன் பொய் சொல்கிறான். நரகத்திலிருந்து ஒரு விரிப்பை இவனுக்காக விரித்து விடுங்கள்…! நரகத்திலிருந்து ஒரு கதவை இவனுக்காக திறந்து விடுங்கள்…! என்று சொல்லக்கூடிய சப்தமொன்று வானத்திலிருந்து வரும். நரகத்தின் உஷ்ணமும், விஷக்காற்றும் அவனுடைய மண்ணறைக்குள் வீசும். அவனுடைய வலது, இடது விலா எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னுமளவுக்கு மண்ணறை அவனை நெருங்கிக் கொண்டே இருக்கும். அவன் மறுமையில் எழுப்பப்படும் வரை இவ்வாறு வேதனையை அனுபவித்துக் கொண்டே இருப்பான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர் : பாரா இப்னு ஆஜிப்(ரழி) நூல் : அஹ்மத் ஹ8561.

இவ்வாறு விசாரணைகள் முடிந்து அவன் உலகத்தில் வாழ்ந்த வாழ்க்கையின் பலனை அனுபவித்துக் கொண்டிருப்பான். இவ்வாறிருந்தும் சிலர் கூறுகின்றனர் மண்ணறை வாழ்க்கை என்பது உண்டு; ஆனால் மண்ணறையில் வேதனை இருக்காது; தூங்கிக் கொண்டு தான் இருப்பார்கள் என்று கூறுகின்றனர். அதற்கான தெளிவை இப்போது பார்ப்போமா?

ஃபிர்அவ்ன் என்ற அரசன் இறைத்தூதர் மூஸா(அலை) அவர்களின் காலத்தில் வாழ்ந்து வந்தான். மூஸா(அலை) அவர்கள் இறைவனின் கட்டளைகளை எடுத்துக கூறியபோது அவன் இறைவனை ஏற்க மறுத்தது மட்டுமின்றி, தானே இறைவன்… தன்னையே மக்கள் வணங்கவேண்டுமென அகம்பாவம் கொண்டு, தன் இறைவன் அல்லாஹ்தான் என்று உறுதி கொண்டவர்களைத் தொடராக கொலை செய்தான். இவனுடைய அக்கிரமங்களுக்கு முடிவுகட்ட வேண்டுமென கடலில் அவனை அல்லாஹ் மூழ்கடித்தான். இவன் செய்த அக்கிரமங்களுக்கு பரிசாக மண்ணறையிலும், மறுமையிலும் வேதனை உண்டு என அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.

மேலும் வேதனையின் கேடு ஃபிர்அவ்னின் கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது. காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன்கொண்டு வரப்படுவார்கள். மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைப்பெற்றிடும் நாளில் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை கடினமான வேதனையில் புகுத்துங்கள்….! என்று கூறப்படும். (அல்குர்ஆன்: 40:45,46)

இந்த வசனத்தில் காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டு வரப்படுவார்கள் மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைப் பெற்றிடும் நாளில் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை கடினமான வேதனையில் புகுத்துங்கள்…..! என்று கூறப்படும.(அல்குர்ஆன் : 40:45, 46)

இந்த வசனத்தில் காலையில், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன்கொண்டு வரப்படுவார்கள் என்று கூறப்பட்டிருப்பது மண்ணறையில் நடப்பதைத்தான் மண்ணறையில் வேதனை உண்டு என்பது தெளிவாகி இருக்கும் பட்சத்தில் சில நேரத்தில் நமக்கு ஒரு சந்தேகம் எழும். அதாவது, உயிரும் இறைவனால் கைப்பற்றப்பட்டுவிட்டது. உடலும் மக்கிப்போய் விடுகின்றது. பிறகெப்படி தீய மனிதர்கள் வேதனை செய்யப்படுவார்கள்?
நல்ல மனிதர்கள் சுகம் அனுபவிப்பார்கள் என்று நீங்கள் எப்படி கூறமுடியும்? அதன் தெளிவை பார்ப்போமா….?

ஆத்மா உணரும் வெகுமதி!
இன்று உயிர் இரத்தத்தில்உள்ளது. இதயத்தில் உள்ளது என்று பலவாறாகக் கூறிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் மருத்துவத்துறையில் புற்றுநோய் யாருக்கேனும் வந்தால் அவனுடைய உடம்பிலுள்ள இரத்தத்தை எல்லாம் வெளியேற்றி விட்டு, பிறகு புதிதாக இரத்தத்தை செலுத்துகின்றனர். அதுபோல், இதயம் பலவீனமடைந்தால் அவர் உடம்பிலுள்ள இதயத்தை எடுத்து விட்டு வேறு இதயத்தைப் பொருந்துகின்றனர். அவர்கள் கூறுவதுபோல இரத்தத்திலோ, இதயத்திலோ அல்லது மற்ற உறுப்புகளிலோ உயிர் இருந்தால் அவற்றை உடம்பிலிருந்து எடுக்கும்போதே அவர் இறந்திருக்க வேண்டுமே! அவ்வாறில்லாமல் இன்று மீண்டும் உயிருடன் எழுந்து நடமாடுகின்றனரே! இந்த சந்தேகத்தை தீர்க்கும் வகையில் இறைவன் கூறுவதை பாருங்கள்.

ரூஹ்(உயிர்) என் இறைவனுடைய கட்டளையில் உள்ளதாகும். (அதைப்பற்றிய) ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமே…! (அல்குர்ஆன் 17:85)

இன்னும் உங்களுக்கு புரிய வேண்டுமா? நீங்கள் சிறு மரணம் என்ற தூக்கத்தில் கனவு காண்பீர்களல்லவா? அந்தக் கனவில் உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சியோ அல்லது மிகப் பிடித்த ஒருவருடன் பேசுவது போல கண்டால் அந்த கனவிலே ஆழ்ந்து ஆகாயத்தில் மிதப்பதுபோல் இருப்பீர்கள்தானே…? சில சமயம் மிகுந்த சிற்றின்பத்தில் மூழ்கி ஸ்கலிதமும் ஏற்பட்டுவிடுகிறதே? சில சமயம் வேதனை மிகுதியால் அலறவும் நேரிடுகிறதே? அந்த கனவை உங்கள் உடல் அனுபவித்ததா? இல்லையே….! உங்கள் ஆத்மா(நஃப்ஸ்)தானே உணர்ந்தது…! அதுபோல்தான் உடல் எரிக்கப்பட்டாலும் சரி, விபத்தில் இறந்தாலும் சரி, உடல் மண்ணறையில் மண்ணோடு மண்ணாக மக்கிப் போனாலும் சரி, இறைவன் தான் கைப்பற்றிய ஆத்மாக்களுக்கு(நஃப்ஸ்) அவன் சுவனவாசியாக இருந்தால் கொடூரமான வேதனைகளையும் கொடுப்பான். எனவே, அவரவர் வெகுமதியை அனுபவிக்க உடல் தேவையில்லை. ஆத்மா மட்டும் போதும் என்பது தெளிவாகிவிட்டதல்லவா?

நமது நாளைய நிலை!
மண்ணறை வேதனையை மனிதன் அறிய முடியும் என்றிருந்தால் இவ்வுலகில் உயிர் வாழவே முடியாத அளவுக்கு மயக்கமுற்று விழுந்து விடுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறய அறிவிப்புகள் நபிமொழி பேழைகளில் அதிகம் உண்டு. மரண்த்திற்கு பின்னால் உள்ள தனது வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை எவன் அமைத்துக் கொள்கிறானோ, அவனே புத்திசாலியாவான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள். அறிவிப்பாளர்: ஷத்தாத் இப்னு அவ்ல்(ரழி) நூல்: அஹ்மத், திர்மிதீ, இப்னுமாஜா.

முறம் புடைக்கும்போது பதர் மற்றும் தேவையில்லாதவற்றைத் தள்ளிவிட்டு, தானியத்தை மட்டும் நாம் வைத்துக் கொள்வதைப் போல் நல்லவர்கள் சுவனமும், புதர்கள் - தீயவர்கள் நெருப்புக்கும் செல்வது உறுதி என தெரிந்துவிட்டது. நாம் தானியமா? அல்லது பதரா?
மண்ணறை என்பது மறுமையிலன் தங்குமிடங்களில் முதலாவது இடமாகும். அதிலிருந்து ஒருவன் மீட்சி பெறுவானென்றால் அதற்குப் பின்னாலுள்ள அனைத்தும் இலகுவாகிவிடும். அதிலிருந்து அவன் மீட்சி பெறவில்லை என்றால் அதற்குப் பின்னுள்ள அனைத்தும் அவனுக்கு கடினமாகிவிடும். மண்ணறையின் காட்சிகளை விட மிகமிக மோசமான எந்த ஒரு காட்சியையும் நான் கண்டதில்லை என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். எனவே, மண்ணறை பற்றிச் சொல்லும்போது அதிகமதிகம் அழுகிறேன் என்று உஸ்மான்(ரழி) அவர்கள் கூறினார்கள். நூல்: திர்மிரி, இப்னுமாஜா.

அதிகம் அழுவதா அல்லது சிரிப்பதா என்று இனி நாமே முடிவு செய்ய வேண்டும். இவ்வுலகில் நாம் வாழ்வது பொய்யில்லை. உண்மையென நம்புவது போல், இந்த உலகிற்கும், மறு உலகிற்கும் இடைப்பட்ட காலத்தில் பர்ஸக் (திரைமறை) எனும் மண்ணறை வாழ்க்கை உண்டு என நம்ப வேண்டும். மறுமை வாழ்வில் நம்பிக்கையுள்ளவர்களில் கூட சிலர் மண்ணறை வாழ்வைப் பற்றி சந்தேகப்படுவதுண்டு. எல்லாவற்றையும் நம்பி மண்ணறை வாழ்வை மட்டும் நம்பாமல் இருந்து என்ன நற்செயல்கள் செய்தாலும் அவையனைத்தும் வீணானதே! அதற்காக எந்த நற்கூலியும் கிடைக்கப் போவதில்லை.

கனவு காண்பதை மறுப்பவர் எவருமில்லை. அந்தக் கனவைக் கண்டவன் அடுத்தவனுக்கு நிரூபித்துக் காட்டுவது எவ்வாறு முடியாதோ அவ்வாறே மண்ணறை வாழ்வை நிரூபிப்பது என்பது முடியாத காரியமாகும். கனவை அனுபவிப்பதுபோல் அதை அனுபவித்தால்தான் உணர முடியும்.

நமது உயிரைக் கைப்பற்றும் சமயத்திலும் தனிமை!
முன்கர் நகீர் என்ற வானவர்கள் விசாரிக்கும் சமயத்திலும் தனிமை!
நாம் வாழப்போகும் (மண்ணறை) மர்ம மாளிகையிலும் தனிமை!
நாம் அனைவரும் ஒன்று கூட்டப்படும் மைதானத்திலும் தனிமை!
இவை அனைத்திற்கும் பின்னுள்ள வாழ்வில் இனிமை கிடைக்க நம் செயல்களை நல்ல வகையில் அமைத்து, நம்பிக்கையுடன் பிரார்த்திப்போம் தனிமையில்!

எல்லாப்புகழும் இறைவனுக்கே…! எங்கள் இறைவா! உயர்ந்த சுவனத்தை நாங்கள் உன்னிடத்தில் வேண்டுகிறோம்! தந்தருள்வாயாக!
நன்றி: - அபூ நாஃபிஆ, உடன்குடி.

தலித் ஒருவர் விரும்பினால் ஐயராக முடியாது !