உலக முடிவு நாள் எப்பொழுது சம்பவிக்கும் என்று ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்குள் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தான். அதற்கு தீர்வாக மனிதர்களுக்கு இறுதிநாளின் அடையாளங்களை நினைவுபடுத்துகிறோம். பொறுப்புடனும், பொறுமையுடனும் படித்து மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றியும் பயந்து, சிந்தித்து உலக இறுதி நாளின் நெருக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்தி இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடப்போமாக என்று எங்களையும், உங்களையும் கேட்டுக்கொண்டு ஆரம்பம் செய்கிறோம்.
இந்த உலகம் நிரந்தனமானது அல்ல. பிறந்ததெல்லாம் இறந்தே ஆகவேண்டும் என்ற நியதியுடைய இவ்வுலகத்தின் அழிவை பற்றி விஞ்ஞானிகள் கூறும் பொழுது:- “உலகின் அழிவு துவங்கிவிட்டது. நாம் ஒரு மாய நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்றோம். மனித இனம் என்ற சுவடே இல்லாமல் அழிந்தொழியும். பூமியானது தூள்தூளாகி அனைத்து மூலக்கூறுகளும், அணுக்களும் தூசியாகி விண்வெளியில் பறக்கும்” என்று விஞ்ஞானிகள் விஞ்ஞான வளர்ச்சியின் உச்சாணியில் இருந்து கொண்டு ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.
இதனையே இறைவன் 1425 வருடங்களுக்கு முன்பு விஞ்ஞானம் என்றால் என்ன என்று தெரியாத காலகட்டத்திலேயே திருக்குர்ஆனில் கூறும் பொழுது…

பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது - இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது (99:1,2)
பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, (89:21)

இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது, (56:5)
வானம் பிளந்து விடும்போது (84:1)
வானம் பிளந்து விடும்போது - நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்றுகள் திறக்கப்படும் போது, (82:1-4)
சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது (81:1)
இவ்வாறு இறைவன் திருக்குர்ஆனில் உலகின் அழிவைப் பற்றி முன்னறிவிப்புகளைச் சொல்லியிருக்கிறான்.

கராமத்தா? கப்ஸாவா?

காயல்பட்டிணத்தைச் சார்ந்த மஹ்மூத் என்பவரால் சில ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதே முஹ்யித்தீன் மவ்லிது ஆகும். முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களை அல்லாஹ்வின் தூதருக்கு நிகராகவும் அல்லாஹ்வின் தூதரை விடச் சிறந்தவராகவும் காட்டும் வகையில் இந்த மவ்லிது அமைந்திருக்கிறது. சில வரிகள் அவரை அல்லாஹ்வுக்கு நிகராகக் காட்டும் வகையில் அமைந்திருக்கின்றன. அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நிகழ்த்தியதாகக் கூறப்படும் அற்புதங்கள்லி குர்ஆன்லி ஹதீசுடன் நேரடியாக மோதும் வகையில் அமைந்திருக்கின்றன. அவற்றில் சிலவற்றை நாம் காண்போம்.

அபுல் மஆலி என்பார் அப்துல் காதிர் ஜீலானியிடம் வந்துி ''என் மகனுக்குப் பதினைந்து மாத காலம் காய்ச்சல் விலகாமல் உள்ளது'' என்றார். அதற்கு அப்துல் காதிர் ஜீலானி அவர்கள்லி ''காய்ச்சலே! நீ எப்போது இவனைப் பிடித்தாய்? நீ ஹில்லா எனும் ஊருக்குச் சென்று விடு!' என்று உன் மகனுடைய காதில் கூறு'' என்றார்கள். அவர் கட்டளையிடப்பட்டவாறு செய்தார். அதன் பின் அவனுக்குக் காய்ச்சல் ஒரு சிறிதும் மீண்டும் வரவில்லை. பிறகு ஹில்லா எனும் ஊரில் உள்ள ராபிளிய்யா கூட்டத்தினர் அனேகர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாகச் செய்தி வந்தது.

இவ்வாறு முஹ்யித்தீன் மவ்லிதில் கூறப்பட்டுள்ளது.

காய்ச்சல் பதினைந்து மாத காலம் நீடிக்குமா? என்ற கேள்வியை விட்டு விடுவோம். மார்க்க அடிப்படையில் இந்தக் கதை நம்பத்தக்கது தானா?

இந்தக் கதையில் அப்துல் காதிர் ஜீலானிலி நோய் தீர்க்கும் அதிகாரத்தைப் பெற்றிருப்பதாகவும் நோயை வழங்கும் அதிகாரம் பெற்றிருப்பதாகவும்லி காய்ச்சல் என்ற நோயுடன் அப்துல் காதிர் ஜீலானி பேசியதாகவும் கூறப்படுகிறது.

நோய்களை வழங்குபவனும்லி அதை நீக்குபவனும் அல்லாஹ் தான். இந்த அதிகாரத்தில் எவருக்கும் அல்லாஹ் எந்த உரிமையையும் வழங்கவில்லை. இது இஸ்லாத்தின் அடிப்படையான கொள்கை. இதை திருமறைக் குர்ஆனிலிருந்தும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலிருந்தும் அறியலாம்.

நான் நோயுற்றால் எனக்கு நோய் நிவாரணம் வழங்குபவன் இறைவன் என்று இப்றாஹீம் (அலை) கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்.(அல்குர்ஆன் 26:80)

இந்த அப்துல் காதிர் ஜீலானியை விடப் பல கோடி மடங்கு சிறந்தவர்களான இப்றாஹீம் நபியவர்கள், அந்த அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியது என்கிறார்கள். இவரோ நோய் தீர்க்கும் அதிகாரம் தமக்குரியது என்கிறார்.

இந்தப் பூமியிலோலி உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.(அல்குர்ஆன் 57:22)

எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப்பத்தைக் கொண்டே தவிர இல்லை.(அல்குர்ஆன் 54:11)
இந்த வசனங்களை நிராகரிக்கும் வகையில் இந்தக் கதை அமைந்தள்ளது.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ நபித்தோழர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினரில் பலர் நோய்வாய்ப்பட்டனர். அந்தச் சந்தர்ப்பங்களில் நபி (ஸல்) அவர்கள் அந்த நோயைப் பார்த்துப் பேசி வேறு ஊருக்கு அனுப்பவில்லை. ஏன்? நபி (ஸல்) அவர்களே கூட நோய்வாய்ப்பட்டார்கள்.

''மனிதர்களின் இறைவா! இந்தத் துன்பத்தை நீக்கு! இறைவா! நீ நிவாரணம் அளிப்பாயாக! உனது நிவாரணம் தவிர வேறு நிவாரணம் இல்லை'' என்று துஆச் செய்யுமாறு தான் அந்தச் சந்தர்ப்பங்களில் தம் தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். (பார்க்க: புகாரீ 5675)

நபி (ஸல்) அவர்களுக்குக் கூட இல்லாத அதிகாரம் அப்துல் காதிருக்கு வழங்கப்பட்டதாக இந்தக் கதை கூறுகிறது.

போற்றதலுக்குரியவர்கள் யார்?

என் தோழர்களை ஏசாதீர்கள்! ஏனெனில், நிச்சயமாக யார் கைவசம் என் உயிர் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக"உஹத் மலையளவு தங்கத்தை எவர் தர்மம் செய்தபோதும் என் தோழர்களின் நிலையை அடைய முடியாது, ஏன் அதில் பாதியளவு கூட அடையமுடியாது" என்று நபிகள் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்)

சோதனை
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் சத்திய இஸ்லாத்தை அரபுத் தீபகற்பத்தில் முழங்கியபோது, அவர்களுக்கு ஏற்ப்பட்ட இன்னல்களும், அவர்கள் மீது வீசப்பட்ட இழிசொற்களும் வசைமாரிகளும் கொஞ்ச நஞ்சமல்ல!

அவர்கள் சத்தியத்தைச் சொன்னதற்காக அவர்களின் குடும்பத்தையே சமூகப் பரிகாசம் செய்தனர்.

பொருளாதாரத் தடை விதித்தனர். அவர்களின் உறவினர் கூட எவ்வித உதவியும் செய்யக்கூடது என்று கட்டுப்பாடு விதித்தனர்.

மண்ணை வாரி இறைத்தது ஒரு கூட்டம். பைத்தியம் என பட்டம் சூட்டி மகிழ்ந்தது ஒரு கூட்டம்.

அவர்கள் நடந்து செல்லும் பாதையில் முள்ளை பரப்பி வைத்து விட்டு மறைந்து நின்று ரசித்துக் கொண்டிருந்தது இன்னொருமொரு கூட்டம்.

இரத்தம் சிந்தும் அளவுக்கு கல்லால் எறிந்து, கடுமொழி கூறி நின்றது தாயிப் நகரில் ஒரு கூட்டம்.

அவர்களுக்கு ஏற்ப்பட்டது போன்ற ஒரு துன்பம் உலகில் எந்த மனிதனுக்கும் ஏற்பட்டதில்லை எனலாம்.

இதனால்தான் அண்ணல் நபி(ஸல்) அவர்கள்"எனக்கு ஏற்ப்பட்ட சோதனைகளும் துன்பங்களூம், துன்பத்தில் வீழ்ந்து கிடக்கின்ற இஸ்லாமியருக்கு ஆறுதல் அளிக்கட்டும் என்று கூறினார்கள்"(அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் இப்னு காசிம்(ரழி) நூல்: மூஅத்தா)

மத்ஹபையாவது பின்பற்றுவார்களா? P. J

அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்களே! உங்களுடைய ஆலிம்கள் எந்த மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் என உங்களுக்குப் போதிக்கிறார்களோ அந்த மத்ஹப் நூல்களில் உள்ள ஏராளாமான விசயங்களை உங்களுக்கு அவர்கள் சுட்டிக் காட்டாமல் மறைத்துள்ளார்கள் என்பதற்குப் பின்வரும் செய்திகள் மிகத் தெளிவான சான்றுகளாகும்.

உங்கள் மத்ஹப் நூற்களிலேயே பித்அத், தடுக்கப்பட வேண்டிய மோசமான காரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத் தான் உங்களோடு சேர்ந்து உங்களுடைய ஆலிம் பெருமக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல! மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

தராவீஹ் 20 ரக்அத்கள் என்பது பலவீனமான செய்தியாகும்
தராவீஹ் இருபது ரக்அத்கள் தான் தொழவேண்டும், எட்டு ரக்அத்களுக்கு ஆதாரங்கள் இல்லை, இதைச் செய்பவர்கள் புதுமைவாதிகள், குழப்பவாதிகள் என்று கூறி வரும் மத்ஹபுவாதிகள் பின்வரும் செய்தியைப் படித்து, தெளிவு பெறட்டும்.

நபி (ஸல்) அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத காலங்களிலும் வித்ருத் தொழுகை உட்பட பதினோரு ரக்அத்துகளை விட அதிகமாகத் தொழுததில்லை. இது புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறே இப்னு ஹுசைமா, இப்னு ஹிப்பான் ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது. ஆனால் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வாயிலாக இப்னு அபீ ஷைபா, தப்ரானி, பைஹகி போன்ற நூல்களில் இடம்பெற்றுள்ள, நபி (ஸல்) அவர்கள் வித்ருத் தொழுகை நீங்கலாக இருபது ரக்அத்துகள் தொழுதார்கள் என்ற செய்தி பலவீனமானதாகும். (ஹனபி மத்ஹப் நூல்: ஹாஷியா தஹ்தாவி, பாகம்: 1 பக்கம்: 269)

தொழுகையில் நெஞ்சில் கைகட்டுதல்
தொழுகையில் நெஞ்சில் கை கட்டக் கூடாது, தொப்புளுக்குக் கீழ் அல்லது வயிற்றில் தான் கட்ட வேண்டும் என்று சொல்பவர்கள், மத்ஹப் நூல் என்ன சொல்கிறது என்பதை பார்க்கட்டும்.

இமாம் ஷாஃபி அவர்களிடத்தில் (தொழுகையில்) இரு கைகளை நெஞ்சின் மீது வைப்பது தான் சிறப்புக்குரியதாகும். நூல்: ஹிதாயாவின் விரிவுரை நூலான அல்இனாயா, பாகம்: 1, பக்கம்: 468. (இது ஹனஃபி மத்ஹப் நூலாகும்)

இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: தொழக் கூடியவன் நெஞ்சில் கைவைக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் நெஞ்சில் கைகளை வைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள் என்று அறிவிக்கப்படும் ஹதீஸ் இதற்குரிய ஆதாரமாகும். ஏனென்றால் நெஞ்சின் மீது கை வைத்தல் என்பது (தொப்புளுக்குக் கீழ்) மறைவுறுப்பின் மீது கை வைப்பதை விட இது பணிவிற்கு மிகவும் நெருக்கமானதாகும். நூல்: கன்ஸுத்தகாயிக் என்ற நூலின் விரிவுரை நூலான தப்யீனுல் ஹகாயிக் பாகம்: 1 பக்கம்: 107 (இது ஹனஃபி மத்ஹப் நூலாகும்)

வாயில் மொழியும் நிய்யத் இல்லை
தொழும் போதும், நோன்பு நோற்கும் போதும் வாயால் சில வார்த்தைகளை கூறி நிய்யத் செய்ய வேண்டும் என்று நடைமுறைபடுத்தி வரும் மத்ஹப்வாதிகள் இச்செய்தியை படிக்கட்டும்.

பொதுவாக அனைத்து வணக்கங்களிலும் நிய்யத்தை வாயால் மொழிதல் என்பது பித்அத்தான காரியமாகும். ஹனபி மத்ஹப் நூல்: அல்பஹ்ருர் ராயிக், பாகம்: 2 பக்கம்: 346

"நபி (ஸல்) அவர்கள் தொழுகையின் ஆரம்பத்தில் நான் இவ்வாறு தொழகிறேன் என்று (நிய்யத்தை வாயால்) கூறுபவர்களாக இருந்தார்கள் என ஸஹீஹான, லயீஃபான எந்த ஹதீஸ்கள் வழியிலும் உறுதியாகவில்லை. மேலும் ஸஹாபாக்களிலும் தாபியீன்களிலும் ஒருவர் கூட இவ்வாறு செய்தார் என்றும் உறுதிப்படுத்தப்படவில்லை'' என்று சில சிறந்த ஹதீஸ் கலை வல்லுநர்கள் அறிவித்துள்ளதாக ஃபத்ஹுல் கதீர் என்ற நூலில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹில்யா என்ற நூலில் "நான்கு இமாம்களிடமிருந்தும் இவ்வாறு எடுத்துரைக்கப்படவில்லை என்றும், நபியவர்கள் தொழுகைக்காக நின்றால் அல்லாஹு அக்பர் என்று தான் கூறுவார்கள்'' என்ற விவரம் மேலதிகமாக இடம்பெற்றுள்ளது. ஹனபி மத்ஹப் நூல்: ஹாஷியது இப்னி ஆபிதீன், பாகம்: 1 பக்கம்: 416

தமிழகத்தில் ஏற்பட்ட ஏகத்துவ எழுச்சி - ஓர் வரலாற்றுப் பார்வை (தொடர் - 1)-எம். ஷம்சுல் லுஹா ரஹ்மானி


1980 களுக்கு முன்னால் தமிழக முஸ்லிம்களின் நிலையும், தமிழக உலமாக்களின் நிலையும் எந்த நிலையில் இருந்தது என்பதை இன்றைய இளைஞர்கள் அறிய மாட்டார்கள்.

தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கை அவர்களிடமிருந்து அறவே எடுபட்டுப் போயிருந்தது. திருக்குர்ஆனிலும், நபி வழியிலும் அனுமதிக்கப்படாத போலிச் சடங்குகளைத்தான் இஸ்லாம் என்ற பெயரால் தமிழக முஸ்லிம்கள் செய்து வந்தனர்.
மத்ஹபு என்ற பெயரால் முரண் பட்டுக் கிடந்தனர். போலி ஷைகுமார்களின் கால்களில் விழுந்து வணங்கு வதை பெரும் பாக்கியமாகக் கருதி வந்தனர். 

இந்தக் காலகட்டத்தில்தான் மயிலாடுதுறை அருகில் அமைந்துள்ள சங்கரன்பந்தல் என்ற கிராமத்தி­ருந்து தவ்ஹீத் பொறி பற்றத் தொடங்கியது.

பைஜுல் உலூம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த அரபுக் கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்த இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த பி. சேகு அலாவுதீன் எனும் பி.எஸ். அலாவுதீன் அவர்களும், அவரது இளைய சகோதரர் மவ்லவி பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களும் அந்த அரபுக் கல்லூரியில் படித்துக் கொடுப்பதோடு நின்று விடாமல் மக்களை நல்வழிப்படுத்த மாதந் தோறும் தெருமுனைக் கூட்டங்களை நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலானார்கள்.

தீன் விளக்கக் குழு என்ற பெயரில் பொதுக் கூட்டங்கள் நடத்துவதுடன் துண்டுப் பிரசுரங்கள் வாயிலாகவும், அவ்வூரில் நிலவிய மூடநம்பிக்கைகளை எதிர்த்து வந்தனர்.

இந்த நிலையில் தஞ்சை நகரில் ஆற்றங்கரைப் பள்ளிவாசல் வளாகத்தில் தமிழக உலமாக்கள் சபை சார்பில் வலிமார்கள் மாநாடு நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் உரையாற்றிய எல்லா உலமாக்களுமே தர்கா வழிபாட்டை ஊக்குவித்தும் ஆதரித்தும் பேசினார்கள். ஏகத்துவ சிந்தனைவாதிகளின் இரத்தம் சூடேறும் அளவுக்கு அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மாபாதகச் செயலை நியாயப்படுத்தினார்கள்.

அதைக் கண்டு கொதித்துப்போன பீ. ஜைனுல் ஆபிதீன், அம்மாநாட்டில் ஆற்றப்பட்ட உரைகள் அனைத்தும் குர்ஆனுக்கும் நபிவழிக்கும் எதிரானவை என்பதைத் தக்க ஆதாரங்களுடன் ''ஒரு நாடகம் அரங்கேறியது'' என்ற தலைப்பில் கடுமையாக விமர்சனம் செய்து ஒரு பிரசுரம் வெளியிட்டார்.

அப்பிரசுரத்தால் ஆத்திரம் அடைந்த உலமாக்கள் வேன்களில் வந்து இறங்கி சங்கரன் பந்த­ல் பணியாற்றும் பீ. ஜைனுல் ஆபிதீனை மதரஸாவில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி முறையிட்டனர். கல்லூரி நிர்வாகம் அதை ஏற்க மறுத்து விட்டாலும் உலமாக்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்று சில கட்டுப்பாடுகளை விதித்தது.

மேலப்பாளையத்தைச் சேர்ந்த மவ்லவி ஷம்ஸுல்லுஹா, மவ்லவி முஹம்மது அலி ரஹ்மானி,  மவ்லவி யூசுப் மிஸ்பாஹி போன்றவர்களும் சங்கரன் பந்தல் சிராஜுத்தீன், அப்துல் பத்தாஹ் போன்ற நண்பர்களும் இப்பிரச்சாரத்துக் குப் பக்கபலமாக இருந்தனர்.

சங்கரன்பந்த­ல் தவ்ஹீத் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழகத்தில் வேறு சில பகுதிகளிலும் பிரச்சாரம் நடத்தப்பட்டு வந்தது. 

குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் மவ்லவி கமாலுத் தீன் மதனி, கடையநல்லூரில் மவ்லவி அப்துல் ஜலீல் மதனி, பேர்ணாம்பட்டில் பி. அன்வர்பாஷா, ரபீக் அஹ்மது தலை மையிலான குழுவினர், கோவையில் அப்துல் மஜீத் உமரி, திருச்சியில் அப்துல் மஜீத், அப்துல் சமத் தலைமையிலான குழுவினர், சென்னையில் உஸ்மான் கான் தலைமையிலான குழுவினர், பிரச்சாரம் செய்து வந்தனர். (இவர்களில் மவ்லவி அப்துல் ஜலீல் மதனி கொள்கையில் உறுதியாக நின்று மரணித்து விட்டார். மவ்லவி கமாலுத்தீன் மதனி, ரபீக் அஹ்மது அப்துல் மஜீத் உமரி அப்துல் மஜீத் அப்துல் சமத் உஸ்மான் கான் கொள்கையில் முரண்பட்டு நமக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றனர்.)

சங்கரன்பந்த­ல் பீ. ஜைனுல் ஆபிதீன் தெளிவாகப் பிரச்சாரம் செய்து வருகிறார் என்று கேள்விப்பட்டு மேற்கண்ட பகுதிகளில் உள்ளவர்கள் அவரைப் பேச்சாளராக அழைத்து பொதுக்கூட்டங்கள் நடத்தினார்கள். இதனால் அவர்களுக்கிடையே அறிமுகமும், ஒருங்கிணைப் பும் ஏற்பட்டது.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை


சுன்னத் வல் ஜமாஅத்தினரே இது சுன்னத்தா? ஷிர்க்கா?


சகோதரர்களே சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளது.

சுன்னத் என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதையெல்லாம் செய்தார்களோ மேலும் தாம் செய்ததை மக்களுக்கும் ஏவினார்களோ அவைகளை பின்பற்றுவது சுன்னத் எனப்படும். நபிகளார் (ஸல்) அவர்கள் வாழ்ந்துக்காட்டிய விதத்தை அல்லாஹ் அங்கீகரித்து அதை ஒவ்வொரு முஸ்லிமும் பேண வேண்டும் என்று வலியுறுத்திவிட்டான். இதோ ஆதாரம்

அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)
இங்கு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் என்று கூறப்பட்டுள்ளதை சற்று கவனிக்கவும்.
  •  அல்லாஹ்வின் வார்த்தைகளான அருள்மறை குர்ஆனுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வுக்கு கீழ்படிந்தும்.

  • அல்லாஹ்வுடைய தூதரது வழிமுறை மற்றும் அறிவுரைகளுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வின் தூதருக்கும் கீழ்படிய வேண்டும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்

மேற்கண்ட இரண்டிற்கும் கட்டுப்படும்போது ஒரு முஸ்லிம் தவ்ஹீத் என்ற ஓரிரைக்கொள்கையை ஏற்றுக்கொள்கிறான் இந்த இரண்டில் ஒன்றை நிராகரிக்கும் போது முஷ்ரிகாகவோ, முனாஃபிக்காகவோ மாறிவிடுகிறான்!

அல்லாஹ்வுக்கு கட்டுப்படுதலுக்கு உதாரணம்
அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்காதீர்கள் என்று அருள்மறையில் அல்லாஹ் கூறுகிறான் நாம் அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அல்லாஹ்வை மட்டும் வணங்குகிறோம்! இங்கு அல்லாஹ்வுக்கு கட்டுப்படுகிறோம்!

நபிமார்களுக்கு கட்டுப்படுதலுக்கு உதாரணம்
எந்த நபிமாரும் அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் கை ஏந்தி பிரார்த்தித்ததில்லை! தங்களின் குழந்தைகளுக்கும், தங்களுக்கும்  மரண நேரம் நெருங்கிய போது கூட அல்லாஹ்விடமே அழுது பிரார்த்தித்தார்கள். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மைக் கூட யாரும் வணங்கக்கூடாது என்று கட்டளையுடன் கூடிய அறிவுரையை நமக்கு விட்டுச்சென்றுள்ளார்கள். 

இந்த நபிமார்களின் அறிவுரையைக் கேட்டு அதன்படி அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் வணங்கமாட்டோம் மேலும் அல்லாஹ்வின் தூதர் காட்டிய வழியல் அல்லாஹ்வை பிரார்த்து முற்றிலும் தூதர்களின் வழியில் நடப்போம். இதை சுன்னத் ஜமாஅத் என்று கூறும் கப்ருவணங்கிகள் செய்கிறார்களா?

 சுன்னத்திற்கு மாற்றமாக நடக்கும் சுன்னத்ஜமாஅத்
சகோதரர்களே சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளதாக நான் முன்பே கூறியிருந்தேன் அதை வெளிச்சம் போட்டு காட்டவா?  சுன்னத் என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது இதன் அடிப்படையில் சுன்னத் ஜமாஅத்தை அட்டவணைபடுத்தலாமா?
நபி வழி சுன்னத்  சுன்னத் ஜமாஅத் 
எப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலும் அல்லாஹ்வின் மேல் முழு ஈமான் கொண்டு அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடுவது.  சாதாரண எறும்பு கடித்தால் கூடா யா! கவுஸ், நாகூர் ஆண்டவரே, என்று ஈமானை பரிகொடுத்து அவ்லியாவிடம் அவ்லியாவிடம் குய்யோ முய்யோ என்று கதறுவது, உதவி தேடுவது 
அல்லாஹ்விடம் மட்டுமே அழுது துவா செய்வது  அவ்லியாவிடம் அழுது துவா கேட்பதை தெய்வீகமாக கருதுவது 
இணைவைப்பு வழிபாடு கிடையாது  சமாதி வழிபாடு முக்கியத்துவம் 
மார்க்கத்தில் புதுமையை புகுத்துவதை தடுப்பது!  மார்க்கத்தில் நாள்தோறும் புதுமையைத்தான் புகுத்துவது 
நபிமார்கள் முதற்கொண்டு எந்த மனிதருக்கும் அற்புத சக்தி கிடையாது என்றும் அவர்கள் அல்லாஹ்வை சார்ந்தவர்கள் என்றும் நம்புவது! அதில் உண்மையாக நிலைத்து நிற்பது  பச்சை ஆடை உடுத்தி, தாடி வைத்துக்கொண்டு ஒருவர் வந்துவிட்டால் போதும் அவர்தான் அவ்லியா என்று நம்பி அவரிடம் முரிது, பைஅத்,  தீட்சை என்று நம்பி மோசம் போவது! 
அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த துவாக்கள், வணக்க வழிபாகளை மட்டும் மேற் கொள்வது  ஸலவாத்துன்நாரியா, மவ்லூது, ஷிர்க், கஜல் என்று கண்டதையெல்லாம் நம்பி மோசம் போவது! 
இணைவைப்பது பாவம் என்றும் மறுமையில் நரகம் உறுதி என்று பயந்து அல்லாஹ்வை மட்டும் வழிபடுவது  இணைவைப்பது புண்ணியம் என்றும் மறுமையில் அவ்லியாக்கள் கைகொடுப் பார்கள் என்றும் நம்பி அல்லாஹ்வுக்கு இணையாக செத்துப்போன மனிதர்களை கருதுவது! 
அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக வாழ்ந்து மடிவது!  இணைவைத்து அல்லாஹ்வுக்கு துரோகம் செய்து நன்றிகெட்ட மனிதனாக வாழந்து மடிவது 

சுன்னத்ஜமாஅத்தினரே இது சுன்னத்தா?

லால்பேட்டை ''மன்பஉல் அன்வார் அரபிக் கல்லூரி''யின் ஃபத்வா


மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ள சக்திக்கு உட்பட்டு ஒருவருக்கொருவர் உதவி கேட்பதும் உதவி பெறுவதும் ஆகுமான செயலாகும்.

மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயலில், அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட வேண்டும்.

அது துஆவாகும்.

துஆ இபாதத் ஆகும்.

இபாதத் அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமானது.

இறைத்தூதர்களையும், இறைநேசர்களையும் அழைத்து அவர்களிடம் உதவி கேட்பது அல்லாஹ்வுக்கு நிகராக அவர்களை ஆக்கியதாக ஆகிவிடும்.

எங்கிருநது யார் அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும் அத்தனை பேருடைய வேண்டுதலையும், ஒரே நேரத்தில் கேட்கும் சக்தியும், அதை அறியும் ஆற்றலும் அல்லாஹ்வின் பண்பாகும்.

இந்த பண்பில் அல்லாஹ்வுக்கு கூட்டாக எவரை ஆக்கினாலும் அது அந்த பண்பில் அல்லாஹ்வுக்கு ஷிர்க் வைத்ததாக ஆகிவிடும்.

இறந்துவிட்ட நல்லடியார்கள் தங்களை யார் எங்கிருந்து அழைத்தாலும் அந்த அழைப்பை கேட்கிறார்கள் என்று நம்புவது ஈமானை பறித்துவிடும். ஏனென்றால் ஆற்றல் அல்லாஹ்வுக்க மட்டுமே சொந்தமானது.

''வலிமார்களின் ஆன்மாக்கள் ஆஜராகின்றன - நம் கோரிக்கையை அறிகின்றன என்று ஒருவர் நம்பினால் அவர் காஃபிராகி விடுவார்'' என பஸாஸியா எனும் ஹனஃபி ஃபத்வா கிதாபில் உள்ளது.

மவ்லவி, லியாகத் அலீ மன்பஈ
ஜமா அத்துல் உலமா மாத இதழ் - ஏப்ரல் 2010
இன்ஷா அல்லாஹ்… ஃபத்வாக்கள் தொடரும்.
நன்றி: www.nidur.info/
அவ்லியாவின் ஆசி பெற டிஸ்கோ நடன நிகழ்ச்சிகள்.
திருவாரூர் மாவட்டம் திட்டச்சேரி மன்சூர் அவ்லியாவின் வருடாந்தர விழாவை வெகுவிமரிசையாக நடத்துவார்கள் அந்த ஊர் அவ்லியா பக்தர்கள்.நாகூரைப் போன்று உரூஸ் நடத்த நம்மிடம் அவ்லியாக்கள் இல்லையே என்று தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட அவலியா தான் மகான் மன்சூர் அவ்லியா. அப்படி ஒரு மனிதர் அந்த ஊரில் வாழ்ந்ததாக வரலாறே இல்லையாம். இன்று இந்த அவ்லியா பெயரில் அர்ச்சனைகள்!ஆராதனைகள்! ஆடல் பாடல்கள்! அமர்க்களமாக நடைபெறுகிறது.
1977ல் அந்த ஊருக்குச் சென்றபோது நம்மை வரவேற்றதே அந்த அவ்லியாவின் உரூஸ் விளம்பரம் தான்! அது தான் கிளைமேக்ஸ்! அந்த விளம்பர அழைப்பிதழ் வாசகங்கள் என்ன தெரியுமா ?
மன்சூர் அவ்லியாவின் ஆசி பெற வெண்ணிற
ஆடை நிர்மலாவின் நடன நிகழ்ச்சி காண வாரீர்!
இந்த விளம்பர நோட்டீஸைப் பார்த்ததும் அதிர்ந்து விட்டோம்.
சமுதாயம் எங்கே சென்றுவிட்டது பர்hத்தீர்களா?
அவ்லியாவின் மாண்பைப்பெற திரைப்படங்கள்!கரக ஆட்டங்கள்!
சோலியக்குடி என்னும் முத்துவடுகநாத பட்டணம் செய்யது முஹம்மது வலியுல்லாஹ் அவர்களின் 56-வது ஆண்டு சந்தனக்கூடுவிழா! ஹிஜ்ரி 1403 ஜமாதுல் அவ்வல பிறை 19 (4.3.83) வெள்ளி பினனேரம் சனி இரவு சந்தனக்கூடு விழா அதிவிமரிசையாக நடைபெறும்.
அன்று இரவு 10 மணியளவில் இரண்டு திரைப்படங்கள்
இலவசமாகக் காண்பிக்கப்படும். (பெண்களுக்கு தனி இடம் உண்டு)
அன்று இரவு 7 மணியளவில் கரக ஆட்டமும் உண்டு.
இப்படிக்கு தர்ஹா கமிட்டியார், சோலியக்குடி எம்.வி.பட்டணம்.
அவ்லியாவின் ஆசியைப் பெற இத்தனை அம்சங்களும் இடம் பெறவேண்டுமாம். எப்படி அவ்லியாவின் மீது நம்பிக்கையை வளர்த்துவைத்திருக்கிறார்கள் பாருங்கள். அவ்லியாவுக்கும், திரைப்படத்துக்கும், கரக ஆட்டத்துக்கும் என்ன தொடர்போ? எப்படிப்பட்ட சம்மந்தத்தைப் பிணைத்து வைத்திருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்தாலே மார்க்கத்தை எந்த இலட்சணத்தில் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது புரியவரும்.
அவ்லியாவின் ஆசிபெறும் சிவப்பு விளக்குக் கன்னியர்!
இதயமே வெடித்து விடும் போலிருந்தது அந்த ஆபாசக் காட்சியைக் கண்டதும்! வேறு எங்கும் அல்ல. சுல்தானுல் ஆரிபீன் நாகூர் நாயகத்தின் தர்கா வளாகத்தில் தான்! 1960ல் நாகூரில் என்ன நடைபெறுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள சாபு குடும்பத்தைச் சேர்ந்த எங்கள் ஆசிரியரின் தம்பி என்னை வளாகத்தின் உள்ளே நடக்கும் ஆபாசங்களை விவரித்து வந்தார். அங்கே வடிவமைக்கப்பட்ட சில டென்டுகளின் முன் அரை நிர்வாணத்தில் தங்ளை அலங்கரித்துக்கொண்டு நிற்கும் இளம் குமரிகள் சிலர் அங்கே நின்று கொண்டிருந்தனர். திடுக்கிட்டவனாக இவர்கள் யார்? எதற்காக இங்கே நின்று கொண்டிருக்கிறார்கள் ? எனக் கேட்டபோது வாடிக்கையாயர்களை எதிர்பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள் என்றார் அந்த நண்பர். அவ்லியா கண்டு கொள்ளாமல் அனுமதிக்கிறாரே ! இவருக்கு இந்த அசிங்கத்தை தடுப்பதற்கோ இந்த வேசிகளை அழிப்பதற்கோ சக்தியில்லையா ? எனக்கேட்டபோது இது இங்கே சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது என்றாரே பர்க்கலாம். அன்றுதான் அவ்லியாவுக்கு ஆக்கவோ அழிக்கவோ சக்தியில்லை என்ற முடிவுக்கு வந்தேன்.
விண்ணுயர அவ்லியாவின் கப்ருஸ்தான்!
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் உலகிலேயே ஒரு வித்தியாசமான கப்ருஉள்ளது. அது மேற்கூரையை முட்டும் வண்ணம் மிகஉயரமாகக் கட்டப்பட்டுள்ளது. ஏன் இந்த கப்ருமட்டும் இவ்வளவு உயரமாகக் கட்டப்பட்டுள்ளது என அதன் ஆதீன கர்;த்தாவான மக்காமு இலப்பையிடம் 1958-ம் ஆண்டு நாம் கேட்டபோது ‘இது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். இது வளர்ந்துகொண்டேஇருக்கும்.வளர்ந்து வளர்ந்து விண்ணை முட்டும் போது கியாமத் நாள்-மறுமை நாள்- வந்துவிடும் என்றார்.   
அவர் காலமான பிறகு அவரது மகனார் தந்தையின் பதவிக்கு வந்தார். அவரிடம் இது பற்றி விசாரித்தபோது “அப்படி மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.அதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” எனக் கூறிவிட்டார். இப்போது அவரது பேரரைக் கேட்டால் “இதுவெல்லாம் போலியான செய்திகள்” என விளக்கமளித்தார். ஆதீன கர்த்தாக்களான அவரது குடும்பத்தாரே இந்தப் பொய்ச் செய்திகளை நம்பமுடியவில்லை. இருந்தும் பொய்களைப் பரப்பி மக்களை வழி கெடுத்து வருகின்றனர்.
வியாபாரி அவ்லியா
அவரே மாலிக் முஹம்மது ஒலியுல்லாஹ். இவர் யார் ? எந்த ஊர் ? எப்போது
பிறந்தார்? என்பது தெரியவில்லை. வியாபாராத்திற்காக வந்தவர் அந்த ஊரிலே இறந்து விட்டார். நல்ல மனிதராகத் தெரிந்ததால் அவரை அடக்கம் செய்து பெரிதாக கப்ரும் கட்டிவிட்டார்கள். பின்னர் அவரை ஒரு மகானாகச் சித்தரித்து “மெய்நிலை கண்ட ஞானி மஹான் மாலிக் முஹம்மது ஒலியுல்லாஹ்வாக” விளம்பரப்படுத்தி இன்று ஆண்டு தோறும் விமரிசையாக விழா நடத்தி வருகிறார்கள் அந்த ஊர் மக்கள்.
அவ்லியாக்களின் திரை கிழிகிறது.
அறிவுலகம் வெட்கித் தலைகுனிகிறது.
அவ்லியாக்கள் பெயரால்
அரங்கேறும் அவதாரங்கள் !
அவ்லியாக்களின் பெயரால் மக்கள் கண்மூடித்தனமான அனாச்சாரங்களை ஆங்காங்கே அரங்கேற்றி வரும் அவலங்களை நம்மைச்சுற்றிலும் பார்த்து வருகிறோம். குருட்டுத்தனமான பக்தியால் விவஸ்தையே இல்லாமல் அவ்லியாக்களின் இலக்கணம் தெரியாமல் யார் யாரையெல்லாம் அவ்லியாக்கள் (இறை நேசர்கள்) என கொண்டாடி வருகிறார்கள் தெரியுமா?
1. வாயில் போட்டு மென்ற வெற்றிலையால் பிள்ளை வரம் கொடுப்பவர் அவ்லியா !
2. எச்சிலைத் தண்ணீரில் துப்பி வேண்டியது நடக்க துப்பிக்கொடுப்பவர் அவ்லியா !
3. பச்சைத் தலைப்பாகை,நீண்ட அங்கி, ஜபமாலை சகிதம் உலா வருவோர் அவ்லியா!
4. மாந்திரீகம்,இஸ்மு,தகடு,தாவீஸ்,இலை,பீங்கான் என ஏமாற்றும் தங்ஙள்கள் அவ்லியா!
5. தர்காக்களின் ஆதீன கர்த்தா, அவ்லியாவின் வாரிசு என வசூலுக்கு வருவோர் அவ்லியா!
6. செய்கு முஹ்யித்தீன், நாகூர் நாயகம் பரம்பரை என தம்பட்டம் அடிப்போர் அவ்லியா!
7. குழி தோண்டி (துணி நெய்யும் குழியில்) கஃபாவை காண்பவர் அவ்லியா (பீரப்பா)
8. காமமோகம் கொண்டு பெண்களை தனிஅறையில் சந்தித்து முரீதுகொடுப்பவர் அவ்லியா!
9. பெண்களையும் ஆண்களையும் தடவிக்கொடுத்து ஓதி ஊதுபவர் அவ்லியா!
10. நிர்வாண கோலமாக அலையும் சன்னியாச பரதேசிகள் அவ்லியாக்கள் !
11. கஞ்சா அபின் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் அவ்லியாக்கள்!
12. இரவெல்லாம் கேளிக்கைகளிலும், சல்லாபங்களிலும் ஈடுபட்டுப் பகலிலே பத்தினிகளாக
நடிப்போர் அவ்லியாக்கள்!