காயல்பட்டிணத்தைச் சார்ந்த மஹ்மூத் என்பவரால் சில ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதே முஹ்யித்தீன் மவ்லிது ஆகும். முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களை அல்லாஹ்வின் தூதருக்கு நிகராகவும் அல்லாஹ்வின் தூதரை விடச் சிறந்தவராகவும் காட்டும் வகையில் இந்த மவ்லிது அமைந்திருக்கிறது. சில வரிகள் அவரை அல்லாஹ்வுக்கு நிகராகக் காட்டும் வகையில் அமைந்திருக்கின்றன. அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நிகழ்த்தியதாகக் கூறப்படும் அற்புதங்கள்லி குர்ஆன்லி ஹதீசுடன் நேரடியாக மோதும் வகையில் அமைந்திருக்கின்றன. அவற்றில் சிலவற்றை நாம் காண்போம்.

அபுல் மஆலி என்பார் அப்துல் காதிர் ஜீலானியிடம் வந்துி ''என் மகனுக்குப் பதினைந்து மாத காலம் காய்ச்சல் விலகாமல் உள்ளது'' என்றார். அதற்கு அப்துல் காதிர் ஜீலானி அவர்கள்லி ''காய்ச்சலே! நீ எப்போது இவனைப் பிடித்தாய்? நீ ஹில்லா எனும் ஊருக்குச் சென்று விடு!' என்று உன் மகனுடைய காதில் கூறு'' என்றார்கள். அவர் கட்டளையிடப்பட்டவாறு செய்தார். அதன் பின் அவனுக்குக் காய்ச்சல் ஒரு சிறிதும் மீண்டும் வரவில்லை. பிறகு ஹில்லா எனும் ஊரில் உள்ள ராபிளிய்யா கூட்டத்தினர் அனேகர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாகச் செய்தி வந்தது.

இவ்வாறு முஹ்யித்தீன் மவ்லிதில் கூறப்பட்டுள்ளது.

காய்ச்சல் பதினைந்து மாத காலம் நீடிக்குமா? என்ற கேள்வியை விட்டு விடுவோம். மார்க்க அடிப்படையில் இந்தக் கதை நம்பத்தக்கது தானா?

இந்தக் கதையில் அப்துல் காதிர் ஜீலானிலி நோய் தீர்க்கும் அதிகாரத்தைப் பெற்றிருப்பதாகவும் நோயை வழங்கும் அதிகாரம் பெற்றிருப்பதாகவும்லி காய்ச்சல் என்ற நோயுடன் அப்துல் காதிர் ஜீலானி பேசியதாகவும் கூறப்படுகிறது.

நோய்களை வழங்குபவனும்லி அதை நீக்குபவனும் அல்லாஹ் தான். இந்த அதிகாரத்தில் எவருக்கும் அல்லாஹ் எந்த உரிமையையும் வழங்கவில்லை. இது இஸ்லாத்தின் அடிப்படையான கொள்கை. இதை திருமறைக் குர்ஆனிலிருந்தும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலிருந்தும் அறியலாம்.

நான் நோயுற்றால் எனக்கு நோய் நிவாரணம் வழங்குபவன் இறைவன் என்று இப்றாஹீம் (அலை) கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்.(அல்குர்ஆன் 26:80)

இந்த அப்துல் காதிர் ஜீலானியை விடப் பல கோடி மடங்கு சிறந்தவர்களான இப்றாஹீம் நபியவர்கள், அந்த அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியது என்கிறார்கள். இவரோ நோய் தீர்க்கும் அதிகாரம் தமக்குரியது என்கிறார்.

இந்தப் பூமியிலோலி உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.(அல்குர்ஆன் 57:22)

எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப்பத்தைக் கொண்டே தவிர இல்லை.(அல்குர்ஆன் 54:11)
இந்த வசனங்களை நிராகரிக்கும் வகையில் இந்தக் கதை அமைந்தள்ளது.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ நபித்தோழர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினரில் பலர் நோய்வாய்ப்பட்டனர். அந்தச் சந்தர்ப்பங்களில் நபி (ஸல்) அவர்கள் அந்த நோயைப் பார்த்துப் பேசி வேறு ஊருக்கு அனுப்பவில்லை. ஏன்? நபி (ஸல்) அவர்களே கூட நோய்வாய்ப்பட்டார்கள்.

''மனிதர்களின் இறைவா! இந்தத் துன்பத்தை நீக்கு! இறைவா! நீ நிவாரணம் அளிப்பாயாக! உனது நிவாரணம் தவிர வேறு நிவாரணம் இல்லை'' என்று துஆச் செய்யுமாறு தான் அந்தச் சந்தர்ப்பங்களில் தம் தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். (பார்க்க: புகாரீ 5675)

நபி (ஸல்) அவர்களுக்குக் கூட இல்லாத அதிகாரம் அப்துல் காதிருக்கு வழங்கப்பட்டதாக இந்தக் கதை கூறுகிறது.


அந்தச் சிறுவனிடம் இருந்த காய்ச்சலை நீக்கியதோடு இவர் நிற்கவில்லை. ஹில்லா என்று ஊருக்கு அந்தக் காய்ச்சலைத் திருப்பி விட்டாராம். கடுகளவு இஸ்லாமிய அறிவு உள்ளவன் கூட இதை நம்பமுடியாது.

உஹத் போர்க்களத்தில் நபி (ஸல்) அவர்களின் பற்கள் உடைக்கப்பட்ட போது அவர்கள் கோபமுற்று ''நபியின் முகத்தில் இரத்தச் சாயம் பூசிய கூட்டத்தினர் எப்படி வெற்றி பெறுவர்?'' என்று கூறினார்கள்.

உமக்கு அதிகாரத்தில் எந்தப் பங்கும் இல்லை (அல்குர்ஆன் 3.128) என்ற வசனம் இறங்கியது.

எப்படி இவர்கள் வெற்றியடைய முடியும்? என்று தான் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இவ்வாறு கூறுகின்ற அதிகாரம் கூட நபியவர்களுக்கு இல்லை என்று இறைவன் பிரகடனம் செய்கிறான். அப்துல் காதிர் ஜீலானியோ ஹில்லா என்ற ஊர்வாசிகளை நோக்கிக் காய்ச்சலை அனுப்பி வைத்தாராம்.

திருக்குர்ஆனையும்லி நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் நம்பக்கூடிய முஸ்லிம்களே! அப்துல் காதிர் ஜீலானியை நபி (ஸல்) அவர்களை விடவும் மேலானவராக அல்லாஹ்வுக்குச் சமமானவராகக் காட்டும் இந்தக் கதையை உண்மையான முஸ்லிம் எழுதியிருப்பானா? அல்லது அன்னியர்களின் சதித் திட்டத்தில் இந்தக் கதை உருவாக்கப்பட்டதா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதும் இந்தக் கதையை மவ்லிது என்ற பெயரில் ஓதி வருவது நன்மையைப் பெற்றுத் தருமா? அல்லாஹ்வின் கோபத்தைப் பெற்றுத் தருமா? என்று சிந்தித்துப் பாருங்கள்.

உங்களுக்குப் பொருள் தெரியாது என்பதால் மார்க்க அறிஞர்கள் உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது இந்தக் கதையிலிருந்து உங்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லையா?
முஹ்யித்தீன் மவ்லிதில் உள்ள மற்றொரு கதையை பாருங்கள்:

ஜும்ஆவுக்காக அப்துல் காதிர் நடந்து சென்ற போது அவரது ஆசிரியர் ஹம்மாத் அவரை நதியில் தள்ளினார். இதனால மண்ணறையில் ஹம்மாதின் கை சூம்பி விட்டது. இதைக் கண்ட அப்துல் காதிர் அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள். கப்ரில் உள்ள ஐயாயிரம் பேர் இதற்கு ஆமீன் கூறினார்கள். இதை அப்துல் காதிர் மக்களிடம் கூறியவுடன் ஹம்மாதின் சீடர்கள்லி இதை நிரூபிக்க வேண்டும் என்று அப்துல் காதிரிடம் கேட்டனர். அல்லாஹ் யூசுஃபுக்கும்லி அப்துர் ரஹ்மானுக்கும் இந்தக் காட்சியைக் காட்டினாôன். தங்கள் தவறுக்காக ஹம்மாதின் சீடர்கள் பாவமன்னிப்புத் தேடினார்கள்.

இது முஹ்யித்தீன் மவ்லிதில் காணப்படும் இந்த வரிகளின் கருத்து. இந்த வரிகளுக்கு விளக்கவுரையாக மவ்லித் புத்தகத்தில் இடம் பெறும் ஹிகாயத் என்னும் பகுதியையும் பார்த்து விட்டு இந்தக் கதையில் வரும் அபத்தங்களை ஆராய்வோம்.

ஒரு நாள் நீண்ட நேரம் அப்துல் காதிர் வெயிலில் நின்றார். அவருக்குப் பின் ஏராளமான வணக்கசாலிகள் நின்றனர். நீண்ட நேரம் நின்று விட்டுப் பின்னர் சந்தோஷத்துடன் அவர் திரும்பியதைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர் ''ஒரு நாள் நான் ஹம்மாதுடன் ஜு ம்ஆ தொழச் சென்றேன். நதியோரத்தை நாங்கள் அடைந்த போது என்னை அவர் நதியில் தள்ளினார். அப்போது நான் 'அல்லாஹ்வின் பெயரால் ஜும்ஆவின் குளிப்பை நிறைவேற்றுகிறேன்' என்றேன்.

நதியிலிருந்து வெளியேறி அவர்களைத் தொடர்ந்தேன். அவரது சீடர்கள் என்னைப் பழித்தனர். அவர் அதைத் தடுத்தார். இன்று கப்ரில் ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டவராக நான் கண்டேன். எனினும் அவரது வலது கை சூம்பியிருந்தது. ஏன்? இப்படி என்று நான் கேட்டேன். அதற்கவர், 'இந்தக் கையால் தான் உம்மைத் தள்ளினேன். இதை நீர் மன்னிக்கக்கூடாதா? இதை நல்லபடியாக மாற்றுமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்யக்கூடாதா?' என்று கேட்டார்.

நான் அல்லாஹ்விடம் கேட்டேன். ஐந்தாயிரம் வலிமார்கள் தங்கள் கப்ருகளிலிருந்து எழுந்து ஆமீன் கூறினார்கள். உடனடியாக அல்லாஹ் அந்தக் கையை நல்லபடியாக மாற்றிவிட்டான். அந்தக் கையால் அவர் என்னிடம் முஸாஃபஹாச் செய்தார் எனக் கூறினார். இந்தச் செய்தி பரவியதும் ஹம்மாதின் சீடர்கள் இதை நிரூபிக்குமாறு வற்புறுத்தத் திரண்டனர். பெரும் கூட்டமாக அவரிடம் வந்தனர். அவர்களில் எவருக்குமே பேச இயலவில்லை. அவர்கள் வந்த நோக்கத்தை அப்துல் காதிரே கூறலானார். ''சிறந்த இருவரைத் தேர்வு செய்யுங்கள். அவர்கள் வாயிலாக இந்த உண்மை நிரூபணமாகும்'' என்றும் கூறினார். அவர்கள் யூசுஃப்லி அப்துர் ரஹ்மான் ஆகிய இரு பெரியார்களைத் தேர்வு செய்தனர். இதை ஒரு வாரத்தில் நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்று அப்துல் காதரிடம் கூறினார்கள். அதற்கு அவர் நீங்கள் இவ்விடத்தை விட்டு எழுவதற்கு முன் இது நிரூபணமாகும் என்றார்.

சற்று நேரம் சென்றதும் யூசுஃப் எனும் பெரியார் ஓடோடி வந்தார். ''ஹம்மாதை அல்லாஹ் எனக்குத் தெளிவாகக் காட்டினான். 'யூசுஃபே! நீ அப்துல் காதரின் மதரஸாவுக்கு உடனே செல். அங்குள்ளவர்களிடம் கூறு!' என்று ஹம்மாத் என்னிடம் கூறினார்'' என்றார். பிறகு அப்துர் ரஹ்மான் கைசேதப்பட்டவராக வந்து யூசுஃப் கூறியது போலவே கூறினார். அனைவரும் பாவமன்னிப்புக் கேட்டனர்.

இந்தக் கதையில் உள்ள அபத்தங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அபத்தம்,1

ஜும்ஆ தினத்தில் குளிப்பது வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாகும். இறைநேசர்கள் இது போன்ற சுன்னத்துக்களை விட்டுவிட மாட்டார்கள். ஆனால் அப்துல் காதிர் குளிக்காமலே ஜும்ஆவுக்குச் சென்றிருக்கிறார். ஹம்மாத் அவரைப் பிடித்துத் தள்ளிய போது தான் ஜும்ஆவின் குளிப்பை நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளார். பிடித்துத் தள்ளாவிட்டால் குளிக்காமலே சென்றிருப்பார். இதிலிருந்து அப்துல் காதிர் சுன்னத்தைப் பேணாதவர் என்று தெரிகின்றது.

ஒரு சுன்னத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் ஈடுபாட்டுடனும் விருப்பத்துடனும் செய்ய வேண்டும். வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டு செய்தால் அது சுன்னத்தை நிறைவேற்றியதாக ஆகாது. இந்த அடிப்படை விஷயம் கூட அப்துல் காதிருக்குத் தெரியவில்லை என்று இந்தக் கதை கூறுகின்றது.

அபத்தம்,2

கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவரை அப்துல் காதிர் சந்தித்து உரையாடியதாக இந்தக் கதை கூறுகின்றது. இந்தச் சந்திப்பு கனவு போன்ற நிலையில் நடக்கவில்லை. மாறாக நேருக்கு நேர் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அப்துல் காதிரும் ஹம்மாதும் ஒருவரை மற்றவர் முஸாஃபஹா செய்தார்கள் என்பதிலிருந்து இதை அறியலாம்.

உயிருடன் இவ்வுலகில் இருப்பவர் இறந்தவருடன் நேருக்கு நேராகச் சந்திப்பது நடக்க முடியாதது என்று இஸ்லாம் கூறுகின்றது.

எந்த ஆத்மாவுக்கு இறைவன் மரணத்தை ஏற்படுத்தி விட்டானோ அவற்றைத் தன் கைவசத்தில் வைத்துக் கொள்கிறான்.(அல்குர்ஆன் 39:42)

அவர்கள் (மரணித்தது முதல்) திரும்ப எழுப்பப்படும் வரை அவர்களுக்குப் பின் ஒரு திரை இருக்கின்றது. அல்குர்ஆன் 23:99)

இறந்தவர்களுக்கு இவ்வுலகில் வாழ்வோருக்குமிடையே எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பதை இவ்வசனங்கள் அறிவித்துள்ளன. கப்ரில் உள்ளவரை அப்துல் காதிர் ஜீலானி நேருக்கு நேராகச் சந்தித்ததும் அவருடன் உரையாடியதும் முஸாபஹா செய்ததும் பச்சைப் பொய் என்பதை இவ்வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

இந்தக் கதையில் ஹம்மாத் என்பவரின் கை சூம்பியிருந்ததைத் தவிர மற்றபடி அவர் நல்ல நிலையில் உயர்ந்த அந்தஸ்துடன் இருந்ததாகக் கூறப்படுகின்றது. நல்ல மனிதர்கள் கப்ரில் எந்த நிலையில் இருப்பார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர். அந்த விளக்கத்துக்கு மாற்றமாக இந்தக் கதை அமைந்திருக்கின்றது.

...பின்னர் நல்லடியாரின் மண்ணறை விரிவுபடுத்தப்படும். ஒளிமயமாக்கப்படும். பின்பு அவரை நோக்கி உறங்குவீராக எனக் கூறப்படும். ''நான் எனது குடும்பத்தினரிடம் சென்று இந்த விபரங்களை கூறிவிட்டுத் திரும்பி வருகிறேன்'' என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள்லி ''நெருக்கமானவரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவது போல் நீர் உறங்குவீராக! அந்த இடத்திலிருந்து உம்மை இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக!'' என்று கூறுவார்கள்.அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதி(991)

இது நபியவர்கள் தந்த விளக்கம்.

நல்லடியார்கள் உறக்க நிலையில் உள்ளனர். யாராலும் அவர்களை எழுப்ப முடியாது. மறுமை நாளில் இறைவனால் அவர்கள் எழுப்பப்படும் வரையிலும் அவர்கள் உறங்கிக் கொண்டே இருப்பார்கள் என்பதை இந்த ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. அப்துல் காதிர்லி ஹம்மாத் என்பவரை நேருக்கு நேர் சந்தித்தாகக் கூறுவது பொய் என்பதற்கு இந்த ஹதீஸ் சான்றாகும்.

அபத்தம்,3

ஐயாயிரம் அவ்லியாக்கள் அப்துல் காதிரின் துஆவுக்கு ஆமீன் கூறியதாகவும் இந்தக் கதை கூறுகின்றது. அவ்லியாக்கள் உறக்கத்தில் இருப்பார்கள் என்ற மேற்கண்ட ஹதீஸிற்கு இது முரணாக உள்ளது. மேலும் இறந்தவரைக் கேட்கச் செய்ய நபியாலும் முடியாது என்ற குர்ஆனின் கூற்றுக்கும் (30:52, 35:22) முரணாக உள்ளது.

அபத்தம்,4

இந்தச் செய்தியை நம்ப மறுத்த ஹம்மாதின் சீடர்களுக்கு இதை அப்துல் காதிர் நிரூபித்த விதமும் ஏற்கத்தக்கதாக இல்லை.

இந்த இடத்தை விட்டு நீங்கள் எழுவதற்கு முன் நிரூபிக்கிறேன் என்று கூறியது மறைவான ஞானம் அவருக்கு உள்ளது என்று கூறுகின்றது. மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பதை முன்னர் நாம் நிரூபித்தோம்.

ஹம்மாத் என்பவர் யூசுஃபுக்கும் அப்துர் ரஹ்மானுக்கும் காட்சி தந்ததாகக் கூறுவதும் முன்னர் நாம் எடுத்துக் காட்டிய சான்றுகளுக்கு முரணாக உள்ளது.

அப்துல் காதிர் ஜீலானி அவர்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்தும் வகையில் இட்டுக்கட்டப்பட்ட கதைகளின் தொகுப்பே முஹ்யித்தீன் மவ்லிது.

இஸ்லாத்தின் கடமைகள் எத்தனையோ இருக்கும் போதுலி மார்க்கம் அனுமதிக்காதலி இணை வைப்புக்குக் கொண்டு சேர்க்கும் இந்த மவ்லித் தேவை தானா? என்பதை சிந்திப்போம் செயல்படுவோம்.
                                                      நன்றி-ILMUL ISLAM (Face book)