நல்ல(!) நேரம்

நல்ல(!) நேரம் print Email
நற்சிந்தனைகள் - வாழ்வியல்
திங்கள், 25 ஜனவரி 2010 13:47

நல்ல/கெட்ட நேரம் இல்லைமூடநம்பிக்கை என்பது எப்போது தோன்றியது என்று சரியாகத் தெரியவில்லை. ஏதேனும் ஒரு காரியம் தனக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமைந்திட, அல்லது நல்லதாகவோ தீயதாகவோ அமைந்திடக் காரணமாக குறிப்பிட்ட சில நாட்கள், நேரங்கள், விஷயங்கள், செயல்கள், அனுஷ்டானங்கள், பொருள்கள், உயிரினங்கள், போன்றவைதாம் காரணிகள் என்று மனிதன் நம்புவதற்குப் பெயர் மூடநம்பிக்கையாகும்.

உதாரணத்திற்கு ஒரு பூனை குறுக்கே செல்வதால் தனக்கு ஏதாவது கெடுதி ஏற்படும் என்று நம்புவது; அல்லது தான் நாடிய/நடக்கவிருந்த நல்ல காரியம் நடைபெறாமல் போகக்கூடும் என்ற ஒரு சஞ்சலம், அல்லது ஒரு ஆந்தை அலறுவதால் ஒரு கெட்ட காரியம் நிகழும் அல்லது மரணம் நடைபெறும் என்று கருதுவது ஆகிய இவை காலங்காலமாக மனிதனிடம் காணப்படும் மூடநம்பிக்கையாகும்.

ஒருவர் தும்மினால் நல்லது நடக்கும் அல்லது நடக்காது என்று நம்புவது; வீட்டை விட்டு வெளியே போகும்போது எதிரில் விதவைகள்/குருடர்களைக் கண்டால் தனது காரியம் கெட்டு விடும் என்று கருதுவது; தனக்குப் பாதகமாக ஏதேனும் நிகழ்ந்தால், "காலையில் யார் முகத்தில் விழித்தோனோ?" என்று கருதி அந்த முகத்தை இணைத்து சம்பந்தப்படுத்துவது போன்றவையும் மூடநம்பிக்கையே.

இதேபோல்தான் ஒரு பொருளை, ஒரு நிறத்தை, ஒரு எண்ணை, ஒரு நாளை அல்லது நேரத்தை நல்லதாகவோ தீயதாகவோ மனிதன் கருதுவது இன்றைய நவீனகாலத்திலும் அன்றாட நிகழ்வுகளாகக் காண முடிகிறது. 13 என்ற எண் தீமை பயப்பது என்பதாகக் கருதி அதைத் தமது இல்லங்களுக்கோ வாகனங்களுக்கோ அல்லது உடமைகளுக்கோ தவிர்த்துக் கொள்ளக்கூடிய மக்களை இன்றும் மேற்குலகில் பரவலாகக் காணமுடிகிறது. சில முன்னேற்றமடைந்த நாடுகளிலும் வீட்டு எண்ணிக்கையில் 13ஐத் தவிர்ப்பதும், மாடிக் கட்டடங்களிலும் 12ஆவது மாடியை அடுத்து 13ஐத் தவிர்த்து அடுத்த எண்ணான 14ஐத் தருவது போன்றவையும் மூடநம்பிக்கையாகும்.

அதேபோல் ஒரு சில எண்களை/பொருள்களை அதிர்ஷ்டமானதாகக் கருதி அந்த எண்களை/பொருட்களைத் தேடி அதிக விலைகொடுத்துப் பெறுதலும் அந்த எண்/பொருள் தனக்கு அதிகமான இலாபத்தை அல்லது பாதுகாப்பை வழங்கிடும் என்று கருதும் மூடநம்பிக்கையும் நடப்பில் உள்ளது.

அறிவியல், கல்வி, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் என்று எல்லாவிதத்திலும் வளர்ச்சியின் உச்சியில் இருப்பதாகக் கருதப்படும் தற்போதய காலத்திலும் இந்த மூடநம்பிக்கை எனும் நோய் முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை என்பதே யதார்த்தம்.

இதுபோன்ற மூடநம்பிக்கைகளைக் கல்வியறிவில் பின்தங்கியவர்கள் முதல் ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர் நன்கு படித்த இளைஞர்கள் முதியவர்கள் என்ற அனைவர்களிடமும், பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் அறிவுஜீவிகள் முதல் ஆன்மீகவாதிகளிலும் பரவலாகக் காணமுடிகிறது. சிலர் இதற்கு மதச் சாயம் பூசிடுவதும் அதன் மூலம் இதைச் சரிகாணுவதும் இம்மடமையை ஆதரிக்கும் சிலருடைய துணையுடன் இதைத் தொடர்ந்து நிலை நாட்டிவருவதும் சுய இலாப நோக்கில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற ஒரு துர்ப்பாக்கியமான காரியம் ஆகும்.

ஒரு நாள் என்பது நல்லநாள் அல்லது கெட்டநாளாக; ஒரு நேரம் என்பது நல்லநேரம் அல்லது கெட்டநேரமாக எப்படி அமையும்? ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரு சிலருக்கு நல்லதும் மற்றவர்களுக்குத் தீயதும் இழப்புகளும் ஏற்படத்தான் செய்கின்றன என்பதை எவரும் மறுத்திட இயலாது.

உதாரணத்திற்கு ஒரே நேரத்தில் பிறப்புகளும் இறப்புகளும் இவ்வுலகத்தில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சிலர் நோயுறுவதும் நிலர் நிவாரணம் பெறுவதும், சிலர் கல்வியில் தேர்ச்சி பெறுவதும் சிலர் தோல்வியுறுவதும், சமுதாயத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகள் ஆகும். அதே போல் ஒரே நேரத்தில் எதிரெதிர் அணியில் போட்டியிடும் இரு அணிகளில் ஒன்று வெல்வதும் ஒன்று தோல்வியுறுவதும் இயல்பானதும் தவிர்க்க இயலாத ஒன்றுமாகும்.

இன்னும் குறிப்பிட்ட ஒருநேரத்தில் ஒரே வீட்டில் திருமணம் அல்லது பிறப்பு போன்றதும் அதே வீட்டில் அதே குறிப்பிட்ட நேரத்தில் இறப்புகளும் ஏற்படுவதையும் காண்கிறோம். குழந்தை பிறக்கும்போது மரணித்த தாயும், தாய் இருக்க மரணித்த குழந்தையும் பிறந்த இரு குழந்தைகளுள் ஒன்று மரணித்தும் மற்றொன்று உயிருடனும் இருக்கவும் காண்கிறோம். மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் சில பிறப்புகள் சில இறப்புகள் போன்ற எண்ணற்ற நேர்மறை எதிர்மறையான நிகழ்வுகள் என்பதெல்லாம் ஒரே நேரத்தில் நடந்து, "நேரம் என்பதில் நல்லதோ கெட்டதோ இல்லை" என்பதைத் தெளிவாகப் பறைசாற்றுகின்றன,

மேலும் வாசிக்க


ஜின்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்ன?
RASMIN M.I.Sc

அன்பின் இணையதள வாசகர்களே! ஜின்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்ன? என்ற இந்தத் தலைப்பின் மூலம் நாம் உங்கள் மத்தியில் பகிர இருக்கும் விஷயம் என்னவெனில்,நமக்கு மத்தியில் ஏகத்துவப் பிரச்சாரம் செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் சிலர் கண்ணுக்குப் புலப்படாத இறைவனின் படைப்புகளில் ஒன்றான இந்த ஜின் விஷயத்தில் மிகவும் பாரதூரமான, மார்க்கத்திற்கு முரனான, சிந்தனைக்கு சிறிதளவும் தொடர்பில்லாத பல விஷயங்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள்.

ஜின்களைப் பற்றி பேசுவவர்களும், இணைய தளங்களில் எழுதுபவர்களும் ஜின்கள் பற்றிய உண்மைக் கருத்துக்களை திருமறைக் குர்ஆன்,மற்றும் நபியவர்களின் சுன்னா வழியில் எடுத்துச் சொன்னால் பிரச்சினை இல்லை.ஆனால் சிலரோ நபியவர்களின் சுன்னாவின் கருத்தை தங்கள் கருத்துக்கு சாதகமான வலைத்து,திருப்பி வைத்துக் கொண்டு ஜின்களை வசப்படுத்த முடியும்,ஜின்கள் நமது உடலுக்குள் புகுந்து பிரச்சினைகளை,சிக்கள்களை உண்டாக்கும் வல்லமை மிக்கவை போன்ற குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமான,ஏகத்துவத்தை குழி தோன்டிப் புதைக்கின்ற கருத்துக்களை பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அவர்கள் பிரச்சாரம் செய்யும் கருத்துக்களின் உண்மை நிலையைப் பற்றி ஆராய்வதுடன்,குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் ஜின்கள் பற்றிய ஒரு தெளிவை தருவதற்காகவே இந்தத் தொடர் இங்கு பதிப்பிக்கப் படுகிறது.

இனி ஜின்களைப் பற்றிய நிலைப்பாட்டை ஆராய்வோம்.

ஜின் என்ற வார்த்தையின் விளக்கம்.

ஜின்கள் என்பவர்கள் மனிதனைப் போல் பகுத்தறிவு வழங்கப்பட்ட ஒரு உயிரினமாகும்.மனிதர்களுக்கு இருப்பதைப் போன்ற மார்க்க வரம்புகள்,கடப்பாடுகள் ஜின்களுக்கும் இருக்கிறது.

ஜின் (அல்ஜின்னு) என்ற வார்த்தை திருமறைக் குர்ஆனில் நபியவர்களின் ஹதீஸ்களிலும் பரவலாக பயண்படுத்தப் பட்டுள்ள ஒரு வார்த்தையாகும்.

ஜன்ன என்ற வினைச் சொல்லிலிருந்து ஜின் என்ற வார்த்தை பிரிந்து வந்துள்ளது. மறைத்தல் மறைதல் என்பது இதன் நேரடிப் பொருளாகும். திருமறைக் குர்ஆனில் ஜன்ன என்ற வார்த்தை மூடுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ (6:76)

இரவு அவரை மூடிக் கொண்ட போது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு "இதுவே என் இறைவன்'' எனக் கூறினார். அது மறைந்த போது "மறைபவற்றை நான் விரும்ப மாட்டேன்'' என்றார்.
அல்குர்ஆன் (6 : 76)

எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து தன்னை மறைத்துக் கொள்வதற்கு கேடயம் உதவுவதால் கேடயத்திற்கு ஜுன்னத் என்று சொல்லப்படுகிறது. தாயின் வயிற்றில் உள்ளக் குழந்தை மறைவாக இருப்பதால் அதற்கு ஜனீன் என்று கூறப்படுகிறது.

பாம்புகள் மனிதக் கண்களை விட்டு விரைவில் மறைந்துவிடுவதால் பாம்புகளுக்கு ஜான் என்று கூறப்படுகிறது. ஜின்கள் மனிதக்கண்களுக்கு புலப்படாமல் மறைந்து இருப்பதால் இதற்கு ஜின் என்று கூறப்படுகிறது.
நூல் : லிஸானுல் அரப் பாகம் : 13 பக்கம் : 92

நாம் நம்பிக்கை கொள்ள வேண்டிய ஒரு படைப்பு.

ஜின் என்றொரு இனம் இருப்பதாக திருமறைக் குர்ஆனும்,ஹதீஸ்களும் நமக்குத் தெளிவாக விளக்குகின்றன.அதனால் அந்த குறிப்பிட்ட இனத்தைப் பற்றிய இஸ்லாமியக் கருத்துக்களை நாம் நம்ப வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு கற்றுத் தருகிறது.

وَالْجَانَّ خَلَقْنَاهُ مِنْ قَبْلُ مِنْ نَارِ السَّمُومِ (27) وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ (15:27)

சேற்றிலிருந்த கருப்புக் களிமண்ணால் வடிவமைக்கப்பட்டு மனிதனைப் படைத்தோம். கடுமையான வெப்பமுடைய நெருப்பால் இதற்கு முன் ஜின்னைப் படைத்தோம்.
அல்குர்ஆன்(15 : 27)

وَخَلَقَ الْجَانَّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ(55:15)

தீப்பிழம்பிலிருந்து ஜின்னைப் படைத்தான்.
அல்குர்ஆன் (55 : 15)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். "ஜின்'கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர். (ஆதி மனிதர்) ஆதம்இ உங்களுக்கு (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளதைப் போன்று (களிமண்ணால்) படைக்கப்பட்டார்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (5722)

ஜின்களில் ஆண்,பெண்கள் இருக்கிறார்கள்.

மனிதர்களில் எப்படி ஆண்கள்,பெண்கள் என்ற இரு இணத்தவர்கள் இருக்கிறார்களோ அதே போல ஜின்களிலும் ஆண்,பெண் என்ற இரு இணத்தவர்கள் இருக்கிறார்கள் என்று மார்க்கம் நமக்குத் தெரிவிக்கிறது.

وَأَنَّهُ كَانَ رِجَالٌ مِنَ الْإِنْسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِنَ الْجِنِّ فَزَادُوهُمْ رَهَقًا (72:6)
மனிதர்களில் உள்ள ஆண்களில் சிலர் ஜின்களில் உள்ள சில ஆண்களைக் கொண்டு பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தனர். எனவே இவர்களுக்கு கர்வத்தை அவர்கள் அதிகமாக்கி விட்டனர்.
அல்குர்ஆன் (72 : 6)

ஷைத்தான்கள் ஜின் இனத்தைச் சார்ந்தவர்களாவர். ஷைத்தான்களில் ஆண் பெண் இனம் இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஜின்களில் இவ்விரு இனம் இருப்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும்போது இறைவா! (அருவருக்கத்தக்க செயல்கள் இழிவான எண்ணங்கள் ஆகியற்றைத் தூண்டும்) ஆண் பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (142) தொடர்ந்து வாசிக்க

TNTJ அல் சஹ்னா கிளை மாதாந்திரக்கூட்டம்



அல்லாஹ்வின் பேரருளால் TNTJஅல்சஹ்னா கிளையின் மாதாந்திரக் கூட்டம் கடந்த 14-01-2011 வெள்ளியன்று பிற்பகல் 1 மணிக்கு அலசஹ்னாவில் நடை பெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவைக்கும் இடையில் கடந்த இரண்டு (2010-10-23.24) நாட்களாக சென்னை டி நகர் தியாகராஜர் மண்டபத்தில் வைத்து பகிரங்க விவாதம் நடந்தது.


இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களும் சுன்னத் ஜமாத் ஐ.பேரவை சார்பாக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும்  கலந்து கொண்டு விவாதித்தார்கள்.

சுன்னத் ஜமாத் ஐ.பேரவையின் நிலைபாடு:

சகோதரர் பி.ஜெயின் திருக்குர்ஆன் மொழியாக்கத்திலும் தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடுகளிலும் பேச்சுக்களிலும் அசிங்கங்களும் குர்ஆன் ஹதீஸிற்க்கு மாற்றமான கருத்துக்களும் இருக்கின்றன.

தவ்ஹீத் ஜமாத்தின் நிலைபாடு:

சகோதரர் பி.ஜெயின் திருக்குர்ஆன் மொழியாக்கத்திலும் தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடுகளிலும் பேச்சுக்களிலும் எந்தவொரு அசிங்கங்களோ குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமான கருத்துக்களோ இல்லையென்பதும்.ஷேக் அப்துல்லாஹ் மற்றும் அவரால் ஒப்புக் கொள்ளப் பட்டவர்களின் பேச்சுக்கள் எழுத்துக்கள் தப்ஸீர்கள் ஆகியவற்றில் தான் குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமான கருத்துக்களும் கயமைகளும் பொய்களும் ஆபாசங்களும் நிறைந்துள்ளன.

விவாதத்தின் ஆரம்பமும் அரண்டு போன ஜமாலியும்

விவாதம் ஆரம்பிப்பதற்காக இரு தரப்பு நடுவர்கள் சார்பாகவும் நாணயச் சுழற்சி மேற் கொள்ளப்பட்டது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தவ்ஹீத் ஜமாத் தரப்பால் சகோதரர் பி.ஜெ தனது வாதத்தை ஆரம்பித்தார்.

பொய்களின் மொத்த உருவம் ஜமாலி

விவாதத்தின் ஒப்பந்தப்படி ஜமாலியினதும் அவரால் ஒப்புக் கொள்ளப் பட்டவர்களினதும் ஆபாசமான அசிங்கமான முன்னுக்குப் பின் முரனான கருத்துக்களை சகோதரர் பி.ஜெ பட்டியலிட ஆரம்பித்தார்.

முதலாவதாக அபூதாலிப் முஸ்லிம் என்று ஓரிடத்திலும் இன்னோரிடத்தில் அபூதாலிம் காபிர் என்றும் ஜமாலி பேசிய இரண்டு வீடியோ ஆதாரங்களை திரையில் போட்டுக் காட்டினார் சகோதரரர் பி.ஜெ அவர்கள்.

இடத்திற்கு தகுந்தால் போல் பேசுவதில் இவர் வல்லவர் என்பதற்கு எடுத்துக் காட்டப்பட்ட இந்த வீடியோவில் அபூதாலிப் முஸ்லிம் என்பதற்கு இப்னு அஸாகீர் நஸயீ அபூதாவுத் ஆகிய கிரந்தங்களில் இருந்து ஒரு ஹதீஸை எடுத்துக் காட்டி அதன் ஒரு பகுதியை சொல்லி மறு பகுதியை மறைத்திருந்தார்.

அந்த ஹதீஸின் இரண்டாம் பகுதியே அபூதாலிப் அவர்கள் காபிர் தான் என்பதற்கு சான்றாக இருந்தது. மீதியை ஏன் மறைத்தீர்கள் மக்கள் மத்தியில் ஏன் இப்படி பொய்களையும் புரட்டுகளையும் பரப்புகிறீர்கள் என்று விவாதத்தின் இறுதிவரைக் கேட்டும் இந்தக் கேள்விக்கு ஜமாலி பதிலே தரவில்லை.

முதல் வாதத்திலேயே உளற ஆரம்பித்த ஜமாலி

பி.ஜெவின் திருக்குர்ஆன் மொழியாக்கத்திலும் தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடுகளிலும் ஆபாசங்கள் அசிங்கங்கள் இருக்கிறது என்று வாதிட வந்த ஜமாலி அவர்கள்.முதல் வாதத்திலேயே தலைப்பிற்கு கொஞ்சம் கூட சம்பந்தமின்றி பேச ஆரம்பித்தார்.

பி.ஜெ ஆண்கள் தொடையை மறைக்க வேண்டும் என்று கூறினார்.தற்போது ஆண்கள் தொடையை திறந்து கொள்ள அனுமதியுண்டு என்று கூறுகிறார் இது அவர்களது வெளியீடுகளில் உள்ள அபத்தம் என்று முதல் வாதத்தையும் கலாலா தொடர்பாக சகோதரர் பி.ஜெ அவர்களின் திருக்குர் ஆன் மொழியாக்கத்தில் 4வது அத்தியாயம் 12வது வசனத்திற்கு கொடுத்த விளக்கத்தினை அரைகுறையாக வாசித்துவிட்டு அதில் தவறு உண்டு என்று தனது இரண்டாவது வாதத்தையும் முன்வைத்தார்.

முரண்பாடு என்றால் என்னவென்று ஜமாலிக்கு பாடம் நடத்திய பி.ஜெ

விவாதம் ஆரம்பித்த அடுத்த கணமே உளறுவதற்கும் ஆரம்பித்தார் ஜமாலி இருந்தாலும் அவருடைய உளறளுக்கும் விவாதம் என்பதால் பதில் கொடுக்க வேண்டியது பி.ஜெயின் கடமை என்பதால் முதலில் முரண்பாடு என்றால் என்ன என்று விளக்கம் சொன்னார்.

ஒருவர் ஆரம்பத்தில் ஒரு கருத்தை சொல்லிவிட்டு பிறகு தான் சொன்ன கருத்து தவறு தற்போது திருத்திக் கொண்டு இந்தக் கருத்துக்கு வந்துவிட்டேன் என்று அறிவித்து விட்டு முதலாவது கூறிய கருத்துக்கு மாற்றமாக சொன்னால் அதற்குப் பெயர் முரண்பாடு அல்ல திருத்தம் என்பதை கிளிப்பிள்ளைக்குச் சொல்வதைப் போல் பாடமாக நடத்திக் காட்டினார் சகோதரர் பி.ஜெ அவர்கள்.

இதே நேரம் ஜமாலியைப் போல் ஒரு மேடையில் ஒரு கருத்தையும் இன்னொரு மேடையில் அதற்கு மாற்றமாக இன்னொரு கருத்தையும் சொல்லிவிட்டு மக்கள் மத்தியில் ஒரு கொள்கையற்றவனாக தன்னை காட்டிக் கொள்வதென்பது மூடத்தனம் கயமைத்தனம் பித்தலாட்டம் முரண்பாடு என்பதையும் மிக அழகாக விளக்கிச் சொன்னார்.

கிழித்தெறியப்பட்ட மத்ஹபு குப்பைகளும் மாட்டிக் கொண்ட ஜமாலியும்

ஜமாலியுடையவும் அவர் ஆதரிப்பவர்களினதும் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் இருக்கும் முரண்பாடுகளையும் ஆபாசங்களையும் கயமைத்தனங்களையும் பட்டியலிட ஆரம்பித்தார் பி.ஜெ

ஆனால் சகோதரர் பி.ஜெ அவர்கள் பட்டியலிட்ட ஒரு கேள்விக்குக் கூட ஜமாலியினால் இறுதி வரை பதில் தரவே முடியவில்லை.

மத்ஹபுகளில் மலிந்திருந்த அசிங்கங்கள்

ஹனபி மற்றும் ஷாபி போன்ற மத்ஹபுகளில் ஒரு சாதாரண மனிதன் கூட நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு ஆபாசங்களும் அபத்தங்களும் கயமைகளும் நிறைந்துள்ளதை சகோதரர் பி.ஜெ அவர்கள் பட்டியலிட்டு சொன்னார்.

சகோதரர் பி.ஜெ பட்டியலிட்ட மத்ஹபு அசிங்கங்களை தலைப்புவாரியாக இங்கு குறிப்பிடுகிறோம்.

1.தானாக காற்றை விட்டு தொழுகைகளை முடிக்கலாம்.
2.கிழக்கிலிருக்கும் ஒருவரும் மேற்கில் இருக்கும் இன்னொருவரும் திருமணம் முடிக்கலாம்.அப்படி முடித்து ஆறு மாதத்தில் மனைவி பிள்ளை பெற்றால் அதனை குறை சொல்ல முடியாது ஏனெனில் கராமத்தின் மூலம் அவன் அவளிடத்தில் வந்து போயிருக்கக் கூடும்.
3.ஹஜ்ஜுடைய நேரத்தில் மனைவி தவிர யாரோடு வேண்டுமானாலும் உடலுறவு கொண்டாலும் ஹஜ் முறியாது.
4.ஹஜ்ஜுடைய காலத்தில் கழுதையுடன் புணர்வது பெண்ணின் ஹஜ்ஜை முறிக்கும் ஆணின் ஹஜ்ஜை முறிக்காது.
5.சிறுமியுடன் விபச்சாரம் செய்தால் தண்டனையில்லை.(மத்ஹபு நூல்கள் அதற்காக சொல்லும் காரணங்களை விவாதத்தில் பார்த்துக் கொள்ளவும்.)
6.ஊமைப் பெண்ணுடன் விபச்சாரம் செய்தால் தண்டனை இல்லை
7.விபச்சாரம் செய்துவிட்டு பணம் கொடுத்துவிட்டால் அதற்கு தண்டனை இல்லை.
8.பைத்தியத்துடன் விபச்சாரம் செய்தால் தண்டனை கிடையாது.
9.வெளிநாட்டுக் காபிர் உள்நாட்டு முஸ்லிம் பெண்ணுடன் விபச்சாரம் செய்தால் காபிருக்கு தண்டனை கிடையாது.
10.ஒரு பெண்ணை கண்ணியா இல்லையா என்று கண்டுபிடிக்க அவளை சுவற்றில் சிறு நீர் கழிக்கச் செய்ய வேண்டும்.அது சுவற்றில் படுகிறதா? இல்லையா? என்பதை வைத்து அவள் கண்ணியா? இல்லையா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.என்ற கேவலமான வழிமுறைகள்.
11.விபச்சாரம் செய்து மாட்டிக் கொண்டவன் விபச்சாரியை மனைவி என்று சொல்லிவிட்டால் தண்டனை இல்லை.
12.தனது மர்ம உருப்பை தன்னுடைய பின் துவாரத்தில் நுழைத்தால் அவனுக்கு சட்டம் என்ன? என்று அதற்கு சட்டம் தொகுத்துள்ள மத்ஹபுவாதிகள்.
13.தான் திருமணம் செய்த மனைவியுடன் இரவில் உணர்ச்சியுடன் நெருங்கும் போது அவளுடைய மகளின் மீது தவறுதலாக கை பட்டுவிட்டால் மனைவிக்கும் கணவனுக்கும் உள்ள திருமன உறவு நீங்கிவிடும்.
14.இரண்டு பேர் திருடச் சென்று ஒருவன் உள்ளே சென்று திருடிவிட்டு வெளியிலிருப்பவனுக்கு அதனை கொடுத்தால் இருவருக்கும் தண்டனை இல்லை.(உள்ளே போனவன் திருடியதை வெளியில் கொண்டுவரவில்லை வெளியில் இருந்தவன் உள்ளே போய் திருடவில்லை இதுதான் மத்ஹபின் விளக்கமாம்.)
15.தூங்கி எழுந்ததும் பல் துலக்கும் போது முதலாவது வரும் எச்சிலை விழுங்கிவிட வேண்டும்.
16.ஹஜ்ஜின் போது சுய இன்பம் செய்தால் அது ஹஜ்ஜை பாதிக்காது.
17.தொழ வைத்த இமாமையே குர்பானி கொடுக்களாம்.
18.சிறிதளவு கஞ்சா அடிக்கலாம்.
19.குழந்தையை கடத்தியவனுக்கு தண்டனை இல்லை.
20.பல் துலக்கும் போது தனது இரண்டு கைகளிலும் உள்ள ஆட்காட்டி விரல்களைக் கொண்டு ஒரே நேரத்தில் பல் துலக்க வேண்டும்.

மத்ஹபில் உள்ள குப்பைகள் பட்டியல் போட்டு எடுத்துக் காண்பித்தார் சகோதர் பி.ஜெ அந்த அசிங்கங்களுக்கு விவாதத்தின் இறுதி வரை எந்த ஒரு பதிலையும் தராது தனது தோல்வியை ஒத்துக் கொண்டு அமைதி காத்தார் ஜமாலி.

நபியவர்கள் மீதே பொய் சொன்ன ஜமாலி. எடுத்துக்காட்டும் படி சவால் விட்டார் பி.ஜெ.

கழுதையுடன் புணருவது தொடர்பான மத்ஹபு குப்பைகளை பி.ஜெ அவர்கள் எடுத்துக் காட்டும் போது மத்ஹபு தொடர்பாக எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாத ஜமாலி இதற்கு மட்டும் நபியவர்கள் சொன்னதாக ஒரு ஹதீஸை சொன்னார்.

அதாவது, யார் மிருகத்துடன் புணர்கிறானோ அவனுக்கு தண்டனை இல்லை. என்று நபியவர்கள் கூறிய செய்தி திர்மிதியில் பதிவு செய்யப் பட்டுள்ளதாக பொய் சொன்னார் ஜமாலி.

அப்படி ஒரு ஹதீஸே இல்லை இருந்தால் திர்மிதியில் இருந்து எடுத்துக் காட்டுங்கள்.என்று சவால் விட்டார் பி.ஜெ ஆனால் நபியின் மீது பொய் சொன்ன பொய்யர் ஜமாலி இறுதிவரை அப்படி ஒரு ஹதீஸைக் காட்டவே இல்லை.

ஜமாலி நபியவர்கள் மீது துணிந்து இட்டுக் கட்டிய பொய்கள்

அபூதாலிப் முஸ்லிம் என்று நபியவர்கள் கூறியதாக இப்னு அஸாகீரில் உள்ளதாக குறிப்பிட்டார் ஜமாலி ஆனால் இப்னு அஸாகீரில் உள்ள செய்தியோ அபூதாலிப் காபிர் என்பதைத் தான் குறிப்பிடுகிறது.

நபியவர்கள் அபூதாலிபை காபிர் என்று எந்த ஹதீஸில் சொன்னாரோ அதே ஹதீஸின் ஒரு பகுதியை மறைத்து அபூதாலிப் முஸ்லிம் என்று நபியவர்கள் கூறியதாக நபியின் மீதே பொய் சொன்னார் ஜமாலி.

இது தொடர்பாக அபூதாவுத் நஸாயி போன்ற கிரந்தங்களிலும் ஹதீஸ் வருவதாக சொன்னவர் கடைசி வரை ஹதீஸைக் காட்டவே இல்லை.

புகாரி முஸ்லிம் போன்ற கிரந்தங்களிலும் அபூதாலிப் முஸ்லிம் என்பதற்கான ஆதாரம் இருப்பாக சொன்னார் ஜமாலி ஆனால் அதற்கு மாற்றமாக அபூதாலிப் காபிர் என்பதற்கான ஆதாரம் தான் புகாரி முஸ்லிமில் உள்ளது.

வுழூ செய்யும் போது வாய்ப் பகுதியை மூன்று முறை தனியாகவும் மூக்கை மூன்று முறை தனியாகவும் நபியவர்கள் கழுவியதாக புகாரியை ஆதாரம் காட்டி பொய் சொன்னார்.

பெண்கள் ஜும்மாத் தொழுகைக்கு வரக்கூடாது என்று நபியவர்கள் சொன்னதாக முஸ்லிமில் ஹதீஸ் இருக்கிறது என்று இல்லாத ஹதீஸை இருப்பதாக நபியவர்கள் மீது இட்டுக் கட்டினார்.

பெருநாள் முடிந்து இரண்டு நாட்கள் வரை குர்பானி கொடுக்களாம் என்ற நபியவர்கள் கூறியதாக முஅத்தாவில் ஹதீஸ் இருப்பதாக இல்லாத செய்தியை நபியவர்கள் மீது துணிந்து இட்டுக்கட்டினார்.

யார் என்மீது வேண்டுமென்று பொய் சொல்கிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்ளட்டும் (முஸ்லிம்)

என்ற நபி மொழியை எடுத்துக் காட்டி இந்த ஹதீஸிற்கு ஏற்றாற்போல் உங்கள் வாதம் உள்ளது என்பதை பி.ஜெ அவர்கள் விவாதக் களத்திலேயே ஜமாலியிடம் தெரிவித்தார்.

தண்டவாளம் ஏறியது ஜமாலியின் வண்டவாளம்

விவாதத்தில் தவ்ஹீத் ஜமாத் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமாக செயல்படுகிறது என்று வாதிட வந்த ஜமாலியின் முரண்பட்ட கருத்துக்களை மக்கள் மத்தியில் வீடியோ காட்சியாக போட்டுடைத்தார் பி.ஜெ

அதாவது கூட்டத்திற்கு தகுந்தாற் போல் இடத்திற்கு ஏற்றாற் போல் பேசுவதில் வல்லவரான ஜமாலி ஒவ்வொரு மேடையிலும் ஒவ்வொரு தில்லு முல்லு வேலைகளை செய்வார். அவை வீடியோவாக அரங்கத்தில் போட்டுக் காட்டப்பட்டு அவரிடமே விளக்கம் கேட்கப்பட்டது. விவாதம் செய்வதாக அரங்கத்திற்கு வந்தவர் மதில் மேல் குந்திய பூனை போல் இறுதி வரை உளரிக் கொட்டிக் கொண்டே இருந்தார்.

அரங்கத்தில் போடப்பட்ட ஜமாலியின் ஒன்றுக் கொன்று முரண்பட்ட வீடியோக்கள் தலைப்பு வாரியாக

  • மார்க்க விஷயத்தில் பித்அத் புதிதாக ஒன்றும் உருவாகாது ஆனால் உலக விஷயத்தில் உருவாகும் (வாகனங்கள் நாம் பயன் படுத்தும் பொருட்கள்) என்று ஓரிடத்தில் பேசிய ஜமாலி இன்னோரிடத்தில் தான் சொன்னதை தானே மறுத்துப் பேசிய காட்சி போட்டுக் காட்டப் பட்டது.

  • அபூதாலிப் முஸ்லிம் என்று ஒரு மேடையிலும் அவர் காபிர் தான் என்று இன்னொரு மேடையிலும் ஜமாலி பேசிய வீடியோ அரங்கத்தினர் மத்தியில் போட்டுக் காண்பிக்கப் பட்டது.

  • இறைவன் அர்ஷில் இருக்கிறான் என்று ஒரு மேடையிலும் அர்ஷில் இல்லை என்று இன்னொரு மேடையிலும் ஜமாலி பேசிய காட்சி எடுத்துக் காண்பிக்கப் பட்டது.

  • ஒரு விஷயம் இல்லை என்பதற்கு ஆதாரம் காட்டத் தேவையில்லை என்று தமிழகத்திலும் இல்லை என்பதற்கு ஆதாரம் காட்ட வேண்டும் என்று இலங்கையிலும் ஜமாலி பேசிய வீடியோ போடப்பட்டு முரண்பாட்டிட்கு விளக்கம் கோறப்பட்டது.

  • மார்க்க விஷயத்திற்கு சவூதி ஆதாரமாகாது என்று ஒரு வீடியோவிலும் ஆதாரமாகும் என்று இன்னோர் வீடியோவிலும் தனக்குத் தானே முரண்பட்ட காட்சி அரங்கத்தினர் முன்னிலையில் போடப்பட்டது.

  • தவ்ஹீத் வாதிகள் மதிக்கும் அறிஞர்களை மரியாதையாக தான் பேசுவதாக குறிப்பிட்ட ஜமாலியிடம் இப்னு தைமிய்யா அவர்களை அவன் இவன் என்று ஜமாலி பேசிய காட்சி எடுத்துக் காண்பிக்கப்பட்டது.

  • இறைவனுக்கு உருவம் உண்டு என்று இப்னு தைமிய்யா கூட கூறவில்லை என்று கடந்த விவாதத்தில் வாதித்தவர் இப்னு தைமிய்யா இறைவனுக்கு உருவம் உண்டு என்று கூறினார் என இப்னு தைமிய்யாவை மேடையில் வைத்து வசை பாடும் காட்சி போட்டுக் காண்பிக்கப் பட்டது.

இப்படி தனக்குத் தானே ஜமாலி அவர்கள் முரண்பட்டு பேசிய விடியோக்கள் அரங்கத்தில் திரையில் போட்டுக் காண்பிக்கப்பட்டது. அந்த வீடியோக்களை பார்த்தவுடன் அவர்கள் தரப்பு மக்களே ஜமாலி யார் என்பதை தெளிவாக புரிந்து கொண்டார்கள். போடப்பட்ட எந்த ஒரு வீடியோவுக்கும் பதில் தர முடியாமல் திண்டாடினார் ஜமாலி.

பி.ஜெ விட்ட சவாலும் விரண்டோடிய ஜமாலியும்

மத்ஹபு நூல்களில் உள்ள ஆபாசங்களையும் அசிங்கங்களையும் பி.ஜெ அவர்கள் பட்டியலிட்ட போது அதில் உள்ள அசிங்கங்கள் பற்றி ஒரு வார்த்தை கூட பேச திராணியற்றுப் போன ஜமாலி இப்படியெல்லாம் அசிங்கங்களை இவர்கள் வாசித்துக் காட்டுகிறார்கள் என்று நீலிக் கண்ணீர் வடித்தார்.

அப்போது பி.ஜெ அவர்கள் அவரிடத்தில் மத்ஹபில் உள்ள அசிங்கத்தின் ஒரு பகுதியைக் கொடுத்து அசிங்கம் இல்லாமல் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது போல் நீங்கள் இதை தைரியம் இருந்தால் படித்துக் காட்டுங்கள் என்று சவால் விட்டார்.

ஆனால் விவாதத்தின் இறுதி வரை அதை அவர் படிக்கவே இல்லை. விவாதத்திற்கு அவர்கள் தரப்பால் வந்தவர்களே முகம் சுழித்துப் போகும் அளவுக்குத் தான் ஜமாலியின் வாதங்கள் அமைந்தன.

அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடுகிறான். அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களால் ஊதி அணைத்துவிட நினைக்கிறார்கள்.தன்னை மறுப்போர் வெறுத்த போதும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப் படுத்துபவன்.(61:8)
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

நீங்கள் பொய்யராக மாறிவிட எளிய வழிகள்! இதோ

தலைப்பை படித்தவுடன் உங்களில் சிலர் கதிகலங்கிப் போயிருப்பீர்கள் ஆம் இப்படிப்பட்ட கலக்கம் எனக்கு ஏற்பட்டதன் விளைவுதான் இந்த கட்டுரை.

சகோதர, சகோதரிகளே பயப்படவேண்டாம்! இந்த கட்டுரையில் வழிகேட்டின் பாதையை தோலுறித்துக்காட்டி அதன்மூலம் வழிதவறிவிடாதீர்கள் என்று அழகிய முறையில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது எனவே பொறுமையாக சிந்தித்து படியுங்கள் நீங்கள் உண்மையாளர்களாக மாற இந்த கட்டுரை உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். (அல்ஹம்துலில்லாஹ்)!

நீங்கள் பொய்யர் என்பதற்கு நற்சான்றிதழ் பெற வேண்டுமா?

நீங்கள் கேள்விப்படும் ஆதாரமற்ற ஊடகச் செய்திகளையெல்லாம் அப்படியே பரப்பிவிடுங்கள் அது போதும் நீங்கள் பொய்யர் என்பதற்கான நற்சான்றிதழ். ஆம் இதைத்தான் நம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகாக தெளிவாக கூறிச் சென்றுள்ளார்கள் ஆதாரம் இதோ
ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்: முஸ்லிம் 6 )

சகோதரர்களே இன்று இணையதள ஊடகங்களில் கிராஃபிக்ஸ் துணையுடன் சிலர் பொய்களை பரப்புகிறார்கள் மற்றும் சிலரோ தாங்கள் காணும் பழங்கள், தாவரங்கள், செடி கொடிகள் ஏதாவது தோற்றம் தென்பட்டால் அதைக் கொண்டு பொய்களை பரப்புகிறார்கள் இதோ அந்த பொய்களை காண்போமா?

பழங்களி்ன வாயிலாக பொய்யை பரப்புதல்
பொய்களை பரப்புவதற்காகவே தக்காளிப் பழம், ஆப்பிள் பழம், தர்புசணி ஆகிய பழங்களை மிக இலாவகமாக பயன்படுத்து கிறார்கள். அதாவது தக்காளிப் பழத்தை இரண்டாக வெட்டினால் அதன் விதைகள் வளைந்து நெழிந்து காணப்படும் அவைகளில் அரபு எழுத்து போன்ற வடிவம் தென்பட்டால் போதும் உடனே அல்லாஹ்வின் பெயர் தக்காளியில் வந்துவிட்டது ஆஹா! ஓஹோ என்று தம்பட்டம் அடிப்பார்கள்! ஆதாரம் இதோ
சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே இந்த பழங்களில்  அல்லாஹ்வின் பெயர் காணப்பட்டால் அதனால் இவைகளில் ஏதாவது தனிச்சிறப்பு வந்துவிடுகிறதா?

மிருகங்களின் வாயிலாக பொய்யை பரப்புதல்
ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற வளர்ப்பு பிராணிகளின் தோல்களில் ஏதாவது அரபு எழுத்து வடிவம் தென்பட்டால் உடனே அல்லாஹ்வின் பெயர் பிராணியின் முதுகில், மடியில், தலையில் வந்துவிட்டது ஆஹா! ஓஹோ என்று புரளியை கிழப்புகிறார்கள்! ஆதாரம் இதோ
சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே இந்த வளர்ப்பு பிராணிகளின் தோல்களில் அல்லாஹ்வின் பெயர் காணப்பட்டால் அதனால் இவைகளில் ஏதாவது தனிச்சிறப்பு வந்துவிடுகிறதா? இவைகள் பேசிவிடுமா? பறக்குமா? சிரிக்குமா?

இப்படிப்பட்ட செய்திகள் உங்கள் மெயில் இன்பாக்ஸில் கண்டு அதை நீங்கள் பார்த்தவுடன் அதிசயித்து போய்விடுகிறீர்கள் உடனே அதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்புகிறீர்கள் அவர்கள் தங்கள் உறவினர்களுக்கு அனுப்புகிறார்கள் இறுதியாக பொய்கள் வாலால் அல்ல மாறாக மெயிலால் பரப்பப்படுகின்றன. இந்த பொய்களுக்கு நீங்களும் உடந்தையாகிறீர்கள். இந்த செயல் யுத, கிருத்த மாற்றுமத கலாச்சாரத்தை சேர்ந்ததாகும்! ஆதாரம் வேண்டுமா? இதோ
சிந்திக்க சில வழிகள்
அன்புச் சகோதர சகோதரிகளே அல்லாஹ்வி்ன் பெயர் தக்காளியில் வந்துவிட்டால் உடனே அதில் சிறப்பு என்கிறீர்களே அல்லாஹ்வின் பெயர் மட்டும்தான் தக்காளியில் தென்படுமா? இதோ இவைகளும் தென்படுகின்றன
கிராஃபிக்ஸ், எடிட்டிங் துணையுடன் பொய்களை பரப்புவது!
இன்றைய நவீன யுகத்தில் கிராஃபிக்ஸ் முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த நவீன யுத்திகள் ஒருசில தவறான மனிதர்களின் கைகளில் தவழ்கிறது அதன் மூலம் மக்களை மூடர்களாக வழிதவற விடப்படுகிறார்கள்.

கிராஃபிக்ஸ் என்ற யுத்தியின் மூலமாக மக்கள் அதிகமாக வழிகெடுவது சினிமா துறையில்தான் இதற்கு ஆதாரம் காட்ட தேவையில்லை அந்த அளவுக்கு பெயரை சம்பாதித்துவிட்டது!
ஆனால் இந்த கிராபிக்ஸ் மற்றும் வீடியோ எடிட்டிங் உதவியுடன் மதங்கள், மார்க்க விஷயங்கள் பரப்பப்படுகின்றன. உதாரணமாக அமெரிக்கர்கள் பரப்பும் பறக்கும் தட்டுக்கள், மற்றும் நேபாள நாட்டு வீடியோ படமான மசூதியின் பறக்கும் மேற்கூறை ஆகியனவாகும்.
இவைகளை கண்டதும் பரப்பிவிடுகிறீர்கள் அப்படியானல் பொய்களை பறப்புவதில் நீங்கள் வல்லவர்தானே! இதைவிட கொடூரமான பொய் நம் இஸ்லாமியர்களில் பலவீனர்கள் பரப்பும் பொய்கள்தான் ஆதாரம் வேண்டுமா? இதோ

கப்ருவேதனை தலைப்பில் பரப்பப்படும் அகோர காட்சகள்
கப்ருகளில் வேதனை செய்யப்படுவது உண்மைதான் இதை மெய்ப்படுத்தும் விதமாக ஏராளமான குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் உள்ளன. இதோ ஆதாரம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.”
ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால், என்னை விரைந்து செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்.”
அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். (புகாரி 1314)

மனிதன் பலவீனமானவன் என்று அல்லாஹ் குர்ஆனில் அடிக்கடி கூறுகிறான் எனவே இப்படிப்பட்ட பலவீனமான மனிதனுக்கு முன்னால் கப்ரு வேதனைகளை அல்லாஹ் காட்டுவானா? இதை உணர வேண்டாமா?

இதோ முஸ்லிம்களில் பலவீனர்கள் பரப்பும் கப்ரு வேதனை பற்றிய புகைப்படங்கள்
இந்த புகைப்படம் கப்ரு வேதனைக்கு காட்டப்படும் போது கூறும் புழுகு மூட்டைகள் இதுதான்.

  • இந்தப் புகைப்படம் ஓமன் நாட்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்த 18 வயது இளைஞனுடையது. இவனுடைய தந்தையின் வற்புறுத்தலின் பேரில் 3 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் பதைகுழியில் இருந்து இந்த இளைஞனின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.
  • உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அப்பிணத்தை தோண்டி எடுப்பதற்காக அனைவரும் செல்லுகின்றனர்.3 மணி நேரத்திற்கு முன்பு சடங்குகள் செய்து விட்டுச் திரும்பிய கால்கள் மறுபடியும் அக்குழியை நோக்கிச் செல்லுகின்றது.
  • சுமார் 1000 பேர் சேர்ந்து அந்த பிணத்தை குழிக்குள் வைத்து அடித்துப்போட்ட மாதிரி மிகவும் சேதமடைந்து கை மற்றும் கால்களில் எலும்புகள் எல்லாம் நொறுக்கப்பட்டு இடுப்புப் பகுதியில் யாரோ நெருக்கியயது போல இடுப்பு பகுதிகள் ஒடிந்து இரத்தங்கள் வெளியே முகத்தில் சிதறி கோரமாக காட்சி அளித்தது. உடல் முழுவதும் உடலின் நிறம் முற்றிலுமாய் மங்கி காட்சி அளித்தது.

மேற்கண்ட இந்த கருத்துக்கள் புழுகு மூட்டைகளாக தென்படுகின்றன இதுபற்றி இவ்வாறு சிந்தித்துப்பாருங்கள்!

தமிழகத்தில் தினமும் செய்திகளில் இடம்பெறும் மிக முக்கியமான தகவல்களில் ஒன்று கீழ்கண்ட செய்திதான்!

கள்ளக்காதல் தொடர்பால் கணவன் மனைவியை அல்லது மனைவி கணவனை கொலை செய்து யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டனர். காவல்துறையினரின் புலன்விசாரனையில் உண்மை வெளிவந்தது பிணத்தை 2 மாதங்கள் கழித்து தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது

இப்படிப்பட்ட பிணங்களை 2 மாதங்கள் கழித்து தோண்டி எடுக்கும் போதுகூட அந்த பிணங்கள் மேலே கப்ரு வேதனைக்கு காட்டப்படும் அளவுக்கு சின்னாபின்னமாக இருக்காது அப்படியானல் கள்ளக்காதலால் கொலையுண்டவர்களுக்க அதாபு இல்லையா? என்ற கேள்வி எழவில்லையா?

பிர்அவ்னுடைய உடல் படிப்பினையில்லையா?
மூஸா நபியின் காலத்தில் பிர்அவ்ன் நீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்தான் அவனுடைய உடல் இன்றளவும் அழியாமல் உள்ளது இதை அருள்மறை குர்ஆன் உறுதிபடுத்துகிறது! எனவே பிர்அவ்னுடைய உடல் இன்றளவும் அழுகாமல் உள்ளதால் அவனுக்கு கப்ரு வேதனை இருக்காது என்று கூறுவீர்களா?

கப்ரு வேதனைக்கான ஞானம் மனிதனுக்கு உள்ளதா?
கப்ருவேதனை எங்கு நடைபெறும் என்பதற்கான ஞானம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது நம்மிடம் இல்லை ஏனெனில் கடலில் தள்ளப்பட்ட பிணங்கள், நெருப்பில் எறிக்கப்படும் பிணங்கள் வேதனைகளை எப்படியாவது எங்கேயாவது அனுபவித்துக்கொண்டு இருக்கலாம் அதற்கான ஞானம் மனிதனுக்கு வந்துவிடுமா?

அல்லாஹ்வின் மீது பலவீனமான நம்பிக்கை வைக்காதீர்
தக்காளியில், ஆட்டு ரோமத்தில், தர்புசனியில், சுட்ட சப்பாத்தியில் அல்லாஹ்வின் பெயர் போன்ற அரபு எழுத்துக்களை கண்டவுடன் அல்லாஹ்வின் ஆற்றலை பார்த்தீரா என்று ஆஹா ஓஹோ என்று பேசுகிறீர்கள் இது பலவீனமான நம்பிக்கை மட்டுமல்லாமல் அல்லாஹ்வை கிண்டலடிக்கும் செயலுமாகும்!

சிந்தித்துப்பாருங்கள்
மூஸா (அலை) அவர்களுக்கும் அவர்களது சமுதாயத்திற்கும் கடலை இரண்டாக பிளந்து வாழவழிவகை செய்தவன் போயும் போயும் தக்காளியில் தன் பெயரை பதிப்பானா? உங்கள் பெயர் தக்காளியில் உள்ளது என்று நான் கூறினால் உங்களுக்கு கோபம் வராதா?

அல்லாஹ்வின் பெயரை ஆடு மாடுகளின் ரோமங்களில் கண்டவுடன் உடல் சிலிர்க்கிறதே அதே மிருகங்கள் கண்ட இடங்களில் படுக்குமே இதை உங்களால் உணர முடிய வில்லையா?

எது அதிசயம்
அல்லாஹ்வின் பெயர் தக்காளியில் உள்ளது அதிசயமா? இதுவல்ல அதிசயம் இதோ கீழே உள்ளதுதான் அதிசயம்!

இலவசமாக காற்று நமக்கு கிடைக்கிறதே இது அதிசயம்!

தாயைப் பார்த்து குழந்தை சிரிக்கிறதே இது அதிசயம்!

துபாயில் இருந்துக்கொண்டு மனைவியிடம் செல்போனில் பேசுகிறீர்களே இது அதிசயம்!

வானத்தில் பயணிக்கிறீர்களே இது அதிசயம்!

எழுதுகோல் உதவியின்றி டைப் செய்கிறீர்களே இது அதிசயம்!

அல்லாஹ் நிகழ்த்தும் அதிசயங்களை எழுத்தால் கூறஇயலாது அந்த அளவுக்கு எல்லாமே அதிசயம்தான்! எனவே அல்லாஹ்வை எவ்வாறு கண்ணியப்படுத்த வேண்டுமோ அவ்வாறு கண்ணியப்படுத்துங்கள்! பொய்களையும் தவறான வதந்திகளையும் பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள்!
தக்காளி, மசூதியின் பறக்கும் மேற்கூரை ஆகியவற்றை பார்த்துத்தான் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முடியும் எனில் இது இறைநம்பிக்கையல்ல! குர்ஆனை பார்த்து, படித்துத்தான் ஒருவன் இறைநம்பிக்கையை  முறையாக வளர்த்துக்கொள்ள இயலும் ஏனெனில் அல்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம்! இதை நபிகளார் (ஸல்) அவர்களின் வாயிலாக அறிந்துக்கொள்ளுங்கள்!
ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)   நூற்கள்: புஹாரி, முஸ்லிம்

என் இறைவன் அழகானவன்! தூய்மையானவன்! ஆற்றல்மிக்கவன்!
அல்ஹம்துலில்லாஹ்
 
நன்றி- இஸ்லாம் இனிய சுவனப்பாதை
ஹம்துல்லாஹ் ஜமாலி
பராஹீனே அஹ்மதிய்யா, ரூஹானி கஸாயின், இதன் பகுதிகளான ஹகீதத்துல் வஹி, நுஸுல் மஸீஹ், மற்றும் மல்ஃபூஸாத், துஹ்ஃபயய கோல்டுவிய்யா, தத்கிரத்துஷ் ­ஹாதத்தைன், ஏக்கலத்திக்கா இஸாலா, இஸ்லாமி உஸுல்கி ஃபிலாஸபி – வாசகர்களே! இவையனைத்தும் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? மிர்ஸா குலாம் அஹ்மதை தங்களது நவீன நபியாக ஏற்றிருக்கும் அஹ்மதிகளே! உங்களுக்கு இவை என்ன என்பது தெரியுமா? அகில உலக அளவிலுள்ள பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கோ ஏன்? பெரும்பான்மையான காதியானிகளுக்கோ இவை என்ன என்பது தெரியாது. ஒருவேளை காதியானிகளின் H.A. மெளலவிகள் அறிந்து வைத்திருக்கலாம். இவையனைத்தும் காதியானிகளின் வேத நூல்கள். இவையன்றி இவர்களது கலீஃபாக்களின் பேச்சுக்கள், இவர்களது குறிக்கோளை நியாயப்படுத்தும் பவிஷ்ய மகாபுராணம், ராஜ தரங்கணி,விஷ்ணு புராணம் பலாகரும் புத்தாசஃபும், ர­ஸாத்துஸ்ஸபா,மற்றும் ஒரு சில சரித்திர நூல்களும், தேவையெனில் பைபிள் போன்றவைகளும் இவர்களது ஆதார நூல்களாகும். இந்நூல்கள் கூறும் கருத்துக்களையும், தங்களது வாதங்களையும் நியாயப்படுத்த திருகுர்ஆன் வசனங்களையும், நபி மொழிகளையும் தங்களது விருப்பப்படி வளைத்தும், திரித்தும் கூறுவார்கள்.
பெரும்பான்மை முஸ்லிம்களுக்கும் ஏன், காதியானிகளுக்கும் தெரியாத இவ்விஷயங்கள் எங்களுக்கு எப்படி கிடைத்தது என்ற நியாயமான கேள்வியை நீங்கள் கேட்கலாம். நாங்களும் இந்நூல்களை பார்த்ததோ, எங்களிடம் உறவாடி, உரையாடி வரும் காதியானிகள் மூலமோ அறிந்ததோ கிடையாது. இவையனைத்தும் தமிழக காதியானி இயக்கத்தாரின் மாத இதழான சமாதான வழி மூலம் அறிந்ததாகும். இவர்களுடன் நாம் அன்மையில் உரையாடி இவர்களது கொள்கை கோட்பாடுகளை ஓரளவு இரத்தினச் சுருக்கமாக அறிந்து கொண்ட பின் இவர்களது மாத இதழான சமாதான வழியைப் படித்த போது நாம் பெற்ற விஷயங்களை முஸ்லிம்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். இவர்களையும், இவர்களது நவீன நபியின் தடுமாற்ற நிலையையும், மக்களுக்கு எடுத்துக் காட்டவே எழுதுகிறோம். காய்தல் உவத்தலின்றி பகுத்தறிந்து குறிப்பாக இவர்களது செல்வ செழிப்பு, கோயபல்ஸ் கொள்கை, பகுத்தறிவு வாக்குவாத மாய வலையில் வீழ்ந்துள்ள காதியானிகள் நேர்வழி பெற வேண்டுகிறோம்.
தடுமாற்றம் 1:
ஹஸ்ரத் அஹ்மது(அலை) அவர்கள் தம் வாதத்தில் உண்மையாளர் என்பதற்கு ஆதாரமாகக் கூறிய விஷயங்களில் முதன்மையானது இதுவாகும். அல்லாஹ்வின் தூதர் மஸீஹிப்னு மரியம் இறந்து போய்விட்டார். அவரின் சாயலில் வாக்குறுதிக்கு ஏற்ப நீர் வந்திருக்கிறீர்.
(ரூஹானி கஸாயின், பாகம் 3, பக்கம் 402, ச.வ.: நவ.95, பக்.19)
இங்கு நவீன நபி மிர்ஸா குலாம்தான் மஸீஹிப்னு மரியம் சாயலில் வந்துள்ளதாக சொந்த வாக்குமூலம் தருகிறார்.
1.”பராஹீனே அஹ்மதிய்யாவில்” என் பெயரை இறைவன் முஹம்மது என்றும் அஹ்மத் என்றும் கூறி, எனது வருகையை ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களின் வருகை என்றே கூறியுள்ளான்.
(சமாதான வழி பிப்ரவரி 96,பக்கம்9)
2. நான் பிரதி பிம்பமான பரூஸியாக (நிழலாக) முஹம்மது(ஸல்) அவர்களாகவே இருக்கும்போது, அவ்வாறே முஹம்மதின் எல்லாப் பூரணத்தன்மைகளும் நபுவ்வத்தே முஹம்மதிய்யாவோடு கலந்து நிழல் போன்று என் கண்ணாடியில் பிரதி பிம்பமாக இருக்கிறேன்.
(ச.வ.: பிப்ரவரி 96,பக்கம் 9)
பராஹீனே அஹ்மதிய்யாவிலிருந்து குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாவது வாக்கு மூலத்தின் பிரதி பிம்பம், பரூஸி,நிழல், கண்ணாடி போன்ற சொற்றகளும் அவை தெரிவிக்கும் செய்தியும் உங்களுக்கு விளங்குகிறதா? விளங்கவில்லையயனில் காதியானிகளிடம் கேட்டுபப் பாருங்கள். கீழ்காணும் விளக்கங்களைத் தரலாம்.
1. இதனை அறிந்து கொள்ள ஆன்மீக, அறிவு, ஞானப் பார்வை தேவை. அப்பார்வையை, அறிவை அவர்களது நவீன நபியை ஏற்றால்தான் பெற முடியும் என்று கூறுவர். இது கிறித்துவர்களின், ஜீஸஸை கடவுளின் மைந்தன், கடவுள் என்று ஏற்றால் தான் ஈடேற்றம் பெற முடியும் என்ற வாதத்தை போன்றது. அல்லது.
2. தரீக்காவாதிகள் “”ஃபனாஃபில்லாஹி” அல்லாஹ்வுடன் ஐக்கியமாகித்தானே அல்லாஹ்வாக மாறி “அனல் ஹக்”- நானே உண்மைக் கடவுள் எனக் கூறுவது போல இவர்கள், தங்களது நவீன நபி குலாம் மிர்ஸா முஹம்மது(ஸல்) அவர்களிலே ஃபனாவாகி இச்சிறப்பைப் பெற்றதாகக் கூறுவார்கள். இது நமது சொந்த ஊகமல்ல. அவர்களது சொந்த வாக்கு மூலத்தைப் பாருங்கள்:
இந்த எல்லாச் சிறப்புகளும் வானத்தைச் சேர்ந்த பரிசுத்த மகானான ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களின் ஆத்மீகமான ஐக்கியத்தை நான் அடைந்த காரணத்தினாலேயே கிடைத்தன. அவர்களின் மூலமாக, அவர்களிலே நான் ஃபனாவாகி அழிந்து (அவர்களுக்காக நான் அர்ப்பனமாகி) அவர்களின் பெயராகிய முஹம்மது, அஹ்மது என்ற பெயர்களால் அழைக்கப்பட்ட காரணத்தால் நான் ரஸூலாகவுமிருக்கிறேன்; நபியாகவுமிருக்கிறேன். (ச.வ.: பிப்ரவரி 1996, பக்கம் 8)
கவனிக்க: தான் நபியாகவும், ரசூலாகவுமிருப்பதற்கு இங்கு காரணங்களைக் கூறுகிறார். 1. தான் ஃபனா ஃபி முஹம்மது(ஸல்) அவர்கள். 1. தான் அஹ்மது, முஹம்மது என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. அல்-ஹம்துலில்லாஹ் அஹ்மது என்ற பெயர் ரசூல்(ஸல்) அவர்களுக்கு இருந்ததை ஏற்றுக் கொள்கிறார்.

உயர்ந்தவனான இரட்சகன் உருவமற்றவனா?

முஹம்மட் அர்ஷாத் அல்அதரி
அகில உலகங்களையும், அண்ட சராசரங்களையும் படைத்துப் பரிபாலிக்க கூடிய அருளாளன் அழ்ழாஹ்வை எவ்வாறு நம்ப வேண்டுமென அழ்ழாஹ்வும், அவனது அருமைத் தூதர் (ஸல்) அவர்களும் நமக்கு கற்றுத் தந்தார்களோ அவ்வாறு நம்பாத வரை நமது இறை நம்பிக்கை பரிபூரணமடையாது. அந்த வகையில் அகிலத்தின் இரட்சகன் அழ்ழாஹ்வுக்கு உருவம் உண்டா? இல்லையா? என்பதில் நமது சமுதாய மக்களில் ஒரு சாரார் தொடர்ந்தும் தெளிவற்றவர்களாகவே இருந்து வருகின்றனர்.
இவற்றைத் தெளிவுபடுத்த வேண்டிய மார்க்க அறிஞர்களோ ‘ஸுன்னாக்களை சில்லறைகள்’ என சிறுபிள்ளைத்தனமாக விமர்சிப்பதற்கும், சத்திய இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் கூட்டல், குறைத்தல் செய்யாது எடுத்துரைப்பவர்களை சமூக ஒற்றுமைக்கு(?) எதிரானவர்களாக சித்தரிப்பதற்கும் மிம்பர் மேடைகளைப் பயன்படுத்தி பாழ்படுத்துகின்றனர்.
எனவே, சத்திய மார்க்கத்தின் தூய மூலாதாரங்களான அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் ஒளியில் அருளாளன் அழ்ழாஹ்வுக்கு உருவம் உண்டா? இல்லையா? என்பது பற்றி நோக்குவோம்.
வல்லமைமிக்கவனின் இருகைகள்
‘எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?’ என்று (இறைவன்) கேட்டான். (அல்குர்ஆன் 38:75)
‘அழ்ழாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது’ என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக, அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான். (அல்குர்ஆன் 05:64)
கண்ணியமிக்கவனின் மகத்துவம் நிறைந்த முகம்
‘இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும்’ (அல்குர்ஆன் 55:26,27)
சிரிக்கும் அளவற்ற அருளாளன்
அழ்ழாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கின்றான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிடுகின்றார். இருவருமே சொர்க்கத்தில் நுழைகின்றார்கள். இவர் அழ்ழாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்படுகின்றார். பிறகு (அவரைக்) கொன்றவர் பாவமன்னிப்புக் கோர, அதை ஏற்று அவரை அழ்ழாஹ் மன்னித்து விடுகின்றான். பிறகு, அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர்த் தியாகியாகி விடுகின்றார்கள் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-2826)
பேசுகின்ற நிகரற்ற அன்புடையோன்
(முஹம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை. அழ்ழாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான். (அல்குர்ஆன் 04:164)
செவியுறும் அகிலத்தின் இரட்சகன்
‘தனது கணவர் பற்றி உம்மிடம் தர்க்கம் செய்து அழ்ழாஹ்விடம் முறையிட்டவளின் சொல்லை அழ்ழாஹ் செவியுற்றான். உங்களிருவரின் வாதத்தை அழ்ழாஹ் செவியுறுகிறான். அழ்ழாஹ் செவியுறுபவன் பார்ப்பவன்’ (அல்குர்ஆன் 58:01)
‘இறைவா! என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உனக்காக நேர்ச்சை செய்து விட்டேன். அது (உனக்காக) முழுமையாக அர்ப்பணிக்கப்படும். (இதை) என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன், அறிந்தவன்’ என்று இம்ரானின் மனைவி கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 03:35)
‘அந்த ஆலயத்தின் அடித்தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது ‘எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன், அறிந்தவன்’ (என்றனர்.)’ (அல்குர்ஆன் 02:127)
‘நீங்கள் நம்பிக்கை கொண்டது போல் அவர்களும் நம்பிக்கை கொண்டால் நேர் வழி பெறுவர். புறக்கணிப்பார்களாயின் அவர்கள் எதிரிகளே. அவர்கள் விடயத்தில் அழ்ழாஹ் உமக்குப் போதுமானவன் அவன் செவியுறுபவன், அறிந்தவன்.’ (அல்குர்ஆன் 02:137)
ஒற்றைக் கண்ணன் அல்லன்

….. பிறகு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அழ்ழாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ந்து சொன்னார்கள். நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கின்றேன். எந்த இறைத் தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தன் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு விபரத்தை உஙகளுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும் அழ்ழாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுஙகள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-3057, 3337)
திறக்கப்படும் கெண்டைக்கால்
கெண்டைக் கால் திறக்கப்பட்டு ஸஜ்தாச் செய்ய அழைக்கப்படும் நாளில் அவர்களுக்கு அது இயலாது. (அல்குர்ஆன் 68:42)
அருளாளனின் அழகிய பாதம்
(நரகவாசிகள்) நரகத்தில் போடப்படுவார்கள். நரகம், (வயிறு நிரம்பாத காரணத்தால்) இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று கேட்கும். இறுதியில் அழ்ழாஹ் தனது பாதத்தை (அதில்) வைப்பான். அப்போது அது, போதும்! போதும்! என்று கூறும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-4848)
நரகத்திடம் உனக்கு வயிறு நிரம்பிவிட்டதா? என்று கேட்கப்படும். அது இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று கேட்கும். அப்போது அருள் வளமிக்கவனும், உயர்ந்தோனுமான அழ்ழாஹ் தனது பாதத்தை அதன்மீது வைப்பான். உடனே அது போதும்! போதும்! என்று கூறும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-4849)
மேலுள்ள அருள்மறை வசனங்களும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான நபிமொழிகளும் அகிலத்தின் இரட்சகன் அழ்ழாஹ்வுக்கு தன்னிகரில்லா, தனி உருவம் உண்டு எனப் பறைசாற்றி நிற்கின்றன. மேற்கூறப்பட்ட அழ்ழாஹ்வின் பண்புகளை, படைப்புக்களின் பண்புகளுக்கு நிகராக்கி விடாது, நாமாக உருவம் கற்பிக்காது, வலிந்துரை செய்யாது நம்புதல் வேண்டும்.
உதாரணமாக, பார்வை என்கின்ற பண்பைப் பொறுத்தவரை மனிதப் பார்வையானது பல்வேறு குறைபாடுகளை உள்ளடக்கியது. ஆனால், அகிலத்தின் இரட்சகனின் பார்வையானது குறைபாடுகளுக்கு அப்பாற்பட்ட தூய்மையான, பரிபூரணமான பார்வையாகும். குறைபாடுள்ள மனிதப் பார்வையினால் மின்சாரத்தையோ, காற்றையோ, ஒளியினால் படைக்கப்பட்ட ஜின்களையோ, பகல் வேளையிலும் வான்வெளியில் பரந்துபட்டு காணப்படும் பல்லாயிரக் கணக்கான நட்சத்திரங்களையோ காண முடியாது. ஆனால், இறைவனின் பார்வையோ இதற்கு முற்றிலும் மாறுபட்டது. இதனைப் போன்று அருளாளன் அழ்ழாஹ்வின் ஒவ்வொரு பண்புகளும் பலவீனங்களுக்குற்பட்ட மனிதப் பண்புகளுக்கு முரணனான தூய்மையானதாகும்.
இதனையே திருமறைக்குர்ஆன் பின்வருமாறு கூறிக்காட்டுகின்றது.
அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன், பார்ப்பவன் (அல்குர்ஆன் 42:11)
‘அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன், நன்கறிந்தவன்’ (அல்குர்ஆன் 06:103)
‘அழ்ழாஹ் ஒருவன்’ என (முஹம்மதே!) கூறுவீராக! அழ்ழாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112:01-04)
மிஃராஜின் போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அழ்ழாஹ்வைப் பார்த்தார்களா?
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிஃராஜின் போது அழ்ழாஹ்வைப் பார்த்ததாகவே இஸ்லாமிய சமுதாய மக்களில் பலர் நம்பியுள்ளனர். இதன் உண்மை நிலை தொடர்பாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றார்கள்.
‘நான் (அன்னை) ஆயிஷா (ரழி) அவர்களிடம் சாய்ந்து அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்) அபூ ஆயிஷா, ‘மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அழ்ழாஹ்வின் மீது மிகப் பெரும் பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார்’ என்று கூறினார்கள். நான், ‘அவை எவை? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘யார் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அழ்ழாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டி விட்டார்’ என்று சொன்னார்கள்.
உடனே சாய்ந்து அமர்ந்து (ஓய்வு எடுத்துக்) கொண்டிருந்த நான் எழுந்து (நேராக) அமர்ந்து, ‘இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கூறுங்கள்! அவசரப்படாதீர்கள். வலிவும் மாண்புமிக்க அழ்ழாஹ், ‘அவரை தெளிவான அடிவானத்தில் பார்த்தார்’ (அல்குர்ஆன் 81:23) என்றும், ‘ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்’ (அல்குர்ஆன் 53:13) என்றும் கூறவில்லையா?’ என்று கேட்டேன்.
அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள். இந்த சமுதாயத்தாரில் இது தொடர்பாக அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான்தான். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) ‘அது, (வானவர்) ஜிப்ரீலை (நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை, அவர் படைக்கப் பெற்றுள்ள (நிஜத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக்கொண்டிருந்தது. என்று கூறினார்கள்.
மேலும், ஆயிஷா (ரழி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) அழ்ழாஹ் (பின்வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார்கள். ‘அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்;. நன்கறிந்தவன்.’ (அல்குர்ஆன் 6:103)
அல்லது (பின்வருமாறு) அழ்ழாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? ‘எந்த மனிதருடனும் அழ்ழாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும், வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அழ்ழாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.’ (அல்குர்ஆன் 42:51) (தொடர்ந்து) ஆயிஷா (ரழி) அவர்கள் மீதமுள்ள இரண்டு விஷயங்களையும் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-287)
‘நான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘அவன் ஒளியாயிற்றே நான் எப்படி பார்க்க முடியும்?’ என்று கேட்டார்கள்.’ (அறிவிப்பவர்: அபூதர்(ரழி), நூல்:ஸஹீஹ் முஸ்லிம்-291)
மேலுள்ள நபிமொழிகள் மூலம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் அழ்ழாஹ்வைப் பார்க்கவில்லை. மாறாக, இவ்வுலகில் பார்க்கவும் முடியாது என்பதை தெளிவுபடுத்துகின்றது.
நபி மூஸா (அலை) அவர்கள் அழ்ழாஹ்வைப் பார்த்தார்களா?
நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது ‘என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்’ எனக் கூறினார். அதற்கு (இறைவன்) ‘என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்’ என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது, ‘நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்’ எனக் கூறினார். (அல்குர்ஆன் 07:143)
மேலுள்ள அருள்மறை வசனத்தில் அழ்ழாஹ் மூஸா (அலை) அவர்களைப் பார்த்து, ‘என்னை நீர் பார்க்கவே முடியாது’ என்று கூறுவதன் மூலம் நபி மூஸா (அலை) அவர்கள் அழ்ழாஹ்வைப் பார்க்கவில்லை என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
மறுமையில் காட்சி தரும் நியாயத்தீர்ப்பு நாளின் அதிபதி
‘முழு நிலவுள்ள ஓர் இரவில் நாங்கள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் நிலவைக் கூர்ந்து பார்த்தபடி, அறிந்துகொள்ளுங்கள்! இந்த நிலவை நீங்கள் நெரிசல் இல்லாமல், அல்லது குழப்பமடையாமல் காண்பது போன்று உங்கள் இறைவனையும் நீங்கள் நிச்சயம் காண்பீர்கள்… (அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-573)
‘நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வெரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள் (ஆனால்) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும். (அறிவிப்பவர்: அபூசயீத் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-4919)
‘மக்கள் (அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), அழ்ழாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா? என்று வினவினர். அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பௌர்ணமி இரவில் கீழே மேகம் சூழாத (வானில்) சந்திரனைக் காண்பதில் நீங்கள் ஐயம் கொள்வீர்களா? என்று கேட்டார்கள். மக்கள், இல்லை (ஐயம் கொள்ள மாட்டோம்) அழ்ழாஹ்வின் தூதரே! என்றார்கள். மீண்டும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கீழே மேகம் சூழாத சூரியனைக் காண்பதில் நீஙகள் ஐயம்கொள்வீர்களா? எனக் கேட்டார்கள். அதற்கும் மக்கள், இல்லை என்று பதிலளித்தனர். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவ்வாறுதான் உறுதியாக நீங்கள் இறைவனைக் காண்பீர்கள் என்று கூறிவிட்டு (பின்வருமாறும்) கூறினார்கள்:
மறுமை நாளில் மக்கள் அனைவரும் ஒன்று குவிக்கப்படுவார்கள். அப்போது, (உலகத்தில்) யார் எதனை வணங்கிக்கொண்டிருந்தார்களோ அதனைப் பின்பற்றிச் செல்லட்டும் என்பான் (இறைவன்). ஆகவே, சிலர் சூரியனைப் பின்பற்றிச் செல்வர். இன்னும் சிலர் சந்திரனைப் பின்பற்றிச் செல்வர். வேறு சிலர் தீய சக்தி(களான ஷைத்தான்கள், சிலைகள், மந்திரவாதிகள் போன்ற வழிகேடர்)களைப் பின்பற்றிச் செல்வர். இறுதியில் (எனது) இந்த சமுதாயம் மட்டும் தங்களிடையே நயவஞ்சகர்கள் இருக்கும் நிலையில் எஞ்சியிருக்கும்.
அப்போது வலிவும் மாண்பும் உடைய இறைவன் (அவர்கள் அறியாத தோற்றத்தில்) அவர்களிடம் வந்து, நான் உங்கள் இறைவன் என்பான். உடனே அவர்கள், எங்கள் இறைவன் எங்களிடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம். எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம், என்று கூறுவார்கள். அப்போது அழ்ழாஹ் (அவர்கள் அறிந்த தோற்றத்தில்) அவர்களிடம் வந்து, நானே உங்கள் இறைவன் என்பான். அப்போது அவர்கள், நீ எங்கள் இறைவன்தான் என்பார்கள். பிறகு அவர்களை இறைவன் அழைப்பான். நரகத்தின் மேற்பரப்பில் பாலம் அமைக்கப்படும். (இறைத்தூதர்கள். தத்தம் சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள். நானே அ(ந்தப் பாலத்)தை முதலாவதாகக் கடப்பவன் ஆவேன்.
அன்றைய தினத்தில் இறைத் தூதர்களைத் தவிர வேறுயாரும் பேசமாட்டார்கள். அன்றைய தினத்தில், இறைவா! காப்பாற்று! காப்பாற்று!, என்பதே இறைத் தூதர்களின் பிரார்த்தனையாகும். தொடர்ந்து அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்நரகத்தி(ன் பாலத்தி)ல் கொக்கிகள் அமைந்திருக்கும். அவை (ஊமத்தங்காயின் முள்வடிவில்) சஅதான் செடியின் முள்ளைப் போன்றிருக்கும் என்று கூறிவிட்டு, சஅதான், செடியின் முள்ளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டார்கள். மக்கள், ஆம் (பார்த்திருக்கிறோம்) என்று பதிலளித்தார்கள். தொடர்ந்து அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அந்தக் கொக்கிகள் சஅதான் செடியின் முள்ளைப் போன்றிருந்தாலும் அதன் பருமனை அழ்ழாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அப்போது அந்த கொக்கி மக்களை அவர்களின் (தீய) செயல்களுக்கேற்ப பற்றிப் பிடிக்கும். அவர்களிடம் தம் (தீய) செயல்களை முன்னிட்டு பேரழிவுக்கு உள்ளாபவர்களும் உண்டு. (அந்தப் பாலத்தில்) தட்டுத்தடுமாறிய பின் தப்புபவர்களும் உண்டு.
இறுதியாக இறைவன் நரகத்திற்குரியவர்களில் தான் நாடிய சிலர் மீது கருனை காட்ட நினைக்கும்போது வானவர்களிடம், அழ்ழாஹ்வை வணங்கிக்கொண்டிருந்தவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுமாறு கட்டளையிடுவான். அவ்வாறே வானவர்கள் அவர்களை வெளியேற்றுவார்கள். சஜ்தாச் செய்த அடையாளங்களை வைத்து இவர்களை வானவர்கள் அடையாளம் காண்பார்கள். சஜ்தா செய்ததனால் (ஏற்பட்ட) அடையாளங்களைப் புசிக்கக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துவிட்டான். ஆகவே (அழ்ழாஹ்வை வணங்கியவர்கள்) நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். சஜ்தா செய்த(தால் ஏற்பட்ட) வடுக்களைத் தவிர ஆதமின் மைந்த(னான மனித)ர்களுடைய முழு உடம்பையும் நரகம் புசித்துவிடும்.
இந்த நிலையில் அவர்கள் கருகிப் போனநிலையில் நரகத்திலிருந்து வெளியேறுவார்கள். அப்போது அவர்கள் மீது (மாஉல் ஹயாத் எனும்) ஜீவநீரை ஊற்றப்படும். உடனே அவர்கள் வெள்ளச் சேற்றில் முளைத்துவிடும் தானிய வித்தைப் போன்று செழிப்புடன் எழுவார்கள். பின்னர் அழ்ழாஹ் அடியார்களிடையே தீர்ப்பளித்து முடிப்பான்.
இறுதியாக ஒரே ஒரு மனிதன் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே எஞ்சி நிற்பான். அவன்தான் நரகவாசிகளில் கடைசியாக சொர்க்கத்திற்கு செல்பவன். அவன் நரகத்தை முன்னோக்கியபடி, இறைவா! நரகத்தை விட்டும் என் முகத்தை திருப்புவாயாக! அதன் நச்சுக் காற்று என்னை அழித்துவிட்டது. அதன் ஜுவாலை என்னைக் கரித்துவிட்டது என்று கூறுவான். அப்போது அழ்ழாஹ், (உனது கோரிக்கைப்படி) இவ்வாறு உனக்கு செய்து கொடுக்கப்பட்டால் வேறு எதனையும் நீ கேட்காதிருப்பாயா? என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், இல்லை, உன் கண்ணியத்தின் மீதாணையாக! (வேறெதையும் கேட்கமாட்டேன்) என்பான்.
அந்தமனிதன் அழ்ழாஹ்விடம் தான் நாடிய உறுதிமொழியையும் வாக்குறுதிகளையும் வழங்குவான். அழ்ழாஹ் நரகத்தைவிட்டும் அம்மனிதனுடைய முகத்தை திருப்பிவிடுவான். சொர்க்கத்தை நோக்கி அவனுடைய முகத்தை திருப்பியதும் அம்மனிதன் சொர்க்கத்தின் செழிப்பைப் பார்த்துக்கொண்டு அழ்ழாஹ் நாடிய அளவு நேரம் அமைதியாக இருப்பான். பிறகு, இறைவா! என்னைச் சொர்க்கத்தின் வாசலருகே செல்லவைப்பாயாக! என்று கேட்பான். அதற்கு இறைவன், முன்பு கேட்டதைத் தவிர வேறெதையும் நீ என்னிடம் கேட்கமாட்டேன் என்று கூறி உறுதிமொழியும் வாக்குறுதியும் அளித்தாயே என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், இறைவா! என்னை உன் படைப்புக்களிலேயே நற்கதியற்றவனாய் ஆகிவிடக்கூடாது!’ என்று கூறுவான். அதற்கு இறைவன் “(நீ கேட்டது) உனக்கு வழங்கப்பட்டால் வேறு எதையும் நீ கேட்காமலிருப்பாயா” என்பான். அம்மனிதன் “இல்லை உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதல்லாத வேறெதையும் நான் கேட்கமாட்டேன்” என்பான்.
இதுகுறித்து இறைவனிடம் உறுதிமொழியும் வாக்குறுதியும் அந்த மனிதன் அளிப்பான். உடனே இறைவன் அந்த மனிதனை சொர்க்கத்தின் வாசல் வரை செல்லவைப்பான். அதன் வாசலை அவன் அடைந்ததும் அதன் ரம்மியத்தைக் காண்பான் அதிலுள்ள செழுமையையும் (மனதிற்கு) மகிழ்ச்சி (தரத் தக்கவை)யையும் காண்பான். பிறகு அழ்ழாஹ் நாடிய அளவுக்கு அவன் அமைதியாக இருப்பான். அதன்பின் அந்த மனிதன் “இறைவா! என்னை சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிப்பாயாக!” என்று கூறுவான். அதற்கு உன்னதனாகிய அழ்ழாஹ் “ஆதமின் மகனே! உனக்கு என்ன கேடு! ஏன் வாக்கைக் காப்பாற்றத் தவறிவிட்டாய் முன்பு வழஙகப்பட்டதைத் தவிர வேறெதையும் நான் கேட்கமாட்டேன் என உறுதிமொழியும் வாக்குறுதியும் அளித்தாயே!” என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், இறைவா! உன் படைப்புகளிலேயே என்னை நிற்கதியற்றவனாய் ஆக்கிவிடாதே! என்பான். இம்மனிதனின் நிலை இறைவன் கண்டு சிரிப்பான். பிறகு அவனுக்கு சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதியளித்துவிடுவான்.
அதன் பின் இறைவன் அம்மனிதனிடம், நீ ஆசைப்படுவதைக் கேள்! என்று கூறுவான். அம்மனிதனும் தான் ஆசைப்படுவதை கூறுவான். இறுதியில் அவன் தன் ஆசைகள் யாவும் முற்றுப்பெறும் போது (அவனிடம்) இறைவன், இதைவிட அதிகத்தை நீ ஆசைப்படு! என்று சொல்லிக் கொடுப்பான். இறுதியில் ஆசைகள் முற்றுப் பெற்றுவிடும் போது உன்னதமானவனாகிய அழ்ழாஹ், உனக்கு இதுவும் உண்டு. இதைப்போன்று இன்னொரு மடங்கும் உண்டு என்பான்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-806)
இறுதியாக, அருள்மறை வசனங்களும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான நபிமொழிகளும் போதிக்கும் அடிப்படையில் அகிலத்தின் இரட்சகன் அழ்ழாஹ்வுக்கு தன்னிகரில்லா, தனி உருவம் உண்டு எனவும், அகிலத்தின் இரட்சகனை இவ்வுலகில் ஒருபோதும் பார்க்கவே முடியாது எனவும், நம்புவதுடன் அழ்ழாஹ்வின் பண்புகளை, படைப்புக்களின் பண்புகளுக்கு நிகராக்கி விடாது, நாமாக உருவம் கற்பிக்காது, வலிந்துரை செய்யாது நம்புதல் வேண்டும்.

நன்றி- அழைப்பு



ஸலவாத்துன் னாரிய்யா என்ற இந்தச் சொல் நம் தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒன்றாகும். னாரிய்யா என்றால் நரகம், நெருப்பு என்று பொருள். ஸலவாத்துன் னாரிய்யா என்றால் நரகத்து ஸலவாத்து என்று பொருளாகும். அதாவது நரகம் செல்ல விரும்பக்கூடியவர்கள் இந்த ஸலவாத்தை ஓதினால் எவ்வித சிரமமுமின்றி நேரிடையாக நரகம் செல்லலாம். ஏனென்றால் இந்த நரகத்து ஸலவாத்தின் வாசகங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனுக்கு நிகரான கடவுளாக இணையாக்குகின்ற வாசகங்கள்தான். இதனை 4444 தடவை ஓதினால் செல்வம் பெருகும் நோய் நீங்கும் என்ற நம்பிக்கையில் இஸ்லாமிய(?) பெருமக்கள் தங்கள் வீடுகளில் லெப்பை மார்களை அழைத்து மிக விமரிசையாக ஓதி வருகின்றனர்,

இந்த நரகத்து ஸலவாத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, ஸஹாபாக்களோ அல்லது நான்கு இமாம்களில் யாருமோ ஓதியதில்லை. மாறாக இது பிற்காலத்தில் மார்கத்தை விற்று பிழைப்பு நடத்தக்கூடிய சில முல்லாக்களால் வயிற்றுப் பிழைப்புக்காக உருவாக்கப்பட்ட ஒன்றுதான். இதன் காரணமாகத்தான் 4444 தடவை ஓத வேண்டும் என்று சாதாரணமாக யாரும் எண்ண இயலாத எண்ணிக்கையை உருவாக்கி வைத்துள்ளனர். இந்த 4444 தடவை என்பது அல்லாஹ்வோ அவன் தூதரோ கூறியதில்லை.

இந்த நரகத்து ஸலவாத்தின் கருத்துகள் எந்த அளவிற்கு மார்கத்தோடு மோதுகிறது என்பதைப் பாருங்கள். 

நரகத்து ஸலவாத்தின் அரபி மூலம்

அல்லாஹும்ம ஸல்­ ஸலாத்தன் காமிலத்தன் வஸல்­ம் ஸலாமன் தாம்மன் அலா ஸய்யிதினா முஹம்மதின் தன்ஹல்லு பிஹில் உகத். வதன்ஃபரிஜு பிஹில் குரப் வதுக்லா பிஹில் ஹவாயிஜ். வதுனாலு பிஹிர் ரகாயிபு வஹுஸ்னுல் ஹவாதிம். வயுஸ்தஸ்கல் கமாமு மின் வஜ்ஹிஹில் கரீம். வஅலா ஆ­ஹி வஸஹ்பிஹி ஃபீ குல்­ லம்ஹத்தின் வ நஃபசின் பி அததி குல்­ மஃலூமின் லக்க 

பொருள் :
அல்லாஹ்வே எங்களுடைய தலைவரான முஹம்மது அவர்கள் மீதும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் ஸஹாபிகள் மீதும் ஒவ்வொரு கண்சிமிட்டும் மற்றும் சுவாசிக்கும் நேரமும் உன்னால் அறியப்பட்ட அனைத்து எண்ணிக்கை அளவிற்கு பரிபூரமாண அருளையும் முழுமையான சாந்தியையும் பொழிவாயாக. அந்த முஹம்மத் எப்படிப்பட்டவரென்றால் அவர் மூலமாகத்தான் சிக்கல்கள் அவிழ்கிறது. அவர் மூலம்தான் துன்பங்கள் நீங்குகிறது. அவர் மூலம்தான் தேவைகள் நிறைவேற்றப்படுகிறது. அவர்மூலம்தான் நாட்டங்களும் அழகிய இறுதி முடிவும் பெற்றுக் கொள்ளப்படுகிறது.  அவருடைய திருமுகத்தின் மூலம்தான் மேகத்தி­ருந்து மழை பெறப்படுகிறது. 

சிக்கல்களையும் துன்பங்களையும் நீக்குபவன் யார்

மேற்கண்ட நரகத்து ஸலவாத்தில் நபி (ஸல்) அவர்கள் மூலம்தான் சிக்கல்கள் அவிழ்கிறது என்றும் துன்பங்கள் நீங்குகிறது என்றும் தேவைகள் நிறைவேறுகிறது என்றும் வருகிறது. உண்மையில் சிக்கல்கள் துன்பங்கள் ஆகியவற்றை நீக்குவதும் தேவைகளை நிறைவேற்றுவதும் இறைவனுக்கு மட்டுமே உரிய ஆற்றலாகும். மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டு, இறந்தவர்களுக்கோ அல்லது நல்லடியார்களுக்கோ இது போன்ற ஆற்றல் இருப்பதாகக் கூறுவது நிரந்தர நரகத்தில் சேர்க்கக்கூடிய இணைகற்பிக்கின்ற காரியமாகும்.

அனைத்து துன்பங்களி­ருந்தும் காக்கக்கூடியவன் அல்லாஹ் ஒருவன்தான். அவனைத் தவிர இந்த ஆற்றல் வேறுயாருக்கும் அணுவின் முனையளவு கூட கிடையாது.

ஒவ்வொரு துன்பத்தி­ருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். (அல்குர்ஆன் 6 : 64)

நபி (ஸல்) அவர்களாகவே இருந்தாலும் தனக்கோ மற்றவர்களுக்கோ எவ்வித உதவியும் செய்ய முடியாது என்பதை திருமறைக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.

''அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 7 : 188)

''நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன்'' என (முஹம்மதே!) கூறுவீராக! நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக! அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்'' என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 72 : 20,21,22)

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 10 : 107)

அல்லாஹ்வைத்தவிர மற்றவர்களால் துன்பங்களை சிக்கல்களை நீக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டவர்களைப் பார்த்து இறைவன் கேட்கும் கேள்வியைப் பாருங்கள்

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்! (அல்குர்ஆன் 27 : 62)

நபியவர்களை இறைவனுக்கு நிகராக ஆக்குகின்ற இந்த நரகத்து ஸலவாத்தை நாம் ஓதலாமா? இதனை ஓதிவருகின்ற இஸ்லாமியப் பெருமக்கள் நன்றாகச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
கடந்த 24.25.2010 அன்று சென்னை தியாகராயர் அரங்கத்தில் வைத்து சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவையினருக்கும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையிலான இரண்டாவது விவாதம் அதிக எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மிகவும் பரபரப்பாக ஆரம்பமாகியது.

இறைவனுக்கு உருவம் உண்டா? என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் அல்லாஹ்வையே கடுமையாக விமர்சித்து தான் அல்லாஹ்வின் எதிரி என்பதை பகிரங்கமாக வீடியோவில் பதிவு செய்த அப்துல்லாஹ் ஜமாலி இந்த விவாதத்திலாவது உரிய ஆதாரத்தை முன்வைத்து வாதிடுவார் என்று அரங்கில் கூடியிருந்தவர்கள் எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தார்கள்.

விவாதத்தின் கடைசியாக மாறிய ஜமாலியின் ஆரம்பம்
ஷிர்க் எனும் இணைவைத்தல் மற்றும் பித்அத் செய்பவர்கள் யார்? என்ற தலைப்பில் சரியாக காலை 10.30 மணிக்கு விவாதம் ஆரம்பமாகியது.

முதலாவதாக பேச ஆரம்பித்த சகோதரர் பி.ஜெ அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உள்ளிட்ட சுன்னத் வல் ஜமாத் ஐக்கியப் பேரவையைச் சேர்ந்தவர்களும் அவருடைய கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பவர்களும் தெளிவான இணைவைத்தலில் ஈடுபடுவதால் அவர்கள் அனைவரும் முஷ்ரிக்குகள் தான் என்பதை மிகத் தெளிவாக மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து பேச ஆரம்பித்த அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் பி.ஜெ சொன்னதைப் போல் தான் முஷ்ரிக் என்பதற்கு தானே ஆதாரத்தைக் காட்டி பி.ஜெ அவர்கள் சொன்னதை ஆமோதித்தார் ஜமாலியுடைய முதல் வாதமே விவாதத்தின் கடைசியாக மாறியது என்பதுதான் விவாதத்தின் ஹைலைட்.

தான் முஷ்ரிக் என்பதை நிரூபித்த ஜமாலியின் முதல் கேள்வி
உலகில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பல மொழிகளில் பல கோரிக்கைகளை முன்வைத்தாலும் அவை அனைத்தையும் பிரித்தறிந்து அவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் பதில் கொடுக்கக் கூடிய ஆற்றல் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் தான் இருக்கிறது.

ஆனால் அப்துல்லாஹ் ஜமாலியும் சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவை என்று சொல்லிக் கொள்பவர்களும் இந்த அதிகாரம் நல்லடியார்கள் என அவர்களால் நம்பப்படுபவர்களுக்கும் இருப்பதாக நம்பி ஏற்றுக் கொண்டிருப்பதால் அவர்கள் அணைவரும் இணைவைத்தல் எனும் ஷிர்க்கை செய்து முஷ்ரிக்காக மாறிவிட்டார்கள் என சகோதரர் பி.ஜெ அவர்கள் தெளிவாகக் கூறினார்.

அதை எதிர்த்து குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் முஷ்ரிக் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஜமாலியோ தான் முஷ்ரிக் அல்ல என்று நிரூபிப்பதை விட்டு விட்டு உலகில் உள்ள அணைவரும் ஒரே நேரத்தில் பல மொழிகளில் பல கோரிக்கைகளை முன்வைத்தாலும் அவை அணைத்தையும் பிரித்தறிந்து அவர்கள் அணைவருக்கும் ஒரே நேரத்தில் பதில் கொடுக்கக் கூடிய ஆற்றல் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் தான் இருக்கிறது.என்பதற்கு ஆதாரம் என்ன? என்று கேள்வி கேட்டு அல்லாஹ்வின் ஆற்றலிலேயே சந்தேகத்தை எழுப்பி அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் இந்த அதிகாரம் இருப்பதாக ஒத்துக் கொண்டு தான் முஷ்ரிக் தான் என்பதை முதல் வாதத்திலேயே ஒத்துக் கொண்டார்.

ஜமாலி தவ்ஹீத் ஜமாத்தின் மேல் வைத்த குற்றச் சாட்டுக்களும் பி.ஜெயின் பதில்களும்
உலகில் உள்ள அணைவரும் ஒரே நேரத்தில் பல மொழிகளில் கேட்டாலும் அணைத்தையும் பிரித்தறிந்து அவர்கள் அணைவருக்கும் பதில் தரக்கூடிய ஆற்றல் அல்லாஹ்வுக்கு மாத்திரம் தான் உண்டு என்றால் தசாவதானி ஒரே நேரத்தில் 10 வேலைகளை செய்கிறான் சதாவதானி ஒரே நேரத்தில் 100 வேலைகளை செய்கிறான் இதுவெல்லாம் அல்லாஹ்வுக்கு ஒப்பாகாதா? என்று பி.ஜெயை நோக்கி ஜமாலி கேள்வியைத் தொடுத்தார்.

அதற்கு பதில் அளித்த பி.ஜெ தசாவதானி என்பவன் ஒரே நேரத்தில் 10 காரியங்களை செய்வதும் சதாவதானி ஒரே சந்தர்பத்தில் 100 காரியங்களில் ஈடுபடுவதும் பிறப்பில் உருவாவதோ அல்லது இயற்கையோ கிடையாது மாறாக அது பயிற்சியின் மூலம் பெற்றுக் கொள்வது அப்படி ஒருவர் ஒரே நேரத்தில் 10 அல்லது 100 காரியங்களை செய்வதால் ஒன்றும் அவர் கடவுளாகவோ அல்லது கடவுளின் தன்மைகள் பெற்றவராகவோ மாற முடியாது.