1 Comments
பொதுமக்கள் பங்கேற்காத தர்ஹா கொடியேற்ற ஊர்வலம் – பரங்கிப்பேட்டையில் தவ்ஹீத் எழுச்சி…
Author: மஸ்தூக்கா Posted under:
சந்தனக்கூடு,
தர்கா
பரங்கிப்பேட்டையில் கொடிகட்டி பறந்த
“கண்டெடுத்த தர்கா கொடியேற்றம் ஊர்வலம்” இந்த வருடம் 28.10.2011 அன்று
நடைப்பெற்றது. மக்களின் எந்தவித ஆதரவின்றியும், ஆராவரம்யின்றியும் குதிரை
மேல் கொடி வைத்து செல்லும் தர்காவை சேர்ந்த ஒரு நபரும், குதிரை ஒட்டுபவர்
ஆகிய இருவரும் மற்றும் ஆட்டோவில் ஒரு சிறுவன் மட்டும் என்று ஊர்வலம் போனதை
காண முடிந்தது.
முன்பு எல்லாம் குதிரை மேல் கொடியை வைத்து பிடிக்க பலர், மிகப்பெரிய
கூட்டம், ஊர்வலம் முன்பு கையில் கொடியேந்தி சிறுவர் பட்டாளம் செல்ல அதனை
தொடர்ந்து தப்ஸ் குழு (பேண்டு வாத்தியம்) முழங்க சினிமா பாடலின்
மெட்டுகளில் இஸ்லாமிய(?) பாடல்கள் என்று வெகு விமர்சையாக நடைப்பெற்ற இந்த
கொடி ஊர்வலம்…!
இன்று மக்களின் ஆதரவின்றி பார்க்கும் போதும், ஒரு காலத்தில் 365
வலிமார்கள் அடங்கிய தர்கா உள்ள ஊர் என்றும் கூறுவார்கள். ஆனால் இன்று ஒரு
சில தர்காக்களை தவிர மற்றவை எங்குயுள்ளது என்று தெரியாத நிலை. இவைகளின்
மூலம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பரங்கிப்பேட்டையில் தவ்ஹீத்தின்
(ஏகத்துவ) எழுச்சியும், வளர்ச்சியும் காணமுடிகிறது. அல்ஹம்துலில்லாஹ்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இது போன்ற இஸ்லாமிய அடிப்படை
கோட்பாட்டை தகர்க்கும் அல்லாஹ்விற்கு இனை வைக்கும் ஷிர்க் என்னும் பெரும்
பாவத்திற்கு எதிரான கடுமையான பிரச்சாரத்தின் விளைவு இன்று பெரும்பலான
மக்களை தர்கா என்னும் அல்லாஹ்விற்கு இனை வைக்கும் வழிகேட்டிலிருந்து மக்களை
மீள வைத்திருக்கு என்றால் அது மிகையாகது.
எல்லாம் புகழும் அகிலத்தை படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே!
செய்தி: முஹம்மது இஸ்மாயில்
நன்றி- TNTJ.NET
இல்லாத பெயரில் பொல்லாத பித்அத்கள்.
கபுராளிகள் தினம் கற்பனையாக உருவாக்கப்பட்டதே!
RASMIN M.I.Sc
அந்த
வகையில் ஷஃபான் மாதம் 15ம் நாளை கபுராளிகள் தினம் (பராஅத் இரவு) என்று
உருவாக்கி அதனை வெகு விமர்சையாக முஸ்லீம்களில் சிலர் கொண்டாடி
வருகிறார்கள்.
இந்த
கபுராளிகள் தினம் என்பது மார்க்கத்தில் உள்ளதா? நபியவர்கள் இதனை காட்டித்
தந்தார்களா? கபுராளிகள் தினம் கொண்டாடுவதினால் நமக்கு ஏதும் நன்மை உண்டா?
மரணித்தவர்களுக்கு ஏதும் நன்மை ஏற்படுமா என்பதையெல்லாம் மிகத் தெளிவாக
விளக்குவதற்காகவே இந்த ஆக்கம் எழுதப்படுகிறது.
நபியவர்கள் காட்டித்தராதவை மார்க்கமாக முடியாது.
இஸ்லாமிய
மார்க்கத்தில் எதையாவது ஒன்றை இபாதத்தாக (வணக்கமாக) செய்ய வேண்டும்
என்றால் அந்த வணக்கம் அல்லாஹ்வினாலும் அவனுடைய தூதரினாலும்
அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். எந்த வணக்கத்திற்கு இந்த அங்கீகாரம்
இல்லையோ அந்த வணக்கம் இஸ்லாத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது,
நிராகரிக்கப்படும்.
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில்
அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான
காரியம் நிராகரிக்கப்படும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 2697
நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
நூல்: முஸ்லிம் 3243
ஆக
நாம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதற்கு இஸ்லாமிய அனுமதியுண்டா என்று
பார்ப்பது முதல் கடமை. கபுராளிகள் தினம் என்று இன்றைக்கு கொண்டாடப்படும்
தினத்திற்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை.
அப்படி ஒரு இரவை அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ காட்டித் தரவும் இல்லை.
கபுராளிகள் தினம் கொண்டாடக் கூடாது, கொண்டாடுவது பாவமான காரியம் என்பதற்கு இந்த அளவுகோளே போதுமானதாகும்.
கபுராளிகள் தினம் எதற்காக ? எப்படி ?
இல்லாத பெயரில் பொல்லாத பித்அத்.
கபுராளிகள்
தினம் என்று கொண்டாடப்படும் ஷஃபான் 15ம் இரவுக்கு பராஅத் இரவு என்று
சொல்லுவார்கள். இந்த பராஅத் இரவில பல விதமான மார்க்கத்திற்கு முரனான
காரியங்களும் அரங்கேற்றம் செய்யப்படும். உண்மையில் இவர்கள் சொல்லிக்
கொள்ளும் பராஅத் இரவு என்றொன்று மார்க்கதில் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக
இல்லை.
குர்ஆனிலும்,
ஹதீஸ்களிலும் லைலதுல் கத்ர் (கத்ருடைய இரவு) என்ற வாசகம் இருக்கிறது.
ஆனால் லைலதுல் பராத் என்றொரு வார்த்தை குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ எங்குமே
காணப்படவில்லை. காரணம் இஸ்லாமிய மார்க்கதில் அப்படியொரு முக்கியத்துவம்
மிக்க இரவு இல்லை.
ஆனால்
ஷபே பராஅத் என்று ஷஃபான் மாதம் 15ம் நாளை கண்ணியப்படுத்துபவர்கள் பேர்
வைத்துள்ளார்கள். ஷபே என்றால் பாரசீக மொழியில் இரவு என்று அர்த்தம். பராஅத்
என்ற வார்த்தையுடன் ஷபே என்பதை சேர்த்து ஷபே பராஅத் (பாராத் இரவு)
என்றாக்கி விட்டார்கள்.
பாரசீக
மொழியில் இந்த நாள் அழைக்கப்படுவதில் இருந்தே கண்டிப்பாக இந்த பித்அத்
(மார்க்கத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட செயல்) ஈரானில் (பாரசீகம்)
இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
மூன்று யாசீன்களும், மூட நம்பிக்கைகளும்.
ஷஃபான்
மாதம் 15ம் நாள் கொண்டாடப்படும் கபுராளிகள் தினத்தில் சில காரியங்கள்
செய்யப்படும். அதில் மிக முக்கியமாக மூன்று யாசீன்கள் ஓதுவார்கள்.
முதல் யாசீன் பாவ மன்னிப்பிற்காகவும்.
இரண்டாவது யாசீன் கபுராளிகளுக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும்.
மூன்றாவது யாசீன் அதிக பரகத் (அபிவிருத்தி) வேண்டியும் ஓதப்படும்.
குர்ஆன்
மீது மக்களுக்குள்ள ஆழ்ந்த மரியாதையை தங்களுக்கு சாதகமாக பயண்படுத்திக்
கொள்ளும் மார்க்கம் படித்ததாக சொல்லிக் கொள்ளும் மேதாவிகள், மார்க்க
வியாபாரிகள் தங்கள் பொருளாதாரத்தை சீராக்கிக் கொள்வதற்காக வேண்டி குர்ஆனையே
கொச்சைப்படுத்தும் இந்த கீழ்த்தரமாக காரியத்தை கொஞ்சம் கூட மன உருத்தல்
இன்றி சர்வ சாதாரணமாக செய்வதுதான் கவளையாக உள்ளது.
100 ரக்அத்தில் தொடங்கி 1000ம் ரக்அத் வரை..........
இந்த
மூன்று யாசீன்களுடன் சேர்த்து அன்றிரவு முழுவதும் சுமார் 100 ரக்அத்கள்
தொழுகை நடத்தப்படும். 100 ரக்அத் என்பது குறைந்த பட்சம் என்பதாகும். சில
ஊர்களில் 1000ம் ரக்அத் என்றும் வைத்துள்ளார்கள்.
அல்லாஹ்வை
நினைத்து நிதானமாக இறையச்சத்துடன் தொழ வேண்டிய தொழுகை என்ற கடமையை கேளி
செய்யும் விதமாக 100 ரக்அத் 1000ம் ரக்அத் என்று விழுந்து விழுந்து
எழும்புவதற்காக ஆக்கியிருக்கிறார்கள்.
உண்மையான
இஸ்லாமிய மார்க்கதில் இப்படியொரு கேளியான, கிண்டளான தொழுகையை அதுவும் ஒரே
இரவில் 100 அல்லது 1000ம் ரக்அத் என்று உருவாக்கியிருப்பது அல்லாஹ்வையும்,
அவன் தூதரையும் கேளி செய்வதற்கு சமனானதாகும்.
இரவு
முழுவதும் கால் வீங்கும் அளவுக்கு இறைவனுக்காக நின்று வணங்கிய நபி (ஸல்)
அவர்கள். 100 ரக்அத் 1000ம் ரக்அத் தொழுகை இருக்குமாக இருந்தால் அதனை
தொழுது காட்டியிருக்கமாட்டார்களா? இதனை சிந்திக்க வேண்டாமா?
மார்க்கத்தில் இல்லாத பாத்திஹாக்களும், பந்தி மேயும் ஆலிம்சாக்களும்.
100
ரக்அத் 1000ம் ரக்அத் தொழுகை மூன்று யாசீன் தவிர, அன்றிரவு வீடுகள் தோறும்
பாத்திஹாக்களும் ஓதப்படும். பாத்திஹாக்கள் என்ற பெயரில் பாக்கட் மணியை சரி
செய்து கொள்வார்கள் ஆலிம்கள். இப்படி பாத்திஹா ஓதுவதற்காக வரும் ஆலிமுக்கு
மூக்கு முட்டுவதற்கு சாப்பாடும் போடப்படும்.
ஆக மொத்தத்தில் தங்கள் வயிரை வளர்ப்பதற்காக மூட நம்பிக்கைகளை உரம் போட்டு வளர்க்கிறார்கள் இந்த ஆலீம்(?) பெருந்தகைகள்.
கபுராளிகள் தினம் (பராத் இரவு) அன்று நோன்பு கூடாது. மத்ஹபுகளின் நிரூபணம்.
கபுராளிகள்
தினம் என்று வர்ணிக்கப் படும் இந்த ஷஃபான் 15ம் இரவில் மக்கள் நோன்பு
நோற்கிறார்கள் அது நபி வழியென்றும் நினைக்கிறார்கள். ஆனால் இப்படியொரு
நோன்பை நோற்பதற்கு நபி வழியில் எங்கும் ஆதாரங்கள் காணப்படவில்லை.
அதே
போல் இந்த நோன்பை வணக்கம் என்று நினைத்து செயல்படக் கூடியவர்களின் மத்ஹபு
நூல்களும் இப்படியொரு நோன்பு இல்லை என்பதை தெளிவாகக் குறிப்பிடுகிறது.
ஷஅபான்
பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராமாகும். ஏனெனில் ஷஅபான் பாதியாகி
விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது
ஆதாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது.
(நூல்: ஷாஃபி மத்ஹபின் இயானதுத் தாலிபீன், பாகம்: 2, பக்கம்: 273)
நபியவர்கள் ஷஃபான் மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்றுள்ளார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (இனி) நோன்பை விடவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள். (இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்' என்று
நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டு விடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த
மாதத்திலும் முழு மாதமும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான்
பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!
(நூல் – புகாரி 1969)
ஷஃபான்
மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்ற நபி (ஸல்) அவர்கள் லைலதுல் பராஅத் (பராஅத்
இரவு) என்ற ஒன்றில் நோன்பு நோற்க வேண்டும் என்றோ அல்லது மூன்று யாசீன்கள்
ஓத வேண்டும் என்றோ அல்லது 100ரக் அத் 1000ம் ரக்அத் என்று தொழ வேண்டும்
என்றோ எந்த இடத்திலும் நமக்குக் கற்றுத் தரவில்லை.
இது
தவிர ஷஃபான் மாதம் 15ம் நாள் பற்றி சிறப்பித்துக் கூறப்படும் அனைத்துச்
செய்திகளும் பலவீனமானவையாகும். ஆக மொத்தத்தில் மார்க்கத்தில் இல்லா ஒரு
காரியம், அழகாக மக்கள் மத்தியில் சித்தரிக்கப்பட்டு அல்லாஹ்வின் பேராளும்,
அவனுடைய தூதரின் பெயராலும் லாவகமாக அரங்கேற்றப்படுகிறது.
இப்படிப்பட்ட
தீய காரியங்களை விட்டு விளகி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டிய வழியில்
மாத்திரம் வாழ்ந்து மறுமையில் வெற்றி பெருவோமாக!
நன்றி-சத்தியம் வந்தது
மிஹ்ராஜ் இரவு எப்போது ? from Ashkar Fuard on Vimeo.
அஸ்ஸலாமு அலைக்கும்
(வரஹ்)
(இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
எனக்கு எதையும்
இணையாக்காமல் என்னிடமே கேளுங்கள்-
Thanks
to Brother அபூயாசிர், உடன்குடி
அல்லாஹ் மனிதனைப் படைத்து
அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்துள்ளான். அல்லாஹ் மனி தனிடம் கூறுவது
ஒன்றே ஒன்றுதான். ‘நீ எனக்கு மட்டுமே அடிபணியவேண்டும் எனக்கு எதையும் இணையாக்காதே’
என்பது தான் அது! இவ்வாறு இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று
தான் அல்லாஹ்வை மட்டும் அழைத்து பிரார்த்தனை செய்வது!
அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்’ பிறகு, ‘என்னை அழையுங்கள்! உங்களுக்கு பதிலளிக்கிறேன். எனக்கு அடிபணி வதை விட்டும் பெருமையடிப் போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். (40:60) என்ற இறை வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள். அறிவிப்பு: நுஃமான் பின் பஷீர்(ரழி) நூல்:திர்மிதி.
எனவே இந்தப் பிரார்த்தனை என்ற வணக்கத்தை வல்ல அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே செய்ய வேண்டும். அல்லாஹ் அல்லாத வேறு எவரிடமும் நம்முடைய தேவைகளைக் கேட்கக் கூடாது என்பது தெளிவாகிறது. ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்தில் பெரும்பாலான மக்கள் இந்த இறைவசனத்தற்கு மாற்றமாக சமாதி வழிபாட்டில், அவ்லியாக்கள், நாதாக்கள் என்ற பெயரில் வழிபடும் அவநிலையை காண நேரிடுகிறது. இந்த அவல நிலைக்கு 7 வருடம் அரபு மதரஸாக்களில் மார்க்கக் கல்வி பயின்ற மவ்லவிமார்களும் ஆதரவு தெரிவிப்பது, அறியாத மக்களை, நாளை மறுமையில் இறைவனுக்கு இணை வைப்பான ‘ஷிர்க்’ என்ற மாபாதக செயலை செய்ததற்கான கூலியாக நரக வேதனையில் கொண்டு போய் சேர்க்கும் என்ற உண்மையை மறைப்பது ஏன்?
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ‘நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்’ என்று அல்லாஹ் அல்குர்ஆன் 2:186 வசனத்தில் கூறுகின்றான்.
பிரார்த்தனையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்:
பிரார்த்தனை செய்யும்போது அனைத்து ஆற்றல்களையும் உள்ளடக்கியிருக்கும் சர்வ வல்லமை படைத்தவனின் முன்னிலையில் நாம் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் அடக்கத்தோடும், பணிவோடும் பிரார்த்திக்க வேண்டும். உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55) நபி ஜகாரிய்யா (அலை) அவர்கள் இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். (அல் குர்ஆன் 19:3)
அச்சத்துடனும் உறுதியான நம்பிக்கையுடனும் அல்லாஹ்வை மட்டும் பிரார்த்தனை செய்யுங்கள் ‘நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.’ (அல்குர்ஆன் 7:6)
வலியுறுத்திக்கேட்பது:
அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் போது ‘நீ விரும்பினால் தா! இல்லையென்றால் தர வேண்டாம்’ என்பது போன்று கேட்கக் கூடாது. மாறாக, ‘இதை நீ தந்து ஆகவேண்டும் உன்னால் தான் தரமுடியும். வேறு யாராலும் தரமுடியாது’ என்று வலியுறுத்திக் கேட்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் பிரார்த்தனை செய்தால் வலியுறுத்திக் கேளுங்கள். அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு! என்று கேட்க வேண்டாம். வலியுறுத்திக் கேட்பது அல்லாஹ்வை நிர்பந்திக்காது. ஏனெனில் அவனை (அல்லாஹ்வை) நிர்ப்பந்திப்பவர் யாருமில்லை. அறிவிப்பு: அனஸ்(ரழி) நூல்: புகாரி.
பாவமானதைக் கேட்கக் கூடாது:
அல்லாஹ்;வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘நான் பிரார்த்தனை செய்தேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப் படவில்லை’ என்று மனிதன் கூறுகின்றான். உறவை துண்டிக்கும் விஷயத்திலும் பாவ மானவற்றிலும் பிரார்த்தனை செய்தால் அது அந்த அடியாருக்கு (பிரார்த்தனை செய்பவருக்கு)ப் பதில் அளிக்கப்படாது.
அறிவிப்பு: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்
அவசரப்படக்கூடாது:
பிரார்த்தனை செய்யும்போது அவசரப்படக்கூடாது. பலமுறை திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். ஓரிரு முறை மட்டும் கேட்டு விட்டு, நான் பிரார்த்தனை செய்தேன் எனக்கு இறைவன் எதுவும் தரவில்லை என்று கூறி பிரார்த்தனை செய்வதையே விட்டு விடக்கூடாது. இத்தகைய எண்ணத்துடன் பிரார்த் தனை செய்தால் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது ‘நான் பிரார்த்தனை செய்தேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப் படவில்லை என்று கூறி நீங்கள் அவசரப் படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்க ப்படும்’. என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு:அபூஹுரைரா(ரழி)நூல்: புகாரி.
நிராசை அடையக்கூடாது:
சிலர் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள் அவர்கள் கேட்கும் அந்த காரியம் நிறைவேறவில்லையென்றால் அல்லாஹ்வின் அருளில் நிராசை அடைந்து விடுவார்கள். அல்லாஹ்வின் அருள் விசாலமானது. எனவே அவனது அருளில் நிராசையடையக் கூடாது ‘அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (அல்லாஹ்வை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்கமாட்டார்கள்’ (அல்குர்ஆன் 12:87)
’என் அடியார்களே! எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைக்க வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்: மிக்க கருணையுடையவன் என் று (அல்லாஹ் கூறுவதை) (39:53) தெரிவிப்பீராக!
உணவு உடை ஹலாலாக இருத்தல்:
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங் களுக்கு அளித்து உள்ளவற்றிலிருந்து தூய் மையானவற்றையே உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப் பின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங் கள். (2:172) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தூய்மை யானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ளமாட்டான். அல்லாஹ் நபிமார்களுக்கு எதை ஏவினானோ அதையே முஃமின்களுக்கும் ஏவுகின்றான் என்று கூறிவிட்டு, ‘தூதர்களே! நல்ல பொருள் களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள். (ஸாலி ஹான) நல்ல அமல்களைச் செய்யுங்கள்! நிச் சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன். (23:51)
ஒரு மனிதரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். ‘அவனோ நீண்ட தூரம் பயணத்தில் இருக்கின்றான். அவனுடைய தலை புழுதிபடிந்த பரட்டையாக இருக்கின்றது. அவன் வானத்தின்பால் கைகளை உயர்த்தி, எனது இறைவனே! எனது இறைவனே! என்று அழைக்கின்றான். அவனது ஆடை அவனது உணவு அவனது குடிப்பு ஆகிய அனைத்தும் ஹராமாக இருக்கின்றது. அவனோ ஹராமில் மூழ்கிவிட்டான். இந்த நிலையில் அவனது பிரார்த்தனை எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்
அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிகவும் கருணையுள்ளவன். அந்த அடியான் வெளித் தோற்றத்தை வைத்துக் கொண்டு அவனுடைய அறியாமையினால் தீங்கு தரக்கூடியதைக் கேட்பான். உதாரணமாக, தனக்கு அதி கப்படியான, செல்வம்ஃபணம் வேண்டுமென்று பிரார்த்தனை செய்வான். ஆனால் அந்த செல்வம் பணம் அவனை இறை நிராகரிப்புக்கு இழுத்துச் செல்லும் என்றிருந்தால் அதைக் கொடுக்காமல் அதைவிடச் சிறந்ததை இறைவன் கொடுப்பான். ஒருவன் தனக்கு ஏற்படவுள்ள ஆபத்தை உணராமல் தனது தேவையைக் கேட்கிறான். அனைத்தையும் அறிந்த அல்லாஹ் அதைக் கொடுப்பதற்கு பதிலாக அவனுக்கு வரவிருக்கும் ஆபத்தை நீக்குகிறான். அதுவும் இல்லையென்றால் அவன் கேட்டதைக் கொடுக்காமல் அதற்கு பகரமாக மறுமையில் அவனது நிலையை உயர்த்துவான்.
’உறவைத் துண்டிக்காமலும் பாவமான காரியம் அல்லாமலும் எந்த ஒரு பிரார்த்த னையை ஒரு முஸ்லிம் செய்தாலும் அவரது அந்த பிரார்த்தனை விரைவாகப் பதில் அளிக்கப்படும் அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒரு சேமிப்பாக ஆக்குகிறான் அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்க வாறு அவனது பாவத்தை அழிக்கின்றான். இவ்வாறு மூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் அல்லாஹ் பதிலளிக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன? என்று நபித் தோழர்கள் கேட்டனர். அதற்கு ‘அல்லாஹ் அதிகமாக்குவான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஸயீத்(ரழி) நூல்: அஹ்மத்.
ஒரு அடியான் அல்லாஹ்விடம் பிரார்த் தனை செய்யும்போது அவனை வெறுங்கையு டன் அனுப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகின்றான். உங்களுடைய இறைவன் சங்கையானவன் அவனுடைய அடியார் தனது கையை அவன் பக்கம் உயர்த்தும் போது அந்த இரு கைகளையும் வெறுமனே அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள். அறிவிப்பு: சல்மான்(ரழி) நூல்:இப்னு மாஜா.
பதிலளிக்கப்படும்பிரார்த்தனை கள்:
கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகை யையும் நிறைவேற்றிய பின் கேட்கப்படும் பிரா ர்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும். எந்தப் பிரார்த்தனை செவியேற்கப்படும்? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், இரவின் கடைசியிலும், கடமையாக்கப்பட்ட தொழுகைக்குப் பின்னரும் கேட்கும் பிரார்த்தனை ஆகும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பு: அபூஉமாமா(ரழி) நூல்: திர்மிதீ
இரவின் கடைசி நேரத்தில்…
இரவின் கடைசிப் பகுதியில் கேட்கப்படும் பிரார்த்தனை பதிலளிக்கப்படும் பிரார்த்தனைகளில் ஒன்று. எனவே அந்த நேரத்திலும் அதிகமாகப் பிரார்த்திக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரவை மூன்றாக பிரித்து கடைசிப் பகுதியில் அல்லாஹ் முதல் வானத்திற்கு தினமும் இற ங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் கேட்டால் நான் அதை ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் மன்னிப்புக் கேட்டால் நான் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான். அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி 1ஃ1145 அல்லாஹ் தன்னுடைய நெறிநூலாகிய அல்குர்ஆனில் இறை நம்பிக்கை உடையவர் இரவின் கடைசி நேரத்தில் மன்னிப்பு கேட்பவராக இருப்பார் என்று கூறுகின்றான். (அல்குர்ஆன் 3:17)
ஸஜ்தாவின்போது….
ஓர்அடியான் அல்லாஹ்விடம் மிக நெருக் கமாக இருக்கும் நேரம் ஸஜ்தாவாகும். எனவே இந்த சந்தர்ப்பத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. ஸஜ்தாவில் இருக்கும் நிலையில் ஓர் அடியான் தன் னுடைய இறைவனை நெருங்குகின்றான் எனவே ஸஜ்தாவில் பிரார்த்தனையை அதிகப் படுத்துங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்.
பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில்..
பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அனஸ்(ரழி) நூல்: அபூதாவுத்.
தந்தை பிள்ளைகளுக்கான பிரார்த்தனையின் போது….
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 1.அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. 2. பிரயாணியின் பிரார்த்தனை. 3.தந்தை தனது பிள்ளைகளுக்காகச் செய் யும் பிரார்த்தனை. அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: இப்னு மாஜா
ஜும்ஆ நாளில்…..
வெள்ளிக்கிழமை அன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தால் அதை அல்லாஹ் அவருக்கு கொடுக்காமல் இருப்பதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த நேரம் மிகக் குறைவானது என்பதைத் தமது கையால் சைகை காட் டினார்கள். அபூஹுரைரா(ரழி) புகாரி.
நோன்பாளி நோன்பு திறக்கும் போது…
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று நபர்களின் பிரார்த்தனை மறுக்கப்படாது. 1. நீதியான அரசன், 2. பாதிக்கப்பட்டவர் செய்யும் பிரார்த்தனை 3. நோன்பாளி நோன்பு திறக்கும்போது கேட்கும் பிரார்த்தனை. அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: இப்னுமாஜா.
எனவே நாம் பிரார்த்தனை செய்யும் போது, நம்மைப் படைத்த அல்லாஹ்வை மட்டுமே அழைத்து முறையிட்டு, அவனுடன் யாரையும் கூட்டாக்காமல், பிரார்த்தனையின் போது மேற்கண்ட குர்ஆன் ஹதஃத் ஒழுங்கு முறைகளுடன் பிரார்த்திப்போமாக! வல்ல இறைவன் நம்முடைய அனைத்து பிரார்த்தனைகளையும் ஏற்றுக் கொள்வானாக! ஆமீன்.

பதிலளிக்கப்படும்பிரார்த்தனை

பாவமன்னிப்பு
கோருவதில் தலையாய துஆ
கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு
அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து
விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا
إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ
وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ
بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا
يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ(இ)
லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்(இ)து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க
மஸ்ததஃ(த்)து அவூது பி(இ)(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ(இ)வு ல(க்)க பி(இ)னிஃமதி(க்)க
அலய்ய, வஅபூ(இ)வு
ல(க்)க பி(இ)தன்பீ(இ) ப(எ)க்பி(எ)ர்லீ ப(எ)இன்னஹு லா யஃக்பி(எ)ருத்
துனூப(இ) இல்லா அன்(த்)த
இதன் பொருள் :
இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர
வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும்
வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு
உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த
பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும்
பாவங்களை மன்னிக்க முடியாது. ஆதாரம்:
புகாரி 6306
இணைகற்பித்தால்
உங்கள் சுவனம் ஹராமாக்கப்படும்
அல்லாஹ்
கூறுகிறான்: -
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )

சிந்திக்கும் சமுதாயம் !
முதிர்ந்த அறிவு பெற்ற சமுதாயம் !
சிறந்த இறைத்தூதைப் பெற்ற சமுதாயம் !
உலகின் சிறந்த வழிகாட்டியான இஸ்லாத்திற்கு சொந்தம் கொண்டாடும் ஒரே சமுதாயம் ! என்றெல்லாம் பல வகையான பெயர்களையும், பெருமைகளையும் தன்னகத்தே கொண்டவர்கள் தான் முஸ்லீம்கள் என்று உலகம் முழுவதும் பேசப்படுகிறார்கள்.
உண்மையில் மேலே சொன்ன எந்த வர்ணனையும் பொய்யானது அல்ல. இட்டுக் கட்டப்பட்டதும் அல்ல. சுய இலாபத்திற்காக சேர்த்துக் கொள்ளப்பட்டதும் அல்ல. முஸ்லீம்கள் என்றால் மேலே சொன்ன அனைத்து செயல்பாடுகளும் உரிமை கொண்டாட தகுதி பெற்றவர்கள் தான்.
ஆனால் இன்றைய முஸ்லீம்கள் அதற்குத் தகுதியானவர்களா என்று பார்க்கும் போது கேள்விக் குறிதான் நம் கண்முன் நிற்கிறது.
அல்லாஹ்வை வணங்க வேண்டிய சமுதாயம், அவ்லியாக்களை (?) வணங்குகிறது.
நபியைப் பின்பற்ற வேண்டிய சமூகம் நாதாக்களை (?) வழிகாட்டி என்கிறது.
இணை துணை இல்லாமல், தாய், தந்தை இல்லாமல், குழந்தை, வாரிசுகள் யாரும் இல்லாமல் அனைத்து வல்லமையும் பொருந்திய இந்த உலகத்தை படைத்துப் பரிபாளிக்கும் வல்ல அல்லாஹ்வை வணங்க வேண்டியவர்கள் அவ்லியாக்கள், நாதாக்கள் என்று சொல்லிக் கொண்டு கல்லரைகளில் அடங்கப்பட்டிருக்கும் மரணித்த உடல்களை புஜை செய்து தூய ஏகத்துவக் கொள்கையை விட்டும் தடம் புரண்டு கல்லரைக்கு காணிக்கை போடும் கப்ரு வணங்கிகளாக மாறியிருப்பதைப் பார்க்கிறோம்.
மண்ணரை வாழ்வையே நாசப்படுத்தும் இந்தக் கல்லரை வழிபாட்டை விட்டும் உண்மை முஃமின்கள் விலகியவர்களாக, தூய ஏகத்துவத்தின் பக்கம் மாத்திரம் தலை சாய்க்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
காது கேட்காதவர்களிடம் காவல் தேடுவதா?
நாம் ஒருவரிடம் நமது தேவைகளை முன்வைப்பதாக இருந்தால் அவா் சுய புத்தியுள்ளவராக, நமது தேவையை தெரிந்து கொள்ளக் கூடியவராக, நமக்கு பதில் தரக்கூடியவராக இருக்க வேண்டும். இந்த நிலையில் இல்லாத சுய புத்தியற்ற, காது கேட்காத, எந்த விதமான தொடர்பும் வைக்க முடியாதவரிடத்தில் நமது தேவையை முன்வைப்பதில் ஏதாவது நன்மை கிடைக்க முடியுமா?
உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணரைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.(35 - 22)
மேற்கண்ட வசனம் ஒரு முக்கியமான விஷயத்தை நமக்குத் தெளிவுபடுத்துகிறது. அதாவது உயிருடன் இருப்பவர்களும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள் என்ற தகவலை ஆரம்பமாக அந்த வசனம் நமக்குத் தருகிறது.
உயிருடன் இருப்பவரிடம் நாம் எதையாவது கேட்டால் அவரால் முடிந்தால் அதனைத் தருவார் இல்லாவிட்டால் தரமுடியாது என்று சொல்லிவிடுவார் ஆனால் இறந்தவருக்கு இந்த இரண்டுமே முடியாத காரியம். நாம் கேட்பதை தரவும் முடியாது. தரமுடியாது என்பதை நம்மிடம் சொல்லவும் முடியாது. அதனால் இறைவன் அதன் தொடர்ச்சியில் மண்ணரைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை. என்று தெளிவாகக் குறிப்பிடுகிறான்.
மரணித்தவர்களிம் தங்கள் தேவையை முன்வைத்து அவா்களை இறைவனின் சக்தி பொருந்தியவர்களாக எண்ணுபவர்கள் இந்த வசனத்தை உற்று கவணிக்கக் கடமைப் பட்டுள்ளார்கள்.
கல்லரைகளில் உள்ளவர்களிடம் கேட்பதினால் நமது மண்ணரை வாழ்வு நாசமாகிவிடும் என்பதை அவா்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்க்கின்ற காதுகள் உள்ளனவா? (7-195)
கல்லரைகளை வணங்குபவர்கள் அங்கு அடக்கப்பட்டிருப்பவர்களை எப்படியெல்லாம் நினைத்து வணங்குவார்களோ அந்த அனைத்து நம்பிக்கையும் பொய்யானது, தவறானது என்பதை சுட்டிக் காட்டும் விதமாகத் மேற்கண்ட வசனம் அமைந்திருக்கிறது.
யாரை அழைத்தால் அவர் பதில் தருவார் என்று நம்புகிறார்களோ அப்படிப்பட்டவரைப் பற்றி இறைவன் சில கேள்விகளை முன்வைக்கிறான்.
அவ்லியாக்கள் என்று வணங்கப்படுபவர்களுக்கு,
நடக்கும் கால்கள் இருக்கிறதா?
பிடிக்கும் கைகள் இருக்கிறதா?
பார்க்கின்ற கண்கள் இருக்கிறதா?
கேட்கின்ற காதுகள் இருக்கிறதா?
இதுதான் இறைவன் கல்லரை வணங்கிகளையும், சிலை வணங்கிகளையும் பார்த்து கேட்கும் கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது என்பது உள்ளங்கையில் நெல்லிக் கணி போல் தெளிவானதாகும்.
அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவா்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவா்கள் உதவ முடியாது. (7-197)
யாரிடம் தமது கேள்விகளை முன்வைக்கிறார்களோ அவா்களால் அதற்கு பதில் தரமுடியாதென்றும் தங்களுக்குத் ஏதும் தேவை இருந்தால் கூட அவா்களால் உதவிக் கொள்ள முடியாது என்பதையும் இறைவன் சொல்லிக் காட்டுகிறான்.
தனது தேவையைக் கூட நிறைவேற்ற முடியாத கையாலாகவர்களாக இருக்கும் கல்லரைவாசிகளிடம் கையேந்துவதென்பது இறைவனை மறுத்து கல்லரைவாசிகளை கடவுலாக்குவதாகும். இப்படிப்பட்டவர்களின் மண்ணரை வாழ்வு வீனாகிவிடும் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இறந்தவர்கள், இறந்தவர்களே !
இறந்தவர்களிடம் யார் கையெந்தி அவா்களை கடவுளர்களாக நினைக்கிறார்ளோ அவா்களைப் பார்த்து இறைவன் சொல்லக் கூடிய வாசகம் மிகவும் தெளிவானதாகவும் மரணத்தின் பின் மரணித்தவர்களுக்கும் உலகுக்கும் தொடர்பில்லை என்பதையும் மிகவும் தெளிவாக விளக்குகிறது.
அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள் அவா்களே படைக்கப்படுகின்றனர்.(16-20)
யாரிடமாவது நாம் நமது தேவையை முன்வைத்தால் அவா்கள் படைக்கக் கூடிய ஆற்றல் பொருந்தியவர்களாக இருக்க வேண்டும் ஆனால் உலகில் அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் வேறு எந்த கடவுளுக்கும் (?) அந்தத் தன்மை கிடையாது. அவா்களால் படைக்க முடியாது. ஏன் என்றால் அவா்களே படைக்கப்பட்டுத்தான் இருக்கிறார்கள். படைக்கப்பட்டவர்கள் எப்படி படைக்க முடியும் என்பதைச் சிந்தித்தாலே படைத்தவனின் யதார்த்தமும், இறைவனின் வல்லமையும் நமக்குத் தெரியவரும்.
அவா்கள் இறந்தவர்கள், உயிருடன் இருப்போர் அல்லா் எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவா்கள் அறிய மாட்டார்கள். (16-21)
இறந்தவர்கள் இறந்தவர்கள் தான் அவா்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு அவா்களிடம் கையேந்துவது பெரும் வழிகேடு மட்டுமல்லது கல்லறைகளில் யார் அடக்கப்பட்டுள்ளார்களோ அவா்கள் எப்போது மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பது அவா்களுக்கே தெரியாததாகும்.