ஜின்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்ன?
RASMIN M.I.Sc

அன்பின் இணையதள வாசகர்களே! ஜின்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்ன? என்ற இந்தத் தலைப்பின் மூலம் நாம் உங்கள் மத்தியில் பகிர இருக்கும் விஷயம் என்னவெனில்,நமக்கு மத்தியில் ஏகத்துவப் பிரச்சாரம் செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் சிலர் கண்ணுக்குப் புலப்படாத இறைவனின் படைப்புகளில் ஒன்றான இந்த ஜின் விஷயத்தில் மிகவும் பாரதூரமான, மார்க்கத்திற்கு முரனான, சிந்தனைக்கு சிறிதளவும் தொடர்பில்லாத பல விஷயங்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள்.

ஜின்களைப் பற்றி பேசுவவர்களும், இணைய தளங்களில் எழுதுபவர்களும் ஜின்கள் பற்றிய உண்மைக் கருத்துக்களை திருமறைக் குர்ஆன்,மற்றும் நபியவர்களின் சுன்னா வழியில் எடுத்துச் சொன்னால் பிரச்சினை இல்லை.ஆனால் சிலரோ நபியவர்களின் சுன்னாவின் கருத்தை தங்கள் கருத்துக்கு சாதகமான வலைத்து,திருப்பி வைத்துக் கொண்டு ஜின்களை வசப்படுத்த முடியும்,ஜின்கள் நமது உடலுக்குள் புகுந்து பிரச்சினைகளை,சிக்கள்களை உண்டாக்கும் வல்லமை மிக்கவை போன்ற குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமான,ஏகத்துவத்தை குழி தோன்டிப் புதைக்கின்ற கருத்துக்களை பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அவர்கள் பிரச்சாரம் செய்யும் கருத்துக்களின் உண்மை நிலையைப் பற்றி ஆராய்வதுடன்,குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் ஜின்கள் பற்றிய ஒரு தெளிவை தருவதற்காகவே இந்தத் தொடர் இங்கு பதிப்பிக்கப் படுகிறது.

இனி ஜின்களைப் பற்றிய நிலைப்பாட்டை ஆராய்வோம்.

ஜின் என்ற வார்த்தையின் விளக்கம்.

ஜின்கள் என்பவர்கள் மனிதனைப் போல் பகுத்தறிவு வழங்கப்பட்ட ஒரு உயிரினமாகும்.மனிதர்களுக்கு இருப்பதைப் போன்ற மார்க்க வரம்புகள்,கடப்பாடுகள் ஜின்களுக்கும் இருக்கிறது.

ஜின் (அல்ஜின்னு) என்ற வார்த்தை திருமறைக் குர்ஆனில் நபியவர்களின் ஹதீஸ்களிலும் பரவலாக பயண்படுத்தப் பட்டுள்ள ஒரு வார்த்தையாகும்.

ஜன்ன என்ற வினைச் சொல்லிலிருந்து ஜின் என்ற வார்த்தை பிரிந்து வந்துள்ளது. மறைத்தல் மறைதல் என்பது இதன் நேரடிப் பொருளாகும். திருமறைக் குர்ஆனில் ஜன்ன என்ற வார்த்தை மூடுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ (6:76)

இரவு அவரை மூடிக் கொண்ட போது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு "இதுவே என் இறைவன்'' எனக் கூறினார். அது மறைந்த போது "மறைபவற்றை நான் விரும்ப மாட்டேன்'' என்றார்.
அல்குர்ஆன் (6 : 76)

எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து தன்னை மறைத்துக் கொள்வதற்கு கேடயம் உதவுவதால் கேடயத்திற்கு ஜுன்னத் என்று சொல்லப்படுகிறது. தாயின் வயிற்றில் உள்ளக் குழந்தை மறைவாக இருப்பதால் அதற்கு ஜனீன் என்று கூறப்படுகிறது.

பாம்புகள் மனிதக் கண்களை விட்டு விரைவில் மறைந்துவிடுவதால் பாம்புகளுக்கு ஜான் என்று கூறப்படுகிறது. ஜின்கள் மனிதக்கண்களுக்கு புலப்படாமல் மறைந்து இருப்பதால் இதற்கு ஜின் என்று கூறப்படுகிறது.
நூல் : லிஸானுல் அரப் பாகம் : 13 பக்கம் : 92

நாம் நம்பிக்கை கொள்ள வேண்டிய ஒரு படைப்பு.

ஜின் என்றொரு இனம் இருப்பதாக திருமறைக் குர்ஆனும்,ஹதீஸ்களும் நமக்குத் தெளிவாக விளக்குகின்றன.அதனால் அந்த குறிப்பிட்ட இனத்தைப் பற்றிய இஸ்லாமியக் கருத்துக்களை நாம் நம்ப வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு கற்றுத் தருகிறது.

وَالْجَانَّ خَلَقْنَاهُ مِنْ قَبْلُ مِنْ نَارِ السَّمُومِ (27) وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ (15:27)

சேற்றிலிருந்த கருப்புக் களிமண்ணால் வடிவமைக்கப்பட்டு மனிதனைப் படைத்தோம். கடுமையான வெப்பமுடைய நெருப்பால் இதற்கு முன் ஜின்னைப் படைத்தோம்.
அல்குர்ஆன்(15 : 27)

وَخَلَقَ الْجَانَّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ(55:15)

தீப்பிழம்பிலிருந்து ஜின்னைப் படைத்தான்.
அல்குர்ஆன் (55 : 15)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். "ஜின்'கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர். (ஆதி மனிதர்) ஆதம்இ உங்களுக்கு (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளதைப் போன்று (களிமண்ணால்) படைக்கப்பட்டார்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (5722)

ஜின்களில் ஆண்,பெண்கள் இருக்கிறார்கள்.

மனிதர்களில் எப்படி ஆண்கள்,பெண்கள் என்ற இரு இணத்தவர்கள் இருக்கிறார்களோ அதே போல ஜின்களிலும் ஆண்,பெண் என்ற இரு இணத்தவர்கள் இருக்கிறார்கள் என்று மார்க்கம் நமக்குத் தெரிவிக்கிறது.

وَأَنَّهُ كَانَ رِجَالٌ مِنَ الْإِنْسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِنَ الْجِنِّ فَزَادُوهُمْ رَهَقًا (72:6)
மனிதர்களில் உள்ள ஆண்களில் சிலர் ஜின்களில் உள்ள சில ஆண்களைக் கொண்டு பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தனர். எனவே இவர்களுக்கு கர்வத்தை அவர்கள் அதிகமாக்கி விட்டனர்.
அல்குர்ஆன் (72 : 6)

ஷைத்தான்கள் ஜின் இனத்தைச் சார்ந்தவர்களாவர். ஷைத்தான்களில் ஆண் பெண் இனம் இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஜின்களில் இவ்விரு இனம் இருப்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும்போது இறைவா! (அருவருக்கத்தக்க செயல்கள் இழிவான எண்ணங்கள் ஆகியற்றைத் தூண்டும்) ஆண் பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (142) தொடர்ந்து வாசிக்க