"உயிருள்ளவர்களுக்கும் கத்தம் கொடுக்கலாம்"
மாத்தளை விவாதத்தில் நிலைதடுமாறிய மௌலவி அப்துல்லாஹ் ஜமாலி


2010-03-07 அன்று மாத்தளை நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற ஒருநாள் விவாதம் தௌஹீத் கொள்கைப்பிரச்hரத்தில் ஒரு முக்கியம் வாய்ந்த நிகழ்வு எனலாம்.

இலங்கையின் தௌஹீத் பிரச்சாரம் 60 வருடங்களைத் கடந்துகொண்டிருக்கிறது.இந்தப் பிரச்சாரத்தின் வளர்ச்சியில் பல ஜமாஅத்துக்கள் பல உலமாக்கள் பங்காற்றியிருக்கிறார்கள்.பிரச்சாரத்தின் ஆரம்பந்தொடக்கம் தௌஹீதிலும் ஸ{ன்னாவைப் பின்பற்றுவதிலும் சிர்க் பித்அத்களை பிரச்சாரத்தால் எதிர்ப்பதிலும் காட்டிய உறுதியான நிலைப்பாடு சமரசம் செய்துகொள்ளாத்தன்மை இந்த கொள்கையின் பக்கம் பலரை ஈர்த்தது.பல இழப்புக்களை இந்தக் கொள்கையின் நகர்வு சந்தித்தது.உயிரிழப்பு ஊர் நீக்கம் வெட்டுக்காயங்கள் அவதூறுகள் என்று அராஜகத்தின் பட்டியல்கள் நீண்டது.ஆனால் அவைகளுக்கெதிராக உயிர்த்தியாகம் செய்வதற்குத் தயாராக பலர் இருந்தும் தௌஹீத் பிரச்சார அமைப்புகள் வன்முறைகளில் இறங்கவில்லை.மாறாக பிரச்சாரத்தை தீவிரப்படுத்திக் கொண்டே இருந்தனர்.1980களில் மௌலவி பீஜே அவர்களின் தவ்ஹீத் பிரவேசத்தோடு தமிழுலக தவ்ஹீத் அமைப்புக்களின் பிரச்சாரம் புது வேகம் அடையத்துவங்கியது.பலவிவாத மேடைகளை பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் தௌஹீத் அமைப்புக்கள் சந்தித்தன.பலர் தவ்ஹீத் கொள்கையின் பால் ஈர்க்கப்பட ஆரம்பித்தனர்.

ஆனால் எதிர்ப்புக்கள் குறையவில்லை.கருத்தைக் கருத்தால் வெல்ல முடியாதவர்கள் அராஜகங்களைக் கட்டவிழ்த்துவிடும் முறைகளில் வளர்ச்சியடைந்தார்கள் பன்முகப்பட்டார்கள். அதன் விளைவாக தௌஹீத்வாதிகள் என்றுமே சந்தித்திராத , இலங்கை வரலாறு என்றும் மறக்காத ஒரு கொடூர நிகழ்வை மஹகொடை தவ்ஹீத் சகோரர்கள் சந்தித்தார்கள்.இருளுக்குள் பல உடல்களின் சிவப்பு இரத்தம்; மஸ்ஜித் மண்ணிலே வழிந்தோடியது. பல உடல்கள் கதறக் கதற சிதைக்கப்பட்டன.அல்குர்ஆன் பிரதிகள் தீக்கிரையாக்கப்பட்டன. மஸ்ஜித் எரிக்கப்பட்டது. கொடூரம் கொடூரத்திலும் கொடூரம்.ஆனால் உரிய நீதி வழங்கப்படவில்லை.படுகொலைகளையெல்லாம் அரங்கேற்றிய பின் கொல்லப்பட்ட பிராபகரனுக்காக கவலைப்பட்ட முஸ்லிம் அமைப்புகள் கூட இதற்காகக் கவலைப்படவில்லை.நீதி பேச வேண்டிய பொது இயக்கங்கள் எனச் சொல்லிக் கொள்ளக் கூடிய இயக்கங்கள் வேற்றுமையில் ஒற்றுமை என தௌஹீத் பிரச்சாரகர்களை எதிர்க்க ஒன்று திரண்டனர்.படுகொலையின் கொடுமை பற்றிப் பேச வேண்டிய உலமாக்கள் நாவடக்கம் பேச்சொழுக்கம் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

இதன் விளைவாய் நம் சகோதரர்களில் சிலர்; அச்சத்தாலும் சிலர் அவசரத்தாலும் சிலர் சமரசத்தாலும் கொள்கையிலும் அதன்பால் அழைப்பதிலும் அமைதிகாக்க ஆரம்பித்தனர்.இதன்பின் என்ன நிகழுமோ!!!தௌஹீத் பிரச்சாரம் செய்ய முடியாமல் போவது மட்டுமல்ல பின்பற்றக் கூட சாத்தியப்படாமல் போகுமோ!!!என்ற அச்சம் பரவ ஆரம்பித்தது.இளம் உலமாக்களின் அறிவும் ஆற்றலும் தைரியமும் அனுபவமின்மை என அடையாளப்படுத்தப்பட்டது.

அப்படியான ஒரு சூழலில்தான் ……….

தமழுலக ஸ{பிகளின் தலைவரும் அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமுமான கைருல் பரீயா அரபிக் கல்லுரியின் முதல்வர் ஜமாஅதுல் உலமா சபைத் தலைவர் மெலவி அப்துல்லாஹ் ஜமாலியுடனான விவாதம் ஒன்றிற்காய் முனாலிரு ஸைலான் மாத்தளை நஜ்முல் உலமா நஜாஹியா அரபுக்கல்லூரியின் முதல்வர் மௌலவி முஹாஜிரீன் தலமையில் தௌஹீத் உலமாக்களுக்கான அழைப்பு விடப்பட்டது.இதில் அப்துல்லாஹ் ஜமாலியின் வருகை விவாத நாள்வரை எமது தரப்பிற்கு உறுதியில்லாமலேயே இருந்தது.

அச்சம் நிறைந்த இந்தச் சூழலில்…….
கருத்துச்சுதந்திரம் வன்முறையால் எதிர்க்கப்படும் இக்கட்டத்தில்..

இன்னொரு இரத்தக் களத்தை உருவாக்கவா இந்த நிகழ்வு?இது தேவைதானா?என்ற திகிலூட்டும் ஓசைகள் ஒரு புறமிருக்க வருவது அப்துல்லாஹ் ஜமாலி என்று அவரது பெயரை உரத்துச் சொன்னவர்கள் மறுபுறம். கலியக்காவிலையின் விவாதத்தில் அவர் காணாமல் போனதைக் கண்டபின்னும் இந்த ஓசைகள் நமக்குக் கேட்டதுதான் ஆச்சரியமாக இருந்தது.ஆனாலும் மாத்தளைத் தவ்ஹீத் ஜமாஅத்தும் அக்குறனைத் தவ்ஹீத் ஜமாஅத்தும் இந்த முயற்சியில் பல எதிர்ப்புக்கு மத்தியில் தளறாது களமிறங்கின.உண்மைக்ககே வெற்றி உலமாக்களுக்கல்ல என்று உறுதியாக நம்பினர்


கருத்துச் சுதந்திரமில்லாத ஒரு வாழ்வை விட மரணம் சிறந்தது.
குர்ஆனையும் சுன்னாவையும் வாதம் ஒருபோதும் மிகைக்காது
என்ற முடிவுடன் 8 இளம் உலமாக்கள் களமிறங்கினார்கள்.5 பேர் விவாதம் புரிவதற்கும் 3 பேர் நூல் மற்றும் கணனி உதவிகளுக்கும் தயாரானார்கள்.

1.மௌலவி முஜாஹித்
2.மௌலவி ஜாபிர்
3.மௌலவி ஸஹ்ரான்
4.மௌலவி அக்ரம் பாரி
5.மௌலவி முஹம்மத் நாஸர்
6;.மௌலவி ஸவ்ராஜ்
7.மௌலவி மஸ்ஊத்
8.மௌலவி ஸில்மி

அவர்கள் தரப்பில்

1.தமிழுலக ஸ{பிகளின் தலைவரும் அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமுமான கைருல் பரீயா அரபிக் கல்லுரியின் முதல்வர் ஜமாஅதுல் உலமா சபைத் தலைவர் மௌலவி அப்துல்லாஹ் ஜமாலி

2.முனாலிரு ஸைலான் மாத்தளை நஜ்முல் உலமா நஜாஹியா அரபுக்கல்லூரியின் முதல்வர் மௌலவி முஹாஜிரீன்

மற்றும் இன்னும் மூன்று உலமாக்களும் விவாதத்தில் களந்துகொண்டனர்.


நமது தரப்பு வாதம்

1.கப்று ஸியாரத் என்ற பெயரில் சிர்க் மற்றும் பித்அத்துகள் நடக்கின்றன
2.இறந்தவர்களுக்கு கத்தம் கொடுப்பது இபாதத் கிடையாது அது பித்அத்தாகும்
3.தொழுகையின் பின்னர் கூட்டு துஆ இஸ்லாத்தில் உள்ளதல்ல.
4.சுபஹ் தொழுகையில் குனூத் ஓதுவது பித்அத் ஆகும்.

இவைகளில் முதலாவதாக கத்தம் பற்றிய தலைப்பே ஒப்பந்தத்தில் அவர்களால் முதன்மைப்படுத்தப்பட்டது.கடைசியில் அவர்களின் பயங்களந்த பிடிவாதத்தால் அந்த ஒரு தலைப்போடே விவாதம் முடிவுற்றது.

நமது சமூகம் 150 கோடிக்கு மேற்பட்டிருந்தும் பலவடிவங்களில் பல கோணங்களில் பிரிந்துபோய் சொந்த மண்ணையெல்லாம் அந்நியர்கள் ஆக்கரமித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும் இவர்கள் இந்த இணைவப்புகளிலும் பி;அத்துகளிலும் இன்னும் பிடிவாதம் காட்டி உம்மத்தைக் கூறுபோடுகிறார்களே இவர்கள் உண்மையை உணரமாட்டார்களா? என்ற கவலையும் இந்தத் தலைப்பில் நாம் விவாதிப்பதற்கான இன்னொருகாரணமாக இருந்தது.


நிலைதடுமாறிய மௌலவி அப்துல்லாஹ் ஜமாலி

1. 3ம் 7ம் 40ம் மற்றும் வருடக்கத்தங்கள் அந்த நாட்களில் கொடுக்கவேண்டுமென்பதில்லை அந்த நாட்கள் நாமாக வசதிக்காக உருவாக்கிக் கொண்டவைகள்.
2. இருட்டுக்கத்தம் கிடையாது.
3. உயிருள்ளவர்களுக்கும் கத்தம் கொடுக்கலாம்.(மௌலவி முஹாஜிரீன் மரணிக்கும் முன்னரே அவருக்காக கத்தம் கொடுக்க வாய்ப்புண்டு.
4. கத்த வீட்டில் சிரித்தும் பெற்றோர்களுக்கு அந்த நன்மையை சேர்க்கலாம்
5. இல்லறத்தில் ஈடுபடுவதும் தர்மம் என்பதால் அதன் நன்மையையும் கத்தம் எனலாம்
6. நபிகளார் தன் பிள்ளைகளுக்கோ தோழர்களுக்கோ கத்தம்கொடுக்கவில்லை என்பது உண்மைதான்….
7. உங்களில் மரணிப்பவர்களுக்கு யாஸீன் ஓதுங்கள் என்ற ஹதீஸை இமாம் நவவீ லஈப் என்று சொல்லியிருப்பது உண்மைதான் அவர் அதற்கான காரணம் சொல்லியிருப்பதும் உண்மைதான் ஆனாலும் அதனையும் ஏற்;க மாட்டோம்.
8. பொதுவாகக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள் மற்றும் தர்மம் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இவைகளை இணைத்துத்தான் கத்தம் என்ற இபாதத்தை உருவாக்கியுள்ளோம்.நேரடியாக கத்தம் என்ற வணக்கத்திற்கு ஆதாரம் இல்லை.
9. நாம் கத்தத்திற்கு ஆதாரமாக வைக்கும் ஹதீஸ்களிலெல்லாம் குறைகள் உள்ளன.மனிதன் என்றால் குறைவரத்தானே செய்யும்.
10. உஸ{லுல் ஹதீஸ் பற்றிய அறியாமைகள்.தடுமாற்றங்கள்,,,,,,,,,,,,,


என பல தடுமாற்றங்களால் நிலைகுழைந்துபோன மௌலவி அப்துல்லாஹ் ஜமாலியும் அவரது தரப்பினரும் பலவிதமாக விவாதத்pன் போக்கை திசை திருப்பப்பார்த்தனர்.குறிப்பாக மௌலவி முஹாஜிரீன் அவர்கள் திடீரென "இவர்கள் அல்லாஹ்விற்கு உருவம் கற்பிப்பவர்கள்" என தலைப்பிற்கு சம்பந்தமில்லாத ஒன்றை எறிந்தார்.மடக்கிப்பிடித்துக் கேட்டோம் அல்லாஹ்வை எப்படி நம்பவேண்டும்? என இந்த விவாத முடிவில் ஒப்பந்தம்போட்டு அத்தலைப்பில் விவாதம் செய்யத்தயாரா?என்று கேட்டோம். விவாத முடிவுவரை எந்த பதிலையும் காணவில்லை.அவர்கள் தரப்பு விவாத்தை ஆரம்பித்து 20 சுற்றுக்கள் பேசியிருந்தனர் நாம் 19 சுற்றுக்களே பேசியிருந்தோம்.எனவே தொகுப்புரையை நாமே துவக்க வேண்டும்.இருந்தும் முடியாது நாம்தான் துவக்குவோம் என பிடிவாதம் பிடித்தனர்.எமது தரப்பின் எல்லா ஞாயங்களைச் சொல்லியும் மௌலவி அப்துல்லாஹ் ஜமாலி அவர்களே அதுதான் ஞாயமென அவர்களுக்கு மத்தியில் மெதுவாய்ச் சொல்லியும் முஹாஜரீன் மௌலவி மறுத்துவிட்டார்.அதன் பின்னால் உள்ள நோக்கத்தைப் புரிந்துகொண்ட நாம் அதனையும் விட்டுக் கொடுத்தோம்.

பெரிய பெரிய ஆதாரங்களையெல்லாம் வைப்பார்கள் என எதிர்பார்த்துவந்த மௌலவி ஜமாலி தரப்பினருக்கு மிகப்பெரும் ஏமாற்றமாய் போனதை அவர்களின் பெரும்பாலானவர்கள் முகத்தில் அவதானிக்க முடிந்தது.மௌலவி அப்துல்லாஹ் ஜமாலி எங்களைக் காப்பாற்றுவார் என்று நம்பி வந்தவர்கள் கத்தம் சிலரின் பணவறுமையை நிவர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட ஒரு பித்அத் என்ற உண்மையை உணர்ந்திருப்பார்கள்.அல்லாஹ் உண்மையைக் காப்பாற்றுவான்.நாம் தவறான கொள்கையில் இருந்தால் நாம் நிச்சயம் நிலைதடுமாறுவோம் தோல்வியுறுவோம் நாம் சரியான கொள்கையில் இருந்தால் வெற்றிபெறுவோம்.இரண்டும் நாம் பேசுவது சத்தியமா?அசத்தியமா? என்பதைப் பொருத்தே என்று நம்பி வந்த நாம் வெற்றிபேற்றோம் அல்ஹம்துலில்லாஹ்.

அதே நேரம் எமது உயிரே போனாலும் நாம் விவாதம் செய்தே தீருவோம் என்ற எமது உறுதியில் நாம் உறுதியாகவே இருந்தோம் ஆதலால் எந்த வதந்திகளாலும் எம்மை அசைக்க முடியாமல் போனது.அதே நேரம் மாத்தளை ஸ{ன்னத் வல்ஜமாஅத் சகோரர்கள் எம்மோடு நல்ல முறையிலும் மரியாதையுடனும் நடந்துகொண்டனர்.கருத்தை கருத்தால் மட்டுமே எதிர்த்தனர்.எந்தச் சலனமும் இல்லாமல் விவாதம் இனிதே நிறைவுற்றது. அல்லாஹ் அவர்களுக்கு அருள் செய்யவேண்டும்.

முஜாஹித் பின் ரசின்
முல்தகா அஹல் ஹதீஸ்
fromgn@googlegroups.com on behalf of Mohamed hussain Fazly (fazlylk@yahoo.com)