மிஃராஜை நம்புங்கள்

“தன் அடியாரை (முஹம்மதை) (கஃபா என்ற) மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து (பைத்துல் முகத்தஸ்) என்ற மஸ்ஜிதுல் அக்ஸா வரை ஓரே இரவில் அழைத்துச் சென்ற இறைவன் மிகவும் பரிசுத்தமானவன்” (அல்குர்ஆன் 17:1)
அண்ணல் நபி (ஸல்) அவர்களை ஒரு இரவுக்குள் வெகு தொலைவு அழைத்துச் சென்றதை அல்லாஹ் மேற்கூறிய வசனத்தின் மூலம் தெளிவாக்ககின்றான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அங்கிருந்து புராக் வாகனத்தின் மூலம் விண்ணுலகம் சென்று பல்வேறு காட்சிகளைக் கண்டுவிட்டு, இறைவனுடன் உரையாடிவிட்டு வந்ததை” கூறியுள்ளனர்.
அல்லாஹ்வின் ஆற்றலில் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ள எவருக்கும் இதில் எள்ளளவும் ஆச்சரியம் இருக்க முடியாது. ஒவ்வொரு முஸ்லிமும் “மிஃராஜை” கட்டாயம் நம்பியே ஆக வேண்டும்.
இன்றைய இஸ்லாமியர்கள் மிஃராஜ் பற்றி கொண்டுள்ள தப்பான அபிப்பிராயங்களை நீக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கட்டுரை.
மிஃராஜ் எந்த மாதம் எந்த நாள் ஏற்பட்டது என்பதைப் பார்ப்போம். அறிஞர் “ஸதீ” அவர்கள் “துல் கஃதா மாதத்தில் ஏற்பட்டது” என்கிறார்கள். இமாம் ஜுஹ்ரியும், இமாம் உர்வா அவர்களும் ரபீவுல் அவ்வலில் ஏற்பட்டதாக கூறுகின்றனர். அதனை உறுதி செய்யும் விதமாக, நபி தோழர்கள் ஜாபிர் (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) இருவரும் ரபீவுல் அவ்வல் 12ல் மிஃராஜ் ஏற்பட்டதாக இயம்புகின்றனர். ஹாபிழ் அப்துல் கனி அவர்கள் பலவீனமான ஆதாரக் குறிப்போடு “ரஜப் 27ல் நடந்தது” என்கிறார்.
மிஃராஜ் எந்த மாதம் ஏற்பட்டது என்பதில் கருத்து வேறுபாடு தோன்றக் காரணம் என்ன? மிஃராஜ் நடந்ததை நம்ப வேண்டும் என்பதைத் தவிர அந்த நாளுக்கு என்று விசேஷத் தொழுகையோ, விசேஷ நோன்பையோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சஹாபாக்களுக்கு கூறவில்லை.
ஏதேனும் ஒரு விசேஷமான அமலை அவர்கள் தம் தோழர்களுக்குச் சொல்லி இருந்தால் நபித்தோழர்கள் அனைவரும் அந்த அமலைச் செய்வதற்காக அந்த நாளை நினைவுவைத்திருப்பாாகள். இரண்டு, மூன்று அபிப்பிராயங்களை கொண்டிருக்க முடியாது.
ஆஷுரா நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்கக் கூறியதால் அந்த நாள் எது என்பதை நன்றாகவே சஹாபாக்கள் நினைவில் வைத்திருந்தார்கள். முஹர்ரம் பத்தாம் நாள் தான் ஆஷுரா என்று ஒரு குரலில் சொன்னார்கள். மிஃராஜைப் பொறுத்தவரை அந்த நிகழ்ச்சியை நம்பவேண்டும் அவ்வளவுதான். எந்த தேதியில் நடந்தது என்று முடிவு கட்டுவது அதற்காக நாமாக விசேஷ வணக்கங்களை ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் தலையிடுவதாகும்.
இப்னு அப்பாஸ் (ரழி) ஜாபிர் (ரழி) உாவா, ஜுஹ்ரி ஆகிய இமாம்கள் ரபிவுல் அவ்வலில் மிஃராஜ் ஏற்பட்டதாக உறுதி செய்கின்றனர். ஹாபிழ் அப்துல் கனி அவர்கள் பலவீனமான ஆதாரத்துடன் ரஜப் 27ல் மிஃராஜ் ஏற்பட்டது என்கிறார்.
பலமான ஆதாரத்தின் அடிப்படையில் அறிவிக்கப்படும் ரபிவுல் அவ்வலை விட்டுவிட்டு, பலவீனமான ஆதாரத்துடன் அறிவிக்கப்படும் “ரஜப் 27″ ஐ தேர்ந்தெடுத்த மர்மம் என்ன? இதனை நாம் சிந்திக்க வேண்டும். சொறிபொழிவாளர்கள் இதனை வலியுறுத்திக் கூறக் காரணம் என்ன?
ரபிவுல் அவ்வலில் தான் மிஃராஜ் நடந்தது என்று கூறினால் அதில் அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். மீலாது விழாக்கள் என்று தனி வியாபாரம். பிறகு ரஜபில் மிஃராஜ் விழாக்கள் என்று இன்னொரு வியாபாரம். இப்படி இரண்டு மாதங்களிலும் வந்து கொண்டிருக்கும் வருமானம் பாதிக்கும். ரபிவுல் அவ்வலில் மிஃராஜ் என்பதை மக்களுக்குச் சொன்னால் மீலாத் மிஃராஜ் இரண்டுக்கும் ஒரு விழா நடத்தி போதுமாக்கிவிடுவார்கள். ரஜபு மாதம் வருவாயற்றுப் போய்விடும். எல்லா மாதங்களிலும் பயான் பாதிஹா என்று வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக எவ்வித வருமானமுமில்லாமல் இருந்த ரஜப் மாதத்தில் மிஃராஜ் நடந்ததாக மக்களை நம்ப வைத்தார்கள். அதன் சிறப்பை மெருகூட்ட வேண்டும் என்பதற்காக, அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத் தராத புதுப்புது வணக்கங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்
இன்று மிஃராஜ் நல்லதொரு வியாபாரமாக ஆகிவிட்டது. பயான் செய்வோருக்கு நல்ல அறுவடை. “பெண்ணின் முகம், குதிரை உடல்” கொண்ட விந்தைப் பிராணியை பிரிண்ட் செய்து இதுதான் புராக் என்று விற்பது ஒரு பக்கம். அதனை வீகளில் மாட்டிக் கொண்டு தாங்களே மிஃராஜ் சென்று விட்டதாக பூரிக்கும் கூட்டம் இன்னொரு பக்கம். மிஃராஜ் வணக்கங்கள், விசேஷத் தொழுகை, விசேஷ நோன்பு என்று அதன் முறைகளை விவரிக்கும் பிரசுரங்களின் வியாபாரம் இன்னொரு பக்கம். அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத இந்த விசேஷ வணக்கங்கள் கண்ணாடி பிரேம் போட்டுத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் பள்ளிவாசல்கள் இன்னொரு பக்கம்.
பள்ளிவாசல்களின் அலங்காரம் என்ன? பூக்கட்டுக்கள் என்ன? புத்தாடை அணிவது என்ன! நெய்ச்சோறு விநியோகம் என்ன! நன்றாகவே மிஃராஜை ஜமாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். தொழுகை கடமையாக்கப்பட்ட மிஃராஜ் இரவில் விடிய விடிய விழித்து விழாக் கொண்டாடி விட்டு சுபுகள் தொழ பள்ளியில் இமாமையும் மோதினாரையும் விட்டு விட்டு செல்லும் ஊர்கள் எத்தனை?
அன்புமிக்க இஸ்லாமியர்களே! மிஃராஜை நம்புங்கள்! அது நமக்கு உணர்த்தும் பாடத்தை படியுங்கள்! இறைவனின் ஆற்றலை இறை தூதரின் சிறப்பை, தொழுகையின் மகத்துவத்தை மனதில் இருத்துங்கள்! இது போன்ற ஏமாற்று வலைகளில் விழாதீர்கள்.
மூஃமின்களின் மிஃராஜாக இருக்கின்ற மிஃராஜ் இரவில் கடமையாக்கப்பட்ட ஐந்து வேளை தொழுகையை தொழுது வருவோமாக!
நன்றி: வளைகுடா வாசி http://abunoora.blogspot.com/2008/07/1986.html

ரஜப் மாத வழிகேடுகள்.

மிஃராஜ் தினத்தை நோன்பு மற்றும் விஷேச அமல்கள் மூலம் சிறப்பிப்பது பித்அத்தாகும் :ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதத்தின் 27 ம் நாள் மிஃராஜுடைய தினம் என குறிப்பிட்டு அதில் நோன்பு வைப்பதும், பள்ளிகளில் கந்தூரிகள் வைத்து மௌலிதுகள் ஓதுவதும் பரவலாகக் காணக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. இவைகள் அனைத்தும் வழிகெட்ட பித்அத்துகளாகும். இவைகளுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமோ, அடிப்படையோ இல்லை.
---------------------------------------------------------------------------------
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால். அவனது சாந்தியும், சமாதானமும் இவ்வுலகிற்கு அருட்கொடையாக வந்த இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழிமுறையை பின்பற்றிய அன்னாரது குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.ரஜப் மாதம் என்பது சந்திர மாத கணக்கின் படி ஏழாவது மாதமாகும்.

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை, இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள், இணைவைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ்; பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (9:36).
عَنِ ابْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِي بَكْرَةَ رَضِي اللَّهم عَنْهم عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الزَّمَانُ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَا لأرض السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ثَلَاثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَان (البخاري, ومسلم).
காலம் அதன் சுழற்சிக்கேற்ப சுழன்றுகொண்டே இருக்கிறது. வானங்கள் பூமி படைக்கப்பட்ட நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அதில் நான்கு மாதங்கள் புனிதமானதாகும். மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருபவை: துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரமாகும். ரஜப் முழர் என்பது ஜுமாதா (ஜமாதுஸ்ஸானி), ஷஃபான் ஆகிய இரண்டுக்கும் மத்தியிலுள்ளதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).நான்கு மாதங்கள் புனிதமானது என்றும், அவைகள் துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் என்று மேற்கூறப்பட்ட ஹதீஸிலிருந்து தெளிவாகிறது. எனவே இம்மாதங்கள் போர் புரிவதற்கு தடை செய்யப்பட்ட மாதங்களாகும். இம்மாதங்கள் புனிதமானவைகள் என்று கூறி அல்லாஹ்வும், ரஸுலும் காட்டித்தராத வணக்க வழிபாடுகளை அரங்கேற்றுவது கூடாது.
عَنْ مُجِيبَةَ الْبَاهِلِيَّةِ عَنْ أَبِيهَا أَوْ عَمِّهَا أَنَّهُ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ انْطَلَقَ فَأَتَاهُ بَعْدَ سَنَةٍ وَقَدْ تَغَيَّرَتْ حَالُهُ وَهَيْئَتُهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَمَا تَعْرِفُنِي قَالَ وَمَنْ أَنْتَ قَالَ أَنَا الْبَاهِلِيُّ الَّذِي جِئْتُكَ عَامَ الْأَوَّلِ قَالَ فَمَا غَيَّرَكَ وَقَدْ كُنْتَ حَسَنَ الْهَيْئَةِ قَالَ مَا أَكَلْتُ طَعَامًا إِلَّا بِلَيْلٍ مُنْذُ فَارَقْتُكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ لِمَ عَذَّبْتَ نَفْسَكَ ثُمَّ قَالَ صُمْ شَهْرَ الصَّبْرِ وَيَوْمًا مِنْ كُلِّ شَهْرٍ قَالَ زِدْنِي فَإِنَّ بِي قُوَّةً قَالَ صُمْ يَوْمَيْنِ قَالَ زِدْنِي قَالَ صُمْ ثَلَاثَةَ أَيَّامٍ قَالَ زِدْنِي قَالَ صُمْ مِنَ الْحُرُمِ وَاتْرُكْ صُمْ مِنَ الْحُرُمِ وَاتْرُكْ صُمْ مِنَ الْحُرُمِ وَاتْرُكْ وَقَالَ بِأَصَابِعِهِ الثَّلَاثَةِ فَضَمَّهَا ثُمَّ أَرْسَلَهَا (أبوداود, أحمد).
முஜீபதுல் பாஹிலிய்யா நபிகளார் (ஸல்) அவர்களிடம் வந்துவிட்டு சென்றார்கள். அதன் பின் ஒரு வருடம் கழித்து மறுபடியும் வந்த போது அவரது நிலை மாறியிருந்தது. நபிகளாரிடம் என்னை நீங்கள் அறியமாட்டீர்களா? அறத்கு நபியவர்கள் நீங்கள் யார்? நான் தான் அல்பாஹிலீ சென்ற வருடம் வந்து உங்களை சந்தித்து விட்டு சென்றேன். ஏன் நீர் இந்தளவு மாறிப்போயிருக்கிறீர் என்று நபியவர்கள் கேட்டார்கள்.நான் உங்களை பிரிந்து சென்றதிலிருந்து இரவில் மாத்திரம் தான் உண்ணக்கூடியவனாக இருந்தேன். அதற்கு நபியவர்கள் எதற்காக நீர் உம்மை வருத்திக் கொள்கிறீர், பொறுமையுடைய மாதத்தில் மாத்திரம் நோன்பு வைப்பதுடன், ஒவ்வொரு மாதமும் ஒரு நோன்பை வையுங்கள். அதற்கு அவர் இன்னும் அதிகப்படுத்துங்கள் எனது உடலில் வலிமை இருக்கிறது என்று கேட்டுக்கொண்ட போது ஒவ்வொரு மாதமும் இரண்டு நோன்பு வைக்குமாறு நபியவர்கள் கூறினார்கள். இன்னும் அதிகப்படுத்துங்கள் என்று அவர் கேட்டுக்கொண்ட போது ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பு வைக்குமாறு கூறினார்கள். இன்னும் அதிகப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்ட போது புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள் விடுங்கள், புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள் விடுங்கள், புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள் விடுங்கள் என்று நபியவர்கள் தனது மூன்று விரல்களையும் இணைத்து பிரித்துக்காட்டினார்கள்' (அபூதாவுத், அஹ்மத்).இந்த ஹதீஸிலிருந்து புனிதமான மாதங்களில் நோன்பு வைக்க முடியுமென்பது விளங்குகிறது.ரஜப் மாதத்துடன் தொடர்பு படுத்தி உள்ள பலவீனமான ஹதீஸ்கள்:
إن في الجنة نهراً يقال له رجب ماؤه أشد بياضاً من اللبن وأحلى من العسل من صام يوماً من رجب سقاه الله من ذلك النهر (البيهقي).
நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு ஆறு இருக்கின்றது அதன் தண்ணீர் பாலை விட வென்மையாகும், அதன் சுவை தேனை விட இனிமையாகும். எவர் ரஜப் மாதத்தில் ஒரு நோன்பை நோற்பாரோ அவருக்க அந்த ஆற்றிலிருந்து அல்லாஹ் நீர் புகட்டுவான்.'இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) தனது 'அல்இலலுல் முதனாஹியா' என்ற கிரந்தத்தில் இந்த ஹதீஸின் அற்விப்பாளர் தொடர் பலவீனமானது என குறிப்பிடுகிறார்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَارِكْ لَنَا فِي رَمَضَانَ وَكَانَ يَقُولُ لَيْلَةُ الْجُمُعَةِ غَرَّاءُ وَيَوْمُهَا أَزْهَرُ * أحمد
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் வந்து விட்டால் 'அல்லாஹும்ம பாரிக் லனா பீ ரஜப் வஷஃபான் வபாரிக் லனா பீ ரமழான்' யா அல்லாஹ் ரஜபிலும், ஷஃபானிலும் எமக்கு பரக்கத் செய்வாயாக, இன்னும் ரமழானிலும் எமக்கு பரக்கத் செய்வாயாக. (அஹ்மத்).இதன் அறிவிப்பாளர் தொடரில் வரக்கூடிய 'ஸாஇததிப்னு அபிர்ரகாத்' என்பவர் நிராகரிக்கப்படவேண்டியவர் என்று இமாம் புஹாரி (ரஹ்), மற்றும் இமாம் நஸாயி (ரஹ்) போன்றோர் குறிப்பிடுகின்றனர்.
(( أن رسول الله صلى الله عليه وسلم لم يصم بعد رمضان إلا رجباً وشعبان
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமழானுக்கு பின் ரஜபிலும், ஷஃபானிலும் தவிர நோன்பு நோற்கவில்லை'இமாம் பைஹகி (ரஹ்) கூறுவதாக இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: இந்த ஹதீஸை குறிப்பிட்டு விட்டு இது நிராகரிக்கப்பட வேண்டிய ஒரு செய்தியாகும் காரணம் இதில் முற்றிலும் பலவீனமான யூசுப் இப்னு அதீயா இடம் பெறுகிறார் என்று குறிப்பிடுகிறார் (தப்யீனுல் அஜப் பக்கம் 12).
ரஜப் மாதத்துடன் தொடர்பு படுத்தி புணைந்துரைக்கப்பட்ட ஹதீஸ்கள்:
قوله صلى الله عليه وسلم : (( رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي.......)).
'ரஜப் அல்லாஹ்வின் மாதம், ஷஃபான் எனது மாதம், ரமழான் எனது சமுதாயத்தின் மாதம்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.இப்னு திஹ்யா இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (தப்யீனுல் அஜப் பக்கம் 13-15). இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 5: 205, 206).
فضل رجب على سائر الشهور كفضل القرآن على سائر الأذكار
'ஏனைய மாதங்களுடன் ஒப்பிடும் போது ரஜப் மாதத்தின் சிறப்பு, ஏனைய திக்ருகளை விட குர்ஆனுக்கு இருக்கும் சிறப்பை போன்றதாகும்.' இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) இதில் வரும் ஸக்தி என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் எனக்குறிப்பிடுகிறார்: (தப்யீனுல் அஜப், பக்கம்: 17).
رجب شهر الله الأصم،من صام من رجب يوماً إيماناً واحتساباً استوجب رضوان الله الأكبر
'ரஜப் போர் புரியாத அல்லாஹ்வின் மாதமாகும். எவர் ரஜப் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் நோன்பு வைப்பாரோ அவருக்கு அல்லாஹ்வின் மிகப்பெரும் திருப்பொருத்தம் கிடைப்பது கடமையாகும்.'(தப்யீனுல் அஜப், பக்: 17. அல்பவாயிதுல மஜ்மூஆ ஷவ்கானிக்குரயது, பக்: 439).
من صام ثلاثة أيام من رجب كتب الله له صيام شهر ومن صام سبعة أيام أغلق عنه سبعة أبواب من النار
'எவர் ரஜப் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்பாரோ அவருக்கு ஒரு மாதம் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் எழுதி விடுகிறான். எவர் ஏழு நாட்கள் நோன்பு நோற்பாரோ நரகத்தின் ஏழு வாயல்களும் அவரை விட்டு மூடப்பட்டு விடும்'இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 206). தப்யீனுல் அஜப் பக்: 18).
من صلى المغرب في أول ليلة من رجب ثم صلى بعدها عشرين ركعة ، يقرأ في كل ركعة بفاتحة الكتاب ، وقل هو الله أحد مرة ، ويسلم فيهن عشر تسليمات ، أ تدرون ما ثوابه ؟ ......قال : حفظه الله في نفسه وأهله وماله وولده ، وأجير من عذاب القبر ،وجاز على الصراط كالبرق بغير حساب ولا عذاب
'ரஜபுடைய ஆரம்ப இரவில் ஒருவர் மஃரிபை தொழுது, அதன் பின் 20 வது ரக்அத்துகள் தொழுது, அதன் ஒவ்வொரு ரக்அத்திலும் பாத்திஹா அத்தியாயத்தின் பின் இஹ்லாஸ் அத்தியாயத்தை ஓதி பத்து ஸலாம்களை கொடுத்தால் அவருக்கு கிடைக்கும் கூலியை நீங்கள் அறிவீர்களா? அல்லாஹ் அவரையும், அவரது குடும்பத்தினரையும், அவரது செல்வங்களையும், அவரது குழந்தைகளையும் நரகத்தின் தண்டனையை விட்டு பாதுகாப்பதுடன், எந்த வித கேள்வி கணக்கும், தண்டனையுமின்றி மின்னல் வேகத்தில் ஸிராதை அவர் கடந்து செல்வார்'இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 123). தப்யீனுல் அஜப் பக்: 20).
((من صام من رجب وصلى فيه أربع ركعات .... لم يمت حتى يرى مقعده من الجنة أو يرى له
'ரஜப் மாதம் ஒருவர் ஒரு நோன்பை நோற்று, நான்கு ரக்அத்துகள் தொழுவாரானால், அவர் சுவர்க்கத்தில் தங்குமிடத்தை பார்க்காமல், அல்லது அது காட்டப்படாமல் அவர் மரணிக்கமாட்டார்'இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 124). தப்யீனுல் அஜப் பக்: 21).
إن شهر رجب شهر عظيم ، من صام منه يوماً كتب الله له صوم ألف سنة
'நிச்சயமாக ரஜப் மாதம் ஒரு மகத்தான மாதமாகும். எவர் அதில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அவருக்கு ஆயிரம் வருடம் நோற்பு நோற்ற நன்மை கிடைக்கும்'இப்னுல் ஜவ்ஸி இது இட்டுக்கட்டப்பட்டது என குறிப்பிடுகிறார். (மவ்லூஆத் 2: 206, 207). தப்யீனுல் அஜப் பக்: 26). அன்றைய காஃபிர்களிடம் ரஜப் மாதத்திற்கு இருந்த அந்தஸ்து:அறியாமை காலம் தொட்டே இந்த மாதம் புனிதமானதாக கருதப்பட்டு வந்தது. அவர்களிடம் இம்மாதத்தில் போர் புரிவது தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தது. இந்த மாதத்துக்கு 14 பெயர்களை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறான பல பெயர்கள் வருவதற்குரிய காரணமும் அவர்கள் அந்த மாதத்தை அதிகம் புனிதப் படுத்தியதனலாகும். நாம் மேலே குறிப்பிட்ட ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸில் நபியவர்கள் 'ரஜப் முழர்' என குறிப்பிட்டு விட்டு அது ஜுமாதா, ஷஃபானுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் என குறிப்பிட்டார்கள். காரணம், முழர், ரபீஆ ஆகிய கோத்திரங்களுக்கு மத்தியில் ரஜப் விடயத்தில் கருத்து வேறுபாடு நிலவியது. முழர் கோத்திரத்தினர் இப்போது அனைவருக்கும் அறிமுகமாக உள்ள ஜமாதுஸ்ஸானி, ஷஃபானுக்கு மத்தியிலுள்ள மாதத்தை தான் ரஜப் என்றனர். ஆனால் ரபீஆ கோத்திரத்தினரோ ரமழானை ரஜப் என்றனர். அதனால் தான் நபியவர்கள் ரஜபை சொல்லும் போது முழரோடு இணைத்து சொன்னார்கள். இன்னும் முழர் கோத்திரத்தினர் ஏனைய அனைத்து கோத்திரங்களை விட ரஜபை புனிதப்படுத்துபவர்களாகவும் இருந்தனர் என்பது ஒரு காரணமாகும்.இன்னும் அறியாமை காலத்தில் ரஜப் மாதம் வந்து விட்டால் அநியாயக்காரர்களுக்கு எதிராக பிரார்த்திக்கக்கூடியவர்களாக இருந்தனர், அந்த பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை பரவலாக அவர்களிடம் காணப்பட்டது என இப்னு அபித்துன்யா தனது நூலில் குறிப்பிடுகிறார்.அதீரது ரஜப் என்றால் என்ன?அதீரது ரஜப் என்பதற்கு அறிஞர்கள் பல விளக்கங்கள் அளித்துள்ளனர்: 'அபூ உபைதா குறிப்பிடும் போது, நிச்சயமாக 'அதீரத்' என்பது ரஜபுடன் தொடர்புடையதாகும். நெறுக்கத்தை பெறுவதற்காக ரஜப் மாதத்தில் அறுக்கப்படும் ஒரு குர்பானியாகும். அறியாமை காலத்தில் அரபுக்கள் ஏதாவது ஒரு தேவை நிறைவேற வேண்டும் என்பதற்காக நேர்ச்சை செய்து அது நிறைவேறிவிடுமானால் நான் இவ்வாறு இவ்வாறு ரஜப் மாதத்தில் ஒரு ஆட்டை அறுத்து நேர்ச்சையை நிறைவேற்றுவேன் என்று கூறுவது தான் அதீரத் என்கிறார்.' (கரீபுல் ஹதீஸ் 1: 195, 196).அபூதாவுத் குறிப்பிடும் போது: 'அதீரத்' என்பது ரஜப் மாதத்தின் முதல் பத்து நாட்களாகும்.அல்கத்தாபி குறிப்பிடும் போது: 'அல் அதீதர்' என்பது, ஹதீஸிலிருந்து விளங்குவது அது ரஜப் மாதம் பலியிடப்படும் ஒரு ஆடாகும். இதில் சரியான கருத்து: 'அதீரத்' என்பது அறியாமைக் கால மக்கள் எந்த வித நேர்ச்சையுமின்றி நிறைவேற்றும் ஒரு குர்பானியாகும். அழ்ஹாவில் நிறைவேற்றும் உழ்ஹியாவை போன்று இவர்களிடம் இந்த நடை முறை இருந்து வந்தது. அவர்களில் நேர்ச்சைவைத்து அதை நிறைவேற்றுபவர்களும் இருந்தனர்.அதீரத்தின் சட்டமென்ன?
عَنِ ابْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِي اللَّهم عَنْهم عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا فَرَعَ وَلَا عَتِيرَةَ وَالْفَرَعُ أَوَّلُ النِّتَاجِ كَانُوا يَذْبَحُونَهُ لِطَوَاغِيتِهِمْ وَالْعَتِيرَةُ فِي رَجَبٍ (البخاري, ومسلم).
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'பரஅ' என்பதும் 'அதீரத்' என்பதும் இல்லை. பரஅ என்றால் ஒட்டகத்திற்கு கிடைக்கும் முதல் குட்டியை தங்களது கடவுள்களுக்காக அறுத்துப் பலியிடுவதாகும். அதீரத் என்றால் ரஜப் மாதத்தில் (ஒரு ஆட்டை அறுத்து பலியிடுவதாகும்) நிறைவேற்றப்படும் ஒன்றாகும். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).'அதீரத்' விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும். இதில் சரியான கருத்தை மாத்திரம் இங்கு குறிப்பிடுகிறோம்: அதீரத் என்பதை நிறைவேற்றுவதற்கு சில ஹதீஸ்களில் அனுமதி இருந்தாலும் நாம் மேற்குறிப்பிட் ஹதீஸின் மூலம் அந்த சட்டம் மாற்றப்பட்டு விட்டது. அது தடுக்கப்பட்டு விட்டது. மேற்சொன்ன ஹதீஸின் மூலம் அது மாற்றப்பட்டு விட்டது என்பதற்குரிய காரணங்கள்: மேற்சொன்ன ஹதீஸை அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரலி) அவர்களாகும். அவர்கள் ஹிஜ்ரி 7 ம் ஆண்டு கைபர் வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அதீரத் என்ற இந்த வழக்கம் அறியாமைக் காலம் முதல் உள்ள ஒன்றாகும். பரஅ, அதீரத் என்பது மாற்றப்பட்டு விட்ட ஒன்று என்று பெரும் பாலான அறிஞர்களின் கருத்தென காலி இயாழ் குறிப்பிடுவதாக இமாம் நவவி (ரஹ்) கூறுகின்றார்கள். (அல்மஜ்மூஃ 8: 446).இமாம் இப்னுல் கையூம் ஜவ்ஸி (ரஹ்), மற்றும் இமாம் இப்னுல் முன்திர் (ரஹ்) அவர்களும் அதீரத் என்பது தடுக்கப்பட்ட ஒன்று, நிறைவேற்றக்கூடாத ஒன்று என குறிப்பிடுகின்றனர்.ரஜப் மாதத்தை விஷேச நோன்பு, தொழுகை, உம்ரா ஆகியவைகளின் மூலம் சிறப்பிப்பது பித்ஆவாகும்:ரஜப் மாதத்தில் விஷேச நோன்பு, தொழுகை போன்ற வணக்கங்களை நிறைவேற்றுவது தொடர்பாக இடம் பெற்ற ஹதீஸ்கள் பலவீனமானவை, மற்றும் அதிகமான செய்திகள் இட்டுக்கட்டப்பட்டவைகள் என்பதை நாம் ஆரம்பத்திலே சுற்றிக்காட்டினோம். எனவே இம்மாத்தில் விஷேச நோன்புக்கோ, தொழுகைக்கோ எந்த ஆதாரமுமில்லை.இப்னு அபீ ஷைபா தனது முஸன்னப் எனும் கிரந்தத்தில் குறிப்பிடும் போது, 'ரஜப் மாதத்தில் உமர் (ரலி) அவர்கள், மனிதர்கள் தங்கள் கைகளை உணவுத் தட்டில் வைக்கும் வரை அடிப்பவர்களாக இருந்தார்கள். உண்ணுங்கள் நிச்சயமாக இது அறியாமை காலத்து மக்களால் புனிதப்படுத்தப்பட்ட ஒரு மாதமாகும்.' (முஸன்னப் 3: 203). ஷைகு அல்பானி இதன் அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹானது என குறிப்பிடுகிறார் பார்க்க: (இர்வாஉல் அலீல் 4:113).அபூ பக்ர் (ரலி) தனது குடும்பத்தினரிடம் வந்த போது தண்ணீரை நிரப்புவதற்காக ஒரு பாத்திரம் வாங்கி அவர்கள் நோன்புக்காக தயாரக இருந்தனர். அதை பார்த்து அவர் இதென்ன? எனக் கேட்டார். அதற்கு அவரது குடும்பத்தினர் ரஜப் மாதம் என்றனர். நீங்கள் ரஜபை ரமழானுக்கு ஒப்பாக்க நினைக்கின்றீர்களா? என்று சொல்லி விட்டு அந்த பாத்திரத்தை உடைக்களானார்' (அல்முஃனி 3: 167, அஷ்ஷரஹுல் கபீர் 2: 52, மஜ்மூஉல் பதாவா 25: 291).ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது: 'ரஜப் மாதத்தை வணக்க வழிபாடுகளின் மூலம் சிறப்பிப்பதென்பது நூதனமான ஒரு நடை முறையாகும், அதை விட்டு விலகி இருப்பது அவசியமான ஒன்றாகும். ரஜப் மாதத்தில் நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளின் மூலம் சிறப்பிப்பது வெறுக்கத்தக்க ஒரு விடயம். இமாம் அஹ்மத் (ரஹ்) போன்ற அறஞர்களும் இதே கருத்தில் உள்ளனர்.' (இக்திழாஉஸ் ஸிராதுல் முஸ்தகீம் 2: 624, 625). முஸ்னத் மற்றும் ஏனைய கிரந்தங்களில் இடம்பெற்றிருக்கும் ஒரு நபி மொழியில், நபியவர்கள் புனிதமான மாதங்களில் நோன்பு நோற்பதற்கு அனுமதி வழங்கினார்கள். புனிதமான மாதங்கள்: ரஜப், துல்கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம். எனவே இம்மாதங்களில் பொதுவாக நோன்பு நோற்பதற்கு அனுமதி உள்ளதே தவிர ரஜப் மாதத்தில் மாத்திரம் விஷேசமாக நோன்புகள் வைப்பதற்கு எந்த அடிப்படையுமில்லை. மஜ்மூ பதாவா ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) 25: 290, 291).ரஜப் மாதத்தில் உம்ரா செய்யலாமா?
عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ قَالَ سَأَلْتُ عَائِشَةَ رَضِي اللَّهم عَنْهَا قَالَتْ مَا اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ فِي رَجَبٍ *(البخاري).
உர்வதிப்னு ஸுபைர் (ரலி) ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டதாக குறிப்பிடுகிறார்: 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்யவில்லை.' (புஹாரி).'அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் உம்ரா செய்தார்கள் என்று கூறிய போது அதை ஆயிஷா (ரலி) அவர்கள் நிறாகரித்தார்கள். அந்த நேரத்தில் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) மறுப்பேதும் தெரிவிக்காது அமைதியாக இருந்தார்கள்' (புஹாரி, முஸ்லிம்).ஒரு சிலர் ரஜப் மாத்தில் உம்ரா செய்வது சிறப்பிற்குரிய காரியம் என எண்ணிக்கொண்டிருக்கின்றனர். நாம் மேற்குறிப்பிட்ட ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்றிலிருந்து நபியவர்கள் ரஜபில் உம்ரா செய்யவில்லை என்பது தெளிவாக விளங்குகிறது. எனவே இதுவும் ஒரு பித்ஆவாகும். மிஃராஜ் தினத்தை நோன்பு மற்றும் விஷேச அமல்கள் மூலம் சிறப்பிப்பது பித்அத்தாகும் :ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதத்தின் 27 ம் நாள் மிஃராஜுடைய தினம் என குறிப்பிட்டு அதில் நோன்பு வைப்பதும், பள்ளிகளில் கந்தூரிகள் வைத்து மௌலிதுகள் ஓதுவதும் பரவலாகக் காணக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. இவைகள் அனைத்தும் வழிகெட்ட பித்அத்துகளாகும். இவைகளுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமோ, அடிப்படையோ இல்லை. மிஃராஜ் எந்த வருடம் நிகழ்ந்தது என்பதிலே பல விதமான கருத்துகள் நிலவுகின்றன. அது குறிப்பாக இந்த ஆண்டில், இந்தத்திகதியில் நிகழ்ந்தது என ஆதாரம் இருந்தாலும் அதை சிறப்பிப்பதற்கு நபியுடைய வழிகாட்டல் இல்லாமல் எவருக்கும் சிறப்பிக்க முடியாது. அதையும் மீறி ஒருவர் செய்வாரெனில் அது தெளிவான பித்அத்தாகும் அதற்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தம் கிடைப்பதற்கு பதிலாக அவனது கோபம் தான் கிடைக்கும்.மிஃராஜ் பயணத்தின் பின் நபியவர்கள் பல வருடங்கள் வாழ்ந்தனர், ஸஹாபாக்கள் வாழ்ந்தனர் நபியவர்களோ, அன்னாரது தோழர்களோ அந்த நாளை சிறப்பித்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவே மிஃராஜ் தினத்தை சிறப்பிப்பதென்பது தெளிவான ஒரு பித்ஆவாகும். 'நாம் கட்டளையிடாததை எவர்கள் மார்க்கத்தின் பெயரால் புதிதாக ஏற்படுத்தி செய்வார்களோ அது நிராகரிக்கப்படும்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்). அல்லாஹ்வின் தூதரை பின்பற்றி செய்யப்படும் அமல்களுக்கு மாத்திரம் தான் அல்லாஹ்விடம் அங்கீகாரம் இருக்கிறது. எனவே அல்லாஹ்வின் தூதர் காட்டித் தராத விடயங்களுக்கு அல்லாஹ்விடம் எந்த பெறுமதியுமில்லை அவைகள் நிராகரிக்கப்படும். எனவே பித்அத்துக்களை விட்டு எல்லா நேரங்களிலும் எச்சரிக்கையாக இருப்போமாக.
நன்றி: இஸ்லாம் கல்வி.காம்

பேச்சு வழக்கில் ஷிர்க்

செயல்களில் ஷிர்க் என்பது எவ்விதம் இறைவனால் மன்னிக்கப்படாத பாவமோ அவ்விதம் பேச்சு வழக்கில் நாம் பயன்படுத்தும் சில வார்த்தைகள் ஷிர்க் என்னும் பெரும்பாவத்தில் கொண்டு சேர்க்கும். நம்மையும் அறியாமல் நாம் உபயோகப்படுத்தும் சில வார்த்தைகள் ஷிர்க்காணவை என்பதை உணர்த்த 'தமிழ் சங்கமி' பதிவில் வெளியான கட்டுரையை நன்றியுடன் இங்கு மீள்பதிவு செய்கிறோம்.
--------------------------------------------------------------------------------
நாட்டிலே, மக்கள், தம் பேச்சிலும் எழுத்திலும் உரையாடல்களிலும் பல சொற்களை - சொற்றொடர்களைக் கையாண்டு வருகின்றனர்.அவற்றுள் சில, பகுத்தறிவுக்கு மாறானவை; அறிவியலுக்குப் புறம்பாவை; ஒவ்வாதவை; முரணானவை; எதிரானவை.அவற்றை, சமயப்பற்றும், நம்பிக்கையும் கொண்டிருப்பவர்கள் கையாள்வதை நாம் பொருட்படுத்தப் போவதில்லை.ஆனால், நம்மில் சி(ப)லர் அறிந்தோ அறியாமலோ, அவை பகுத்தறிவுக்கும் அறிவியல் மனப்பான்மைக்கும் மாறானவை என்று கருதாமலோ பழக்கம் காரணமாக அத்தகைய சொற்(றொடர்)களைக் கையாண்டு வரும் நிலையினை நடைமுறையில் நாம் கண்டு வருகிறோம்.இப்படிப்பட்ட நிலையில் உள்ள பகுத்தறிவாளர்கள் பயன்படுத்தக் கூடாத அவற்றுள் சிலவற்றை மட்டும் எடுத்துக்காட்டி, தெளிவுபடுத்துவது நலம் பயக்கும் என்பதோடு அது வழிகாட்டும் கையேடாகவும் இருக்கும் என்ற எண்ணத்தில் சிலவற்றைச் சுட்டிக் காட்டி விளக்கம் அளித்திருக்கிறோம்.இச்சொற்(றொடர்)கள் தூய தனித்தமிழ்ச் சொற்கள், வடமொழிச் சார்புச் சொற்கள் என்ற கண்ணோட்டத்தில் பாராமல் வழக்கத்தில் உள்ள நடைமுறைச் சொற்கள், சொற்றொடர்கள் என்ற நிலையில் மட்டும் எடுத்துக்காட்டப்பட்டு விளக்கம் தரப்பட்டுள்ளன.பகுத்தறிவாளர்கள், பகுத்தறிவாளர்கள் ஆக இருக்க எண்ணமும் விருப்பமும் உடையவர்களுக்கு இம்முயற்சி நல்ல பயன் தரும் என்று நம்புகிறோம்.அதிர்ஷ்டம்நல்ல நிலை அல்லது நன்மை ஏற்படும்போது பலர், அதிர்ஷ்டவசமாக எனக்கு அது கிடைத்தது; இப்படி அமைந்தது எனது அதிர்ஷ்டம் எனக் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். எழுதுவதைப் படித்திருக்கிறோம்.இது பகுத்தறிவுக்கு ஒவ்வாததுதிருஷ்டம் என்னும் வடசொல்லுக்குப் பார்வை எனப்பொருள் அதிர்ஷ்டம் (அ-திர்ஷ்டம்) பார்வையற்றது; பார்க்க முடியாதது; குருட்டுத் தனமானது; குருட்டாம் போக்கிலானது; கண்ணுக்குத் தெரியாதது எனப் பொருள்.நன்மை எதிர்பாராமல் வாய்க்கும் போது அதற்குக் காரணம் தெரியாமல் அல்லது கண்டறியாமல் உடனே அது அதிர்ஷ்டம் அதாவது கண்ணுக்குத் தெரியாத சக்தி என்கிறார்கள்; அதிர்ஷ்டவசமாக வந்தது என்பர்.ஆங்கிலத்தில் இது, unluck, unlucky என்று கூறப்படுகிறது.இப்படிப்பட்ட சொற்களும் சொற்றொடர்களும் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.அப்படிச் சொல்ல, எழுத நேரிடுமானால், நல்வாய்ப்பு, நல்வாய்ப்பாக, கெட்ட வாய்ப்பு, கெட்ட வாய்ப்பாக எனப் பயன்படுத்தலாம்.அமிர்தம்ஆகா! இந்த உணவு சிற்றுண்டி - தீனி - திண்பண்டம் - இனிப்பு அமிர்தம் ஆக இருக்கிறது!தேவாமிர்தம் தோற்றுப் போகும்! என்று வழக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இது வடசொல் - தொடர்கள்மார்த் என்றால் இறப்பு எனப் பொருள்அ-மர்த் - இறவாமை; அமந்த் - அமிர்தம்; தேவாம்ருதம்;தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்து பெற்றது அமிர்தம் தேவாம்ருதம்இதனை உண்டால் சாவே இல்லை; இதனை உண்டதால்தான் தேவர்கள் சாகாநிலை பெற்றவர் - என்பது இந்து மதப்புராணிகம்.இந்த அமிர்தம்; அமுது, அமுதம் எனவும் வரும். இப்பயன்பாடு விலக்குதற்குரியது.அமிழ்தம் - என்பது தமிழ்ச் சொல்; அமிர்தம் என்பதும் அமிழ்து, அமிழ்தம் என்பதும் வேறு வேறு;அமிழ்-து - அமிழ்து; வானில் இருந்து அமிழ்ந்து, கவிந்து வரும் உணவு அமிழ்து. (து-உணவு) அமிழ்து - அமிழ்தம் என வரும்.இச்சொல் மழையைக் குறிக்கும்.வானின் னுலகம் வழங்கி வருதலான் தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று - குறள் 4 என்கிறார் திருவள்ளுவப் பெருந்தகை.அட்சயப் பாத்திரம்அள்ள அள்ளக் குறையாதது அட்சய பாத்திரம் என்பது வழக்கில் உள்ள தொடர்.இது அமுதசுரபி எனவும் கூறப்படுகிறது.அது என்ன அட்சய பாத்திரமா? அள்ள அள்ளக் குறையாமல் அளித்தர? என்று கூறப்படுகிறது.இதுவும் புராணிகச் சொல்லே!வடமொழியில் க்ஷயம் என்பது தேய்வது; குறைவது; அழிவது.அ+க்ஷயம் - அக்ஷயம் தேயாதது; குறையாதது; அழியாதது.இச்சொல் தமிழ் வடிவில் அட்சயம் என எழுதப்படுகிறது.மணிமேகலையில் வரும் ஆபுத்திரனிடம் இந்த அட்சய பாத்திரம் அமுத சுரபி எனப்பட்டது.இதில் போடப்பட்ட உணவு அள்ள அள்ளக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருந்ததாம்.அபுத் திரன்கை அமுத சுரபி எனும் மாபெரும் பாத்திரம் மடக்கொடி, கேளாய்! என்கிறது மணிமேகலை.அமரர்அந்தத் தலைவர் அமரர் ஆகிவிட்டார்! மறைந்த அமரர் அப்பாத்துரை கூறியது போல! என வழக்கத்தில் பேசப்படுவதை அறிவோம்:இந்த வடசொல் அ+மார் எனப் பிரிபட்டு சாகாதவர் என்று பொருள்தரும்.மார் - இறந்தவர்; அ+மார் - இறவாதவர்மானமற்றவர்; இறந்தும் இறவாதவர்; தேவர் என்ற பொருளில் வரும்.புராணிக - வடசொல் இது.இதனைத் தவிர்க்க வேண்டும்.மாறாக, நினைவில் வாழும் என்னும் தமிழ்த் தொடரை வழங்கலாம். - பேராசிரியர் ந.வெற்றியழகன் எம்.ஏ.,பி.எட்

நாங்கள் சொல்வதென்ன?

வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அல்குர்ஆன் மற்றும் ஸஹீஹான நபி மொழிகளை மட்டுமே பின்பற்றுமாறு சொல்கின்றோம்.
“(மனிதர்களே!)நீங்கள் இறைவனிடம் இருந்து இறக்கி வைக்கப்பட்ட (வஹியை) மாத்திரம் பின்பற்றுங்கள்!
(சூரதுல் அஃராப்)”
என்கின்ற அல்‍குர்ஆனது கூற்றுக்கிணங்க வஹி அடிப்ப்டையில் இல்லாத மக்களால் சட்ட மூலாதாரமாகக் கருதப்படும் மத்ஹபுகள் இஜ்மா கியாஸ் பெரியார் கூற்றுக்கள் போன்றவற்றை எதிர்க்கின்றோம்.
முஸ்லிம்களுக்கு மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் எடுத்துச் சொல்லி அதன் படி அமல் செய்யுமாறு அழைக்கின்றோம். நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:
“மக்களே!உங்களை நான் வெள்ளை வெளீரென்ற பிரகாசமான மார்க்கத்தில் விட்டுச்செல்கின்றேன் அழிவை நோக்கிப் பயனிப்பவன் தான் வழிகெடுவான்”
(ஆதாரம் ஸஹீஹுல் புஹாரி)
இவ்வாறு நபி(ஸல்)அவர்கள் தெளிவில் விட்டுச்சென்றிருக்கும் நிலையில் மார்க்கத்திற்கும் பகுத்தறிவிற்கும் சேறு பூசும் அவ்லியாக்களின் பெயரில் உருவான கட்டுக்கதைகளை எதிர்க்கின்றோம்
இனைவைத்தல்(ஷிர்க்)அது எந்த வடிவில் இருந்தாலும் அதனை எச்சரிக்கை செய்கின்றோம் அல்லாஹுத்தஆலா அல்‍குர்ஆனில்
“இனைவைத்தலைத் தவிர ம‌ற்ற‌ப் பாவ‌ங்களை தான் நாடியவர்களுக்கு ம்ன்னிக்கின்றான். அல்லாஹுத்தஆலாவுக்கு யார் இனணகற்பிக்கின்றாரோ அவர் தூரமான‌ வழிகேட்டில் இருக்கின்றார்” (சூரதுன் நிஸா வசனம்)
தடுக்கிவிழுந்தால் யாமுஹ்யித்தீன்(முஹ்யித்தீனே!எனைக்காப்பாற்றுங்கள்!)என அழைப்பது கப்ரைமுத்தமிடுவது, மெளலூது, வித்ரிய்யா, யாகுத்பா, புர்தா போன்ற ஷிர்க்கான வார்த்தைகள் நிரம்பிய பாடல்களை பாடுவது போன்ற செயல்களுக்கும் இஸ்லாத்திற்கும் துளியளவும் சம்மந்தம் கிடையாது என்று உறுதியாய்க் கூறுகின்றோம்
பித் அத் (நூதன அனுஷ்டானங்கள்) இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைப் போக்குகள், இஸ்லாத்தின் பொயரால் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் கதைகள் பலஹீனகான செய்திகள்போன்றவற்றை எதிர்க்கின்றோம்.நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள்:
“எம்முடைய மாக்கத்தில் இல்லாதஒன்றை யார் புதிதாக உருவாக்கின்றாரோ அச்செயல் மறுக்கப்படவேண்டியது.”
(ஆதாரம் ஸஹீஹுமுஸ்லிம்)அறிவிப்பாளர் அன்னைஆயிஷா(ரழி)
மார்க்கத்தில் இல்லாத‌ மீலாதுவிழா, தாயத்துக்கட்டுதல், இஸ்ம், எழுதிக்கரைத்துக்குடித்தல், தல்கீன் ஓதுதல், சுப்ஹில் குனூத் ஓதுதல், கூட்டுதுஆ, இருட்டுதிக்ர், தரீக்காகந்தூரி போன்றவற்றை மிகவன்மையாய்க் கன்டிக்கின்றோம்.
யாரையும் கண்மூடித்தனமாக பின்பற்றாதீர்கள்! யார்சொன்னாலும் அதனை அல்குர்ஆன் மற்றும் ஸ‌ஹீஹான ஹதீஸ்களோடு சரி பார்த்து விள‌ங்கிப்பின்பற்ற வேண்டும் என்கின்றோம்.
கால‌மெல்லாம் மக்கள் மத்தியில் பரவியிருக்கும் தனிமனிதக்கருத்துக்கள் மார்க்கச்சாயம் பூசப்பட்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட உரைகள் போன்றவற்றைப் பின்பற்றக் கூடாது என்கின்றோம்.இஸ்லாமிய வாழ்வுமிளிரவும் அல்லாஹ்வுடைய தீனை இப்பூவியில் நிலைநாட்டுகின்ற ஓர் உன்னத சமுதாயத்தை உருவாக்கவும் பாடுபடுகின்றோம்.
அல்லாஹ்வின் தீனை அனைவரும் சேர்ந்து கட்டியெழுப்பவேண்டும் என்பதற்காய் அரபுநாடுகளின் உதவிகளை எதிர்பாராமல் சொந்தநிதியினைக் கொண்டே இதற்காப்பாடுபடுகிறோம்.
இஸ்லாமிய வரையறைகளுக்குட்பட்ட சுதந்திரமான இஸ்லாமிய சிந்தனையைத் தூண்டுகின்றோம்.
மேலும் முஸ்லிம்களிடம் காணப்படும் அறிவு ரீதியான தேக்கநிலையை நீக்கப்பாடுபடுவதோடு விஞ்ஞான தகவல்களை வழங்கி பிறமொழிரீதியான முஸ்லிம்களின் பின்னடைவையும் இஸ்லாமிய அரசியல் பற்றிய முஸ்லிம்களின் அசமந்தப்போக்கினை அகற்றப்பாடுபடுகின்றோம்
பெண்களுக்கெதிரான சீதனக்கொடுமை இளைஞர் யுவதிகளை சீரழிக்கும் சினிமாக்கலாச்சாரம் சமூகவிரோதச்செயல்கள் போன்றவற்றைக் கண்டிக்கின்றோம்.
சத்தியத்தை மறைத்தல் சத்தியத்துடன் அசத்தியத்தைக்கலத்தல் சத்தியத்தில் விட்டுக் கொடுப்பு போன்றவற்றை எதிர்க்கின்றோம்.
இஸ்லமியத்தூது எனும் அமானிதத்தை சுமக்கும் பணியில் எம்மோடு இணைந்து செயற்பட அனைத்து சகோதரர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்..

“எமது கடமை தெளிவாகச் சொல்வதே அன்றி வேறில்லை”
நன்றி: தாருல் அதர் அத்தஅவிய்யா

வஹியில் குழப்பமா...? (PJ)

ராம் ஸ்வர்ப் என்பவர் இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்ட ஹிந்து மதத்தைச் சார்ந்தவர். ''ஹதீஸின் வாயிலாக இஸ்லாத்தை அறிந்து கொள்ளுதல்'' என்று ஹிந்தி மொழியில் இவர் எழுதிய நூல் இந்திய அரசால் ஏற்கனவே தடை செய்யப்பட்டிருக்கின்றது. இஸ்லாத்தைக் குறைகூறும் வாய்ப்புக்காக காத்துக்கிடந்த இவருக்கு சாலமன் ரஷ்டியின் 'சாத்தானின் வசனங்கள்' என்ற நூல் சர்க்கரையாக அமைந்தது. இந்தியாவிலும், இன்னும் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட அந்த நூல் எப்படியோ 'ராம் ஸ்வர்ப்' என்பவருக்குக் கிடைத்திருக்கிறது. அதை படித்துவிட்டு ''புலமை சான்ற கேள்விகள்'' என்ற தலைப்பிட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் 20-11-88, பக்கம் 5-ல் கட்டுரை ஒன்றை வரைந்துள்ளார். தவறான வாதங்கள், பொய்யான செய்திகளை உள்ளடக்கிய இஸ்லாத்தை நோக்கி அவர் எழுப்பி இருக்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பது நமது கடமை என்பதால் இந்தக் கட்டுரை அவரது கேள்விகளை எடுத்து வைத்து அதற்கு விளக்கம் அளிக்கும் முன்பு 'சாத்தானின் வசனங்களையும், சல்மான் ரஷ்டியையும் பற்றி அவர் தரும் அறிமுகத்தை தந்துவிட்டு அவரது கேள்விகளுக்குச் செல்வோம்.ராம்ஸ்வர்ப் சொல்கிறார்: சாலமன் ரஷ்டியின் சாத்தானின் வசனங்கள் இஸ்லாத்தையும், அதன் தூதரையும், அவருக்கு வந்த வேத வெளிப்பாடுகளையும் விமர்சிப்பதற்காகவே எழுதபட்டது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இவர் 'மக்கா' நகரை 'ஜாஹிலியா' என்ற பெயரால் தனது நூலில் குறிப்பிடுகிறார். இஸ்லாத்திற்கு முந்தைய காலத்து மக்காவை இஸ்லாமிய வரலாறுகள் 'ஜாஹிலியா' என்றே குறிப்பிடுகின்றன. ருஷ்டி தனது நூலில் முஹம்மதை குறிப்பிடும்போது 'மஹவுன்ட்' என்றும் நபிகளின் எதிரியாக திகழ்ந்த அபூஸஃப்யானை 'அபூஸிம்பல்' என்றும் சிறிய மாற்றத்துடன் குறிப்பிடுகிறார். ஏனைய பாத்திரங்களைக் குறிப்பிடும்போது ரஷ்டி இந்த வித்தியாசத்தைக்கூட செய்யவில்லை. இஸ்லாமிய வரலாறுகளில் எவ்வாறு அவர்களின் பெயர் குறிப்பிடப்படுகிறதோ அவ்வாறே குறிப்பிடுகிறார். நபியின் சித்தப்பா ஹம்ஸா இஸ்லாத்தை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்ட நீக்ரேர் அடிமை பிலால் மற்றும் காலித் ஆகியோர் இதே பெயர்களாலேயே இவரது நூலில் குறிப்பிடப்படுகிறார்கள். மக்காவில் லி அதாவாது ஜாஹிலியாவில் பனிரண்டு பரத்தையர் இருந்ததாகக் குறிப்பிடும் இவர், அந்தபரத்தையருக்கு நபியின் மனைவியரின் பெயரைச்சூட்டி மகிழ்கிறார். இது கீழ்தரமான, அநாகரீகமான சித்தரிப்பாக அமைந்துள்ளது. 'நான் இந்த நூலில் இஸ்லாத்தை விமர்சிக்கவில்லை வெறும் கற்பனையாக எழுதப்பட்ட கதைதான் எனது நூல்'' என்று ரஷ்டி இப்போது பின்வாங்கினாலும் உண்மையில் அவர் இஸ்லாத்தையும் அதன் தூதரையும், அவருக்கு வந்த வேதவெளிப்பாடுகளையும் விமர்சனம் செய்வதை தலையாய நோக்கமாகக் கொண்டே தனது நூலை எழுதி இருக்கிறார் என்பது அவரது நூலைப் படிக்கும் போது உணர முடிகின்றது.இவை யாவும் ரஷ்டியை பற்றியும், அவரது நூல் பற்றியும் 'ராம் ஸ்வர்ப்' தருகின்ற அறிமுகமாகும். இந்தச் சிறிய அறிமுகத்திலிருந்து ரஷ்டியையும், அவரது நூலையும் நன்றாக நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. இஸ்லாத்தை விமர்சிப்பது தான் அவரது நோக்கம் என்றால் 'ராம் ஸ்வர்ப்' போல் தெளிவாக நேரடியாக விமர்சிக்கலாம்.
தனக்கு இஸ்லாத்தைப் பற்றி ஏற்படுகின்ற ஐயங்களை தெளிவாக எழுப்பி இருக்கலாம். ரஷ்டியிடம் அந்தத் துணிவையும், நாகரிகத்தையும் காணமுடியவில்லை. மாறாக மஞ்சள் பத்திரிக்கைகள், சினிமா கிசு கிசு செய்திகளைப் போல் நாலாம் தர நடையைத் தேர்வு செய்திருக்கிறார். 'ராம்ஸ்வர்ப்' செய்யும் அறிமுகத்திலிருந்து இதை நாம் நன்றாக விளங்க முடிகின்றது. முஸ்லிம் அறிஞர் உலகும், ராம் ஸ்வர்ப் போன்றவர்களும் இஸ்லாத்தையே அவர் விமர்சனம் செய்துள்ளார் என்று கண்டுபிடித்துச் சொன்ன பிறகும் கூட அவர் துணிவுடன் ஒப்புக் கொள்ள முன்வரவில்லை.''நான் இஸ்லாத்தை விமர்சிக்கவில்லை, கற்பனை கதைதான் நான் எழுதிய நூல்'' என்று இந்தியப் பிரதமருக்கு, கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார் ரஷ்டி. அவ்வளவு துணிவும், நேர்மையும் கொண்டவர். ஓரு சமுதாயம் தங்கள் அன்னையர் என்று மதிக்கும் நபிகளின் மனைவியரின் பெயர்களை பரத்தையர்களுக்கு சூட்டி மகிழும் வக்கிரபுத்தியும், கீழ்த்தரமான எண்ணங்களையும் உடையவர் தான் ரஷ்டி என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் ராம்ஸ்வர்ப்.
'ராம்ஸ்வர்ப்' போன்றவர்களே ஜீரணிக்கமுடியாத அளவுக்கு எழுதும் நாலாந்தர எழுத்தாளராக இவர் காட்சியளிக்கிறார். இவரைப் பற்றி எழுதுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல என்பதால் இத்துடன் விட்டுவிட்டு ராம்ஸ்வர்ப் எழுப்புகின்ற புலமை சான்ற கேள்விகளைப் பார்ப்போம்.கேள்வி:1 மக்கத்துகாபிர்கள் அல்லாத், அல்உஸ்ஸா, மனாத் ஆகிய பெண் தெய்வங்களை வழிபட்டு வந்தனர். பல தெய்வ வணக்கம் கூடாது என்று போதித்த முஹம்மதுக்குத் திடீரென ஒரு வஹி வருகிறது. அல்லாத், அல்உஸ்ஸா, மற்றும் மூன்றாவதான மகாத்தைப் பற்றி நீர் நினைத்ததுண்டா? அவை போற்றப்பட்ட பறவைகள் அவற்றின் சிபாரிசுகள் நிச்சயமாக விரும்பப்படுகின்றது என்று அந்த வஹி கூறுகிறது. தங்களின் தெய்வங்களை முஹம்மது புகழ்ந்து கூறியவுடன் மக்காவாசிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்து முஹம்மதுவை பின்பற்றி அல்லாஹ்வை வணங்க வழி ஏற்படுகிறது. இந்த உடன்பாடு அற்ப ஆயுளில் முடிந்து விடுகிறது. அந்த தெய்வங்களைப் புகழ்ந்து தனக்கு வந்த வஹி, ஷைத்தானிடமிருந்து வந்தது என்பதை முஹம்மது சீக்கிரமே கண்டுகொண்டு, அதற்கு பதிலாக வேறு வசனத்தைக் கூறுகிறார். முஹம்மதுவால் திருத்திக் கூறப்பட்ட அந்த வசனம் ''அல்லாத், அல்உஸ்ஸா, மற்றும் மூன்றாவாதாக மனாத்தைப்பற்றி நீர் நினைத்ததுண்டா? உங்களாலும் உங்கள் மூதாதையராலும் இட்டுக்கட்டப்பட்ட பெயர்களேயன்றி இந்த பெண் தெய்வங்கள் வேறில்லை. (அல் குர்ஆன் 53:19-23)இந்தத் தகவல்கள் கற்பனையானது அல்ல மாறாக இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்களான தபரீ, வாகிதி போன்றவர்கள் இதைக்குறிப்பிடுகின்றனர். ஆதாரப்பூர்வமான இந்த ஹதீஸ்களின் அடிப்படையிலே தனது நூலுக்கு 'சாத்தானின் வசனங்கள்' எனப் பெயரிட்டிருக்கிறார் ரஷ்டி. இந்தக் கதையை கூட்டவோ குறைக்கவோ இல்லாமல் சரியாகத் தரும் ரஷ்டி நம்முடைய உள்ளத்தில் முக்கிய வினாவையும் விதைக்கிறார். அதாவது ஷைத்தான் தோற்றுவித்த உதிப்பில் இருந்து எவ்வாறு மலக்குகள் தோற்றுவித்த உதிப்பைப் பிரித்தறிவது? இந்த விஷயத்தில் குர்ஆன் எந்த வழியையும் காட்டவில்லையே. மேலும் முஹம்மதுக்கு மட்டுமல்ல, அவருக்கு முன்தோன்றிய நபிமார்களும் ஷைத்தானால் உதிப்பு ஏற்படுத்தப்பட்டனர் ஆனால் அவற்றை முறையாக இறைவன் ரத்து செய்துவிட்டான். (அல் குர்ஆன் 22:52) என்று குர்ஆன் இயம்புகிறது.பதில்:1 இந்த விபரங்களின் அடிப்படையில் 'ராம்ஸ்வர்ப்' கேட்க விரும்புவதும், சொல்ல வருவது என்னவென்றால் ''திருக்குர்ஆனில் ஷைத்தான்களின் வசனங்களும் இடம் பெற்றுள்ளன அவற்றை வேறுபடுத்தி அறிந்திட குர்ஆன் எந்த வழியையும் காட்டவில்லை'' என்பது தான் இதற்கு ஆதாரமாக ஒரு ஹதீஸையும், ஒரு குர்ஆன் வசனத்தையும் சமர்ப்பிக்கிறார். முதலில் 'ராம்ஸ்வர்ப்' தனது வாதத்துக்கு ஆதாரமாக எடுத்து வைக்கும் ஹதீஸைப் பார்ப்போம். அந்த ஹதீஸைப் பற்றி 'ஆதாரப்பூர்வமான ஹதீஸ்' என்று ராம்ஸ்வர்ப் குறிப்பிடப்படுவதிலிருந்து ஹதீஸ்களில் ஆதாரப்பூர்வமானவைகளும் ஆதாரமாகக் கொள்ளத் தகாதவைகளும் உள்ளன என்பதை ராம்ஸ்வர்ப் அறிந்திருக்கிறார் என்பது தெரிகின்றது. 'ஆதாரப்பூர்வமான ஹதீஸ்' என்ற அடைமொழியுடன் எடுத்து வைக்கும் இந்த ஹதீஸ் உண்மையில் ஆதாரப்பூரவமானது அல்ல மாறாக இட்டுக் கட்டப்பட்ட பொய்யான செய்தியாகும் இது. 'ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்' என்று சொல்லப்படுவதற்கு முஸ்லிம் உலகம் எந்தத் தகுதிகளை வரையறுத்திறுக்கிறதோ அந்தத் தகுதியை இது பெற்றிருக்கவில்லை.உதாரணமாக ஹதீஸை ஒருவரிடமிருந்து ஒருவராக அறிவிப்பவர் தமக்கு முந்திய அறிவிப்பாளரைச் சந்தித்திருக்கவேண்டும்; அறிவிப்பவர்கள் நம்பகமானவர்களாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக அமையும். 'ராம்ஸ்வர்ப்' எடுத்து வைக்கும் இந்த ஹதீஸில் இந்த இரண்டு தகுதிகளுமே இல்லாமலிருக்கின்றன. தபரி, வாகிதி குறிப்பிடுவதால் மட்டும் எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானதாக ஆகிவிட முடியாது. இந்த ஹதீஸைப் பொறுத்தவரை ''இந்த நபர் எனக்கு கூறினார் என்று அறிவிக்கும் இரண்டாம் நபர் முதலாம் நபரைச் சந்தித்ததாகவோ அவரது காலத்தில் வாழ்ந்தவராகவோ இல்லை. முப்பதுக்கும் மேற்பட்ட வழிகளில் அறிவிக்கப்படும் இந்தச் செய்தி பெரும்பாலான அறிவிப்புகளில் சொல்லி வைத்தாற் போல இந்த குறைபாட்டைக் கொண்டதாக உள்ளது. ''காரல் மாக்ஸ் இதை என்னிடம் கூறினார்'' என ராம்ஸ்வர்ப் கூறினால் அந்தக் கூற்றின் நிறை எதுவோ அதேநிலையைத் தான் இந்தச் செய்தியும் பெறுகிறது. மேலும் பல குறைபாடுகளையும் இந்தச் செய்தி உள்ளடக்கி இருக்கிறது 'ராம்ஸ்வர்ப்' இப்போது இதை விமர்சனத்துக்கு எடுத்துக் கொண்டதால் நாம் இவ்வாறு கூறவில்லை எவரும் விமர்சிப்பதற்கு முன்லிபலநூறு ஆண்டுகளுக்கு முன்லிவாழ்ந்த அறிஞர் பெருமக்கள் இதை அலசி இது பொய் என்று தள்ளுபடி செய்துள்ளனர். அவர்கள் தள்ளுபடி செய்த இந்தக் குப்பையைத் தான் ரஷ்டியும், ராம்ஸ்வர்பும் இப்போது கிளறிக் கொண்டிருக்கிறார்கள்.''இஸ்லாத்தின் எதிரிகள் திட்டமிட்டுப் புனைந்த பெரும் பொய்யாகும் இந்தச் செய்தி'' என்று அறிஞர் இப்னு குஸைமா குறிப்பிடுகிறார். ''இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசை சரியானதல்ல'' என்று 'பைஹகீ' எனும் அறிஞர் குறிப்பிட்டுவிட்டு இந்தச் செய்தியை அறிவிப்பவர்களின் குறைபாடுகளையும் பட்டிலிட்டுக்காட்டுகிறார். அறிவிப்பாளர்களில் ஒருவருக்கொருவர் தொடர்பு எதுவும் இல்லாத வகையில் இது அமைந்துள்ளது என்று 'பஸார்' என்னும் அறிஞர் கூறுகிறார். இந்தச் செய்தியை நபித் தோழர்கள் எவரும் கூறாமல் நபித்தோழர்களின்அடுத்த காலத்தவர்கள்தான் அறிவிக்கின்றனர். இந்த நிகழ்ச்சி நடந்திருந்தால் அது நடந்த காலத்தில் பிறந்தே இருக்காதவர்களால் எப்படி அறிவிக்க முடியும் என்று கேட்கிறார் ஹாபிழ் இப்னு கஸீர் அவர்கள் ஒன்றிரண்டு அறிவிப்பாளர் வரிசையில் நபித்தோழர்கள் அறிவிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் நபித்தோழர்கள் கூறியதாக அறிவிக்கும் அடுத்தடுத்த அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இல்லை என்றும் இப்னு கஸீர் மேலும் கூறுகிறார். ஆதாரமற்ற இந்த இட்டுக்கட்டப்பட்ட செய்தியைத்தான் ஆதாரப்பூர்வமானது என்கிறார் ராம்ஸ்வர்ப். இவர் எடுத்து வைக்கும் ஆதாரமே பொய் என்று ஆகிவிடும்போது அதனடிப்படையில் அவர் எழுப்பிய கேள்வியும் புலமை சான்ற கேள்வி (?) என்ற நிலையிலிருந்து இறங்கிவிடுகின்றது. அல்லாத், அல் உஸ்ஸா மற்றும் மனாத் பற்றி இன்று நாம் காணுகின்ற 53:19-23 வசனங்களைத்தவிர வேறு எதுவும் அருளப்படவில்லை.இந்தக் கதை உருவாக்கப்பட்டதற்குக் காரணம் என்ன என்பதையும் அறிந்து கொள்வது இங்கே அவசியமாகும். 'அன்னஜ்மு' என்ற 53-வது அத்தியாயத்தை (அதாவது அல்லாத், அல்உஸ்ஸா, மனாத் பற்றிக் குறிப்பிடும் அத்தியாயத்தை) நபி (ஸல்) அவர்கள் ஓதியபோது ஸஜ்தா செய்தார்கள். அவர்களைத் தொடர்ந்து முஸ்லிம்களும் நபியின் எதிரிகளும் ஸஜ்தா செய்தனர்'' என்று இப்னு அப்பாஸ் (ரலி) என்ற நபித்தோழர் அறிவிக்கும் செய்தி 'புகாரி' நூலில் இடம்பெறுகின்றது. இந்த ஆதாரப்பூர்வமான செய்தியில் நபியுடன் அவரது எதிரிகளும் ஸஜ்தா செய்ததாகக் கூறப்படுகின்றது. நபியுடன் சேர்ந்து நபியின் எதிரிகள் எப்படி ஸஜ்தா செய்திருப்பார்கள்? அவர்கள் ஸஜ்தா செய்யும் அளவுக்கு நபியுடன் ஒத்துப்போனார்களென்றால், அவர்களைத் திருப்திப்படுத்தும் விதமாக நபி ஏதேனும் சொல்லி இருக்கவேண்டும். அவர்களின் தெய்வங்களைப்பற்றி புகழ்ந்து நபி ஏதேனும் சொல்லி இருந்தாலே அவர்கள் ஸஜ்தா செய்திருக்க முடியும் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே இந்தக் கதை புனையப்பட்டது.நபியின் எதிரிகள் நபியுடன் சேர்ந்து ஸஜ்தா செய்யக்காரணம் தான் என்ன? என்ற ஐயம் சிலருக்கு எழலாம். நபியின் எதிரிகள் பல்வேறு கடவுளர்களை நம்புபவர்களாக இருந்தாலும் அவைகளைக் கடவுளர்களாக எண்ணிக்கொண்டிருக்கவில்லை. இவர்களுக்கெல்லாம் மேலாக மிகப்பெரிய கடவுள் ஒருவன் இருக்கிறான். அவன்தான் ''அல்லாஹ்'' என்பதே அவர்களின் கொள்கையாக இருந்தது.வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார் என்று நபியே நீர்அவர்களைக் கேட்டால் 'அல்லாஹ்' என்று அவர்கள் கூறுவார்கள் அல்குர்ஆன் (31:25) மேலும் (29:61, 29:63, 39:38, 43:9, 43:87, 10:18, 39:3) ஆகிய வசனங்களிலும் மக்கத்து மாந்தர்கள் அல்லாஹ்வை நம்பி ஏற்றுக்கொண்டிருந்தார்கள் என்ற விபரம் கூறப்படுகிறது. அன்னஜ்மு அத்தியாயத்தில் இடம்பெறும் அல்லாத், அல்உஸ்ஸா, மனாத் பற்றிக் கூறப்படும் வசனத்தை ஓதியபோது நபிகள் ஸஜ்தா செய்யவில்லை மாறாக அந்த அத்தியாயத்தின் கடைசியில் ''அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்யுங்கள்! வணங்குங்கள்!! என்று வருகின்ற வசனத்தை ஓதும்போதுதான் நபிகள் ஸஜ்தா செய்தார்கள். அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்வது நபிகளின் எதிரிகளுக்கும் உடன்பாடு என்பதால் அவர்களும் சேர்ந்து ஸஜ்தா செய்தனர்.''ஸஜ்தா செய்யுங்கள்!'' எனக்கட்டளையிடும் வசனங்களில் முதன் முதலில் அருளப்பட்டது அன்னஜ்மு அத்தியாயத்தில் உள்ள வசனமாகும். அதற்காக நபிகள் ஸஜ்தா செய்தபோது நபிகளின் எதிரிகளும் ஸஜ்தா செய்தனர்.'' அப்துல்லா எனும் நபித்தோழர் அறிவிக்கும் இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது. இதிலிருந்து நபிகள் 53:192 வசனத்தின் போது ஸஜ்தா செய்யவில்லை, அதன் இறுதி வசனத்தின்போதே ஸஜ்தா செய்தார்கள் என்று அறியலாம். 53:192 வசனத்தின் போது ஸஜ்தா செய்தார்கள் என்று சிலர் எவ்வித ஆதாரமுமின்றி நம்பிக்கொண்டு, அதற்கு ஒரு காரணத்தையும் சிருஷ்டித்துவிட்டார்கள். அவர்களால் சிருஷ்டிக்கப்பட்ட அந்தப் பொய்யான காரணம்தான் 'ராம்ஸ்வர்ப்' எடுத்துக் காட்டும் அந்தக் கதை. ரஷ்டியும், ராம்ஸ்வர்ப்பும் எடுத்துக் காட்டிய செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல என்று ஆகிவிடும் போது அதன் அடிப்படையில் அவர்கள் எழுப்பிய கேள்விகளும் அடிபட்டு அர்த்தமற்றுப் போகின்றன.மேற்கூறிய அந்தப்பொய்யான நிகழ்ச்சியின் மூலம் ராம்ஸ்வர்ப் எழுப்பிய கேள்வி என்னவென்பதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம். ''நமக்கு ஷைத்தானிடமிருந்தும் வஹி வந்ததை ஹதீஸ் கூறுகின்றது. ஆனால் ஷைத்தான் தோற்றுவித்த உதிப்பில் இருந்து மலக்குகள் தோற்றுவித்த உதிப்பைப் பிரித்தறிவது எப்படி?'' என்பதே அந்தக் கேள்வி. நபிகளுக்கு ஷைத்தான் உதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறும் அந்தச் செய்தி பொய் என்று நிரூபணமான பின் பிரித்தறிவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இல்லாத ஒன்றைப் பிரித்தறிய வழி முறையைச் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. ராம்ஸ்வர்ப் எடுத்துக்காட்டிய அந்தச் செய்தி பொய்என்பதை ஏராளமான குர்ஆன் வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன.முஹம்மத் நம் மீது எதையாவது இட்டுக்கட்டிக் கூறி இருப்பாரானால் வலக்கரத்தால் அவரைப்பிடித்து அவரது நாடிநரம்புகளைத் துண்டித்திருப்போம். (அல் குர்ஆன் 69:44)நாமே இந்த போதனையை அருளினோம் அதை நாமே பாதுகாப்போம். (அல்குர்ஆன் 15:9)ஓதுவதற்காக அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத்திரட்டி (உம் உள்ளத்தில்) பதியச் செய்வதும், ஓதச் செய்வதும் நம்முடைய வேலையாகும். (அல்குர்ஆன் 75:16)முஹம்மது தம் இச்சைப்படி பேசமாட்டார், அது இறைவனால் அறிவிக்கப்பட்ட செய்தியைத்தவிர வேறு இல்லை. (53:3)இந்த வசனங்கள் யாவும் வேத வசனங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இறைவன் ஏற்றுக் கொண்டிருக்கிறான் என்பதைத் தெளிவாக்குகின்றன. ஷைத்தான் குறுக்கிட்டு எதையும் சேர்த்துவிட முடியாது என்று அறைகின்றன. இன்னும் தெளிவாக ''இது விரட்டப்பட்ட ஷைத்தானுடைய சொல் அன்று'' (81:25) எனவும் அல் குர்ஆன் குறிப்பிடுகிறது. இதை ஷைத்தான்கள் இறக்கியருளவில்லை, அவர்கள் அதற்கு சக்தி பெறவும்மாட்டர்கள். (26:210) ஷைத்தான்களால் உதிப்பு ஏற்படுத்தப்படும் என்பதை முற்றாக இந்த வசனங்கள் நிராகரிக்கும் போது ஆதாரமற்ற பொய்யான ஒரு செய்தியை ஆதாரப்பூர்வமானது என்று முத்திரை குத்தி 'ராம்ஸ்வர்ப்' தன் கேள்வியை எழுப்புகின்றார்.நபிகள் ஷைத்தானால் உதிப்பு ஏற்படுத்தப்பட்டார்கள் என்றதன் கூற்றுக்கு திருக்குர்ஆனின் ஒரு வசனத்தையும் துணைக்கு அழைத்திருக்கிறார். ''முஹம்மதுக்கு முன் தோன்றிய நபிமார்களும் ஷைத்தானால் உதிப்பு ஏற்படுத்தப்பட்டனர். ஆனால் இறைவன் அவற்றை முறையாக ரத்து செய்துவிட்டான் என்று குர்ஆனுடைய 22:52 வசனம் கூறுவதாக ராம்ஸ்வர்ப் கூறுகிறார். அவர் குறிப்பிட்டது. போல் குர்ஆன் கூறுமானால் ராம்ஸ்வர்ப் உடைய கேள்வி புலமை சான்ற கேள்வி என்பதில் ஐயமில்லை. ஆனால் திருக்குர்ஆன் அவ்வாறு கூறவே இல்லை. ஒரு சிலர் செய்துள்ள தவறான மொழிபெயர்ப்பை நம்பி அவர் இவ்வாறு கேள்வி எழுப்புகிறார்.அல்குர்ஆன் 22:52 வசனத்திற்கு ''எந்த ஒரு தூதரை நாம் அனுப்பினாலும் அவரது உள்ளத்தில் ஷைத்தான் உதிப்பு ஏற்படுத்தாமல் இருந்ததில்லை; ஆனால் ஷைத்தான் ஏற்படுத்திய உதிப்பை அல்லாஹ் அகற்றி தன் வசனங்களை உறுதி செய்கிறான் என்று சிலபேர் மொழியாக்கம் செய்துள்ளனர், அதுதான் ராம்ஸ்வர்ப்புடைய இந்தக் கேள்விக்குக் காரணம். உண்மையில் அந்த வசனத்தின் பொருள் என்ன? என்பதைச் சொல்வதற்கு முன்னால் ராம்ஸ்வர்ப்புக்கு ஏற்படக்கூடிய ஒரு சந்தேகத்தை நாம் நீக்கி விடுவோம். இவரைப் போன்றவர்கள். இந்த வசனத்தின் அடிப்படையில் 'புலமை சான்ற கேள்வி (?) கேட்டு விட்டதால் மொழிபெயர்ப்பு தவறு என்று நாம் சமாளிப்பதாக அவர் எண்ணக்கூடும். அவருக்கு அந்த சந்தேகம் வரதேவையில்லை. நாம் சரியான மொழிபெயர்ப்புக்கு சான்றாக இப்போதைய அகராதிகளைக் காட்டமாட்டோம். 1400 ஆண்டுகளுக்கு முன் நபித்தோழர்கள் சொன்னதையே சரியான மொழிபெயர்ப்புக்கு சான்றாகத் தருவோம். (இறைவன் நாட்டப்படி தொடரும்)
நன்றி: இதுதான் இஸ்லாம் டாட்காம்

கனவில் வராத நபி(ஸல்) அவர்கள்

ஒரு மனிதர் இறை நேசராக ஆகுவதற்குரிய அடையாளங்களில் ஒன்று நபி(ஸல்) அவர்களைக் கனவில் காண்பதாகும் என்று முஸ்லிம்களில் பலர் நினைத்துக் கொண்டிக்கிறார்கள். சில புத்தங்களில் கூட இந்தக் கருத்தை எழுதியும் வைத்துள்ளார்கள்.
ஒரு மனிதர் 'நான் நபி(ஸல்) அவர்களை கனவில் கண்டேன்' என்று கூறினால் அவரை சுற்றியுள்ளவர்களுக்கு மத்தியில் அவர்மீது மதிப்பும் மரியாதையும் அந்தஸ்தும் கூட கூடுகிறது. அவர் சொல்வதெல்லாம் மார்க்கம் என்று கூட முஸ்லிம்களில் பலர் எண்ணிக் கொள்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் மீது தங்கள் உயிரை விட அதிக மதிப்பு வைத்திருக்கும் முஸ்லிம்கள், நபி(ஸல்) அவர்களை காண முடியாததை பெரும் இழப்பாகவே கருதி வருகிறார்கள். இந் நிலையில் நபி(ஸல்) அவர்களைக் கண்ட ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதென்பது அவர்களைப் பொருத்தவரை பெரும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். இதனால் கூட நபியை கனவில் கண்டதாக கூறும் நபரின் அந்தஸ்து கூடுகிறது.
நபியை நேரில் காண்பதாலோ அல்லது கனவில் காண்பதாலோ ஒருவருக்கு மார்க்க ரீதியாக எத்தகைய பலனும் ஏற்படப் போவதில்லை. நபி(ஸல்) அவர்கள் உயிரோடு இருந்த போது நேரில் பார்த்த எத்துனையோ பேர் ஈமான் கொள்ளவில்லை. நேரில் பார்த்து ஈமான் கொண்டவர்களில் சிலர் கூட அவ்வப்போது சந்தர்ப்பவாதிகளாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டது. இதுவெல்லாம் வரலாற்று உண்மை. எனவே ஒருவர் நபியைக் காண்பதால் அவரிடம் இறைநம்பிக்கை மற்றும் கொள்கை ரீதியாக எத்தகைய முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பிரத்யேகமாக முஹம்மத்(ஸல்) அவர்களை கனவில் காண்பது பற்றி முஸ்லிம்களிடம் ஒரு உணர்ச்சிப் பூர்மான மனநிலை நீடிப்பதற்கு காரணம் கீழே இடம் பெறும் ஹதீஸ்களேயாகும்.
என்னை யார் கனவில் கண்டாரோ அவர் என்னையேக் கண்டார் என் வடிவில் ஷைத்தான் வரமாட்டான் என்பது நபிமொழி (அபூஹூரைரா(ரலி) புகாரி – முஸ்லிம் - திர்மிதி)
இந்தக் கருத்தை வலியுறுத்தி வார்த்தை மாறாமல் புகாரியில் ஏராளமான இடங்களில் இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த ஹதீஸில் என்னைக் கனவில் கண்டவர் என்னையேக் கண்டார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் 'ஒருவர் ஒரு கனவுக் காண்கிறார். அதில் ஒரு மனிதர் வருகிறார் நான் தான் முஹம்மத் இறைவனின் தூதர்' என்றுக் கூறுகிறார். சில கட்டளைகளை இடுகிறார் (மதினாவில் கனவுக் கண்டு வினியோகிக்கப்பட்ட நோட்டீஸ்கள் இதற்கு உதாரணம்) கனவில் வந்தவர் தன்னை இறைத்தூதர் என்று அறிவித்து விட்டதால் கனவுக் காண்பவர் ஏகத்துக்கும் அக மகிழ்ந்து கனவின் கட்டளையை சிரம்மேல் கொண்டு செயல்படுத்த முனைவதோடு இறைத்தூதரைக் காணும் பாக்கியம் கிடைத்து விட்டதால் தன்னை மதிப்பிற்குரியராகவும் கருதத் துவங்கி விடுகிறார்.
தனக்கு வந்த ஒரு கனவை ஆதாரமாக் கொண்டு அதன் பின்னர் மார்க்கக் காரியங்களில் மனதில் தோன்றியதையெல்லாம் செய்ய துணிந்து விடுகிறார்.இதற்காக அவர் எடுத்து வைக்கும் வாதம் 'நான் இறைத்தூதரைக் கனவில் கண்டேன். வந்தது இறைத்தூதர் தான் ஏனெனில் 'என் வடிவில் ஷெய்த்தான் வர மாட்டான்' என்று அவர்களே கூறியுள்ளதால் கனவில் வந்தது நபி(ஸல்) அவர்கள் தான்.' என்பதுதான்.
கனவில் மார்க்கக் காரியங்களோ – கட்டளைகளோ வர முடியாது என்பதை நாம் ஏற்கனவே 'வண்ண வண்ணக் கனவுகள்' கட்டுரையில் தக்க ஆதாரங்களுடனும் தகுந்த வாதங்களுடனும் விளக்கியுள்ளோம். இறைவனால் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் நபி(ஸல்) கனவில் வந்து மார்க்க விஷயங்களை அறிவிப்பதாக நம்புவது அவர்களின் தூதுத்துவப் பணிக்கே இழுக்கு என்பதை நாம் முதலில் விளங்க வேண்டும்.
அப்படியானால் கனவில் நபி(ஸல்) அவர்கள் வருகிறார்கள். சில காரியங்களைச் சொல்கிறார்கள் என்பதன் நிலவரம் தான் என்ன?முதலில் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் என்ன சொல்கிறது என்பதை விளங்குவோம்.
குறிப்பிட்ட ஹதீஸில் 'என் வடிவில் ஷெய்த்தான் வராட்டான்' என்று நபி(ஸல்) கூறுகிறார்கள். 'என் வடிவில்' என்பதில் தனது வடிவத்தை நபி(ஸல்) பிரதானப்படுத்தியுள்ளதால் அவர்களின் வடிவில் ஷெய்த்தான் வர முடியாது என்பது தான் உண்மையே தவிர வேறு வடிவத்தில் வந்து அவர்களின் பெயரைப் பயன்படுத்துவதற்கு தடையில்லை. தடுக்கப்பட்டுள்ளது முஹம்மத்(ஸல்) அவர்களின் வடிவம் தானே தவிர அவர்களின் பெயரல்ல.
கனவில் வரக் கூடிய ஷெய்த்தான், மக்கள் நபி(ஸல்) அவர்களைப் பற்றி கற்பனை செய்து வைத்துள்ள வடிவில் வந்து 'நான் தான் முஹம்மத்' என்று சொல்லுவதற்கு தங்கு தடையின்றி வாய்ப்பு உண்டு.
முஹம்மத்(ஸல்) அவர்களை கனவில் கண்டதாகக் கூறுபவர்களிடம் 'அவர்கள் எப்படி இருந்தார்கள்' என்று ஒரு கேள்வியைக் கேட்டால் அவர்கள் வர்ணிக்கும் வர்ணனைக்கும் நபி(ஸல்) அவர்களின் உருவ அமைப்புப் பற்றி வரும் அறிவிப்புகளுக்கும் கொஞ்சமும் சம்பந்தமிருக்காது.
நபி(ஸல்) கனவில் வந்தார்கள் என்பது உண்மையல்ல என்பதற்கு இதுவே போதுமான வாதம் என்றாலும் 'தன் உருவில் ஷெய்த்தான் வரமாட்டான்' என்று சொன்ன நபி(ஸல்) இது பற்றி கூடுதலாக விளக்கியுள்ளதையும் இங்கு எடுத்துக் காட்டுவோம்.
'யார் என்னைக் கனவில் கண்டாரோ அவர் விழிப்பிலும் என்னைக் காண்பார் என் வடிவில் ஷெய்த்தான் வரமாட்டான் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (அபூஹூரைரா (ரலி) புகாரி – முஸ்லிம்)
கனவில் என்னைக் காண்பவர் விழிப்பிலும் என்னைக் காண்பார் என்பது ஒரு முன்னறிவிப்பாகும்.நபி(ஸல்) அவர்களை அவர்கள் உயிரோடு இருக்கும் போது காணக் கூடிய வாய்ப்பைப் பெற்றவர்கள் அல்லது காணும் வாய்ப்பைப் பெறுபவர்கள் இவர்களுக்கான முன்னறிவிப்புதான் அது.
பொதுவாக எல்லா காலக்கட்டத்திலும் நபி(ஸல்) அவர்களைக் கணவில் காண முடியும் என்று யாராவது வாதிட்டால் 'அவர் என்னை நேரிலும் கண்பார்' என்று நபி(ஸல்) சொன்னதை அவர் பொய் படுத்தி விடுகிறார் என்ற நிலைதான் உருவாகும்.'அவர் விழிப்பிலும் (நேரிலும்) என்னைக் காண்பார்' என்ற அறிவிப்பிலிருந்து நேரில் காணும் வாய்ப்பில்லாத எவரும் நபி(ஸல்) அவர்களைக் கனவில் காண முடியாது என்பதை தெளிவாக விளங்கலாம்.
எனவே இன்றைக்கு யாரும் நபி(ஸல்) அவர்களைக் கனவில் காண முடியாது. யாராவது கனவில் கண்டதாகக் கூறினால் நபி(ஸல்) அவர்கள் பெயரைப் பயன்படுத்தி ஷெய்த்தான் அவரிடம் விளையாடியுள்ளான் என்பதை சட்டென்று புரிந்துக் கொள்ள வேண்டும். அதை அவருக்கு விளக்கவும் வேண்டும்.
நபி(ஸல்) கனவில் வந்து 'நீ இஸ்லாத்தைத் தழுவு' என்று சொல்வதெல்லாம் இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணானதாகும். இஸ்லாம் என்பது உலக மக்களுக்கென்று ஒரு கொள்கையை முன் வைத்துள்ளது. அந்தக் கொள்கைப் பற்றி விவாதிக்கச் சொல்கிறது - விளக்கம் பெறச் சொல்கிறது. அது சரி என்று விளங்கும் பட்சத்தில் அதை ஏற்று முஸ்லிமாக சொல்கிறது.
ஒருவரின் தோற்றமோ அவர் இடும் கட்டளையோ இஸ்லாத்தைத் தீர்மானிக்கும் அளவுகோளல்ல.(நபியே!) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்;. ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது. இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது. மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்;. நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். (அல் குர்ஆன் 4:113)
எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும்; (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்;. அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும் (அல் குர்ஆன் 4:115)
இந்த இரண்டு வசனங்களையும் படித்து சிந்தியுங்கள். இறை நம்பிக்கை என்பது இறை அருளால் அவன் கற்றுக் கொடுக்கும் கல்வியால் ஏற்படுவதாகும் என்பதை இந்த வசனங்கள் சுட்டிக் காட்டுகிறது.
முதலாவது வசனத்தில் 'நபியே.. நீர் அறியாமலிருந்தவற்றை அவன் கற்றுக் கொடுத்தான்' என்கிறான். இரண்டாவது வசனத்தில் 'நேர்வழி இன்னதென்று தெளிவாக தெரிந்தப் பின்னர்..' என்கிறான். நேர்வழிப் பெற வேண்டுமானால் அதன் கொள்கையைக் கற்க வேண்டும் என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.கனவில் வந்து 'இஸ்லாத்தை ஏற்றுக் கொள்' என்று கூறுவதெல்லாம் ஒரு கொள்கையை விளக்கும் முறையோ - அழகோ கிடையாது. இஸ்லாம் அதை விரும்பவும் இல்லை.
நபி(ஸல்) கனவில் வந்து கட்டளையிட்டார்கள், இஸ்லாத்தை ஏற்கும் படி கூறினார்கள் என்று எடுத்து வைக்கும் இதே வாதங்கள் கிறிஸ்த்தவர்களிடமும் இருக்கிறது. கிறிஸ்த்துவத்தை தழுவுபவர்களில் கனிசமானவர்கள் 'ஏசுவை நான் கனவில் கண்டேன். அவர் தான் என்னை கிறிஸ்த்துவத்திற்கு வரும்படி கூறினார்' என்றே கூறுகிறார்கள். இஸ்லாத்தை போதிக்க வந்த ஈஸா(அலை) (இயேசு) இஸ்லாத்திற்கு எதிரான கொள்கையின் பக்கம் யாரையும் அழைப்பார்களா.. ஆனால் அந்த மக்கள் 'கனவில் வந்தது இயேசு தான்' என்று நம்புகிறார்கள். இது போன்ற கொள்கையற்ற நம்பிக்கைகள் இஸ்லாத்தில் தனது பெயரால் வந்து விடக் கூடாது என்பதால் தான் 'என்னைக் கனவில் காண்பவர் விழிப்பிலும் என்னைக் காண்பார்' என்று முன்னறிவிப்பு செய்து வெறும் கனவை ஆதாரமாகக் கொள்ள வேண்டாம் என்பதை அறிவுறுத்திச் சென்றுள்ளார்கள். எனவே நபி(ஸல்) கனவில் வருவார்கள் என்று நம்புவது ஆதாரமற்ற வெறும் யூகமேயாகும்.

நன்றி:http://www.tamilmuslim.com/gn/kanavu-nabi.htm


இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது. அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

அதுதான் ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும். அரபுலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள். அதுவும் ஒரு மகத்தான வணக்கத்தை, மகத்தான இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகிற மன மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அங்கு வந்திருந்த அனைவரையும் துல்ஹஜ் பிறை எட்டின் நடுப்பகலுக்குப் பிறகு மக்காவிலிருந்து ‘மினா’விற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ளுஹர், அஸ்ர், மக்ரிப், இஷா, ஸுப்ஹு ஆகிய தொழுகைகளை முடித்துவிட்டு சூரிய உதயத்திற்குப் பின், தோழர்களுடன் அரஃபா நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு நமிரா பள்ளத்தாக்கில் நபியவர்களுக்காக கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சூரியன் உச்சி பொழுதைக் கடக்கும் வரை தங்கி இருந்தார்கள். அதன் பிறகு தமது ‘கஸ்வா’ ஒட்டகத்தைத் தயார் படுத்தக் கூறி, அதில் பயணித்து, ‘பத்னுல்வாதி’ எனும் பகுதிக்கு வந்தார்கள்.

அமைதி காத்த நிலையில் அந்த மக்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தபடி நிற்க, அதே இடத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி நபியவர்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் அப்போது ஆற்றிய அந்த உரையே “நபியவர்களின் இறுதிப் பேருரை” என்பதாக இன்று அறியப்படுகிறது.

கூட்டம் பிரமாண்டமாக இருந்ததால், நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு அனைவரின் செவிகளுக்கும் சென்றடைவது சாத்தியமில்லை என்ற நிலை உருவானது. எனவே, அங்கிருந்தோரிலேயே மிக உரத்த குரல் கொண்டிருந்த ரபீ இப்னு உமய்யா இப்னு கலஃபை அழைத்து, தமது பேச்சை எல்லோரும் செவியுறும் விதமாக ஒவ்வொரு வாக்கியமாய் திரும்பச் சொல்லுமாறு பணித்தார்கள். (அல் பிதாயா இப்னு கஸீர் 5/189)

தொடக்க துதி மொழிகள்
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.’ மேலும், நான் சாட்சி சொல்கிறேன்: “நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.’ (ஸுனன் இப்னு மாஜா 1892,1893)

பிரிவின் முன்னறிவிப்பு
ஒ… மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது (தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!
ஒ… மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

பிறர் உடமையைப் பேணுவீர்!
ஒ… மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும், இந்த (துல்ஹஜ் 9ம்) நாளும், இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அப்படியே உயிர்களும், உங்கள் உடமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவை.அராஜகம் செய்யாதீர்கள்!அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள். (ஸஹீஹுல் புகாரி 4403)

உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான்.

நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)

பணியாளர்களைப் பேணுவீர்!
ஒ..மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்! (தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)

மறுமைக்கு அஞ்சுவீர்!
ஓ… குரைஷிகளே! நாளை மறுமைக்கான தயாரிப்புடன் மக்கள் வரும்போது நீங்கள் உங்கள் பிடரிகளின் மீது உலகச் சுமைகளைச் சுமந்துகொண்டு வந்து விடாதீர்கள். அப்போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நான் எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்குப் பலன் அளித்திட முடியாது (மஜ்மவுஸ் ஸவாயிது 272/3)

அநீதம் அழிப்பீர்!
அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது. வட்டியை அல்லாஹ் தடைசெய்து விட்டான். எனவே, முதலில் (என் குடும்பத்தைச் சேர்ந்த) அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபின் வட்டியைச் செல்லாததாக ஆக்குகிறேன்.

அறியாமைக்கால இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இனி, பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமை எவருக்கும் இல்லை. இதில் முதலாவதாக என் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆ இப்னு அல்ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலை ரத்துச் செய்கிறேன். அறியாமைக் கால கொலை குற்றத்தில் இதை நான் முதலாவதாக தள்ளுபடி செய்கிறேன் (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)

முறைதவறி நடக்காதீர்!
அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது. (இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789)

உரிமைகளை மீறாதீர்!
ஒரு பெண் தமது கணவரின் வீட்டிலிருந்து அவரது அனுமதியின்றி எதையும் செலவு செய்யக்கூடாது. அப்போது, “உணவையுமா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “ஆம்! அதுதான் நமது செல்வங்களில் மிகச் சிறந்தது’ என்றார்கள். (ஸஹீஹுல் ஜாமிஇ1789, ஸுனன் அபூ தாவூத் 3565)

ஒ… மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)

இரவலாக வாங்கப்பட்ட பொருட்கள் உரியவரிடமே ஒப்படைக்கப் படவேண்டும்; பாலைக் கொண்டு பயன்பெற கொடுப்பட்ட கால்நடைகள் (அவற்றின் பயன்பாடு தீர்ந்தவுடன்) அவற்றின் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்; கடன்கள் நிறைவேற்றப்பட வேண்டும்; இழப்பீடுகளை நிறைவேற்ற தலைவனே பொறுப்பாளன். (ஸுனன் அபூதாவூத் 3565, ஜாமிவுத் திர்மிதி 2120, 2121, ஸுனன் இப்னு மாஜா தபகாத் இப்னு ஸஅது, தாரீக் இப்னு இஸ்ஹாக்)

பெண்களை மதிப்பீர்!
கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி அடிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)

இரண்டைப் பின்பற்றுவீர்!
மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)

எச்சரிக்கையாக இருப்பீர்!
மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! (பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)

இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும். (ஸஹீஹ்ுல் புகாரி 4402)

இறை ஏற்பாட்டை மாற்றாதீர்!
(மாதத்தின் நாட்களை தன் இஷ்டப்படி) முன் பின்னாக்குவதெல்லாம் இறை நிராகரிப்பை அதிகரிக்கும் செயலாகும். ஆதனால் நிராகரிப்பவர்கள்தான் வழிகெடுக்கப்படுகிறார்கள். எனென்றால், அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பின்னாக்கி ஒர் அண்டில் அம்மாதங்களில் போர் புரிவதை ஆகுமாக்கிக் கொள்கிறார்கள். மற்றோர் ஆண்டில் அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் செய்வதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான். (அல்குர்அன்9:37) (தாரீக் இப்னு கல்தூன் 59/2)

அறிந்து கொள்ளுங்கள்:
நிச்சயமாக காலம், வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்றிருந்த அதன் அமைப்பைப் போன்றே, இப்போதும் சுற்றிவருகின்றது. அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். இப்படித்தான் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்று, அவனது புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. மூன்று, தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், நான்காவது ஜுமாதல் உலாவிற்கும் ஷஅபானிற்கும் இடையில் உள்ள ரஜப் ஆகும். (ஸஹீஹுல் புகாரி 4662, ஸுனன் அபூதாவூத் 1942)

சகோதரம் பேணுவீர்!
ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே! ஒரு முஸ்லிமின் பொருள் பிறருக்கு அறவே ஆகுமானதல்ல; மனமுவந்து கொடுத்தாலே தவிர! உங்களுக்கு நீங்கள் அநீதம் இழைத்துக் கொள்ளாதீர்கள் (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, தாரீக் இப்னு கல்தூன் 59/2, பிக்ஹுஸ் ஸீரா 456)

சொர்க்கம் செல்ல இதுதான் வழி!
ஒ… மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!. (ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)

குற்றவாளியே தண்டிக்கபடுவார்!
ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார். (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)

இஸ்லாம் முழுமையாகி விட்டது!
ஒவ்வோரு இறைத்தூதரின் பிரார்தனையும் (இவ்வுலகிலேயே) முடிந்து விட்டன; என் பிரார்த்தனையைத் தவிர! நான் அதை மறுமை நாளுக்காக என் இறைவனிடம் சேமித்து வைத்திருக்கிறேன். அறிந்து கொள்ளுங்கள்; மறுமை நாளில் இறைத்தூதர்கள் தங்களது சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள். அப்போது என்னை நீங்கள் கேவலப்படுத்தி விடாதீர்கள். நான் உங்களுக்காக கவ்ஸர் நீர் தடாகத்திற்கு அருகில் உட்கார்ந்திருப்பேன். (மஜ்மவுஸ் ஸவாயிது 271/3)

மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. (ளிலாலுஸ் ஜன்னா 1061)

இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம். (ஸஹீஹுல் புகாரி 67,105,1741)

பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, “மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?’‘ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்” என்றார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி “இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி!” என்று முடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2334)

இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:”இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)’‘ (அல்குர்அன் 5:3) (ஸஹீஹுல் புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்)

நம்முடைய பேச்சு.....


ஏகத்துவக் கொள்கையை இகமெங்கும் பரப்பவும், அநாச்சார இருளில் மூழ்கிக் கிடப்பவர்களை வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வரவும் இணையத்தில் இனிய இஸ்லாத்தை எடுத்துரைக்கும் நமது கொள்கைச்சகோதர பதிவாகிய 'வெளிச்சம்' வலைப்பதிவில் வெளியான அருமையான கட்டுரை ஒன்றை நன்றியுடன் மீள்பதிவு செய்கிறோம்.
-----------------------------------------------------------------------------------
நம்முடைய பேச்சு.....
ஒருவனுடைய பண்புகளை அவனுடைய நடை, உடை, பாவனைகள் படம் பிடித்துக் காட்டுவதைப் போல் பல நேரங்களில் அவனது பேச்சுக்களும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவனை நல்லவனாகவும் கொடியவனாகவும் மென்மையானவனாகவும் கடுமை காட்டுபவனாகவும் பிரதிபலிக்கச் செய்யும் சக்தி அவன் பேசும் பேச்சுக்கு உண்டு.
சில வேளைகளில் நாம் விளையாட்டாக சில வார்த்தைகளைக் கூறி விடுகிறோம். நாம் கூறிய பொருளை உண்மையில் நம் உள்ளத்தில் மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ளாமல் கேலிக்காக கூறிய போதிலும் கேட்பவர் அதை விபரீதமாக விளங்கிக் கொள்கிறார்.
நாம் நல்லவராக இருந்தாலும் நம்முடைய பேச்சு நம்மைத் தீயவனாக சித்தரித்து விடுகிறது. வார்த்தையை விட்டவர் 'நான் ஒரு பேச்சிற்காகத் தான் சொன்னேன்' என்று எவ்வளவு சமாளிப்புகளைக் கூறினாலும் மனதில் பதிந்த காயம் மறையாத வடுவாகப் பதிந்து விடுகிறது.
விளையாட்டு வார்த்தைகள் பல விபரீதங்களை விதைத்து விடுகின்றன. கடுமையான வார்த்தைகள் கலகத்தை உண்டு பண்ணுகின்றன. கனிவான வார்த்தைகள் கல் நெஞ்சம் கொண்டோரையும் கனிய வைத்து விடுகிறது. இது போன்று ஏராளமான இன்பங்களும் துன்பங்களும் நம் பேச்சின் பயனாக வந்தமைகின்றன.மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் அன்றாட வாழ்வில் நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.
அல்லாஹ்வை நம்பியவன், நம்பாதவன் ஆகிய இருவரும் முறையான பேச்சின் அவசியத்தை உணர்ந்து கொள்வதற்கு இந்நிகழ்வுகளே போதுமானதாகும்.ஆனால் மனிதன் தனக்கு வழங்கப்பட்ட அறிவை முறைகேடாகப் பயன்படுத்துவான் என்பதால், ஆன்மீக ரீதியில் இஸ்லாம் அவனுக்கு இதை உணர்த்துகின்றது.
அழகிய பேச்சுகளை மட்டுமே பேசும் படி இஸ்லாம் வலியுறுத்துகின்றது. பயனில்லாத பேச்சுக்களப் பேச வேண்டாம் என்று தடை விதிக்கின்றது.நல்ல வார்த்தைகளை நவில வேண்டும்நல்ல வார்த்தைகளால் பல நன்மைகள் நிகழும்.
மனம் ஒடிந்தவரிடம் ஆறுதலான வார்த்தைகளைக் கூறுவது அவருடைய காயத்திற்குக் களிம்பு தடவியதைப் போன்று இருக்கும். வேலையில் ஈடுபட்டு பரபரப்புடன் வருபவர்களிடம் கூறப்படும் நல்ல வார்த்தை அவர்களை சீரான நிலைக்குக் கொண்டு வரும்.
தவறு செய்தவர்களிடம் நல்ல வார்த்தைகளைக் கூறினால் அவர்கள் புனிதர்களாக மாறுவதற்கு வாய்ப்பாக அமையும்.இது போன்ற ஏராளமான நன்மைகளை, நல்ல வார்த்தைகளின் மூலம் சமுதாயம் அடைகின்றது. இதனால் இஸ்லாம் நல்ல பேச்சுக்களைப் பேசும் படி ஆர்வமூட்டுகிறது.
நற்காரியங்கள் அல்லாஹ்விடம் செல்வதைப் போல் நல்ல வார்த்தைகளும் அவனிடம் செல்கின்றன.நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!அல்குர்ஆன் (33:70)
யாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். தீய காரியங்களில் சூழ்ச்சி செய்வோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி தான் அழியும்.அல்குர்ஆன் (35:10)
ஒருவன் தன்னுடைய செல்வத்தை தர்மம் செய்வதற்கு நிகரானது அவன் பேசுகின்ற நல்ல வார்த்தைகள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் தமது மூட்டுக்கள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தர்மம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதுவுவதும் தர்மமாகும். அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும். நல்ல (இனிய) சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி (2989)
நம்முடைய முக்கிய குறிக்கோளாக இருக்கின்ற சொர்க்கத்தை நாம் அடைவதற்குரிய வழிகளில் ஒன்று நல்ல பேச்சுக்களைப் பேசுவதாகும். ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கம் செல்வதற்கான வழியைக் காட்டும்படி கேட்ட போது, அழகிய முறையில் பேசும் படி அவருக்குக் கட்டளையிட்டார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! உங்களை நான் கண்டால் எனது உள்ளம் மகிழ்சியடைகிறது. எனது கண் குளிர்ச்சியடைகிறது. எனக்கு அனைத்து பொருட்களைப் பற்றியும் சொல்லுங்கள்'' என்றேன். அதற்கு அவர்கள் ''அனைத்தும் நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்கள். ''எந்த காரியத்தை நான் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எனக்கு கற்றுக் கொடுங்கள்'' என்று கூறினேன். ''சலாத்தைப் பரப்பு. நல்ல பேச்சைப் பேசு. உறவுகளை இணைத்து வாழ். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்கு. சாந்தியுடன் சொர்க்கத்தில் நுழைவாய்'' என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: அஹ்மத் (9996)
நல்ல பேச்சுக்கள் சொர்க்கத்தை மாத்திரம் பெற்றுத் தராது. கடும் வேதனையான நரக நெருப்பிலிருந்து காக்கும் கேடயமாகவும் பயன்படும். நல்ல பேச்சுக்களைப் பேசியாவது நரகத்தை விட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இனிய சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்).அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)நூல்: புகாரி (6023)
இஸ்லாம் சகுனம் பார்ப்பதைத் தடை செய்கிறது. மனிதன் துற்சகுனம் பார்ப்பதால் அவனுடைய அடுத்தக்கட்ட காரியங்களைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போடுகிறான். அவனுடைய முன்னேற்றத்திற்கு சகுனம் பார்த்தல் முட்டுக்கட்டையாக அமைகிறது.ஆனால் ஒரு நல்ல காரியத்திற்காகச் செல்லும் போது நல்ல வார்த்தையைச் செவியுற்றால் அந்தக் காரியத்தை பின் தள்ளாமல் பூரணப்படுத்துவதற்கு இந்த நல்ல வார்த்தைகள் தூண்டுகோலாக அமைகிறன.
மனிதனின் முன்னேற்றத்திற்கு அவனது ஆசையை அதிகப்படுத்தக் கூடியதாக நல்ல வார்த்தைகள் இருப்பதால் இஸ்லாம் இதை மாத்திரம் அனுமதிக்கிறது.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்'' என்று சொன்னார்கள். மக்கள், ''நற்குறி என்பதென்ன?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ''அது நீங்கள் செவியுறும் நல்ல (இனிய) சொல்லாகும்'' என்று பதிலளித்தார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).நூல்: புகாரி (5754)
தீய பேச்சுக்களைப் பொதுவாக எங்கும் பேசக்கூடாது. குறிப்பாக மக்கள் நடமாடும் இடங்களில் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது மிக மோசமான செயலாகும். ஆனால் இந்த ஒழுக்கத்திற்கு மாற்றமாக பொது வீதிகளில் சண்டைத் தகராறுகள் ஏற்படும் போது கேட்பதற்குக் காது கூசுகின்ற அளவிற்குப் பயங்கரமான வார்த்தைகள் வீசி எறியப்படுகின்றன.சந்தோஷத்திற்காக தெருக்களில் கூடியிருக்கும் இளைஞர்களிடத்திலும் இது போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் உண்டு. இதனால் பாதிக்கப்படுவது பொது மக்கள் தான். இதைக் கருத்தில் கொண்டு தெருக்களில் அமர்ந்திருப்போர் நல்லதையே பேச வேண்டும். இல்லாவிட்டால் அமரக்கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.
நாங்கள் வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ''பாதையில் அமைந்துள்ள இடங்களில் என்ன செய்கிறீர்கள்? பாதையோரங்களில் அமைந்துள்ள இடங்களில் (அமர்வதை விட்டும்) தவிர்ந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். ''தவறு செய்வதற்காக நாங்கள் உட்காரவில்லை. பேசிக் கொண்டும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டும் அமர்ந்துள்ளோம்'' என்று கூறினோம். அதற்கு அவர்கள், ''அப்படியானால் அதற்குரிய உரிமையைக் கொடுத்து விடுங்கள். பார்வையைத் தாழ்த்துவதும் சலாமிற்குப் பதிலுரைப்பதும் அழகிய முறையில் பேசுவதும் (அதற்குரிய உரிமையாகும்)'' என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூதல்ஹா (ரலி)நூல்: முஸ்லிம் (4020)
பிறரை சந்தோஷப்படுத்தும் பேச்சுக்கள் நல்லவையே!நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும் என்பதால் மார்க்கம் சம்பந்தமான விஷயங்களைத் தவிர வேறு எதையும் பேசக் கூடாது என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. பிறரை சந்தோஷப்படுத்தி, நாமும் மகிழ்வதற்காக நகைச்சுவையுடன் பேசுவது குற்றமல்ல. நமது வார்த்தையால் பிறர் புண்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.பிறரது மகிழ்சிக்கு நம்முடைய சொற்கள் காரணமாக இருப்பதால் அதுவும் நல்ல வார்த்தைகளின் பட்டியலுக்குள் வந்து விடும். நபி (ஸல்) அவர்களின் முன்பாக நபித்தோழர்கள் சிரித்து மகிழ்ந்து பேசியுள்ளார்கள். பெருமானாரை மகிழ்விப்பதற்காகவே ஒருவர் பிரத்யேகமாக இருந்துள்ளார்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்றொருவர் இருந்தார். அவர் ஹிமார் (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சிரிக்க வைப்பார்.அறிவிப்பவர்: உமர் (ரலி)நூல்: புகாரி (6780)
நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், ''நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருந்தீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''ஆம்! அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்'' என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: சிமாக் பின் ஹர்ப்நூல்: முஸ்லிம் (118)
யாகாவாராயினும் நாகாக்க!நாவைப் பாதுகாப்பதை ஒரு முக்கியமான அம்சமாக இஸ்லாம் கருதுகிறது. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் தனக்கு இரத்தினச் சுருக்கமாக மிக அவசியமான போதனையைக் கூறும்படி கேட்கிறார். நபி (ஸல்) அவர்கள் நாவைப் பாதுகாத்துக் கொள்வதையும் முக்கிய போதனையாக அவருக்குச் சொன்னார்கள்.ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ''உங்களுக்குப் பிறகு (வேறு யாரிடமும் விளக்கம்) நான் கேட்காத அளவிற்கு இஸ்லாத்திலே ஒரு விஷயத்தை எனக்கு சொல்லுங்கள்'' என்று கேட்டார். ''அல்லாஹ்வை நம்புகிறேன் என்று கூறி (அதில்) நிலைத்து நில்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! நான் எதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தமது கையால் நாவை சுட்டிக் காட்டினார்கள்.அறிவிப்பவர்: சுஃப்யான் பின் அப்தில்லாஹ் (ரலி)நூல்: அஹ்மத் (14870)
தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம்
தேவையற்ற பேச்சுக்கள் பிரிவினையை உண்டு பண்ணுவதால் அது போன்று பேசாமல் நல்ல விஷயங்களைப் பேசுமாறும் வீணானதை விட்டும் தவிர்ந்து கொள்ளும் படியும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
(முஹம்மதே!) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.அல்குர்ஆன் (17:53)
வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். ''எங்கள் செயல்கள் எங்களுக்கு! உங்கள் செயல்கள் உங்களுக்கு! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்'' எனவும் கூறுகின்றனர்.அல்குர்ஆன் (28:55)
வீணானதைப் புறக்கணிப்பார்கள்.
அல்குர்ஆன் (23:3)அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள்.அல்குர்ஆன் (25:72)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி (6018)நாம் நல்ல வார்த்தைகளை மட்டுமே மொழிய வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள். அஹ்மதில் இடம்பெற்றுள்ள இன்னொரு அறிவிப்பில், 'நல்லதையே பேசட்டும்' என்ற கட்டளைக்கு முன்பாக 'அல்லாஹ்வைப் பயந்து கொள்ளட்டும்' என்ற கட்டளையும் சேர்ந்து வருகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்போர் அல்லாஹ்வைப் பயந்து தனது அண்டை வீட்டாரிடத்தில் கண்ணியமாக நடந்து கொள்ளட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்பவர் அல்லாஹ்வைப் பயந்து தனது விருந்தினரை கண்ணியமாக நடத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்பவர் அல்லாஹ்வைப் பயந்து நல்லதைûயே சொல்லட்டும். அல்லது அமைதியாக இருக்கட்டும்.அறிவிப்பவர்: சில நபித்தோழர்கள்நூல்: அஹ்மத் (19403)
பொது இடங்களில் மூன்று குரங்குகளை நாம் கண்டிருப்போம். அதில் ஒன்று தீயவற்றைக் கேட்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வண்ணம் தன் காதைப் பொத்திக் கொண்டிருக்கும். மற்றொன்று தீயவற்றைப் பார்க்கக் கூடாது என்பதை எடுத்துரைப்பதற்காக கண்ணை மூடிக் கொண்டிருக்கும். மற்றொன்று தீயவற்றைப் பேசக் கூடாது என்பதற்காக வாயை மூடிக் கொண்டிருக்கும்.இந்த ஓவியத்தை ஏற்பாடு செய்தவர்கள் வலியுறுத்த வரும் செய்தியை ஒரு படி மேல் சென்று இஸ்லாம் எடுத்துரைக்கிறது. தீமையைப் பேசுவதை மட்டும் தடுக்காமல் தேவையில்லாத, பலனில்லாத பேச்சுக்களையும் பேச வேண்டாம் என்கிறது.ஏனென்றால் ஒன்றுக்கும் உதவாத பேச்சுக்கள் தீமையாக உருவெடுத்து விடுகின்றன என்பதே இதற்குக் காரணம்.
நம்மால் முடிந்த அளவு பிறருக்கு நன்மையை செய்ய வேண்டும். இயலாவிட்டால் தம் வார்த்தைகளால் பிறரை துன்புறுத்தாமலாவது இருக்க வேண்டும்.சிலருடைய பேச்சுக்கள் நம்மைத் தாக்கி அமையாது. என்றாலும் அவர்கள் சம்பந்தமில்லாத பல தகவல்களை பேசிக் கொண்டே இருந்தால் கேட்பவருக்கு அவரது பேச்சு எரிச்சலூட்டும். தன் குடும்ப விஷயங்களைப் பிறரிடத்தில் அடிக்கடி கூறுவதும் அவர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணும்.அதுமட்டுமல்லாமல் பேச்சில் அதிகமானது கழிக்கப்பட வேண்டியவையாக இருந்தால் அவர் கூறும் நல்ல கருத்துக்கள் கூட எடுபடாமல் போய்விடும். அவர் பேசும் எதையும் பொருட்டாக யாரும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள், நன்மையைத் தவிர வேறெதையும் பேசாதே! என்று கட்டளையிட்டார்கள்.
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கத்தில் என்னைக் கொண்டு சேர்க்கும் நற்காரியத்தை கற்றுக் கொடுங்கள்'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (சில விஷயங்களைக் கூறி விட்டு) ''உன்னால் இதற்கு முடியாவிட்டால் பசித்தவனுக்கு உணவு கொடு! தாகித்தவனுக்கு நீர்புகட்டு! நல்லதை ஏவி தீமையைத் தடு! இதற்கும் உன்னால் முடியாவிட்டால் உனது நாவை நல்லவற்றிலிருந்தே தவிர (மற்றவற்றிலிருந்து) பாதுகாத்துக் கொள்'' என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: அல்பர்ரா பின் ஆசிப் (ரலி)நூல்: அஹ்மத் (17902)
நன்றி: வெளிச்சம் http://velicham2006.blogspot.com/2008/02/blog-post_14.html#links