அன்புள்ள சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
தஞ்சை (தெற்கு) மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் தொடங்;கப்பட்ட காலத்திலிருந்து நீண்டகாலமாக பள்ளிவாசல் கட்டப்படாமலேயே ஏனைய பள்ளிவாசல்களில் தவ்ஹீது சகோதரர்கள் தொழுது வந்தனர். இதனால் பல பிரச்சனைகளை சந்திக்கவும் நேரிட்டது எத்தனைப் பிரச்சனைகள் வந்தாலும் சகித்துக் கொள்வோம் என்ற சிந்தனையில் தனிப் பள்ளிவாசல் அமைக்கப்படாமல் தொழுது வந்தனர்.
ஆனாலும் அதிகபமட்சமான மக்களின் உள்ளங்களில் தனிப் பள்ளிவாசல் அமைக்க வேண்டும் என்ற சிந்தனை நாளுக்கு நாள் மேலோங்கியதால் அதனடிப்படையில் நிலம் வாங்கப்பட்டு அதில் கீற்றுக் கொட்டகை அமைத்து தொழுகை நடந்து வருகிறது.
பள்ளிவாசல் அமையப்பெற்ற இடம் ஈ.ஸி.ஆர். ரோடு என்பதால் பலமானக் காற்றுக்கு அதன் கீற்றுகள் தாக்குப்பிடிக்க முடியாததால் அடிக்கடி கீற்று மாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது இதில் கனிசமானத் தொகை செலவாகின்றது. கடந்த வருடம் கீற்று மாற்றும் முழு செலவையும் இப்போதைய மாவட்டத் தலைவர் சகோ: ஒய்.அன்வர் அலி அவர்களே ஏற்றுக் கொண்டார்கள். இந்த வருடத்து நிலை என்ன வென்றுத் தெரியவில்லை.
இதற்கடுத்து பள்ளிவாசலில் ஜூம்ஆத்தொழுகைக்காக மக்கள் கூட்டம் வாரத்திற்கு வாரம் கூடிக்கொண்டே செல்வதால் கடும் வெயிளில் பள்ளிவாசலுக்கு வெளியில் மக்கள் நின்றுத் தொழுவதால் பள்ளிவாசலை கட்டிடமாக மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் முழு விபரங்களையும் கீழ்காணும் லிங்கை சொடுக்கிப்பார்வையிடவும்.
http://adirai-tntj.blogspot.com/p/blog-page.html
அல்லாஹ்வின் பள்ளிவாசலை அமைப்பதற்கு இறையச்சமுடையவர்கள் தாராளமாகப் பொருளாதார உதவி செய்வதற்கு முன்வருவதன் மூலம் இறையருளுக்கு நெருக்கமானவர்களாகவும், சுவனத்தில் தங்;கள் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளும் பாக்கியம் பொருந்தியவர்களாகவும் ஆவார்கள்.
யார் அல்லாஹ்வுக்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டுகிறாரோ அவருக்கு சொர்க்கத்தில் அல்லாஹ் அது போன்ற (கட்டிடத்) தை கட்டுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: உஸ்மான் (ரலி)
திர்மிதி 292
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்
1 comments:
அல்லாஹ்விற்க்காக பள்ளி கட்டப்பட்டால் நன்று. அதை விட்டுவிட்டு இயக்கத்தின் பெயரால் பள்ளிகட்டி அதன் மூலம் விளம்பரம் படுத்திக்கொள்வது எவ்வாறு நன்மையான காரியமாகும்.
Post a Comment